Advertisment

சனி நல்லவரா-கெட்டவரா? -சச்சிதானந்த பெருமாள்

/idhalgal/balajothidam/saturn-good-or-bad-sachchidananda-perumal

னைவருக்கும் ஆயுள், ஆரோக்கியம், வளமான ஐஸ்வரியம், தொழில் நிம்மதி அமைவது சனீசுவரனின் அருள்கொடையால்தான். எவருக்கும் தெளிந்த நீரோடைபோல் வாழ்க்கை அமையாது. புதைகுழிகளும் சோக முட்களும் இருக்கத்தான் செய்யும். நாம்தான் கவனித்துப் பயணிக்கவேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளிக்கு மனைவியானாலும், கட்டடத் தொழிலாளி யின் துணைவியானாலும் பிறப்புமுதல் பருவ வயதுவரை இன்ப- துன்பங்கள், நடுவயதில் பொருளாதார ஏற்ற- இறக்கங் கள் மாறிமாறி அனுபவிக்கச் செய்வது கிரக நகர்வுகளே. அதிர்ஷ்டமான ஜாதகர்களுக்கு சில கிரக அம்ச யோகங்களால் திடீர் திருமணம், பாங்கான பங்களா, அரசு பதவி என அனுபவிக்க, ஜாதகக் கட்டங்களில் கிரகங்களைப் பதித்து விளையாடுபவர் பிரம்மதேவன்தான்; நியாயவான் சனி கிரகம்தான்.

Advertisment

சனிபகவான் ப

சனிபகவான் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்ரதிங்களுக்கு உரியவர். கந்தலாடை, கருமை நிறம், மெலிந்த தேகம், முரட்டு (தடித்த) கேசம், ஆயில் கிரீஸ் படிந்த இடங்களுக்கு காரகம் வகிப்பவர். நவகிரகங்களில் நற்பலன் தருவதில் வலிமை குறைந்தவர் சனி.

saturn

பிறப்பு ஜாதகத்தில் இவர் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள். உடல் உழைப்புக்கு அஞ்சாத, தருமகுணம் மிக்கவர்கள். கஷ்டப்பட்டுக் காரியமாற்றுவதில் சமர்த்தர்கள். ஆனால் சனி நின்ற ராசி தீய ராசியாகவும், நின்ற வீட்டதிபதி பாவ கிரகமாகவும் அமைந்தவர்களுக்கு நல்லியல்பும் நாணயமான போக்கும் அமையாது. பாலபருவத்தில் அசமந்தமும் (சோம்பல்) வாலிப வயதில் அடாவடித் தனமும் இருக்கும். படிப்பும் தீவிரமடையாது.

Advertisment

வல்லவனும் நல்லவனுமான சனி லக்னத் தில் நின்ற மகர லக்ன ஜாதகர்களுக்கு, சிம்மத்தில் சூரியன் ஆட்சியாகி சம்பாத்திய சாதனைகளைத் தந்தபோதும், பெற்ற தந்தையின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, நெஞ்சம் விம்மும் நிலை அனுபவமாகிறது. இந்த நிலையில் மகரப் பெண்ணின் சுக்கிரன் 12, 8, 6-ல் மறைந்த அபலைகளுக்கு (Female) உடல் ஆசைப் பட்ட நேரத்தில் ஆனந்தமில்லா தாம்பத்தியமே அமையும். கணவர்களின் சந்தேக அம்புகளுக்கு கண்ணீர்சிந்த நேரிடும். மகரம், கும்பத்தில் நின்ற சுக்கிரனை சனி காணும் நிலைபெற்ற யுவதிகளுக்கு, வயதில் மிக மூத்த- கிழத்தன்மை கொண்டவரை மணம் முடித்துவைத்து, நடுவயதில் விதவையாக்கி வேதனை தருபவரும் சனியேதான்.

பெரும்பாலும் லக்னத்தில் அமைந்த சனி குணம்கெட்டவராக, கொள்கையில்லா குறுகிய மனம் படைத்தவராக, நயவஞ்சகத்துடன் வாழவிடுகிறார்.

இரண்டாமிடத்தில் அமைந்த சனி ஆனந்த வாழ்விற்கு அணையிடுவார். வாழ்கையில் எதிர்ப்பும் போராட்டமும் நீடித்து, கையில் காசு தாங்காத நிலைதரும். வாக்கில் (2) அமர்ந்த சனியால், குதர்க்கமான பேச்சால் நாள் வைத்த (நிச்சயம் செய்த) திருமணம்கூட நின்று பின் நடைபெறும். பலருக்கு பள்ளி, கல்லூரி படிப்பும் மிக மந்தப்படும்.

விதிவிலக்காக, ரிஷபம், துலா ராசி ஜாதகர்களுக்கு சனி யோககாரகனாவ தால், வயது வளரவளர உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். 2-ல் சனி அமைந்த மாமியாரையும் மருமகளையும் அரண்மனையில் வைத்தால்கூட வம்பும் வழக்கும் வாழ்க்கையாகி, தெருமுனைக்கு வர நேரும். "அப்படி ஏதும் துன்பநிலை, மனக்கஷ்டம், பணக்கஷ்டம் எங்கள் வாழ்வில் இதுவரை இல்லையே?' என முணுமுணுக்கும் சில கன்னி, தனுசு, மீன லக்ன வாசகர்களுக்கு (இவர்களுக்குதான் இரண்டாமிடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி உச்சம்பெறுவார்கள்) சிறந்த ஜோதிடர் சுட்டிக்காட்ட நினைப்பது, இவர்கள் ஜாதகங்களில் ஆட்சி, உச்சம்பெற்ற குரு, இரண்டில் நின்ற சனியை சுப பார்வை பார்த்திருப்பார். நல்லவர் இரண்டாமிட சனியை தனகாரகன் குரு கண்டால், பேச்சால் புவியாளும் செல்வநிலை அமையும் என்பது சாஸ்திர சம்மதமே.

முடிவுரையாக, நல்லவன் சனி துலா ராசியில் உச்ச நிலைபெற்ற மங்கையர் பலர் சின்னத்திரை, சினிமா, கலைநுனுக்க (TECHNICAL) தொழில்களில் பிரகாசிக் கின்றனர். இப்பெண்களின் சனி நின்ற ராசிக்கு 1, 5, 9 மற்றும் 3, 7- ஆம் ராசிகளில் சுப கிரகங்களான புதன், சுக்கிரன் அமையப்பெற்ற யோகவதிகள் (LUCKY STARS) சிறந்த வக்கீல், நீதிபதியாகப் பிரகாசிக்கி றார்கள். அஞ்சவேண்டியதில்லை. உங்கள் சனி நல்லவர்- வல்லவர் தான்!

செல்: 96066 66300

bala030921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe