சகல யோகங்களும் தரும் சனி பகவான் விருட்ச ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/saturn-bhagavan-virtues-secret-all-yoga

சூரியனது ஒளிவட்டத்தில் ஆறாவது சுற்றிலும், அவரது இருப்பிடத்திலிருந்து 88,60,00,000 மைல் தூரத்திலும் இருப்பவர் சனீஸ்வரன். சூரியனைச் சுற்றிவர 29 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறார். தன் உருவைத் தானே பத்து மணி, 16 நிமிடங்கள், 28 விநாடிகள் சுற்றிவரு கிறார். இவர் திரும்பிப் பார்த்தால் மலையும் சரியும்; வானமும் வெடிக்கும். புன்சிரிப்பை உதிர்த்தால் வாழ்வில் சாதனைகள் நிகழும். இந்த சனி பகவான் நமக்கு நன்மைகளையே தந்துகொண்டிருக்கும்படி செய்திட, வன்னிமரத்தின் இலைகளால் பூஜை செய்து, "சனீஸ்வரா! என்னைக் காப்பாற்று' என்று வழிபடுவோர் உள்ளனர்.

மகாதேவனிடம் ஈஸ்வரப் பட்டம் பெற்ற மகாமூர்த்தியிடம் யோகப் பலன்களைப் பெற, விடாதழை என்ற தெய்வ விருட்சத்தின் வேர் காந்த சக்தியைவிட மேலானதாக பூமியிலிருந்து முளைத்தெழுகிறது.

சனி தசைக் காலத்துச் சங்கடமும் யோகப்பலனும் சிவன் கோவில்களுக்குச் செல்பவர்கள் சனீஸ்வரனது சந்நிதிக்குச் சென்றாலும், நவகிரகங்களின் இடத்திற்குச் சென்றாலும் ஒருவித பயத்துடன்தான் காணப்படுவர்.

அந்த பயத்தையும் பதட்டத்தையும் அவரை வழிபடுவதன்மூலம் தவிர்த்து விடலாம்.

மனிதனின் ஆயுள் பாவத்திற்குக் காரகத்துவம் பெற்றுள்ள சனியே ஒருவரின் சாதனைகளுக்கும், பெண்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கும் ஆதிபத்தியம் பெற்று விளங்குகிறார்.

நாம் செய்கின்ற செயல்களில் சோம்பலை ஏற்படுத்துவார். சிவந்த கண்கள், நடுத்தர உயரம், பருமனான பற்கள் உடையவர். வாயுவின் சுபாவத்தை உடையவர். கோள் சொல்லுதல், கொடுரத்தன்மை, தாமஸ குணம், மந்தநிலை, முடத்தன்மை, கோபம், வாத ரோகம் போன்றவற்றை உருவாக்குவார். வலிமைபெற்ற சனி தான் இருக்கிற இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்ப்பார்.

பாவகப் பலன்களைப் பார்க்கும் போது, ஜோதிட நூல்கள் பற்பல பலன்களைக் கூறினாலும், அடிப்படை யோகங்கள், சங்கடங்கள் பன்னிரு பாவங்களுக்கும் சந்திரன் இருக்கிற ராசியை வைத்தே சனியின் சஞ்சார காலப் பலன்கள் சொல்லப்படு கின்றன.

முதல் பாவத்தில் சஞ்சரிக்கும் போது உடல்நலத்தில் கேடுகள், தீராத நோய், பயனில்லாத வேலைகளுக்கு அலைந்து திரிதல், அலுவலகத்தில் பணி நிறைவு பெறாமல்

சூரியனது ஒளிவட்டத்தில் ஆறாவது சுற்றிலும், அவரது இருப்பிடத்திலிருந்து 88,60,00,000 மைல் தூரத்திலும் இருப்பவர் சனீஸ்வரன். சூரியனைச் சுற்றிவர 29 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறார். தன் உருவைத் தானே பத்து மணி, 16 நிமிடங்கள், 28 விநாடிகள் சுற்றிவரு கிறார். இவர் திரும்பிப் பார்த்தால் மலையும் சரியும்; வானமும் வெடிக்கும். புன்சிரிப்பை உதிர்த்தால் வாழ்வில் சாதனைகள் நிகழும். இந்த சனி பகவான் நமக்கு நன்மைகளையே தந்துகொண்டிருக்கும்படி செய்திட, வன்னிமரத்தின் இலைகளால் பூஜை செய்து, "சனீஸ்வரா! என்னைக் காப்பாற்று' என்று வழிபடுவோர் உள்ளனர்.

மகாதேவனிடம் ஈஸ்வரப் பட்டம் பெற்ற மகாமூர்த்தியிடம் யோகப் பலன்களைப் பெற, விடாதழை என்ற தெய்வ விருட்சத்தின் வேர் காந்த சக்தியைவிட மேலானதாக பூமியிலிருந்து முளைத்தெழுகிறது.

சனி தசைக் காலத்துச் சங்கடமும் யோகப்பலனும் சிவன் கோவில்களுக்குச் செல்பவர்கள் சனீஸ்வரனது சந்நிதிக்குச் சென்றாலும், நவகிரகங்களின் இடத்திற்குச் சென்றாலும் ஒருவித பயத்துடன்தான் காணப்படுவர்.

அந்த பயத்தையும் பதட்டத்தையும் அவரை வழிபடுவதன்மூலம் தவிர்த்து விடலாம்.

மனிதனின் ஆயுள் பாவத்திற்குக் காரகத்துவம் பெற்றுள்ள சனியே ஒருவரின் சாதனைகளுக்கும், பெண்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கும் ஆதிபத்தியம் பெற்று விளங்குகிறார்.

நாம் செய்கின்ற செயல்களில் சோம்பலை ஏற்படுத்துவார். சிவந்த கண்கள், நடுத்தர உயரம், பருமனான பற்கள் உடையவர். வாயுவின் சுபாவத்தை உடையவர். கோள் சொல்லுதல், கொடுரத்தன்மை, தாமஸ குணம், மந்தநிலை, முடத்தன்மை, கோபம், வாத ரோகம் போன்றவற்றை உருவாக்குவார். வலிமைபெற்ற சனி தான் இருக்கிற இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்ப்பார்.

பாவகப் பலன்களைப் பார்க்கும் போது, ஜோதிட நூல்கள் பற்பல பலன்களைக் கூறினாலும், அடிப்படை யோகங்கள், சங்கடங்கள் பன்னிரு பாவங்களுக்கும் சந்திரன் இருக்கிற ராசியை வைத்தே சனியின் சஞ்சார காலப் பலன்கள் சொல்லப்படு கின்றன.

முதல் பாவத்தில் சஞ்சரிக்கும் போது உடல்நலத்தில் கேடுகள், தீராத நோய், பயனில்லாத வேலைகளுக்கு அலைந்து திரிதல், அலுவலகத்தில் பணி நிறைவு பெறாமல் மனசங்கடம் அடைதல் ஆகிய கெடுபலன்கள் உண்டாகக்கூடும்.

இரண்டாம் பாவத்தில் சஞ்சரிக்கும்போது உயிருக்கு பயம், பணவிரயங்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை, குடும்பத்தில் சாதாரண விஷயங்களுக்கே கலகம் ஏற்பட்டுப் பிரிவினை ஏற்படுதல் ஆகியன உருவாகும்.

மூன்றாம் பாவத்தில் சஞ்சரிக்கும்போது சனி அழகானவர். தாயைப்போல பரிவுடன் நடந்துகொள்வார்.

நான்காவது பாவத்தில், ஒரு மனிதன் ஸ்திரமான அஸ்திவாரத்துடன் வீடு கட்டியிருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்படி செய்து அவரை இடம் பெயரும் சூழ்நிலைக்கு ஆளாக்கி விடுவார்.

ஐந்தாம் பாவத்திற்கு வருகிறசமயம், புத்திரசோகம் என்ற துர்பலனை ஏற்படுத்துவதோடு புத்தி மந்தம், தன்னிலை தடுமாறுதல், பிள்ளைகளால் அவப்பெயர் ஏற்படல் ஆகிய அசுபப் பலன்களைக் கொடுப்பார்.

ஆறாவது பாவம் ஒரு ஜாதகருக்கு துர்ஸ்தானம் எனப்படும். இங்கே வித்தி யாசமாகச் செயல்பட்டு, வழக்கு, கௌரவ பங்கம் ஏற்படுகிற காலகட்டங் களில் நன்மைகளை வாரிவழங்கிக் காப் பாற்றுவார்.

ஏழாம் பாவத்தில் சஞ்சரிக்கும்போது துணையாக நிற்கும் மனைவிக்குத் துன்பம், நோய் ஏற்பட்டு அதற்கான செலவுகளை அதிகம் செய்யும்படி சோதனைகளை ஏற்படுத்துவார்.

saturn

எட்டாம் பாவத்திற்கு வந்துவிட்டால், அர்த்தாஷ்டமச்சனியாக பாவித்து அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களின்மூலமாக செலவு, விபத்து ஏற்பட்டு அநாவசியமான செலவு, நண்பர்களும் எதிரியாக மாறிவிடுகிற துர்பாக்கிய நிலை, கையில் இருக்கிற பணம் செலவாகி வறுமை நிலை ஏற்படல், கடன்காரர்களால் தொல்லை, வாங்காத கடனுக்காக வட்டி கட்டுகிற துர்பாக்கிய நிலை உருவாகக்கூடும்.

ஒன்பதாம் பாவத்தில் சஞ்சரிக்கும் சனீஸ்வரனை முழுமையாக நம்பலாம். நாம் செய்யும் தொழிலில் பல்வேறு சாதனைகளைச் செய்யவைப்பார். புதிய நண்பர்கள், முக்கிய பிரபலங்களின் தொடர்பு ஏற்பட்டு பணச்சேர்க்கை உண்டாகும். நன்மைகளே நடந்துவரும்.

பத்தாம் பாவத்தில் அடியெடுத்து வைக்கும் சனி ஜீவன பங்கம் என்ற உயிர் நிலைத்திருப்பதில் சங்கடத்தை ஏற்படுத்துவார். கடல்வழிப் பயணம் வான்வழிப் பயணத்தைத் தள்ளிப்போட்டு இளைப்பாறலாம். தொழிலுக்காகக் கடன் வாங்குவதிலும், புதிய தொழில்முறை நண்பர்களைச் சேர்த்துக் கொள்வதிலும் கவனத்துடன் செயல்பட்டு ஒதுங்கி விடவேண்டும். ஆரம்பித்த வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்படக்கூடும். வருமானத் தில் குறைவு ஏற்படுமே தவிர முற்றிலும் இல்லாமல் போகாது.

பதினோராம் பாவத்திற்கு வந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அள்ளிக் கொடுக்கும் குபேரனைப்போலச் செயல் படுவார் சனி. இந்த காலகட்டம் ஜாதகருக்குத் தொட்டது துலங்குகிற பொற்காலமாக அமைந்துவிடும். திடீர் பணக்காரராகும் நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடுவார். இந்த பதினோராம் பாவத்து சஞ்சார காலத்தில் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார் என்று அலட்சியமாக நடந்துகொள்ளக் கூடாது. சனிக்கு எதிர்க்கும் குணம் உண்டு. இக்காலத்தில் அவரது ய் குறி ஒருபுறமும், "ஸ்ரம்' என்ற பீஜம் இன்னொரு புறமும் இட்ட நீலக்கல் மோதிரத்தை, சனீஸ்வரனின் சக்தியூட்டும் மந்திரங்களால் பூஜைசெய்து அணியவேண்டும். ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.

பன்னிரண்டாம் பாவத்திற்கு சனி பகவான் வரும்போது வீண்செலவுகளை ஏற்படுத்தி சிரிக்கவும் வைப்பார். உடலில் சுகவீனம் காணப்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் கையில் தங்காது. ஒட்டுமொத்தமாக குடும்பத்தில் தரித்திர நிலை நீடிக்கும். இரும்புத் தொழில், ரியல் எஸ்டேட், வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.

நீலன் தரும் நெடுங்கால இடர்கள் பன்னிரண்டு, ஒன்று, இரண்டு ஆகிய பாவங்களில் சனி சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டுக் காலங்களிலும், இரண்டரை ஆண்டு தனி ஒரு பீடிப்புக்காலம், கண்டச்சனி, விரயச்சனிக் காலங்களிலும் பிள்ளைகளின் படிப்பு பாதியில் நின்றுபோதல், மனக்குழப் பங்கள், அரசாங்க வேலையில் அவப் பெயர், பணிநீக்கம், நன்கு வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பப் பெண் விதவையாதல், தானே வலுக்கட்டாயமாக வருகிற வழக்குகள், கையில் இருக்கிற சொத்துகள் பறிபோதல் ஆகியன ஏற்படக்கூடும்.

சனிக்குரிய உடுமகாதசை 19 வருட காலங்களில் அவரிடம் யோகப்பலன் களையே பெற்றிடவும், நல்வாழ்வைப் பெறவும், அரசர்கள் காலத்தில் "நீலபானு மூலிகை' என்ற சக்திவாய்ந்த மூலிகை யைப் பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

புற்று நோயைக்கூட காணாமல் போகச் செய்துவிடும் இந்த ராஜமூலிகை. மலைப் பிரதேசங்களில் துளசிச்செடிபோல வளர்ந்து வரும் இதை அகத்தியர் தனது நாடி விருத்தத்தில் அடையாளம் காட்டுகிறார்.

தாந்திரீகம் கூறும் சனீஸ்வர இயல்புகள் மின் சக்தியை அதிகமாக வெளிவிடும் கிரகம். எலும்பு, பல், நகங்கள் வளர்ச்சிக்கு கால்சியத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில் உயிர் தங்குகிற காலத்தை இதன் மின்னாற்றலின் அளவைக் கொண்டே நிர்ணயம் செய்கிறார்கள்.

ஜாதகர்களுக்கு விழிப்புணர்வும் தெளிவும் கிடைத்து வாழ்க்கையைப் பற்றி அறிய, பல இடர்களை, அங்கத்திற்கு சங்கடங் களைக் கொடுக்கக் காரணமாகிறார். சிலசமயங்களில் இவரது மின்னாற்றலிலிருந்து மனித உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுகிறது. பொதுவாக ஆன்மாவின் நிலையை அறிய இந்த ராஜகிரகம் உதவு கிறது.

மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களில் மூலாதாரத்தில் மட்டுமே சனீஸ்வரனின் இருப்பிடம் அமைகிறது. இந்த சக்கரத்தில் குறைபாடு ஏற்பட்டால் உடல் தொடர்பான பிரச்சினை உருவாகி மருத்துவச் செலவுகள் அதிகமாகக் கூடும். இதற்கு எளிய பரிகாரமாக, இஞ்சியைப் பிழிந்து சாறெடுத்து, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை கலந்து காலையில் அருந்திவர, ஏழரைச்சனியின் பாதிப்புகள் குறைந்துவரும். 48 தினங்கள் வரை சாப்பிட்டு, பத்து நாட்கள்விட்டுப் பிறகு தொடரவேண்டும். காரணம், எலுமிச்சம்பழச்சாறு அமிலகுணம் கொண்டது. அதிகம் உட்கொண்டால் எலும்பைக் கரைக்கக்கூடும். ஆனால் சிறிதளவு எடுத்துக்கொள்வதால் பயப்படத் தேவையில்லை.

சனீஸ்வரனின் பரிகார வேர் சிறப்பு

சனி பகவானுக்கு என்னதான் பரிகாரங்களாக நீலாம்பரி ராகத்தில் கீர்த்தனைகளை வாசித்து, சனிஸ்துதி, தியானம், காயத்ரி மந்திரங்களை ஜெபம் செய்து, நீலோற்பவ மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டாலும், ஒரே ஒரு வேரை முறைப்படி பூஜைசெய்து பூஜையறையில் வைத்துவிட்டால் நம் பூஜைகளுக்குக் கட்டுப்பட்டு சங்கடங்களைத் தவிர்த்துச் சகட யோகங்களை அள்ளிக் கொடுத்துவிடுவார். திருமணத்தடையுள்ள ஆண்- பெண்கள் நிலை, வீட்டில் வாஸ்துக்குறையால் வருமானம் இல்லாமை, பில்லி, சூனியங்கள், துர்தேவதா தொந்தரவுகள், நீண்ட ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமை ஆகிய சூழ்நிலைகளில் இந்த மந்தனின் விடாதழை விருட்ச வேர் சிறப்பாகச் செயல்படுகிறது.

நளனை நினைத்தாலே சனி விலகும் என்பது புராணத்தின் கூற்று.

"ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய

தமயந்த்யா நளஸ்யச

ருது பர்ணஸ்ய ராஜர்ஷே

கீர்த்தநம் கலிநாசனம்'

என்பது மந்திர வாசகம். விடாதழை வேரை எடுத்துவந்து, சனிக்கிழமை அல்லது அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் சனியின் அங்க மந்திரங்கள் சொல்லி ஆவாகன பூஜை, பிராணப் பிரதிஷ்டை செய்து, "நெருங்கிடு பிணியெலாம் நீக்கு நோன்மையும்' தொடங்கி,

"மறுவறும் எனது சென்னி

வளர்புகழ் சனி புரக்க

பெறுமுகம் அன்பர் அன்பன்

பேணுக செவி களுக்கும்

அறுவை நன்கு அணிவோன் காக்க

அச்சமே விலக்கு மெய்யோன்

நறுமலர் விழிபுரக்க

நாசிகை காரிகாக்க...'

என்ற காப்புடன் ஆரம்பித்து, "கதிரோன் அன்று உதவவந்த மைந்தன் போற்றி' என்று முடியும் சனி கவசத்தை மூன்றுமுறை படித்து-

"ஓம் யமாக்ரஜாய நம: இருதயாய நம:

ஓம் சனைச்சராய நம: சிரசே நம:

ஓம் கிருஷ்ணாம் பராய நம: சிகாய நம:

ஓம் லங்கேச பஞ்சநாய நம: கவசே நம:

ஓம் சர்வ பயங்கராய நம:

நேத்ரேப்யோ நம:

ஓம் லகுலீச வரப்ரதாய நம:

இருதயாதி மூர்த்தாய நம:

ஓம் க்ஷாம்கூட ப்ரதாய நம:

மூர்த்தாதி பாந்தே நம:

என்று கைகூப்பியபடி, நீலோத்பவ மலரைக் கையில் வைத்தபடி-

"ஓம் இந்திர நீலத்யுதி, கட்கீ

வரதோ க்ருத்ர வாகன:

பாணசாபதரோ வீர:

கர்த்தவ்யோர்க சுதஸ்ஸதா:

என்று சொல்லி, (இந்திர நீலக்கல்லைப் போல நீல சரீரம் உடைய சூரியன் மகனை தேக காந்தி உடையவராக (ஈர்ப்பு சக்தி) கத்தி, வரத முத்திரை பெற்று வில், அம்புடன் கழுகு வாகனத்தில் வரும் வீர புருஷனை தியானிக்கிறேன்) என்று சொல்லி வேரில் போட்டு பிரார்த்தனை செய்யவேண்டும். எள்ளன்னம் படைத்து ஆரத்திகாட்டி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.

சனி கவசத்தை தினமும் படித்து வரவேண்டும்.

"கலியே கலியின் விதியே விதியின் நிழலே

கலியால் கலங்கும் மதியே கதியில் விழுமே

நலிவே விலகக் கதியாய் அருள்வாய் கரியே

நலினே பணிந்த கதிர்மகனே சனைச்சரனே!'

என்று மூன்றுமுறை கூறி வேரை மஞ்சள் துணி சுற்றி பூஜையறையில் வைத்துவிடுக.

செல்: 91765 39028

bala181019
இதையும் படியுங்கள்
Subscribe