சென்ற இதழ் தொடர்ச்சி...

ழரைச்சனியின் காலத்தில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கெனவே நீங்கள் பட்ட கடன். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதை உணர வேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை அடுத்தவர் மேல் சுமத்தக்கூடாது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனிக் காலத்தில் ஏற்பட்ட பணஇழப்பானது எத்தனை கோவில் ஏறி இறங்கினாலும் கிடைப்பது கடினம். தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புண்டு.

எதுவுமறியாத பல குழந் தைகள் சம்பந்தமில்லாத காரணத் திற்காக பால்ய வயதில் ஹாஸ்டலில் விடப்படுகிறார்கள். எந்த பிரச் சினையும் இல்லாவிட்டாலும், நவீன யுகத்தில் குழந்தைகளை ஹாஸ்டலில் படிக்கவைப்பது ஃபேஷனாகிவிட்டது.

இன்று பெற்றோரைவிட அதிக கவன மாகக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஹாஸ்டல்கள் இருந்தாலும், உளவியல்ரீ தியாக இந்த பிரச்சினையை ஆய்வு செய்தால் பல உண்மைகள் அனைவருக்கும் புரியவரும். அவை என்னவென்றால்- முதலில் குழந்தைக்கு தாய்- தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது. உற்றார்- உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படிப் பழகவேண்டுமென்ற அனுபவ மற்றவர்களாக இருப்பார்கள்.

Advertisment

இவ்வளவு ஏன்- பலகுழந்தைகளுக்கு தாய்- தந்தையைத் தவிர உறவினர் களின் அறிமுகமே இருக்காது.

பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது.

குழந்தைகள் பெற்றோரை பணம் போடும் ஆபங மெஷினாக மட்டுமே பார்ப்பார்கள். பல குழந்தைகளின் தனித்திறமைக்கு முறையான அங்கீகாரம் இல்லாமல் திறமைகள் முடக்கப்படும். தங்களுக்கு நடந்த ஹாஸ்டல் கொடுமைகளைக் கேட்க ஆளில்லாமல், ஆழ்மனதில் சோர்வின் உச்சகட்ட உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றோரிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் தனிமையாக வாழத் துவங்கு வார்கள். பெற்றோரின் அன்பு, அரவணைப்பு குழந்தைகளுக்கு மிக அவசியம்.

Advertisment

saturn

எந்த பிரச்சினையாக இருந்தாலும், குறைந்தபட்சம் 18 வயதுவரை குழந்தைகள் பெற்றோர் பராமரிப்பில் இருந்தால் மட்டுமே தலைசிறந்த குடிமகனாக வாழமுடியும். 20 வருடங் களுக்கு முன்புவரை பால்ய வயதுக் குழந்தைகளை எந்த பெற்றோரும் ஹாஸ்டலில் விடவில்லை. சனியின் தாக்கத்திற்கு பயந்து ஓடிஒளியவில்லை. பிரச்சினைகளை வழிபாட்டால் மட்டுமே தீர்த்தார்கள்.

இறைவனின் படைப்பில் இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் தனித்தனியான, தனித்தன்மையோடு கூடிய ஆன்மாதான். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு நீண்ட பயணம், தனி கர்மா இருக்கிறது. அந்தப் பயணத் தொடர்ச்சியில் அந்த ஆன்மா ஏதோ ஒருசில காரணங்களால் நம்மூலமாகப் பிறப்பெடுத்திருக்கிறது. இந்த ஆன்மா மீண்டும் உடலை எடுப்பதற்கு நாம் காரணமாக இருக்கிறோமே தவிர, அவ்வு யிருக்கு உரிமைகொண்டு, அதன்மீது ஆதிக்கம் செலுத்த நமக்கு அதிகாரமில்லை. அக்குழந்தை பெற்றோரை சார்ந்து வாழும் வரை உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், இவ்வுலகில் தொடர்ந்து, தனித்து வாழத்தேவையான உடல்நலம், மனநலம், அறிவுநலம் ஆகியவற்றை அளித்து, தயார் செய்வதும் குழந்தையின் பெற்றோருக்கு இறைவன் வழங்கிய ஒரு கடமையாகும்.

நாம் பிறப்பதற்கு நம் பெற்றோர்கள் கருவியாகவும், நம் குழந்தைகள் பிறக்க நாம் கருவியாகவும் பயன்படுத்தப்படு கிறோம் என்பதையும் மறக்கக்கூடாது. நிச்சயமாக குழந்தைகளின் கர்மாவால் மட்டும் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படுவ தில்லை.

ஒரு குழந்தை இவ்வுலகில் தனித்துவாழத் துவங்கியவுடன்- அதாவது தன் ஜாதகப் பலன்களைத் தானே அனுபவிக்கத் துவங்கிய வுடன் பெற்றோருக்குச் சொந்தமாக முடியாது. எனவே எல்லாக் காலங்களிலும், ஜாதகப் பலன்களை அறிந்துகொள்ள அவரவர் ஜனன ஜாதகத்தையே பயன் படுத்தவேண்டும். ஒவ்வொரு ஆன்மா வுக்கும் தனி கர்மா உண்டு. சுயகர்மாவின் வலிமையே வாழ்நாள் முழுவதையும் இயக்கும்.

கர்மவினையின்படி நடைபெறுகிற பலன்களையே விதி என்று சொல்கிறோம்.

விதிப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என்பது தெரியும். விதியை மதியால் வெல்லலாம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு இயற்கைக்குமீறி திட்டமிடுதல்களைச் செய்து சங்கடங்களை சந்திப்போர் பலர்.

நமது முன்னோர்களின் பாவபுண்ணி யங்களின் விளைவுதான் நாம். நமது பாவபுண்ணியங்களின் விளைவுகள்தான் நமது சந்ததிகள். நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள்தான் நம் உடம்பில் இருக்கின்றன. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்திசாலித்தனம், வெற்றி- தோல்வி, நோய், கர்மா ஆகிய அனைத்தும் மரபணுமூலம் சந்ததிகளுக்கு அனுப்படு கின்றன. அவர்கள்வழியாக வந்த நமது தீய நிகழ்வுகளுக்கு ஆன்மிகம்மூலம் நாம் தீர்வைத் தேடவேண்டும். காலம் தன் கடமையைச் செய்யும்போது எந்தக் கடவுளும் குறுக்கே நிற்பதில்லை. அதனால்தான் நேரம் நன்றாக இருக்கும்போது பலிக்கும் பிரார்த்தனை, நேரம் கெடும்போது பலிப்பதில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும்.

ஜாதகம் பார்க்க வருபவர்களில் பல பெற்றோர், ‘"என் குழந்தைக்காக நான் முறைப் படி சஷ்டி விரதம் இருக்கிறேன். பிரதோஷ வழிபாடு செய்கிறேன். பலருக்கு கோவிலில் அன்னதானம் செய்கிறேன். தர்மப்படி முறையாக வாழ்ந்தாலும், இந்த தீய கர்மப்பலன் விடவில்லையே. நான் என்ன செய்வது? குழப்பமாக உள்ளது' என்கிறார்கள்.

எப்பொழுது ஒரு மனிதன் தான் செய்த தானத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானோ அந்த கணத்திலிருந்து அவனுடைய அனைத்து வழிபாடும் தர்மமும் செயலிழந்துவிடும். மகான்களும் இதைத்தான் சொல்கிறார்கள். ஒரு செயலைச் செய்தபின்பு மனதில் "நான் இதைச் செய்தேன்' என்ற எண்ணம் தோன்றிவிட்டால் அந்தச் செயலுக் குண்டான பலனில்லாமல் போய்விடும். இதைப் புரிந்து செயல்படுவது சற்று சிரமம் தான்.

கர்ணன் தர்மங்கள் செய்து வாழ்ந்தான். யுத்த களத்தில் அர்ஜுனன் தொடுத்த அம்பு அவன் உயிரைப் பறிக்கவில்லை. தர்மதேவதை தடுத்து நின்றாள். இதைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் அவனிடம் முதியவர் கோலம் கொண்டு "தர்மம் வேண்டும்' என்று பிச்சை கேட்கிறார். "யுத்தகளத்தில் உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லையே' என்று வருந்திப் புலம்புகிறான். அவர் சொல்கிறார்- ‘"உன்னிடமுள்ள தர்மங்கள் அனைத்தையும் எனக்குத் தா' என்று. கர்ணன் தன் ரத்தத்தில் கலந்துள்ள மமதை என்னும் கர்வத்தை அவரிடம் தானமாகத் தர, கிருஷ்ணர் கர்ணனுக்கு தேவலோகப் பதவி தந்தார்.

சராசரியாக ஒரு மனிதன் ஆயுள் காலத்தில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச்சனி என சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கமுடியும். சனி கிரகம் ஒரு ராசியைக் கடக்க ஏறத் தாழ இரண்டரை ஆண்டுகளாகின்றன. ராசிச் சக்கரத்தை ஒரு சுற்று சுற்றிவர தோராயமாக 30 ஆண்டுகளாகின்றன. அதனால் பெரியவர்கள் பேச்சுவழக்கில் ‘"30 வருடம் வாழ்ந்தவருமில்லை. 30 வருடம் தாழ்ந்தவருமில்லை' என்பார்கள். அதாவது 30 வருடம் எந்த துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதரும் இல்லை. 30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே இதன் பொருள்.

சராசரியாக, ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குறைந்தபட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால், 30 வருட காலம் சனி பகவானின் பிடியில் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கை இருக்கும். அதனால் நடப்பதை இறைவனின் பாதங்களில் சமர்ப்பித்து சரணாகதி அடைவதே நல்லது. நமது வாரிசுகள் பயன்படும் வகையில் புண்ணிய காரியம் செய்யவேண்டும். கடவுள், பக்தி, நீதிநெறி, தர்மம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு உணரவைத்தால், அந்த புண்ணியமே உங்களுக்கு இப்பிறவியிலும், அடுத்தடுத்த பிறவிகளிலும் நன்மைகளைக் கொடுக்கும்.

செல்: 98652 20406