ர்மவினையை அனுபவிக்கவே ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் ஜனனம் எடுக்கிறது. பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே கரு ஸ்தானமாகவும், கர்ப்ப ஸ்தானமாகவும் அமைகிறது. அந்த பாக்கியத்தால் கருத்தரித்து, கர்மவினைகளுக்கேற்ப கரு வளர்ந்து, கர்மவினையை அனுபவிக்கக்கூடிய கிரகங்கள் இருக்கும்போது, கர்ப்ப செல் நீக்கி லக்னம் அமைந்து ஜென்மமாய்ப் பிறக்கிறது.

Advertisment

அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து, வினைகளுக்கேற்ப தசைகளை அமைத்து, கோட்சார கிரக சஞ்சாரம்மூலம் நம்மை நம் வினைகளுக்கேற்றபடி வாழவைக்கின்றன. நம் பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே ஏழரைச்சனியாக, அஷ்டமச்சனியாக, அர்த்தாஷ்டமச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோக- அவயோக தசையாக மாறிவருகிறது.

பல குடும்பங்களில் ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடக்கும் காலம் வரும்போது ஏதோ நடக்கக்கூடாத தவறு நடந்ததுபோல மனக்கலக்கம் அடைகிறார்கள். அதுவும் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது பால்ய வயதுக் குழந்தைகளுக்கு ஏழரைச்சனி அஷ்டமச்சனி நடந்தால், வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு குழந்தைகள்தான் காரணம் என்ற மனக்கலக்கம் பல்வேறு பெற்றோர்களுக்கு இருக்கிறது. இது உண்மையா என்பதன் ஆய்வே இந்தக் கட்டுரை.

பல குடும்பங்களில், ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரது வாழ்வு முற்றிலுமாக அக்குழந் தையின் நலனுக்காகவே கழிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், தான் முக்கியமில்லை என்ற எண்ணமும், தன்னைவிட குழந்தையே முக்கியம் என்ற உணர்வும் பெற்றோருக்கு வந்துவிடுகிறது. அதனால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்குக்கூட முக்கியத்துவம் கொடுத்து மனவருத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

Advertisment

ஒரு குழந்தை, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்த ஆக்கம், ஊக்கம், மன தைரியம், நம்பிக்கை, வெற்றி-தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் பண்பு போன்ற பல்வேறு இயல்புகள் தேவைப்படுகின்றன. மேலும் படிப்பு, கற்றல், போட்டித் தேர்வு, தரவரிசை, மதிப்பெண், பல்வேறு கலைகற்றல் போன்றவற்றை சந்தித்தால் மட்டுமே உன்னத நிலையை அடையமுடியும் என்ற நிலையும் சமுதாயத்தில் நிலவிவருகிறது.

உலக நடப்பு இவ்வாறிருக்க, பல பெற்றோர், குழந்தைகளுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்தால், ஹாஸ்டலில் சேர்த்தால் குழந்தைகளால் பெற்றோருக்கும், பெற்றோரால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதென தவறாக வழிநடத்தப்படு கிறார்கள். ஒரு வீட்டில் தந்தை, மகன், தாய், மகள் என ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின் தாக்கம் இருந்தாலும், குழந்தைகளால்தான் பாதிப்பு என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.

ஒருவருடைய ராசிக்குப் பின் ராசியிலும், ராசிக்குள்ளும், ராசிக்கடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச்சனி என்கிறோம். சிறுவயதில் வரும் முதல் சுற்றை மங்குசனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்குசனி என்றும், வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை மரணச்சனி என்றும் அழைப்பர்.

Advertisment

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின் தாக்கத்தை குழந்தைகளிடம் மிகத்தெளிவாகக் காணலாம். உடல்நலக் குறைவு மிகுதியாக இருக்கும். வீட்டையே ஆஸ்பத்திரிக்கு அருகில் மாற்றிவிடலாம் என்றெண்ணும்வகையில் வைத்தியச்செலவு இருக்கும். பிறக்கும்போது ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின் தாக்கமிருந்தால், குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக்கொள்ளுமளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம்முதல் விடலைப் பருவம்வரையிலான இந்தச் சுற்றில் படிப்பில் ஆர்வமின்மை, பாடத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலை, மந்தம், மறதி, தூக்கம் என்றிருப்பார்கள். குழந்தைகளால் பெற் றோருக்குள் கருத்து வேறுபாடு, சண்டை என பிரச்சினைகள் வந்து நீங்கும்.

குழந்தை வளர்ப்பை நான்குவிதமாகப் பிரிக்கலாம்.

1. குழந்தை நலனில் அதீத அக்கறை.

2. குழந்தையின் தவறை கண்டுகொள்ளாத நிலை.

3. குழந்தைகளை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது.

4. குழந்தை வளர்ப்பில் ஆதாயம் தேடுவது.

குழந்தை நலனில் அதீத அக்கறை

இந்த வகை பெற்றோர் காலை எழுந்ததுமுதல் இரவு படுக்கும்வரை செக்யூரிட்டிபோல குழந்தைகளைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். 24 மணி நேரமும் படிப்பைத்தவிர வேறெந்த வேலையிலும் ஈடுபடுத்துவது கிடையாது. பல பெற்றோர் குழந்தையின் மேலுள்ள அதீத அன்பால், குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளிலிருந்து விலக்கிவைப்பது பெரும் ஆபத்து. இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும்.

satu

என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒரு நபர்,“ "எங்க பையனுக்கு குடிக்கும் தண்ணீர்கூட நாங்களே கொண்டு கொடுத்துவிடுவோம். எந்த வேலையையும் செய்யவிட மாட்டோம். படித்து நல்ல வேலைக்குப் போய்விட்டால் போதும்' என்றார். 24 மணி நேரமும் எந்தப் பொழுதுபோக்குமில்லாத ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை உணரவேண்டும். குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது. சோம்பல் மிகுதியாகும்.

9-ல் சனி இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் அதீத அன்பால் குழந்தைகளைப் பராமரிப்பதில் மட்டும் கவனமாக இருப்பார்கள். ரிலாக்ஸாக இருக்கும் குழந்தைகள் சிறிது நேரத்தில் படித்து முடித்து, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். குழந்தைகளை வேலைவாங்கச் சொல்லவில்லை. நமது அன்றாட வேலைகளில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளத்தான் சொல்கிறேன். எந்த வேலையும் செய்யாத, செய்யத் தெரியாத குழந்தைகள் விரைவில் தனிமை விரும்பியாகிவிடுவார்கள்.

வெளியுலகம் தெரியாமல், வீட்டிலுள்ள விஷயங்களும் தெரியாமல் எப்படி ஒரு மனிதன் ஊரிலும், நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னை சமாளித்து வாழமுடியும்?

முறையான வழிகாட்டுதலும், அரவணைப் பும், அக்கறையும் மட்டுமே இருக்கவேண்டும். அதீத ஆர்வமும், எல்லைமீறிய அன்பு பாராட்டு தலும் அவர்களுக்கு நிச்சயமாக நன்மை தராது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு,‘"எங்க குழந்தைக்கு 9-ல் சனி. அதனால எல்லா வேலையையும் நாங்களே செய்ய வேண்டி யுள்ளது'’ என்று சனி பகவான்மீது பழிபோடு வார்கள். இது நியாயமா?

2. குழந்தைகளின் தவறைக் கண்டுகொள்ளாதவர்கள் இந்தப் பெற்றோர் அதீத அன்பின் இரண்டாவது வகை. குழந்தைதானே- காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று, அவர்களை மிக சுதந்திரமாக வளர்ப்பார்கள். எது தவறு? எது சரி என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துவது கிடையாது. வளர்ந்தபிறகு எல்லாம் சரியாகிவிடும் என்ற அசட்டு நம்பிக்கை. எனது வாடிக்கையாளர் ஒருவரின் மகனுக்கு துலா லக்னம். 5-ஆம் அதிபதி சனி 6-ல். குறைந்தது ஒரு பத்துபேரை அந்தப் பையன் காதலித்திருப்பான். ஒரு நண்பரிடம் பழகுவான்; சண்டை போடுவான். பிறகு, அடுத்த நண்பரைத் தேடிப்போவான். அந்தப் பையனின் ஜனன ஜாதக அமைப்பின்படி காதல் நிலைக்காது. இதைப் பலமுறை கூறியும் அந்தப் பெற்றோர் தங்கள் மகனைக் கண்டிக்கவில்லை. இப்பொழுது அந்தப் பையனைப் பற்றித் தெரிந்த உள்ளூர்வாசிகளால் திருமணம் தடைப்படுகிறது. அளவிற்குமீறிய சுதந்திரமும் ஆபத்துதான்.

3. குழந்தைகளை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது இந்த வகை குழந்தைகளுக்கு 4-ல் சனி இருக்கும். கிடைப்பதை உண்டு, இயன்றதைப் படித்து, எந்த கவனிப்பும், பராமரிப்புமின்றி வாழ்வார்கள். சாதனை செய்தால் பெற்றோரி டமிருந்து பாராட்டு கிடைப்பதுமில்லை. தவறு செய்தால் கண்டிக்கவும் மாட்டார்கள். தாங்களும் எந்திரமாக வாழ்வதுடன், குழந்தைகளையும் கண்டுகொள்வதில்லை.

4. குழந்தை வளர்ப்பில் ஆதாயம் தேடுவது பிறந்த குழந்தைகளால் பெற்றோருக்கு நற்பலன் மிகுதியாகுமா? தீய பலன் மிகுதியாகுமா என்ற எண்ணம் பல பெற் றோருக்கு இருக்கிறது. லாபமோ, நட்டமோ- பிறந்த குழந்தையைப் பராமரித்து, சுயகாலில் நிற்கச்செய்வது தமது கடமை என்று தெரிந்தாலும், நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை இல்லாதவர்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு தம்பதி தங்களது ஆறு வயது ஆண் குழந்தையின் ஜாதகத்தைக் கொடுத்து, "குழந்தையால் பெற்றோருக்கு பாதிப்பு இருக்கிறதா' என்று கேட்டார்கள். குழந்தைக்கு அஷ்டமாதிபதி, அஷ்டம ஸ்தானத்தில் நின்று தசை நடத்திக்கொண்டிருந்தார். ஏழரைச்சனி நடந்துகொண்டிருந்தது. "குழந்தையைத் தத்துக்கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்; நிலைமை சீராகும்' என்று கூறினேன்.

அவர்கள் விடாப்பிடியாக, “"எனக்குக் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலில் பல லட்சம் இழப்பு. இதற்கு குழந்தையின் நேரம்தான் காரணமென்று ஜோதிடர் ஒருவர் கூறினார். குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தால், இழந்த பணம் மீண்டும் கிடைத்து, நிலைமை சீராகிவிடும் என்றும் கூறியுள்ளார். குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தால் பணம் கிடைத்துவிடுமா?' என்று கேட்டார். உங்களின் ஜாதகத்தைத் தாருங்கள் என்றேன். அதற்கு அவர், "ஆண் குழந்தை பிறந்துவிட்டால், தந்தைக்கு மகன் ஜாதகம் மட்டுமே வேலைசெய்யும். எனக்கு ஜாதகம் பார்க்கவேண்டிய அவசியமில்லை' என்று அரைமனதாக ஜாதகம் கொடுத்தார்.

தந்தை, மகன் இருவரும் மகர ராசி. தந்தைக்கும் விரயச்சனி. “"விரயத்திற்கு உங்கள் குழந்தையின் ஜாதகம் காரணமில்லை. உங்கள் ஜாதகக் குற்றமே காரணம்' என்று புரியவைத்த பிறகு, குழந்தையைத் தத்துக்கொடுத்து வாங்கினால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406