சனி, செவ்வாய் இணைவு தரும் பலன்கள்!

/idhalgal/balajothidam/saturn-and-mars-merger-benefits

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜீவநாடியில் என்னிடம் பலன்காண வந்தவர்களில் பலர் தங்கள் வாழ்வில், பூர்வீக சொத்துகளில் தனக்கு முறையாகக் கிடைக்கவேண்டியவை கிடைக்கப் பெறாமலும், சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், தந்தைவழி உறவுகளால் ஒதுக்கப்பட்டு வாழ்வதாகவும் கூறுகிறார்கள். சரியான- நிலையான தொழில் அமையாமல், பல தொழில்களை மாறிமாறி செய்வது, தொடங்கிச் செய்யும் எல்லா செயல்களிலும் தடைகள் உண்டாவது, தொழிலில் தடை, முடக்கம், கடன் தொல்லை, பணத்தோடு பணம் சேர்க்க முடியாமல் போவது, உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவது, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் போன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

பெண்களிலும் பலர் திருமணத் திற்குப் பின்பு, கணவனுடன் இணைந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியவுடன் கணவனுக்கு தொழில், உத்தியோகம் சரியாக அமையாமல் பணத்தட்டுபாடு, கடன் பிரச்சினைகள், இதனால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, கணவன்வழி குடும்ப உறவுகளால் ஒதுக்கப்படுதல், அவர்களைவிட்டுப் பிரிந்து வாழ்வது போன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவித்து வாழ்வதாகவும், இதற்குக் காரணத்தையும், இந்த குறைகள் தீர்வதற்கு வழியையும் கேட்டுவந்துள்ளனர்.

tt

இதுபோன்ற சிரமங்களை அனுபவித்துக்கொண்டி ருப்பவர்களுக்கு, ஜீவநாடியில் அகத்தியர், அவர்கள் முற்பிறவியில் தன் குடும்ப உறவுகளுக்குச் செய்த பாவங்களையும், துரோகச் செயல்க

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜீவநாடியில் என்னிடம் பலன்காண வந்தவர்களில் பலர் தங்கள் வாழ்வில், பூர்வீக சொத்துகளில் தனக்கு முறையாகக் கிடைக்கவேண்டியவை கிடைக்கப் பெறாமலும், சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், தந்தைவழி உறவுகளால் ஒதுக்கப்பட்டு வாழ்வதாகவும் கூறுகிறார்கள். சரியான- நிலையான தொழில் அமையாமல், பல தொழில்களை மாறிமாறி செய்வது, தொடங்கிச் செய்யும் எல்லா செயல்களிலும் தடைகள் உண்டாவது, தொழிலில் தடை, முடக்கம், கடன் தொல்லை, பணத்தோடு பணம் சேர்க்க முடியாமல் போவது, உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவது, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் போன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

பெண்களிலும் பலர் திருமணத் திற்குப் பின்பு, கணவனுடன் இணைந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியவுடன் கணவனுக்கு தொழில், உத்தியோகம் சரியாக அமையாமல் பணத்தட்டுபாடு, கடன் பிரச்சினைகள், இதனால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, கணவன்வழி குடும்ப உறவுகளால் ஒதுக்கப்படுதல், அவர்களைவிட்டுப் பிரிந்து வாழ்வது போன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவித்து வாழ்வதாகவும், இதற்குக் காரணத்தையும், இந்த குறைகள் தீர்வதற்கு வழியையும் கேட்டுவந்துள்ளனர்.

tt

இதுபோன்ற சிரமங்களை அனுபவித்துக்கொண்டி ருப்பவர்களுக்கு, ஜீவநாடியில் அகத்தியர், அவர்கள் முற்பிறவியில் தன் குடும்ப உறவுகளுக்குச் செய்த பாவங்களையும், துரோகச் செயல்களையும் தெளிவாகக் கூறி, இந்த சிரமங்களிலிருந்து விடுபட சாப நிவர்த்தி வழிமுறைகளைக் கூறி, அவர்கள் வருங்கால வாழ்வில் இந்த சிரமங்கள் வராமல் தடுத்துக்கொள்ள நல்ல வழியினையும் கூறிவிடுகிறார்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்கள் அமைப்பின்மூலம், இது போன்ற பலன்கள் உண்டாவதை அறிந்துகொள்ள, பலரது ஜாதகத்தை தமிழ் ஜோதிடமுறையில் ஆய்வுசெய்தபோது, சனி, செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையும், சம்பந்தமும் காரணமென்று அறியமுடிந்தது. இந்த இரண்டு கிரகங்கள் சம்பந்தம்மூலம் இன்னும் பல சூட்சுமமான பலன்களையும், அதற்குரிய முன்பிறவி கர்மவினைப் பதிவுகளையும் அறியமுடிந்தது. அதுபற்றிய விவரங்களை சுருக்கமாகக் காண்போம்.

ஒருவரின் முற்பிறவி பாவ- சாப தோஷப் பதிவுகளை பிறப்பு ஜாதகத்தின் மூலம் அறிந்துகொள்ளவும், அந்த சாபம் செயல்படும் காலத்தை தெரிந்து கொள்ளவும்,

வேத ஜோதிடமுறையில் பலன் காணக் கூறப்படும் ராசி, லக்னம், தசை, புக்தி போன்றவற்றைப் பார்க்கத் தேவையில்லை. சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிடமுறை மூலமே அனைத்து தோஷங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஜீவநாடியில் பலன் கேட்க வருபவர்களில் பலர், "ஐயா, இதுவரை கோவில் பிரார்த்தனைகள், ஹோமம், கிரக சாந்திகள் என அனைத்தையும் செய்து விட்டோம். அதனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை'' என கூறுகின்றனர். இதுபோன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களால் பாவ- சாபம் தீராது என்பதே பலரது அனுபவத்தில் அறிந்த உண்மை.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் ஒரே ராசியில் இணைந்திருந்தாலோ, ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் அமர்ந்திருந்தாலோ அவர்களது முற்பிறவியில் சகோதரர்கள், ரத்த சம்பந்தமான உறவு களுக்குச் செய்த பாவத்தால் உண்டான சகோதர சாபம் இந்தப் பிறவியில் நூறு சதவிகிதம் சிரமங் களைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.

பிறப்பு ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் ஒரே ராசியிலோ அல்லது சனி இருக்கும் ராசிக்கு திரிகோண ராசிகளான 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்து, சனி இருக்கும் நட்சத்திரத்திற்கு முன்னாலுள்ள நட்சத்திரத்தில் செவ்வாய் (செவ்வாய்+சனி) என்ற நிலையில் இருந்தாலோ ஜாதகரின் சகோதரர்கள் தொழில், பொருளாதார சிரமங்களை அடைந்து வாழ்வார்கள்.

ஜாதகத்தில் ஒரே ராசியிலோ அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி இருக்கும் நட்சத்திரத்துக்கு அடுத்து நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், ஜாதகர் சகோதரர்கள், பங்காளிகள், ரத்த சம்பந்தமான உறவுகளால் ஒதுக்கப்படுவார். சகோதரர்களின் உதவி கிடைக்காது; ஒற்றுமை இராது. முன்புகூறிய அனைத்துப் பலன்களையும் அனுபவித்து துன்பத்துடன் வாழ்வார். ஆனால் இவரது யோகத்தை அனுபவித்து சகோதர- சகோதரிகள் பணம், சொத்து, வாகனம், வீடு, தொழில் என உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு முன் ராசியான 12-ஆவது ராசியில் சனி இருந்தாலும், ஜாதகர் வாழ்வில் சிரமம், கஷ்டம், சகோதர பகை, எதிரிகளால் தொல்லை, செய்யாத குற்றத்திற்கு தண்டனை போன்றவற்றை அனுபவிக்க நேரும். உறவுகள் ஜாதகரை கீழ்த்தரமாக எண்ணுவார்கள்.

ஜாதகர் எதைச் செய்தாலும் அது குற்றமாகக் கருதப்படும். பணவிரயம் போன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவிப்பார்.

ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தால், ஜாதகரின் யோகத்தால் அவரது சகோதர- சகோதரிகளுக்கு உயர்வான உத்தியோகம், தொழில் சிறப்பாக அமைந்து, பணம், சொத்து, வாகனம் என புகழுடன் சிறப்பாக வாழ்வார்கள். ஆனால் ஜாதகருக்கு எந்த உதவியும் செய்யாமல் ஒதுக்கிவைத்து விடுவார்கள். உறவு முறிந்துவிடும். ஜாதகரை குடும்பத்தினர் எதிரிபோல எண்ணுவார்கள்.

ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தாலும் அல்லது ராகு- கேது கிரகங்களின் அச்சிற்கு ஒருபுறம் செவ்வாயும், மறுபுறம் சனியும் இருந்தாலும் சகோதர சாபத்தால் உண்டாகும் சிரமங்களை ஜாதகர் அனுபவிப்பார்.

பெண்களின் பிறப்பு ஜாதகத்தில் இது போன்று செவ்வாய், சனி அமைந்திருந்தால், திருமணத்திற்குமுன்பு அவளது சகோதரனுக்கு சிரமம், தடைகளைத் தந்துவிடும். ஜாதகிக்கு திருமணம் தடை, தாமதமாகும். திருமணத்திற்குப்பின்பு அவளது கணவனுக்கு சிரமங்களைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடும். கணவன்வழி உறவுகளால் எந்த நன்மையும் ஆதரவும் இராது. குடும்பத்தைவிட்டு வெளியேறி தனிக்குடித்தனம் செய்ய வைத்துவிடும்.

இனி இந்த சகோதர சாபம் செயல்பட்டு சிரமங்கள் தரும் காலங்களை அறிவோம்.

கோட்சார நிலையில் சனி பெயர்ச்சியாகி, எந்த ராசியில் செவ்வாய் இருந்தாலும், அந்த செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 7, 2, 12-ஆவது ராசிகளில் சனி சஞ்சாரம் செய்யும் இரண்டரை வருடகாலம் சகோதர சாபம் செயல்பட்டு, குடும்பத்தில் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள், எதிரிகளால் தொல்லை, பங்காளிப் பிரச்சினை, ரத்த சம்பந்தமான உறவுகளிடையே பகை, கடன் தொல்லைகள், பணவிரயம், பொருள் விரயம் உண்டாகும்.

உடலில் ரத்த காயம், வயிறு சம்பந்தமான- பல் சம்பந்தமான நோய்கள், நல்ல காரியங்கள் நடப்பதில் தடை, ரத்த விரயம், ரத்தம் சம்பந்தமான நோய்கள், அறுவை சிகிச்சை என மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

பொதுவாக ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சம்பந்தம் பெற்றிருந்தால், அவரது வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கும். போராட்டமில்லாமல் எதையும் பெறவோ அடையவோ முடியாது. இவரின் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு காலம் சிரமமும் போராட்டமும் தான். அதாவது ஒருவரின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்றால், 40 ஆண்டுகள் சிரமமான வாழ்க்கையும், 20 ஆண்டுகள் அவ்வப்போது ஓரளவு சுகமான வாழ்க்கையையும் வாழநேரிடும்.

சனி, செவ்வாய் சேர்க்கை பெற்ற வாசகர்கள் தங்கள் கடந்தகால வாழ்வில் இதுபோன்ற பலன்களை அனுபவித்திருப் பார்கள். அல்லது இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அனுபவரீதியாக உண்மையை நீங்களே அறிந்துகொள்ளுங்கள். ஜோதிடம்- ஆன்மிகம் சம்பந்தப்பட்டதல்ல. அறிவு, ஆராய்ச்சி, வாழ்வின் அனுபவம் சம்பந்தப்பட்டது என்பதே உண்மை.

செல்: 99441 13267

bala011021
இதையும் படியுங்கள்
Subscribe