Advertisment

சனியும் கேதுவும் சுற்றுச்சூழலும்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/saturn-and-ketu-are-environment-r-mahalakshmi

லகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஆயிரம் பிரச் சினைகள் உள்ளன. மிக சிரம மான நேரத்தில் ஜாதகம் பார்த்து, தசாபுக்திப்படி பரிகாரம் செய்துகொள்கின்ற னர். இது தனிப்பட்ட மனிதருக் குரியது.

Advertisment

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உண்டாவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரச்சினைகள் பெரிதாகி வதைக்கிறது.

தற்போதைய கால கட்டத்தில் குப்பை சார்ந்த பிரச்சினை அரசாஙகத்தையும், அரசு அதிகாரிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மிகவும் மாடாய்ப் படுத்துகிறது.

ஜோதிடம் குப்பையைப் பற்றி ஏதேனும் கூறியிருக்கிறதா? கண்டிப்பாக, குப்பையைக் குறிக்கவே ஒரு கிரகம் உள்ளது. அது சனி பகவான்தான்.

Advertisment

ss

சனியின் இயல்பு என்ன? அழுக்கு, துர்நாற்றம், கறுப்பு மற்றும் சாம்பல் நிறம், கிழிந்த ஆடை, எண்ணெய்ப் பிசுக்கு, அருவருப்பான முடி, கழிவுப் பொருட்கள், பன்றி, தோல், மண், பழைய பொருட்கள். மயானம், பழைய செருப்பு, நிலக்கரி, எச்சில் பாத்திரங்கள், கள், மாமிசம் என இவை போன்ற பல காரகங்கள் சனி பகவானுக்கு உண்டு.

இவரைப்போல இன்னொரு கிரகம் கேதுபகவான். இவர் புல், மூலிகை, வேர்கள், சாக்கடை, உறைய வைத்தல், குறுக்குதல் போன்றவற்றைச் செய்வார்.

ஆக, இப்போதைய சூழ்நிலையில், மற்ற கிரகங்கள் உண்டாக்கும் மாசுகளை, கழிவுகளை இந்த இரண்டு கிரகங்கள் நீக்கிவிடும் ஆற்றல் கொண்டவை.

சூரியன்

சூரியனின் முக்கியமான காரகம் மலைகளும், வனங் களும் ஆகும். இதன்மூலம் உண்டாகும். இலை, தழை, குச்சிகள் போன்றவற்றை சனிபகவான் தனது ம

லகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஆயிரம் பிரச் சினைகள் உள்ளன. மிக சிரம மான நேரத்தில் ஜாதகம் பார்த்து, தசாபுக்திப்படி பரிகாரம் செய்துகொள்கின்ற னர். இது தனிப்பட்ட மனிதருக் குரியது.

Advertisment

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உண்டாவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரச்சினைகள் பெரிதாகி வதைக்கிறது.

தற்போதைய கால கட்டத்தில் குப்பை சார்ந்த பிரச்சினை அரசாஙகத்தையும், அரசு அதிகாரிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மிகவும் மாடாய்ப் படுத்துகிறது.

ஜோதிடம் குப்பையைப் பற்றி ஏதேனும் கூறியிருக்கிறதா? கண்டிப்பாக, குப்பையைக் குறிக்கவே ஒரு கிரகம் உள்ளது. அது சனி பகவான்தான்.

Advertisment

ss

சனியின் இயல்பு என்ன? அழுக்கு, துர்நாற்றம், கறுப்பு மற்றும் சாம்பல் நிறம், கிழிந்த ஆடை, எண்ணெய்ப் பிசுக்கு, அருவருப்பான முடி, கழிவுப் பொருட்கள், பன்றி, தோல், மண், பழைய பொருட்கள். மயானம், பழைய செருப்பு, நிலக்கரி, எச்சில் பாத்திரங்கள், கள், மாமிசம் என இவை போன்ற பல காரகங்கள் சனி பகவானுக்கு உண்டு.

இவரைப்போல இன்னொரு கிரகம் கேதுபகவான். இவர் புல், மூலிகை, வேர்கள், சாக்கடை, உறைய வைத்தல், குறுக்குதல் போன்றவற்றைச் செய்வார்.

ஆக, இப்போதைய சூழ்நிலையில், மற்ற கிரகங்கள் உண்டாக்கும் மாசுகளை, கழிவுகளை இந்த இரண்டு கிரகங்கள் நீக்கிவிடும் ஆற்றல் கொண்டவை.

சூரியன்

சூரியனின் முக்கியமான காரகம் மலைகளும், வனங் களும் ஆகும். இதன்மூலம் உண்டாகும். இலை, தழை, குச்சிகள் போன்றவற்றை சனிபகவான் தனது மக்கும் தன்மையால், மக்க வைத்து உரமாக்கிவிடுகிறார். சூரியன் கோதுமை போன்ற உணவுப் பொருட்களைக் குறிக்க, அவை ஏற்படுத்தும் கழிவுகளை கேது பகவான் சிதைத்து அழிக்கிறார். சூரியன் மருத்துவத்தைக் குறிப்பார். மருத்துவக் கழிவுகள் ஏராளமாக உண்டாகின்றன. இதனை சனிபகவான் தனது சுழற்சிமுறையில் சுழலவைத்து அழிக்கிறார். கேது அவற்றைக் குறுக்கி அழிக்கிறார்.

சில மருத்துக் கழிவுகளைக் கேது தனது பிரிக்கும் தன்மையால் பிரித்து அழிக்கிறார்.

சூரியன், விஞ்ஞான ஆராய்ச்சி, ஒளி தொடர்பு டைய பொருட்கள் பேட்டரி சாதனங்கள் என எளிதில் அழியாத பொருட்களைக் குறிக்க, சனியும் கேதுவும் உருக்குதலைத்து, மெதுவாக அழிகிறார்கள். சூரியன் சில வகை எரிபொருளைக் குறிக்க, சனியும் கேதுவும் அவற்றை சாம்பலாக்கி அழிக்கிறார்கள்.

சூரியனின் காரக சாதனங்கள் எளிதில் அழிக்க முடியாததாக இருக்கும். அவற்றை சனியும் கேதுவும் மெதுவாக செயலாற்றி அழித்துவிடுவர்.

சந்திரன்

இவர் பெரும்பாலும் திரவப் பொருட் களைக் குறிப்பார். எனவே தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, ரசாயன, சாயக் கழிவுகளே பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனை சனிபகவான் தனது சுழற்சி முறையில் சுழலச் செய்து கழிவுகளை அகற்றிவிடுவார். திடக் கழிவுப் பொருட்களை கேது பகவான் தனது அழுத்தும், குறுக்கும் தன்மையால் மக்கச் செய்து, சிறு துண்டுகளாக்கி விடுவார். சந்திரனின் காரகமான பாலை, தயிராக மாற்றுவது நுண்ணுயிரிகள்தான். கேது பகவானே இந்த நுண்ணுயிரி பாக்டீயா வைக் குறிக்கிறார்.

சில உணவுப் பொருட்கள் பல்கிப் பெருகுவதற்கும், புளிப்பதற்கும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், மிருதுத் தன்மையோடு மாறுவதற்கும் கேதுவின் செயலே காரணமாகும்.

சந்திரனின் காரகமான பூக்களை சனி காயச் செய்து, பொடியாக்கி பலவித தொழிலுக்கு உதவுகிறார். பழங்களைப் பிழிந்து சாறாக்கிக் குறுக்கி, இனிப்பு பானமாக்கும் வேலையை கேது செய்வதால், பழங்களால் ஏற்படும் அசுத்தத்தைக் குறைக்கிறார். தற்போதைய காலத்தில், குடிநீரை சுத்தப்படுத்த, சனியின் காரகமான "வாட்டர் ப்யூரிஃபையர்' எனும் இயந்திரம் உதவுகிறது. கடல் நீரை வற்றச்செய்து உப்பு தயாரிக்க கேது உதவுகிறார். கடலில் ஆங்காங்கே பாறைகளை சனி உண்டாக்க, அதில் பாசி, தாவரங்களை கேது வளர்க்க, இதனால் கடல் பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டு, மீன்கள் வளர்கின்றன.

செவ்வாய்

செவ்வாயின் முக்கிய காரகம் பூமி, விளைநிலம். பூமியில் விளையும் உணவு வஸ்த்துகளை மனிதசர்கள், விலங்குகள் எடுத்துக்கொள்ள, தேவையற்ற பொருட்களை சனியும் கேதுவும் மக்கச்செய்து உரமாக்கி விடுகிறார்கள். செவ்வாயின் மற்றொரு காரகம் ரத்தம். இதனை உறையச் செய்பவர் கேது. காயங்களிலிருந்து ரத்தம் தொடர்ந்து வெளியேறினால், மனிதருக்கு அது பெரும் தீங்கை ஏற்படுத்தும். கேது அதனை உறைய வைப்பதன்மூலம், மனிதரைக் காப்பாற்றுவதோடு, சூழலையும் பாதுகாக்கி றார். செவ்வாய் சமையல் துறையைக் குறிக்க, சனி அதன் கழிவுகளை மக்கவைத்து, உரமாக்கிவிடுவார். செவ்வாய் அறுவை சிகிச்சையைக் குறிக்க, அதன் மிச்சமிதிக் கழிவு களை சனியும் கேதுவும் பிரித்து, அரித்து அழிக்கிறார் கள். செவ்வாய் தனது நெருப்பு காரகத்தால் எரிக்கும் பொருட்களை சனி சாம்பலாக்க, கேது அந்த சாம்பலை செங்கல்லாக்கி, வீடுகட்ட மறுபயன்பாட்டிற்குக் கொடுத்துவிடுகிறார்.

புதன்

புதன் என்றவுடன் புத்தகம்தான் ஞாபகத்துக்கு வரும். நிறைய பழைய புத்தகம். காகிதங்கள் சேர்ந்தால் மிகக் கஷ்டமாகிவிடும். அதனை கேது அரைத்துக் கூழாக்கி, பழைய அட்டைகளை மாற்றி, புது உபயோகத்துக்கு அனுப்பிவிடுகிறார். புதனின் இன்னொரு காரகம் தோல். மிருகங்களின் தோல் அப்படியே கிடந்தால், ஊர் நாற்றமெடுத்து வியாதி வந்துவிடும். இதனை சனி சுத்தப்படுத்த, கேது தனது பிரிக்கும் ஆற்றலால் பிரிக்கிறார். இதனையே தொழிற்சாலைகளில் தோல் பொருட்களாகச் செய்து. வணிகத்தைப் பெருக்குகிறார்கள். புதனின் மற்றொரு காரகம் தோட்டம். இந்த தோட்டம், பண்ணைகளில் விழும் இலைகள் அப்படியே இருந்தாலும், அதனை சேகரித்து ஒரு இடத்தில் போட்டாலும், மாறுதல் இல்லை யென்றால் தோட்டமே கழிவு இலைகளால் மூடிவிடும். ஆனால் சனியும் கேதுவும் இந்த தாவரக் கழிவுகளை மக்கவும் இறுக்கவும், துணுக்குகளாக மாற்றவும் செய்து தோட்டம், பண்ணைகளை பாதுகாத்தும் கொள்கிறார் கள்.

குரு

குரு பொதுவாக கோவில், ஆன்மிகம், பூஜை, பசுக்கள், பெரிய உறுதியான மரங்கள் போன்றவற்றைக் குறிப்பார். பொதுவாக குருவினால் ஏற்படும் கழிவுகள் எனில் பழைய பூக்கள், உதிர்ந்த இலைகள், பசுக்களின் சாணம், கோமியம் என இவைதான் இருக்கும். பழைய பூக்கள், மீதமான பூஜைப் பொருட்கள் இவற்றை சனி மக்கச் செய்துவிடுகிறார்.

மரங்கள் உதிர்க்கும் இலை, தழைகளை மக்கச்செய்து உரமாக்கிவிடுகிறார். சாணம், கோமியம், பால், நெய், தயிர் இவை சேர்ந்து சனி, கேதுவினால் மக்கி, பஞ்சகவ்யமாகி பயிர்களுக்கு செழிப்பு கொடுக்கவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. குருவின் ஒரு காரகம் மஞ்சள். இது முழுவதாக இருப்பின் அதிகப் பயனில்லை. கேது இதனைப் பொடியாக்கி விடுவதால், மஞ்சள் பொடி பலவித கிருமி நாசினியாக உதவுகிறது.

சுக்கிரன்

இவர் பொதுவாக அழகுப் பொருட்களைக் குறிப்பார். மேலும் விதவிதமான உணவுப்பொருட்கள், இனிப்புப் பொருட்களையும் குறிப்பார். மேலும் ஆடைகள், மலர்களையும் குறிப்பார். இவை வீணாகும்போது, சனி பகவானே இவற்றை நைந்துபோகவும் மக்கிப்போகவும் செய்கிறார்.

கேது பிரித்து அழுத்தி மறுபயன் பாட்டுக்கு வழிசெய்கிறார் பழங்களை அழுத்தி புளிக்கச்செய்து, தனது நுண்ணுயிரிகள்மூலம் மதுவாக மாற்றுவதே கேதுதான் என்பது தெரிந்ததே! ஆக, கிரகங்கள் உண்டாக்கும் பலவகைக் கழிவுகளையும் சனியும் கேதுவும் பிரித்தும், அழித்தும், குறுக்கியும், மக்கச் செய்தும். அழித்து உலகைக் காப்பாற்று கிறார்கள். ராகு கிரகத்தை இவ்விஷயத்தில் சேர்க்க இயலாது.

எப்போதும் ஜோதிட நூல்கள் சனியும் கேதுவும் அழுக்கு, இருண்ட, தனித்த, சற்று துர்நாற்றம் உடைய கிரகங்கள் என்று கூறும்.

இருக்காதா பின்னே! நாள் முழுவதும் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த கிரகங்கள் அழுக்காக இருப்பது நியாயம்தானே!

சுற்றுசூழல் ஆர்வலர்கள் சனியைக் குளிர்விக்க, சனீஸ்வர பகவானையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபட வேண்டும்.

சனி, கேதுவைச் சேர்த்து வணங்க ஆங்காங்கே உள்ள காவல் தெய்வமான முனீஸ்வரன், கருப்பன், மதுரைவீரன் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

செல்: 94449 61845

bala111024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe