Advertisment

12 பாவங்களில் சனி!

/idhalgal/balajothidam/saturn-12-sins

னி தன் எதிரியான செவ்வாயின் வீடான மேஷத்தில் இருந்தால் ஜாதகர் புகழுடன் இருப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். ஆனால் சனி நீசமடைவதால், ஜாதகருக்கு வருமானம் குறைவாக இருக்கும். அரசாங்க வேலைகளில் பிரச்சினைகள் ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில், தன- குடும்ப ஸ்தானத் தில் தன் நண்பர் சுக்கிரனின் ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்குப் புகழ் கிடைக்கும். பண வருமானம் இருக்கும். குடும்பத்தின் நிலை உயரும். ஆனால், சனியின் 3-ஆம் பார்வை 4-ஆம் வீட்டிற்கு இருப்பதால், தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் வாங்குவதில் பிர

னி தன் எதிரியான செவ்வாயின் வீடான மேஷத்தில் இருந்தால் ஜாதகர் புகழுடன் இருப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். ஆனால் சனி நீசமடைவதால், ஜாதகருக்கு வருமானம் குறைவாக இருக்கும். அரசாங்க வேலைகளில் பிரச்சினைகள் ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில், தன- குடும்ப ஸ்தானத் தில் தன் நண்பர் சுக்கிரனின் ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்குப் புகழ் கிடைக்கும். பண வருமானம் இருக்கும். குடும்பத்தின் நிலை உயரும். ஆனால், சனியின் 3-ஆம் பார்வை 4-ஆம் வீட்டிற்கு இருப்பதால், தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

saturn

3-ஆம் பாவம் பராக்கிரம ஸ்தானம்.

சனி தன் நண்பர் புதனின் மிதுன ராசியில் இருந்தால், ஜாதகர் தைரியமாக இருப்பார். அண்ணன்- தம்பி உறவு நன்றாக இருக்கும். தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஜாதகர் எதையும் ருசித்து சாப்பிடுவார்.

4-ஆம் பாவத்தில் சனி இருந்தால், தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, நிலம் விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.

5-ஆம் பாவத்தில் சனி, தன் பகைவரான சூரியனின் வீட்டி-ருந்தால், ஜாதகருக்குத் தன் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். மனைவி யால் சந்தோஷம் கிடைக்கும். சனி, சூரியனின் வீட்டி-ருப் பதால் படிப்பு நன்றாக இருக்கும்.

6-ஆம் பாவத்தில் சனி, புதனின் கன்னி ராசியில் இருந்தால், தந்தையுடனான உறவு சரியாக இருக்காது. தொழி-ல் கடுமையாக உழைத்தபிறகுதான் வெற்றி கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

7-ஆம் பாவத்தில் சனி இருந்தால் வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சனிபகவான் உச்சமடைவதால், மனைவியின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு மனைவியால் புகழ் கிடைக்கும். தந்தையின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சனி, ஆயுள் காரகனாக இருந்து செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் வருமானம் குறையும். நீண்ட ஆயுள் இருக்கும். சிலருக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் சனி, தர்ம ஸ்தானத்தில் தன் எதிரி குருவின் ராசியில் இருந்தால், இளமையில் கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும். ஆனால் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் நல்ல வருமானம் இருக்கும். புகழ் கிடைக்கும். பகைவர்களை ஜாதகர் தோற்கடிப்பார்.

10-ஆம் பாவத்தில் சனி இருந்தால், அரசாங்கப் பணிகளின் மூலம் நல்ல வருமானம் இருக்கும். ஜாதகருக்கு தந்தையின் ஆதரவும், அதனால் ஆதாயமும் கிட்டும். சனி, சுய வீட்டில் இருப்பதால், பணவரவு நன்றாக இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சனி பகவான் தன்னுடைய ராசியில் இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். புகழ் கிடைக்கும். தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். படிப்பு விஷயம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் சுமாரான தோற்றத்தில் இருப்பார்.

12-ஆம் பாவத்தில் சனிபகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அரசாங்க விஷயங்களில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும்.

bala130821
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe