ன்னி லக்னத்தில், புதனின் வீட்டில் சனி இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் சிறிய பிரச் சினைகள் இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப் பார். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளுடன் சிலருக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். தந்தையால் அவருக்கு சிறிய பிரச்சினை சந்திக்க நேரும். வியாபாரத்தில் பணம் வரும். பெயர், புகழ் கிடைக்கும்.

2-ஆம் பாவத்தில் துலா ராசியில் சனி பகவான் உச்சமடைகிறார். ஜாதகர் நன்கு படித்தவராகவும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார். குடும்பம் பெரிதாக இருக்கும். ஆனால் அதில் சில பிரச்சினைகள் உண்டாகும். பிள்ளைகளால் சிக்கல்களை சந்திப்பார். எனினும் பல தடைகளைக் கடந்து ஜாதகர் வெற்றிபெறுவார்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். பகைவர்களை வெல்வார். உடன்பிறப்புகளுடனான உறவில் பிரச்சினை இருக்கும். பல கஷ்டங்களைக் கடந்து வெற்றி கிடைக்கும்.

4-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்குத் தாயாருடனான உறவில் குறையிருக்கும். வீடு, வாகனம் வாங்குவதில் தடங்கல் ஏற்படும். பிள்ளைகளால் சிறிய பிரச்சினைகளை சந்திப்பார்கள். உடல்நலத்தில் குறையிருக்கும். எனினும் ஜாதகர் கடுமையாக உழைத்து வெற்றிகாண்பார்.

Advertisment

5-ஆம் பாவத்தில் மகர ராசியில் சனி பகவான் இருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். படிப்பு விஷயத்தில் பல தடைகளைக் கடந்து ஜாதகர் வெற்றிபெறுவார். புத்திசாலித்தனத் தைப் பயன்படுத்தி பகைவர்களை வெல்வார். பல போராட்டங்களைக் கடந்து வெற்றி கிடைக்கும்.

6-ஆம் பாவத்தில் கும்ப ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி வெற்றிபெறுவார். படிப்பு விஷயத்தில் சில தடங்கல் கள் உண்டாகும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

7-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனி பகவான் இருந்தால் வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும். மனைவியின் உடல்நலத்தில் குறையிருக்கும். சிறுநீர் கழிக்கும் உறுப்பில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் கடுமையாக உழைத்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்று வார். சனியின் 10-ஆவது பார்வை சுக ஸ்தானத்திற்கு இருப்பதால், பிள்ளைகளால் ஜாதகருக்கு பிரச்சினை உண்டாகும். ஆனால் அவர் பகைவர்களை வெல்வார். தான் பிறந்த இடத்தில் வாழ்ந்தால் ஜாதகர் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதி ருக்கும். தொழில் செய்யுமிடத்தை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும்.

Advertisment

8-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி நீசமடைகிறார். அதனால் ஜாதகருக்கு உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்ப தில் தடை உண்டா கும். பிள்ளைகளால் பிரச்சினைகளை சந்திப்பார். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் சந்தோஷமற்ற வாழ்க்கை வாழ்வார்.

murugan

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். படிப்பில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் நேர்மை குணம் கொண்டவராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும்.

10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். வர்த்தகத்தில் தடை ஏற்படும். எனினும் ஜாதகர் பெரிய அளவில் பணம் சம்பாதிப் பார். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். மனைவியுடன் உள்ள உறவில் குறையிருக்கும். வியாபாரத் தில் கடுமையான போட்டிக் குப்பிறகு வெற்றி கிடைக்கும்.

11-ஆம் பாவத்தில் எதிரியான சந்திரனின் கடக ராசியில் சனி இருந் தால் வருமானம் நன்றாக இருக்கும். ஜாதகர் பகைவர் களை வெல்வார்.

12-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனி இருந்தால் செலவுகள் அதிக மாக இருக்கும். அதனால் பல பிரச்சினைகள் உண்டாகும். வெளித் தொடர்பு களால் ஜாதகருக்கு சோதனைகள் உண்டாகும். அவ்வப் போது சிறிய நோய்களின் பாதிப்பிருக்கும். ஜாதகர் புத்திசாலித் தனமாக செயல்பட்டு எதிரிகளை வெல்வார். பணக் காரரைப்போல மிடுக்காக மற்றவர்களுக்குமுன் தன்னைக் காட்டிக்கொள்வார்.

செல்: 98401 11534