விருச்சிக லக்னத்தில் 12 பாவங்களில் சனி!

/idhalgal/balajothidam/saturn-12-sins-scorpio

க்ன கேந்திரத்தில், எதிரியான செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் ஜாதகர் சில நேரங்களில் சாந்த குணத் துடனும், சில நேரங்களில் கோபமாகவும் இருப்பார். தாயாரின் உடல்நலம் சுமாராக இருக்கும். பூமி, வாகனம் வாங்கலாம். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். அரசாங்க விஷயங் களில் பிரச்சினை ஏற்படும். வர்த்தகத்தில் போட்டி இருக்கும்.

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால், பண வரவிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறப்புகளுடன் உள்ள உறவில் குறை இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் பணக்காரராக- சுகவாசியாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் தன் சுயவீடான மகர ராசியில் சனிபகவான் இருந்தால் உடன்பிறந்தோரால் ஜாதகருக்கு சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் சுவைத்த

க்ன கேந்திரத்தில், எதிரியான செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் ஜாதகர் சில நேரங்களில் சாந்த குணத் துடனும், சில நேரங்களில் கோபமாகவும் இருப்பார். தாயாரின் உடல்நலம் சுமாராக இருக்கும். பூமி, வாகனம் வாங்கலாம். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். அரசாங்க விஷயங் களில் பிரச்சினை ஏற்படும். வர்த்தகத்தில் போட்டி இருக்கும்.

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால், பண வரவிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறப்புகளுடன் உள்ள உறவில் குறை இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் பணக்காரராக- சுகவாசியாக இருப்பார்.

3-ஆம் பாவத்தில் தன் சுயவீடான மகர ராசியில் சனிபகவான் இருந்தால் உடன்பிறந்தோரால் ஜாதகருக்கு சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் சுவைத்து சாப்பிடக்கூடிய வராக இருப்பார். தைரியசாலி. பூமி, வாகனம் இருக்கும்.

படிப்பு விஷயத்தில் பல தடங்கல்களைத் தாண்டவேண்டிய திருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பல போட்டிகளைக் கடந்து வெற்றிபெறுவார். தர்ம காரியங் களைச் செய்வதில் சில பிரச்சினைகள் இருக்கும்.

4-ஆம் பாவத்தில் தன் சுயவீடான கும்ப ராசியில் சனிபகவான் இருந்தால், ஜாதகருக்கு அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். வீடு வாங்க வாய்ப்பிருக்கிறது.

உடன்பிறந்தோர் வசதியாக வாழ்வார்கள். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார். பெயர், புகழுடன் இருப்பார்.

ss

5-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனிபகவான் இருந்தால், வாரிசுகளால் ஜாதகருக்கு சந்தோஷம் இருக்கும். ஆனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் சாதுரியமாக செயல்படுவார். அவருக்கு தன் அன்னையுடன் கருத்து வேறுபாடிருக்கும். பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனிபகவான் நீசமடைகிறார். ஜாதகர் மறைமுகமாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார். அவர் தன் உடன்பிறந்தோருடன் சுமாரான உறவைக் கொண்டிருப்பார். ஜாதகருக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும். ஜாதகர் தன் பணிகளை தைரியமாக செய்வார்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனிபகவான் இருந்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அன்னை யால் அவருக்கு சந்தோஷம் இருக்கும். அனைவரிடமும் சிரித்துப் பேசி ஜாதகர் தன் காரியங் களை நிறைவேற்றிக்கொள்வார். அதன்மூலம் தன் பலத்தை மற்றவர்களிடம் காட்டுவார்.

8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். தாயுடன் உள்ள உறவில் குறையிருக்கும். உடன்பிறந்தோருடனான உறவில் பிரச்சினை இருக்கும். வீடு, பூமி, வாகனம் வாங்குவதில் சில தடங்கல்கள் இருக்கும். படிப்பில் சில தடைகள் இருக்கும். வாரிசுகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார்.

9-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனிபகவான் இருப்பதால், மனதில் அமைதி இருக்காது. எனினும், ஜாதகர் தைரியமாக தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பல தடைகளைக் கடந்து வெற்றிபெறுவார். பூமி பாக்கியம் இருக்கும். தாயால் சந்தோஷம் இருக்கும். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.

அவர்களால் தடங்கல்கள் இருக்கும். எனினும் ஜாதகர் வெற்றிபெறுவார்.

10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனிபகவான் இருந்தால் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும்.

ஜாதகருக்கு பெற்றோருடன் சுமாரான உறவிருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். ஜாதகர் மிகுந்த தைரியசாலியாக இருப்பார். பல தடைகளைக் கடந்து வெற்றி பெறுவார். வீட்டில் சந்தோஷ சூழல் நிலவும்.

11-ஆம் பாவத்தில் தன் எதிரியான புதனின் கன்னி ராசியில் சனிபகவான் இருந்தால், ஜாதகருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அவர் சந்தோஷமாக வாழ்வார். ஜாதகர் சுமாரான தோற்றத் துடன் இருப்பார். அதிக அலைச்சல்கள் இருக்கும். படிப்பில் பல தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். பல சிக்கல் களைத் தாண்டி குழந்தை பாக்கியம் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக் கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சனிபகவான் உச்சமடைகிறார்.

அதனால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு வெளித் தொடர்புகளின்மூலம் ஆதாயமிருக்கும். பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன் உறவு சரியாக இருக்காது. சிலர் போதைப் பழக்கத் திற்கு அடிமையாவார்கள். பகைவர் களால் எப்போதும் பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534

bala281022
இதையும் படியுங்கள்
Subscribe