ரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் சனி

/idhalgal/balajothidam/saturn-12-sins-rishabha-lakshman

ரிஷப லக்னத்தில் சனிபகவான் தன் நண்பர் சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். இல்வாழ்க்கை யில் சில பிரச்சினைகள் உண்டாகும். உடற்பயிற்சி விஷயத்தில் புகழ் கிடைக்கும். ஜாதகர் சுயமாக நிறைய சம்பாதிப்பார்.

2-ஆம் பாவத்தில் சனி தன் நண்பர் புதனின் வீட்டில் இருந்தால் நல்ல பணவசதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் புகழுடன் வாழ்வார். உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். எப்போதும் பணம் குறித்த சிந்தனையே அதிகமாக இருக்கும்.

3-ஆம் பாவத்தில் சனி இருந்தால் உடன் பிறப்புகளுடன் சரியான உறவிருக்காது. ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு சாப்பிடுவார். கடுமையாக உழைப்பார். திறமையாக வியாபாரத்தைச் செய்வார். புகழ் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்பார்.

4-

4-ஆம் பாவத்தில் சனிபகவான் இருந்தால் ஜாதகருக்கு தாயுடன் மன வேறுபாடு இருக்கும். பகைவரான சூரியனின் வீட்டில் சனி இருப்பதால் பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினைகள் தோன்றும்.

saturn

இல்வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படும். அரசாங்க விஷயத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் சுமாரான லாபத்துடன் நடக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். தாய்மாமனுடன் உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜாதகர் தைரியத்துடன் வாழ்வார்.

5-ஆம் பாவத்தில் தன் நண்பர் புதனின் ராசியில் சனி இருந்தால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். படிப்பால் பயனிருக்கும். அனைவரிடமும் நன்கு பேசிப்பழகி, ஜாதகர் புகழ் பெறுவார். தந்தைக்கு நல்ல மகனாக இருப்பார். மனைவியின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும்.

6-ஆம் பாவத்தில் சனி உச்ச மடைகிறார். அதனால் வர்த்தகத் தில் புகழ், வெற்றி கிடைக்கும்.

ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். எனினும், தந்தையுடன் இணைந்து வெற்றி களைக் காண்பார். ஜாதகர் வெளியே பார்ப்பதற்கு உன்னத மனிதரைப்போல தெரிவார். ஆனால் மிகுந்த சுயநலவாதியாக இருப்பார். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. கடுமை யாக உழைத்து பணம் சம்பாதிப் பார்.

7-ஆம் பாவத்தில் சனிபகவான் செவ்வாயின் வீட்டில் இருந்தால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆனால், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பூமி, வீடு வாங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். எனினும் ஜாதகர் சந்தோஷமாக இருப்பார்.

8-ஆம் பாவத்தில் சனி இருந்தால் ஆயுள் விஷயத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படும். தர்மச் செயல்களைச் செய்யமுடியாத நிலை உண்டாகும். புகழ் பெறுவதில் சிறிய தடைகள் இருக்கும். புகழ்பெற ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் முழு பலத்தையும் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்து வார். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளை களால் புகழ் கிடைக்கும்.

9-ஆம் பாவத்தில் சனி சுய வீட்டில் இருந்தால் தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். ஜாதகருக்கு தந்தையின் ஆசிர்வாதம் கிட்டும். புகழுடன் வாழ்வார். சில நேரங்களில் நினைத்திராத இடத்திலிருந்து லாபம் வந்துசேரும். வாழ்க்கை முழுவதும் ஜாதகர் நற்பெயரையும் புகழையும் பெறுவதற்கு கடுமையாக உழைப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

10-ஆம் பாவத்தில் கேந்திரத்தில் சனிபகவான் சுயவீட்டில் இருந்தால், தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். புகழ் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தர்மச் செயல்களில் ஆர்வமிருக்கும். சனி 12-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். 4-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், பூமி, வீடு வாங்குவதில் இன்னல் கள் ஏற்படும். அன்னையின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பலரது பாராட்டுகளைப் பெறுவார்.

11-ஆம் பாவத்தில் சனிபகவான் தன் பகைவரான குருவின் வீட்டில் இருந்தால் லாபத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். அனைத்தையும் கடந்து லாபம் கிடைக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளால் புகழ் கிடைக்கும். அன்றாடப் பணிகளில் சிறிய தடைகள் உண்டாகும்.

12-ஆம் பாவத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீசமடைவதால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்புகளால் ஆதாயம் கிட்டும். ஆனால் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். தர்ம காரியங்களில் தடைகள் உண்டாகும். பகைவர் களால் பிரச்சினைகள் உண்டா கும். ஆனால் அந்த பிரச்சினைகளால்தான் லாபமே கிடைக் கும். புகழ் கிட்டுவதில் சிறிய தடைகள் ஏற்படும்.

செல்: 98401 11534

bala151021
இதையும் படியுங்கள்
Subscribe