னி பகவான் 7, 8-க்கு அதிபதியாக இருந்து, கடக லக்னத்தில் இருந்தால் ஜாத கருக்கு சுமாரான தோற்றம் இருக்கும். உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். மனதில் சஞ்சலம் எப்போதும் இருக்கும். முயற்சி களில் சுமாரான வெற்றி கிடைக்கும். தந்தை யால் பெயர், புகழ் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் சுமாரான லாபம் கிடைக்கும்.

2-ஆம் பாவத்தில் எதிரியான சூரியனின் சிம்ம ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு சிறிய அளவில் நஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். ஜாதகர் வெளியே தன்னை பணக்காரராகக் காட்டிக்கொள்வார். ஆனால் அவருக்கு பணக்கஷ்டம் இருக்கும். குடும்ப சுகத்தில் குறையிருக்கும்.

saturn

Advertisment

3-ஆம் பாவத்தில் தன் நண்பரான புதனின் ராசியில் சனி பகவான் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். உடன்பிறப்பு களுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் ருசித்து சாப்பிடுவார். கோப குணம் இருக்கும்.

4-ஆம் பாவத்தில் துலா ராசியில் சனி பகவான் உச்சமடைகிறார். அதனால் மனைவியால் சந்தோஷம் இருக்கும்.

அன்னையின் உடல்நலத்தில் சிறு குறைகள் இருக்கும். சொந்தத்தில் வீடு இருக்க வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் மகிழ்ச்சியுடன் வாழ்வார். சனி பகவான் 6-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் சிறிய அளவில் நோய் இருக்கும்.

5-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக் குப் பிள்ளைகளைப் பற்றிய கவலை இருக்கும். படிப்பாளியாக இருப்பார். வயிற்றில் பிரச்சினை வரக்கூடும். பணத்தைச் சேமிப்பதில் சிரமம் உண்டாகும். குடும்பத் தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் எப்போதும் அதிகமான சிந்தனைகள் இருக்கும்.

6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி பகவான் இருந்தால் பகைவர் கள் ஜாதகரைப் பார்த்து பயப்படுவார்கள். வியாபாரத்தில் பிரச்சினை இருக்கும். மனைவியின் உடல்நலத்தை கவனிக்க வேண்டும். வர்த்தகத்தில் கடுமையான போட்டிக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

7 ஆம் பாவத்தில் மகர ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பல சிரமங்களைக் கடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்.

8-ஆம் பாவத்தில் சனி பகவான் கும்ப ராசியில், சுயவீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியால் சிறிய அளவிலேயே சந்தோஷம் கிடைக்கும். வெளித் தொடர்பால் பணவரவு இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். சனியின் 10-ஆவது பார்வை 5-ஆவது பாவத்திற்கு இருப்பதால், பிள்ளை களால் மனக்கஷ்டம் உண்டாகும்.

9-ஆவது பாவத் தில் குருவின் மீன ராசியில் சனி பகவான் இருந்தால், அதிர்ஷ்டத்தில் சில தடைகள் ஏற்படும். ஜாத கருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். வர்த்தகத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பகைவர்கள் அதிக மாக இருப்பார்கள். மனதில் கஷ்டங்கள் இருந்தாலும் ஜாதகர் தைரியமாக இருப்பார்.

10-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி பகவான் நீசமடைவதால், ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அவ்வப்போது நோய்களின் பாதிப்பு ஏற்படும். மனதில் சஞ்சலம் இருக்கும். எனினும் ஜாதகருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். நல்ல பணவசதி இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி பகவான் இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குறைவான படிப்பே இருக்கும். ஆனால் ஜாதகர் சாதுர்ய குணம் கொண்டவராக இருப்பார். கடுமையாக உழைத்து குடும் பத்தைக் காப்பாற்றுவார்.

12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி பகவான் இருந்தால் செலவுகள் அதிக மாக இருக்கும். வெளித் தொடர் பால் ஜாதகர் பணம் சம்பாதிப் பார். சிலருக்கு உடல்நல பாதிப் பிருக்கும். தர்மச் செயல்கள் செய்வதில் தடைகள் உண்டா கும். எனினும் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

செல்: 98401 11534