மிதுன லக்னத்தில், தன் நண்பரான புதன் வீட்டில் அஷ்ட மாதிபதியான சனி பகவான் இருப்பதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்கள் செய்வார். தந்தையின் சொத்து கிடைக்கும். திருமண விஷயத்தில் சிறிய தடைகள் இருக்கும்.
தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனி பகவான் இருந்தால், பணத்தை சேமிப்பதற்கு ஜாதகர் கஷ்டப்பட வேண்டி யிருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். ஆனால் சுயநலவாதி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saturn_24.jpg)
3-ஆம் பாவத்தில் பகைவரான சூரியனின் சிம்ம ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நீண்ட ஆயுள் உண்டு. செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் உணவை ருசித்து சாப்பிடக்கூடியவர். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி நிறைய பணம் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் புதன் வீட்டில் சனி இருந்தால் ஜாதகரின் அன்னைக்கு உடல்நல பாதிப்பிருக்கும். தன் எதிரிகளுடன் கடுமையாகப் போராடி வெற்றிபெறுவார். தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். புத்திசாலித்தனமாக செயல் பட்டு பணம் சம்பாதிப்பார்.
5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். அதனால் ஜாதகருக்கு நல்ல படிப்பிருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். சனியின் 3-ஆவது பார்வை 7-ஆவது வீட்டில் இருப்பதால், ஜாதகர் தன் மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். வர்த்தகத்தில் சில தடைகள் இருக்கும். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார்.
6-ஆம் பாவத்தில் எதிரியான செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால், ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், அவர்களை வெல்வார். உடன்பிறப்பு களுடனான உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். மிகவும் கடுமையாக உழைத்தபிறகே பணம் வந்துசேரும். சில நேரங்களில் ஜாதகருக்கு தைரியம் குறைந்துவிடும்.
7-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி பகவான் இருந்தால், ஜாதகர் தன் மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். வியாபாரத் தில் லாபம்- நஷ்டம் இரண்டுமே உண்டு. சிலருக்கு பிறப்புறுப்பில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பல சிக்கல்களைத் தாண்டி ஜாதகர் வெற்றிபெறுவார்.
8-ஆம் பாவத்தில் சனி பகவான் சுய ராசியான மகரத்தில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். சனியின் பார்வை 10-ஆவது பாவத்திற்கும் 2-ஆவது பாவத்திற்கும் இருப்பதால், வர்த்தகத்திலும் தொழிலிலும் போட்டிகள் அதிகமாக இருக்கும். தர்மச் செயல் களைச் செய்வதில் மனதில் ஊசலாட்டம் இருக்கும். தன் பேச்சுத் திறமையால் பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் சனி பகவான் தன் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு இளம்வயதில் பல கஷ்டங்கள் ஏற்படும். படிப்படியாக உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவார். தர்மச் செயல்களின்மூலம் புகழ் கிடைக்கும். வசதியான வாழ்க்கை வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனி பகவான் இருந்தால், ஜாதகரின் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். வியாபாரத்தில்- அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். நன்கு பணம் சம்பாதிப்பார். ஆனால் சுயநல வாதியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். வியாபாரத்தில் சில தடைகள் இருக்கும். ஜாதகர் தன் மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
11-ஆம் பாவத்தில் சனி பகவான், செவ்வாயின் மேஷ ராசியில் நீசமடைகிறார். அதனால் லாபம் கிடைப்பதில் சில பிரச்சினைகள் இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதில் தடைகள் உண்டாகும்.
ஜாதகர் தான் செய்யக்கூடாத- தவறான செயல்களை சில நேரங்களில் செய்வார். நல்ல படிப்பாளியாக இருப்பார். குழந்தை பாக்கியம் இருக்கும். சனி நீசமடைவதால் இல்வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். சில நேரங்களில் ஆபத்தான சம்பவங்கள் நடக்கும்.
12-ஆம் பாவத்தில் தன் நண்பரான சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜாதகர் பணம் சம்பாதிப்பார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். சிலநேரங்களில் பெயர், புகழ் கிட்டும்; சில நேரங்களில் கெடும். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பார்கள். சிலர் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/saturn-t.jpg)