தனசு லக்னத்திற்கு 12 பாவங்களில் சனி!

/idhalgal/balajothidam/saturn-12-bhavas-thanas-lagna

னுசு லக்னத்தில் சனிபகவான் இருந்தால் ஜாதகரின் தோற்றம் சுமாராக இருக்கும். உழைத்துப் பணத்தை சம்பா தித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். நல்ல பணவரவுண்டு. வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். அனைத்தையும் கடந்து பெயர், புகழைடைவார்.

2-ஆம் பாவத்தில், சுய ராசியான மகரத்தில் சனி இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடன்பிறந்தோரு டனான உறவில் குறையிருக்கும். சில நேரங் களில் சிறிதும் எதிர்பாராமல் பணம் வரும்.

வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

ss

3-ஆம் பாவத்தில், சுய ராசியான கும்பத்தில் சனி இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். வெளித் தொடர்பு கள் ச

னுசு லக்னத்தில் சனிபகவான் இருந்தால் ஜாதகரின் தோற்றம் சுமாராக இருக்கும். உழைத்துப் பணத்தை சம்பா தித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். நல்ல பணவரவுண்டு. வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். அனைத்தையும் கடந்து பெயர், புகழைடைவார்.

2-ஆம் பாவத்தில், சுய ராசியான மகரத்தில் சனி இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடன்பிறந்தோரு டனான உறவில் குறையிருக்கும். சில நேரங் களில் சிறிதும் எதிர்பாராமல் பணம் வரும்.

வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

ss

3-ஆம் பாவத்தில், சுய ராசியான கும்பத்தில் சனி இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். வெளித் தொடர்பு கள் சுமாராக இருக்கும். பணவரவுண்டு.

4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சனி இருந்தால், அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். சிறிய அளவில் பூமி, வாகன யோகம் கிட்டும். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவிருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். இல்வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும்.

5-ஆம் பாவத்தில், மூலத் திரி கோணத்தில், செவ்வாயின் மேஷ ராசியில் சனி நீச மடைகிறது. அதனால், ஜாதகருக்கு வாரிசு களால் பிரச்சினை ஏற்படும். சிந்தனை யில் தடையிருக்கும். பல விஷயங்களை மறைத்துவைத்து ஜாத கர் பேசுவார். பணம் சேமிப்ப தில் சிக் கல்கள் இருக்கும். ஜாதகர் பல குறுக்குவழிகளில் பயணித்து பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். உடன்பிறந்தோருடன் அவருக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். பகைவர்கள் அவரைப் பார்த்து அஞ்சுவார்கள். தன் செயல்களை துணிச்சலுடன் செய்வார்.

7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி இருந்தால் ஜாதகர் வியாபாரத்தில் நன்கு சம்பாதிப்பார். பெண்கள் அவரை ஏமாற்றுவார் கள். உடன்பிறந்தோருடன் அவருக்கு நல்ல உறவிருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். சிறிய அளவில் வீடு, வாகனம் வாங்கலாம். சிலர் சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று வாழ்வார்கள்.

8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும். பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும். உடன்பிறந்தோருடனான உறவில் குறையிருக்கும். பணம் சம்பாதிப் பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

9-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனி இருந்தால் பணம் சம்பாதிப்பதில் தடங்கல்கள் இருக்கும்.

தர்ம காரியங்களைச் செய்வதில் தடைகள் ஏற்படும். குடும்ப சுகம் சுமாராக இருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்காக பல கஷ்டங் களைக் கடக்கவேண்டியதிருக்கும். சண்டை, சச்சரவுகளைப் பார்க்க வேண்டியதிருக்கும்.

10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனி இருந்தால் ஜாத கருக்கு தந்தையால் சந்தோஷம் இருக்கும்.

அரசாங்க விஷயங்களில் ஆதாயமுண்டு. வியாபாரத் தில் லாபம் கிடைக்கும். தன் இனத்தில் ஜாதகர் பெரிய பதவி வகிப்பார். தைரியசாலியாக இருப்பார். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சனிபகவான் உச்சமடைகிறார். அதன்காரணமாக ஜாத கருக்கு பலவகைகளில் பயன்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத்திராத ஆதாயம் உண்டு. உடன்பிறந் தோருடன் சந்தோஷமான உறவிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அன்றாடச் செயல்களைச் செய்வதில் சிறுசிறு தடைகள் உண்டாகும்.

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளால் அமைதி கெடும். உடன்பிறந் தோருடன் சுமாரான உறவிருக்கும். பணத்தைச் சேமிப்பதில் பல சிக்கல் கள் உண்டாகும். தர்மச் செயல் களைச் செய்வதில் பல தடைகள் ஏற்படும்.

செல்: 98401 11534

bala301222
இதையும் படியுங்கள்
Subscribe