துலாம் லக்னத்தில்... சுக்கிரனின் துலாம் வீட்டில் சனி உச்சமடைகிறது. அதனால் ஜாதகரின் உடல்நலம் நன்றாக இருக்கும். அவர் தைரியசாலியாக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். பூமி, வாகனம் சேரும். குழந்தை பாக்கியம் இருக்கும். பலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சனிபகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் பல சிரமங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மனக் கஷ்டம் உண்டாகும். பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் தடங்கல்களைக் கடந்து வெற்றி கிடைக்கும்.
3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். எதையும் சுவைத்து சாப்பிடுவார். உடன் பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். மனதில் சிறிய அளவில் கவலைகள் ஏற்படும். தாயாரால் நிம்மதி கிடைக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saturn_26.jpg)
4-ஆம் பாவத்தில் சுய ராசியான மகர ராசியில் சனிபகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் சேரும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பெரிய பணிகளைச் செய்வார். துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார்.
5-ஆம் பாவத்தில் சுய ராசியான கும்ப ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த தாக அமையும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
6-ஆம் பாவத்தில் மீன ராசியில் சனி பகவான் இருந்தால் ஜாதகர் தன் அறிவால் எதிரிகளை வெல்வார். அன்னையின் உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். கடுமையான சோதனைகளைக் கடந்து தன் அறிவால் ஜாதகர் வெற்றிபெறுவார்.
7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனிபகவான் நீசமடைகிறார். அதனால் பல தடைகளைக் கடந்துதான் திருமணமே நடக்கும். திருமணம் ஆகியிருந்தால் கணவனுக்கும் மனைவிக் குமிடையே கருத்து வேறுபாடு இருக்கும். படிப்பு விஷயத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறிய தொந்தரவுகள் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கும். அன்னையின் உடல்நலத்தில் பிரச்சினை உண்டாகும். குழந்தை பாக்கியத்தில் சில தடங்கல்கள் ஏற்படும். ஜாதகர் எப்போதும் ஏதாவது பிரச்சினை யில் சிக்கிக் கொண்டே இருப்பார்.
9-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். சிலர் வீட்டிலேயே துறவியைப் போல வாழ்வார்கள். பூமி, வாகனம் இருக்கும். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தன் அறிவால் மகிழ்ச்சியாக வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனிபகவான் இருந்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தந்தையுடனான உறவு சுமாராக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக- அறிவாளியாக இருப்பார். பிள்ளைகளுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும்.
11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனிபகவான் இருந்தால் ஜாதகர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் அவர் நிறைய சம்பாதிப்பார். பூமி, வாகனம் இருக்கும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். எதைப் பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். எல்லா விஷயங்களிலும் அலட்சியமாக இருப்பார்.
12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனிபகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனினும், ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார். பிறந்த ஊரில் சொத்து வாங்குவதில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் ஒரே நிலையில் பேசமாட்டார். மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருப்பார்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/saturn-t.jpg)