Advertisment

வழக்கையும் தொழிலையும் சாதகமாக மாற்றும் சனிக்கிழமை பரிகாரங்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/saturday-remedies-will-turn-cases-and-business-positive-ones-melmaruvathur-s

ர்மகாரகன் என்றும், ஆயுள்காரகன் என்றும் போற்றப்படும் சனிபகவானின் முழு ஆளுமைகொண்ட நாளாக, வாரத்தின் இறுதி மற்றும் ஏழாம் நாளான சனிக் கிழமை அமையப்பெற்றுள் ளது.

சனி பிடித்தால் சந்தை யிலும் கந்தை கிட்டாது என்பது வழக்கு மொழியாக அமைந்தாலும், சனி கொடுத்தால் தடுப்பார் யார்? என்ற மொழி தொடரும் மக்களிடையே புழங்கி, சனிபகவானின் மேன்மையை எடுத்துரைக்கின்றது.

அதோடு தொழில் சார்ந்த ஒரு நல்ல முன்னேற்றமோ, விருத்தியோ, இல்லாதவர்களும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி இடர்பாடுகளை அனுபவிப்பவர்களும், விடுபடும் அற்புதமான பரிகாரங்களை இந்த சனிக்கிழமையில் செய்யும்பொழுது, இதை சார்ந்த நல்ல முடிவுகள் நம்மை தேடி வந்தடையும்.

Advertisment

ss

அதேபோன்று எப்பொழுதும் ஒரு மரண பயம் உள்ளவர்களுக்கு இந்த சனிக்கிழமை பரிகாரம் நல்லதொரு தைரியத்தை அளிக்கும் என்பதில் ஐயமே இல்லை.

சனிபகவானின் சீரான ஆளுமை இல்லாதவர்கள், சனி நீசமானவர்கள் போன்றவர்களுக்கு இயல் பாகவே உடலில் அமைந்துள்ள மூட்டுகள் வலுவில்லாமல்

ர்மகாரகன் என்றும், ஆயுள்காரகன் என்றும் போற்றப்படும் சனிபகவானின் முழு ஆளுமைகொண்ட நாளாக, வாரத்தின் இறுதி மற்றும் ஏழாம் நாளான சனிக் கிழமை அமையப்பெற்றுள் ளது.

சனி பிடித்தால் சந்தை யிலும் கந்தை கிட்டாது என்பது வழக்கு மொழியாக அமைந்தாலும், சனி கொடுத்தால் தடுப்பார் யார்? என்ற மொழி தொடரும் மக்களிடையே புழங்கி, சனிபகவானின் மேன்மையை எடுத்துரைக்கின்றது.

அதோடு தொழில் சார்ந்த ஒரு நல்ல முன்னேற்றமோ, விருத்தியோ, இல்லாதவர்களும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி இடர்பாடுகளை அனுபவிப்பவர்களும், விடுபடும் அற்புதமான பரிகாரங்களை இந்த சனிக்கிழமையில் செய்யும்பொழுது, இதை சார்ந்த நல்ல முடிவுகள் நம்மை தேடி வந்தடையும்.

Advertisment

ss

அதேபோன்று எப்பொழுதும் ஒரு மரண பயம் உள்ளவர்களுக்கு இந்த சனிக்கிழமை பரிகாரம் நல்லதொரு தைரியத்தை அளிக்கும் என்பதில் ஐயமே இல்லை.

சனிபகவானின் சீரான ஆளுமை இல்லாதவர்கள், சனி நீசமானவர்கள் போன்றவர்களுக்கு இயல் பாகவே உடலில் அமைந்துள்ள மூட்டுகள் வலுவில்லாமல் காணப்படும்.

மேலும் முதுகுத்தண்டில் பிரச்சினை உள்ளவர் களும், பக்கவாதம் போன்ற நோயினால் பாதித்த வர்களின் ஜாதகத்தைக் காணும்பொழுது அதில் சனியின் வலு மிகக் குறைவாக இருப்பதைக் காண முடிகின்றது.

பெண்களின் ஜாதகத்தில் ரத்த சிவப்பணு கோளாறு உள்ள ஜாதகங்கள் இதே தன்மையினை தழுவி காணப்படுகின்றது.

சனியின் துணையின்றி ஒருவரால் தொழில்முறையில் சிறந்து விளங்குவது கடினமாகும்.

சனிக்கிழமை மகரம், கும்பம், லக்னம் ராசிகளில் பிறந்தவர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் 8, 17, 26, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் சனிபகவானின் ஆதிக்கத்தை நேரடியாக பெற்றவர்கள் ஆவார்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலோ அல்லது ஏழாம் இடத்திலோ, சனி அமையப்பெற்றால் அவர்கள் மற்றவர் களை காட்டிலும் சற்று சோம்பேறித்தனம் மிகுதியாக இருப்பவர்களாக அமைந்து விடுகின்றார்கள்.

ஜாதகத்தில் சனி+ மாந்தி, தொடர்பு இருக்கும்பொழுது அந்த வம்சவழியில் ஒரு ஊனமுற்ற நபர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது.

பெண்களின் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நீசம்பெறாத சனி நான்காம் இடத்தில் அமரும்போது கணவரின் வாழ்வில் பெரும் இடர்பாடுகளை அளித்துவிடுகின்றது.

ஒரு நபரின் பிறப்பின் காரணத்தை, காரியமாக மாற்றி, செயல்பாட்டுக்குள் எடுத்துச் செல்வதே, இந்த கர்மா மற்றும் கர்ம காரகன் சனிபகவான்தான்.

சனி உச்சமாகி பத்தாமிட தொடர்பு டன் நல்ல நிலையில் இருக்கும்பட்சத்தில், இவர்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப் படும் கனிமங்கள் மற்றும் இரும்பு தொழில், தோல், இறைச்சி, சார்ந்த தொழிலில் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

செய்யக்கூடியவை

சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்கள் வாங்கலாம்.

வீட்டை சுத்தம் செய்வது சிறப்பு.

பள்ளம் எடுப்பது பலன் தரும்.

தானதர்மம் செய்வதும், ஜீவசமாதி வழிபாடும் பலன் அளிக்கும்.

செய்யக்கூடாதவை

என்னை, உப்பு, செருப்பு, துடைப்பம், புது ஆடைகள் போன்றவற்றை வாங்குவது எதிர்மறை விளைவுகளான தரித்திரத்தை அளிக்கும்.

நெடுநாட்களாக வழக்கு இழுபறியாக இருக்கும் சூழலில் உள்ளவர்கள், அந்த ஊரின் எல்லையில் அமையப்பெற்றுள்ள கிணறு அல்லது ஏதாவது ஒரு நீர் நிலையில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து அதே பகுதியில் அமைந்துள்ள அரச மரத்திற்கு வேரை சுற்றி சனிக்கிழமைகளில் ஊற்றும்பொழுது வழக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

அரச மரத்தை சுற்றி சுத்தம்செய்து அந்த மரத்தின் வேரில் பால், மஞ்சள் நீர், பன்னீர் ஆகியவற்றை தலா அரை லிட்டர் ஒன்றாக கலந்து ஊற்றி வர வழக்கு தங்கள் வசம் வெற்றிபெற்று குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் குறைய ஆரம்பிக்கும்.

ரோடு மற்றும் தெருப் பெருக்கும் நபர் களுக்கு, சனிக்கிழமைகளில் ஒரு ஜோடி செருப்பும், உணவு பொட்டலம் ஒன்றும், தானமாக வழங்கி வர எதிர்பார்த்த வேலை அமையும்.

மூட்டை தூக்கும் நண்பர் களுக்கு மூட்டை தூக்கும் ஊக்கு ஒன்றும், வேர்வை இழுக்கும் படியான துண்டு ஒன்றும், உணவும் வாங்கி சனிக்கிழமை யில் தானமாக அளிக்க அரசு வேலை கிடைக்கும்.

தொழிலில் நஷ்டம் தொடர்ந்து ஏற்படும் நபர்கள் அவர்களின் வயதிற்கு ஏற்ற கைப்பிடி அளவு எள்ளு ஒரு கருப்புத் துணியில் முடிந்து இரவு தலையில் வைத்து மறுநாள் தலையை சுற்றி குளத்திலோ, ஆற்றிலோ, கடலிலோ எரிந்து விட நஷ்டம் நீங்கி லாபம் வர துவங்கும்.

வீட்டில் சதா சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் சுந்தர காண்டம் மற்றும் பாலகாண்டத்தை பாராய ணம் செய்தால் சுபிட்சமான இல்லம் அமையும்.

பறவைகளுக்கு இனிப்பு பூந்தி மற்றும் எள் கலந்த உணவை தானமாக சனிக்கிழமைகளில் அளித்துவர, பெரும் கடன் சுமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் வழிபாடு பல இடர்களைத் தீர்த்து பலன் அளிக்கும்.

சனிக்கிழமையில் காலபைரவர் கோவிலில் ஒரு இரும்பு பாத்திரத்தில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, நிற துணிகளை திரித்து நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தீபமேற்றிவர, சுமந்து வந்த அத்தனை கர்ம வினைகளையும், காலத்தை சுழற்றும் காலபைரவனும், கர்மத்தை அளிக்கும் சனிபகவானும் நிச்சயமாக தீர்த்து வைப்பார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

செல்: 80563 79988

bala201224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe