னிக்கிழமை விரதத்தை எல்லாரும் மேற்கொள்ளலாம்.

சனி தசை நடப்பவர்கள், சனியால் பாதிக் கப்பட்டவர்கள், ஜாதகத்தில் சனி சரியாக இல்லாமல் இருப்பவர்கள், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச் சனி நடப்பவர்கள்... இவர்கள் சனிக்கிழமை விரதமிருப்பது நல்லது.

Advertisment

நிறைய நிலம் வைத்திருப்பவர்கள், விவசா யிகள், குவாரி வைத்திருப்பவர்கள், பளிங்குக்கல் வியாபாரிகள், கிரானைட் தொழிலில் இருப்பவர்கள், கனிம வர்த்தகர்கள், நவரத் தினம் விற்பவர்கள், இரும்புத் தொழிற்சாலை அதிபர்கள், இரும்பு வியாபாரிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானி கள், அரசுப் பணியில் இருப் பவர்கள், மூட்டு, முழங்காலில் நோய் உள்ளவர்கள், வாய்வுத் தொல்லை, பக்கவாத நோய் உள்ளவர்கள், தலையில் குறைவாக முடி உள்ளவர்கள், மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள், இதயநோயாளிகள், தந்தை- மகன் உறவு சுமுகமாக இல்லாதவர்கள், ரத்தம் குறைவாக உள்ளவர்கள், ஜீரணமா காதவர்கள்- இவர்கள் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

garudan

வழிகாட்டிகள், மொழிபெயர்ப் பாளர்கள், கதாசிரியர்கள், கட்டடம் கட்டும் தொழிலதிபர்கள், காசாளர்கள், நிலம் வாங்கி விற்பவர்கள், இரும்பு வெல்டிங் தொழிலில் இருப்பவர்கள், கான்ட்ராக்டர்கள், மெக்கானிக்கல் எஞ்ஜினீயர்கள், மின் பொருட்கள் விற்பவர்கள், தோல் வர்த்தகம் செய்பவர்கள், அடுப்புக் கரி வர்த்தகர்கள், நெசவாளர்கள் ஆகியோரும் சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது நல்லது.

Advertisment

ஒருவருக்கு ராசிக்கு 12-ஆவது வீட்டிற்கு சனி வந்தால், அவருக்கு ஏழரைச்சனி ஆரம் பித்துவிடும். அந்த ஏழரை ஆண்டுகளும் அவருக்கு பிரச்சினை இருந்து கொண்டே யிருக்கும்.

4-ஆவது வீட்டிற்கு சனி பகவான் வந்தால் அர்த்தாஷ்டமச் சனி ஆரம்பிக்கும். அதனால் பலவித பிரச்சினைகள் உண்டாகும். தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். வருமானம் குறையும்.

சனி பகவான் 7-ல் இருந்தால், வாய்வுத் தொல்லை வரும். உணவு ஜீரணமாகாது. ராசியிலிருந்து 8-ஆவது வீட்டிற்கு சனி பகவான் வந்தால், அஷ்டமச்சனி உண்டாகும்.

Advertisment

அந்த நேரத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். நண்பர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள். பணப்பிரச்சினை ஏற்படும். சிலர் வீட்டை விட்டு வெளியேறி வாழவேண்டிய நிலை உண்டாகும். சிலர் கடனாளியாவார்கள்.

ராசியிலிருந்து 10-ஆவது வீட்டிற்கு சனி வந்தால், தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும். யாருக்காவது பணம் தந்திருந்தால், அது திரும்ப வராது. அவரை பலரும் ஏமாற்றிவிடுவார்கள். தொழிலில் மாறுதல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இல்லையென்றால், பெரியளவில் பண இழப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருந்தால் திருமணத்தடை உண்டாகும்.

அந்த சனி பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் பிரச்சினை கடுமையாக இருக்கும்.

ஜாதகத்தில் சனி, செவ்வாயுடன் சேர்ந்து லக்னம், 4, 7 அல்லது 8-ல் இருந்தால் திருமணத்தடை உண்டாகும். வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.

ஒருவரின் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தில் சனி, செவ்வாய் இருந்து, 7-ல் பாவகிரகம் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச் சினைகள் இருக்கும். சிலருக்கு தொழிலில் பெரியளவில் நஷ்டம் உண்டாகும்.

ஜாதகத்தில் சனி, கேதுவுடன் 6-ல் இருந்தால் ஜாதகருக்கு பித்தம் அதிகமாக இருக்கும். காலில் நோய் வரும். அந்த சனியை பாவ கிரகம் பார்த்தால், சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உண்டாகும். ஜாத கத்தில் சனி, சுக்கிரனுடன் 2 அல்லது 8-ல் இருந்தால், அவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும்.

சனி, சந்திரனுடன் 7, 8, 12-ல் இருந்தால் விஷயோகம் உண்டாகும். அதனால் சரியாகத் தூக்கம் வராது. கனவுகள் அதிகமாக வரும். மாரகாதிபதியின் தசை நடக்கும்போது, இறந்து விடலாமா என்றுகூட எண்ணுவார்கள்.

சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமை யாவார்கள்.

ஜாதகத்தில் சனியும் சூரியனும் லக்னத் தில் சேர்ந்திருக்க, அதை பாவகிரகம் பார்த்தால் இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சனி, ராகு 12-ல் இருந்தால், அதுவும் சூரியன், லக்னாதிபதியுடன் 12-ல் இருந்தால் பித்ரு தோஷம் உண்டாகும். சிலருக்கு விபத்துகள் நிகழலாம்.சனி, சந்திரன், புதன் 6, 8-ல் இருந்தால் சிலருக்கு மனநோய் ஏற்படும். சிலர் தூக்கத்தில் பேசுவாôகள்.

பரிகாரங்கள்

வளர்பிறையின் முதல் சனிக்கிழமை ஆரம்பித்து, 19 அல்லது 31 அல்லது 51 வாரங்கள் விரதமிருக்கலாம். காலையில் உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஒரு செம்பில் நீர் எடுத்து, அதில் கருப்பு எள், லவங்கம், பால், சர்க்கரை ஆகிய வற்றைக் கலந்து அதை அரசமரம் அல்லது வன்னி மரத்திற்கு ஊற்ற வேண்டும். நீர் ஊற்றும் போது, முகம் மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். அந்த நாளன்று உளுந்து தானமளிக்க வேண்டும். நல்லெண்ணெய் தானமும் நன்று.

காகம், நாய், யாசகர்களுக்கு உணவளிப்பது சிறந்தது. பிறகு வீட்டில் அமர்ந்து "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோ ஷ: சனியே நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.

அனைத்து வாரங்களிலும் விரதமிருந்து முடித்தபிறகு, இறுதி நாளன்று எண்ணெய், கருப்புக்குடை, செருப்பு, நீலநிற ஆடை, இரும்புப்பொருள், எள்ளில் செய்த இனிப்புப் பலகாரம் ஆகியவற்றை தானமளிக்க வேண்டும்.

செல்: 98401 11534