அத்திரி, அகத்தியர், ஜெய்மினி, கொங்கணர், நாரதர், வசிட்டர், விஸ்வாமித்திரர் என்ற ஏழு ரிஷிகளால் கூறப்பட்ட ஜோதி டப் பலன்களின் தொகுப்பு சப்த ரிஷி நாடி என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்கு புத்திர பாக்கியம், புத்திர தோஷ நிலைபற்றி சப்த ரிஷிகள் கூறியுள்ளதை அறிவோம்.
ஒரு மனிதனின் வாழ்வில் வம்சம் வளர்ச்சிடைய புத்திரர்கள் பிறப்பதுதான் காரணமாகிறது. புத்திரன் இல்லாது ஒருவன் இறந்துவிட்டால், அவனது ஆத்மா மோட்சம், சொர்க்கம் அடையமுடியாது. அவனது ஆத்மா, திதி, தர்ப்பணம், கிரியை செயல்கள் இல்லாமல் பசி, தாகத்துடன் நிம்மதியில்லாமல், சாந்தி அடையாமல் அலைந்து திரியுமென்று வேத, சாஸ்திர, புராணங்களில் கூறப்படுகிறது.
புத்திர பாக்கியம்
புத்திர ஸ்தானத்திற்குரிய கிரகம் நீச ராசியில் இருந்து, அந்த ராசிக்குரிய கிரகம் தன்னுடைய உச்ச வீட்டில் இருந்தாலும் அல்லது ஆட்சி வீட்டில் இருந்தாலும், சுப கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அழகு, நல்ல குணம், உயர்கல்வியறிவு, ஞானமுள்ள நல்ல அதிர்ஷ்டமான குழந்தைகள் பிறப் பார்கள்.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம், ஆன் கிரக வீட்டில் இருந்தாலும், லக்னத்திற

புத்திர ஸ்தானாதிபதி கிரகம், ஆன் கிரக வீட்டில் இருந்தாலும், லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும், நீச நிலையில் இருந்தாலும், ஆண்- பெண் குழந்தைகள் பிறப்பார்கள்.
புத்திர ஸ்தான கிரகம், மிருகசீரிஷ நட்சத்திரக் காலிலாவது, புனர்பூச நட்சத்திரக் காலிலாவது இருந்தால், திருமணமாகி அதிக காலம் சென்று ஒரு குழந்தை பிறக்கும்.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம், கேந்திரத்திலாவது, திரிகோண ராசிகளி லாவது, வலிமை பெற்று அமர்ந்திருந்தால், அவர்களுக்கு அதிக குழந்தைகள் பிறக்கும். புத்திர ஸ்தானாதிபதி கிரகம் புதனின் வீடுகளான மிதுனம், கன்னி ராசிகளில் இருந்தாலும் அல்லது புதன் கிரகம், புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகனுக்கு புத்திர பாக்கியம் உண்டு. பிள்ளைகள் பிறப்பார்கள்.
புத்திர ஸ்தானத்திற்குரிய கிரகம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி. இந்த நான்கு ராசிகளில் அமர்ந்திருந்தாலும், மேலே கூறிய நான்கு ராசி களில் ஏதாவது ஒரு லக்னமாக இருந்தாலும் அவருக்கு புத்திர தோஷ பாதிப்பில்லை. புத்திரர்கள் பிறப்பார்கள்.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம், பாவியாக இருந்தாலும், பாவக் கிரகங்களோடு சேர்ந் திருந்தாலும் ஜாதகருக்கு புத்திர தோஷம் கிடையாது.
புத்திர ஸ்தானத்திற்குரிய கிரகம், கேந்திரத்தில் நீச்சமாக உள்ளதோ, அந்த நீச ராசிக்கு உரிய கிரகம், புத்திரஸ்தானாதிபதி கிரகத்தை பார்த்தாலும் அல்லது லக்னாதி பதியுடன் சம்பந்தம் பெற்றாலும் இந்த ஜாதகர்க்கு புத்திரதோஷம் கிடையாது.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம், புதன் கிரகத்தின் ஆட்சி, உச்ச வீடுகளான மிதுனம், கன்னி ராசி களில் இருந்தாலும், லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத் தில் இருந்தாலும், சுப கிரகங்களின் பார்வையைப் பெற்றாலும் அவருக்கு ஆண், பெண் குழந்தைகள் பிறப்பார்கள்.
புத்திர தோஷ நிலை
புத்திர தோஷமுள்ள ஆண் ஜாதகருக்கு, திருமணமாகி சாந்தி முகூர்த்தம் நடந்த நாள்முதல் ஒவ்வொரு வருடமும் மனைவியின் உடம்பு குண்டாகிக்கொண்டே வரும்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், பிறப்பு லக்னத்தை குரு கிரகம் பார்த்தாலும், அல்லது லக்னத்திலேயே அமர்ந்திருந்தாலும், ஆண்- பெண் குழந்தைகள் பிறப் பார்கள். அப்படி பல குழந்தைகள் பிறந்தாலும் அனைத்தும் ஜீவித்திருக்காது. ஒரு குழந்தைதான் உயிருடன் இருக்கும்.
ஆண் ஜாதகத்தில், புத்திர ஸ்தானாதிபதி நீசம் பெற்றிருந்துவிட்டால் அந்த ஜாதகரின் பெரிய தகப்பனார், சிறிய தகப்பனார் என இவர்களின் யாராவது ஒருவரின் மனைவி, குழந்தை பெற முடியாத வளாக இருப்பாள். அவர்களுக்கு குழந்தை பிறந் தாலும் அந்தக் குழந்தைகள் இறந்து போவார்கள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில், புத்திர ஸ்தானாதி பதி கிரகத்தை சனிபகவான் பார்த்தால் மலடி யாவாள். அதையும் மீறி குழந்தை பிறந்தாலும், அந்தக் குழந்தை அற்ப ஆயுளில் இறந்து போகும். அவளின் கணவன் தன் மகனுக்கு கருமம் செய்து, துயரத்துடன் வாழ்வான். இது புத்திர சோகத்தைக் குறிக்கும்.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம் திருவாதிரை நட்சத்திரக் காலில் இருந்தாலும், அஸ்த நட்சத்திரக் காலிலாவது இருந் தாலும் இந்த ஜாதகன் புத்திர தோஷம் உள்ளவன்.
புத்திர ஸ்தானத்திற்குரிய கிரகம், பாவ கிரகங்களுடன் சம்பந்தம் பெற்றிருந்தால், புத்திர ஸ்தானாதிபதி தசையிலோ அல்லது லக்னாதிபதி தசை நடக்கும்போதோ, இந்த ஜாதகன் பெற்ற மகன், தகப்பன் சம்பாதித்த சொத்துகளை அழித்து விடுவான். இதனால் தகப்பன், மகனுக் கிடையே பகை, கருத்து வேறுபாடு உண்டாகும். இது புத்திர துவேஷ தோஷ நிலையாகும்.
புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால், இந்த ஜாதகனின் மனைவிக்கு கர்ப்பம் கூடினாலும், கரு கலைதல், கர்ப்பச் சிதைவு, உண்டாகும். குழந்தை பிறந்தாலும் அற்ப ஆயுளில் இறந்து போகும். பிழைத்து உயிருடன் வாழ்ந்தால், பெற்ற தந்தைக்கு அதிக கஷ்டத்தையும், ஏழ்மை வறுமையுட னும் வாழச் செய்யும்.
புத்திர ஸ்தானாதிபதி கிரகம், பகை கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு பாவ கிரகங்களின் ராசி வீட்டில் இருந்தால், இந்த ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை ஊமையாகவோ அல்லது பொல்லாத தீய குணங்களைக் கொண்டவனாகவோ இருப்பான்.
புத்திர ஸ்தானத்திற்குரிய கிரகம், பிறப்பு ஜாதகத்தில் இயற்கை பாவ கிரகங்களோடு, சம்பந்தப்பட்டிருந் தால், புத்திர சோகமுண்டு. ஆனால் லக்னாதிபதியாலும், சுப கிரகங்களா லும் பார்க்கப்பட்டால், இந்த புத்திர சோகம் நிவர்த்தியாகும். பாதிப்பிருக்காது.
சப்தரிஷி நாடியில், பிறப்பு ஜாதகத் தில் இதுபோன்ற நிலையில் கிரகங்கள் இருப்பதைக் கொண்டு, புத்திர பாக்கிய நிலை, புத்திர தோஷ நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த புத்திர தோஷ பாதிப்புள்ளவர்கள், அதனதன் நிலைக் கேற்ப, அதற்குரிய பரிகாரத்தைச் செய்து பலன் பெறலாம். ஒரேவிதமான பொது வான பரிகாரம் பலன் தராது.
செல்: 93847 66742.