ஆடியில் வழிபட அனைத்து இன்னலும் தீர்க்கும் சப்தகன்னி விரத மகிமை! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/saptakanni-fasting-glory-solves-all-troubles-worship-audi

ந்துக்கள், ஆன்மிகமே ஆன்ம பலம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள். தங்கள் வாழ்வில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விரதாதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முறையாகக் கடைப்பிடித்து, இறைவழிபாட்டின்மூலம் தீர்த்துக்கொள்வர்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு விரத மற்றும் பண்டிகை நாட்கள் இருந்தாலும், ஆடி மாதப் பண்டிகை மற்றும் விரத நாட்களுக்கு தனி வலிமை உண்டு. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் நெருக்கடி, வேலையின்மை, கடன் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வலிமை ஆடி மாதத்திற்கு உண்டு.

fast

பெண்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவே பாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள், இறந்தவர்களை தெய்வத்திற்குச் சமமாகப் பாவிப்பது நமது மரபு. அதுவும், வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாக இறந்தால், அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்துவருகிறது.

இறந்த கன்னிப் பெண்கள், தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள். பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்து தானே ஆகவேண்டும்? ஏன் கன்னிப் பெண்களின் இறப்பு மட்டும் குடும்பத்திற்கு வளமை கொடுக் கிறது என்னும் எண்ணம் பலருக்கும் எழும். ஒரு பருவப்பெண் கன்னிகழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.

பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தைத் திருமணம்) மிகுதியாக இருந்தது.

மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் நோய்த் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவர் இறந்தால், தன் வாழ்நாள் முழுவதும் கன்னிகழியாமல்- மறுமணமும் செய்யாமல், தன் புகுந்த வீடு அல்லது பிறந்த வீட்டு உறுப் பினர்களுக்கு சேவைசெய்தே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து, உடன்பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்திருக்கிறார்கள்.

பழங்காலத்தில் ராஜகுடும்பத்தினர், ஜமின்கள் போன்ற பலர், அழகிய, பருவ வயதுப் பெண்களைத் தார்மீகமற்ற முறையில் கைப்பாவைகளாகப் பயன்படுத்திவந்தனர். இதுபற்றிய பல்வேறு புராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக் கிறோம்.

பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் பாரம்பரியக் குடும்பக் கௌரவத்தையும் காக்கத் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய், சில குடும்பங்களில் பருவம் அடைந்த பெண்கள் காதலித்தால், குடும்பக் கௌரவத்தைக் கா

ந்துக்கள், ஆன்மிகமே ஆன்ம பலம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள். தங்கள் வாழ்வில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விரதாதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முறையாகக் கடைப்பிடித்து, இறைவழிபாட்டின்மூலம் தீர்த்துக்கொள்வர்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு விரத மற்றும் பண்டிகை நாட்கள் இருந்தாலும், ஆடி மாதப் பண்டிகை மற்றும் விரத நாட்களுக்கு தனி வலிமை உண்டு. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் நெருக்கடி, வேலையின்மை, கடன் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வலிமை ஆடி மாதத்திற்கு உண்டு.

fast

பெண்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவே பாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள், இறந்தவர்களை தெய்வத்திற்குச் சமமாகப் பாவிப்பது நமது மரபு. அதுவும், வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாக இறந்தால், அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்துவருகிறது.

இறந்த கன்னிப் பெண்கள், தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள். பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்து தானே ஆகவேண்டும்? ஏன் கன்னிப் பெண்களின் இறப்பு மட்டும் குடும்பத்திற்கு வளமை கொடுக் கிறது என்னும் எண்ணம் பலருக்கும் எழும். ஒரு பருவப்பெண் கன்னிகழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.

பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தைத் திருமணம்) மிகுதியாக இருந்தது.

மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் நோய்த் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவர் இறந்தால், தன் வாழ்நாள் முழுவதும் கன்னிகழியாமல்- மறுமணமும் செய்யாமல், தன் புகுந்த வீடு அல்லது பிறந்த வீட்டு உறுப் பினர்களுக்கு சேவைசெய்தே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து, உடன்பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்திருக்கிறார்கள்.

பழங்காலத்தில் ராஜகுடும்பத்தினர், ஜமின்கள் போன்ற பலர், அழகிய, பருவ வயதுப் பெண்களைத் தார்மீகமற்ற முறையில் கைப்பாவைகளாகப் பயன்படுத்திவந்தனர். இதுபற்றிய பல்வேறு புராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக் கிறோம்.

பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் பாரம்பரியக் குடும்பக் கௌரவத்தையும் காக்கத் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய், சில குடும்பங்களில் பருவம் அடைந்த பெண்கள் காதலித்தால், குடும்பக் கௌரவத்தைக் காக்க அவர்களை, உடன்பிறந்தவர்கள் அல்லது பெற்றோர் கொலையும் செய்திருக்கின்றனர்.

இதைப் பலமுறை பிரசன்னத்தின்மூலம் பலருக்குக் கூறியிருக்கிறேன்.

இளம்பெண்ணைக் குறிக்கும் காரகக் கிரகமான புதனுக்கும் சனி, ராகு- கேதுவுக்கும் உள்ள சம்பந்தம் இதைத் தெளிவாகத் தெரிவிக்கும். இந்தக் கன்னிகள் தங்களின் சராசரி வாழ்வைத் தவறவிட்டவர்கள் அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித் தன்மையைக் கொடுத்துத் தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள்.

இதனாலேயே, சராசரிப் பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டனர். மிகப் பிரபலமாகக் கன்னி தெய்வங்கள் போற்றப் படுவதற்கு இதுபோன்ற பல காரணங்கள் உண்டு.

தன் கன்னித்தன்மை வேறு குடும்பத்து ஆணுக்கு கொடுத்து மனித குலத்தை விடுத் தியடையச் செய்யும் பெண்கள் மகாசக் திகள்தான்.

பெண்களால் மட்டுமே ஒருவரின் உணர்வு களைப் புரிந்துகொள்ள முடியும். கணவருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது, தன் பிறந்த வீட்டு சீதனத்தைக் கொடுத்து குடும்பக் கௌரவத்தைக் காக்கிறார்கள். பல பெண்கள் கருக்கலைப்பில் தங்கள் உயிரையும் இழந்திருக்கிறார்கள்.

தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைக்கண்டறிய உருவாக்கப்பட்ட ஸ்கேன் என்ற கருவி, பல பெண் குழந்தைகளை தாயின் கருவறையிலேயே கல்லறையாகச் செய்தது. பெண்களின் விகிதாசாரத்தைக் குறைத்துவிட்டது. தாயின் கருவறையில் இறந்த பல பெண் குழந்தைகளின் சாபம்தான் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடைக்குப் பிரதானமான காரணம்.

நாட்டில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பதால்தான் திருமணம் என்னும் அத்தியாயமே இல்லாமல் பல ஆண்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபடத் தவறி விட்டனர்; இல்லையில்லை- மறந்தேவிட்டனர்.

இப்படியொரு கன்னி வழிபாடு இருப்பது பல குடும்பத்திற்குத் தெரியவும் செய்யாது. பெற் றோர்கள் செய்துவந்த பூஜையைக் குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடரவேண்டும். காலச்சூழல் காரணமாக, வழிபாட்டை மறந்துவாழ்ந்த பல குடும்பங்கள் வீழ்ந்துபோய், வாழ்ந்த சுவடே இல்லாமல் இருக்கின்றன.

சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு, ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார்.

அவருடைய ஜாதகத்தில், நான்கில் புதன், சனி, ராகு, மாந்தி இணைவு நான்காம் இடத்திற்கு இருந்தது. அவர், ""மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டுக் கலைநயமான ஒரு வீட்டை வாங்கினேன். இரவு படுத்தவுடன் கொலுசுச் சத்தம் கேட்கிறது. யாரோ நடப்பதுபோல் இருக்கிறது. வாங்கி ஆறுமாதம்தான் ஆகிறது'' என்று கூறினார். மறுநாள் பிரசன்னம் பார்க்க வரக் கூறப்பட்டது. பிரசன்னத்தில், "அந்த வீட்டில் பருவ வயதுக் குழந்தையைக் கொன்று புதைத்திருக்கலாம்' என்று கூறப்பட்டது.

அக்கம்பக்கத்தில் இது உண்மையா என்று விசாரித்ததில், குழந்தை அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு, அந்தக் குழந்தையை உறவுப் பெண் ஒருத்திக் கொலைசெய்ததாகத் தகவல் கிடைத்தது. கொலைசெய்யப்பட்ட குழந்தை யின் உடலை வீட்டுத் தோட்டத்தில் வீட்டின் உரிமையாளர், புதைத்துவிட்டு, வெளிநாடு சென்று மூன்று வருடங்களாகிவிட்டன. அந்த வீட்டைத்தான் அவர் வாங்கியிருப்பதாகவும் தகவல் தெரிந்தது.

வீட்டை வாங்கியவரிடம் குழந்தையைப் புதைத்த இடத்தில் பீடம் அமைத்து வெள்ளிக் கிழமைதோறும் வழிபடுமாறு ஆலோசனை கூறப்பட்டது. கடன்பட்டு வீடுவாங்கியவர் இன்று பல வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்குவிட்டு, மன நிம்மதியாக வாழ்கிறார்.

இனி, கன்னி தெய்வ வழிபாடு செய்யும் முறையைக் காணலாம்.

கன்னித் தெய்வ வழிபாட்டு முறை மாலை நேரத்தில் 6.00 மணிக்குமேல், வீட்டின் தென்மேற்குப் பகுதியில், குடும்பத்தில் வாழ்ந்துமறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து, தலைவாழையிலையில் வடை, பாயசத்துடன் உணவு, சர்க்கரைப் பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்புப் பண்டங்களை தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்கவேண்டும். மேலும், இறந்த கன்னியின் வயதுக்கேற்ற உடை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை) மஞ்சள்கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி, மரிக்கொழுந்து படைக்கவேண்டும். பிறகு, தீபமேற்ற வேண்டும். போட்டோ வைக்கவேண்டிய அவசியமில்லை.

சாம்பிராணி மணத்தை வீடுமுழுவதும் நிரப்பி, கன்னியைப் பூஜையில் ஆவாகனம் செய்து, உங்களின் கோரிக்கைகளைக் கூறவேண்டும். பிரார்த்தனை பலிதமாக உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம். இதைக் கூட்டாக, பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும்.

பிறகு, பூஜையில் படைத்த உணவைப் பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும். படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை, நார்ப்பெட்டியில்) வைத்து, அதனை வீட்டின் தென்மேற்குப் பகுதியான கன்னிமூலையில் உயரமான இடத்தில் வைக்கவேண்டும். முதலாண்டு வைத்துப் படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.

கன்னிப் பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபமிடலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும்போது வீட்டை சுத்தம்செய்துவிட்டு பெட்டியைத் திறக்கவேண்டும். பெட்டியைத் திறந்தவுடன் பூ வாசம் மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னித் தெய்வம் துடிப்பாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியைக் குடும்பத்திலுள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதைப் பல குடும்பத்தினர் "வீட்டுச் சாமி கும்பிடுதல்' எனவும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்வது சிறப்பு. கன்னித் தெய்வத்தை வழிபடுவதற்கு வெள்ளிக்கிழமையைவிட செவ்வாய்கிழமைதான் ஏற்ற நாள்.

சுமங்கலிகள், கன்னித் தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். செய்வினைக் கோளாறு நீங்கும். பேய், பிசாசு அண்டாது. நோய்நொடிகள் தீர்ந்துவிடும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.

கன்னித் தெய்வ வழிபாட்டின் மகத்து வத்தைப் புராண வரலாறுகள் சப்த கன்னிகளின் வழிபாட்டின் வாயிலாகவும் நமக்கு உணர்த்துகின்றன. பூலோகவாசிகளின் கவலைகளைத் தீர்க்கவே அவதரித்தவர்கள் சப்த கன்னிகள்.சந்தோஷம் நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக, அவளிடமிருந்து தோன்றியவர்கள்.

இந்த சப்த கன்னிகள் என்னும் ஏழுபேரின் தோற்றத்தைப் புராண வரலாறுகள் இரண்டு சம்பவங்களாக கூறுகிறது. புராண வரலாற்றில் இருவேறுவிதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.

முதல் வரலாறாக, மனிதக் கருவில் பிறக்காத, வலிமையற்ற பெண்களால் தங்கள் மரணம் நிகழவேண்டுமென்ற வரம்பெற்ற அசுரர்களின் ஆணவத்தை அழிக்க பராசக்தியின் சொரூபமாக உருவாக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள்.

இரண்டாவது வரலாறாக, அந்தகாசுரன் என்ற அசுரனுடன் சிவபெருமான் போரிட்டார். காயம்பட்ட அந்தகாசுரனின் ரத்தத்திலிருந்து அவன்பெற்ற வரத்தின்படி பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றினர்.

அவர்களை அழிக்கும்பொருட்டு, சிவன் தன் வாயிலிருந்து (அக்னியில்) யோகேஸ்வரி என்ற சக்தியை வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி, மகேஸ்வரியை உருவாக்கினாள். அந்த மகேஸ்வரிக்குத் துணையாகப் பிரம்மா பிராம்மியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், இந்திரன் இந்திராணியையும், முருகன் கௌமாரியையும், வராகமூர்த்தி வராகியையும், எமன் சாமுண்டியையும் தோற்றுவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

மகேஸ்வரி, பிராம்மி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளின் சிறப் பம்சங்களைப் பார்ப்போம்.

மகேஸ்வரி: பரமேஸ்வரனின் அம்சமானவள். இவள் சிவனைப்போன்ற தோற்றத்தைக் கொண்டவள். சாந்த சொரூபிணி. கோபம் மற்றும் உடலின் பித்தத்தை நீக்கி சுகம் தருபவள்.

பிராம்மி: சரஸ்வதியின் அம்சமாகப் பிரம்மனிடமிருந்து தோன்றியவள். இவள் கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சிபெற வைப்பவள். சிந்தித்து செயல்படும் மூளையின் திறனை அதிகரித்து வெற்றியைத் தருபவள். தோல் நோய் இருப்பவர்கள் இவளை வழிபட நல்ல குணம் தெரியும்.

கௌமாரி: முருகனின் அம்சமான இவள் சஷ்டி எனவும், தேவசேனா எனவும் அழைக்கப்படுபவள். குழந்தைப்பேறு அருள்பவள். செவ்வாய் தோஷம் அகலவும், வீடு, மனை வாங்க- விற்க ஏற்படும் பிரச்சினைகள் தீர்வதற்கு இவளை வழிபடலாம். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.

வைஷ்ணவி: நாராயணி எனப்படும் இவள் திருமாலின் அம்சம். திருமாலின் வடிவில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். வறுமையை விரட்டுவதில் வல்லவள்.

வராகி: சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூவரின் சக்திகளைக்கொண்ட இவள், வராக மூர்த்தியின் அம்சமாகத் தோன்றியவள். பெரும் வலிமையைப் பெற்றவள். கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள். இவளை வழிபடு வோருக்குத் தடைகள் மற்றும் துன்பங்கள் அகலும். திருமணத்தடை அகலும்.

இந்திராணி: மகாலட்சுமியைப்போன்று அழகானவள். செல்வச் செழிப்பைத் தரும் இவளை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். தம்பதிகளுடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழந்த வேலையைத் திரும்பப் பெறலாம். அல்லது புதிய வேலை கிடைக்கும்.

சாமுண்டி: வீரத்திற்கு அதிபதியான இவளை மனதில் நினைத்து வணங்கினாலே யானை பலம் கிட்டும். தீய சக்திகள் அண்டாது. நரம்பு தொடர்பான பிரச்சினைகள் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

காலச்சக்கரத்தின் பிடியில் சிக்கிச்சுழலும் ஒவ்வொரு மனிதனும் துன்பத்தின் பிடியிலிருந்து விடுபடிவேண்டுமென்னும் ஆவலில் விதிப்பயனைமீறி, சில திட்ட மிடுதலைச்செய்து வெற்றிபெற சாஸ்திரத்தில் சில வழிபாட்டுப் பூஜைமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளைக் கையாண்டால் பரிபூரண பலன் கிடைக்கும்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மீளமுடியாத பல பிரச்சினைகள் இருக் கின்றன. பல வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பிரபஞ்சம் அருளிய பல வழிபாட்டு முறைகளுள் கன்னித் தெய்வ வழிபாடும் ஒன்றாகும்.

பல குடும்பங்களில் கன்னித் தெய்வ வழிபாடு செய்யும் வழக்கம் கிடையாது. ஒரு வீட்டில் மாமியார் செய்யும் பரம்பரை வழிபாட்டு முறைகளை மருமகள் தொடரவேண்டும். பாதியில் வழிபாட்டைக் கைவிட்ட, பல வாழ்ந்த குடும்பங்கள் வீழ்ந்து கிடக்கின்றன.

கன்னி வழிபாடு நடத்தும் வழக்கமில்லாத குடும்பத்தினர், அசுரர்களை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட உருவெடுத்த சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும் போது, காலத்தால் தீர்க்கமுடியாத பல பிரச் சினைகளுக்குத் தீர்வு கிட்டும். பெரும் பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம்உண்டு. அங்கு சென்றும் வழிபடலாம்.

செல்: 98652 20406

bala240720
இதையும் படியுங்கள்
Subscribe