மீபகாலத்தில் அவதரித்து கணக்கற்ற பக்தர்களால் போற்றி வணங்கப்படும் மகான்களில் ஸ்ரீஷீரடி சாய்பாபா முதன்மையாகத் திகழ்கிறார். 19-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதி, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1837 முதல் 1918 வரை) 81 ஆண்டுகள் இந்த புவியிலே வாழ்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய மகாபுருஷர் ஷீரடி பாபா. ஷீரடியில் பிரபலமாக விளங்கிய அவரது பெயரும் புகழும், நாளாவட்டத்தில் பன்மடங்கு பெருகி அகில இந்தியா மற்றும் உலக நாடு களிலும் பரவியிருப்பதும் உண்மையே.

அவரது வழிபாட்டுத் தலங்கள் இல்லாத ஊர்களே இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம். இன்றைக்கும் என்றைக்கும் உண்மையான பக்தர்களை சோதனைகளுக்கு ஆட்படுத்தி அருள்பாலித்து, அவர்களது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுகிறார் என்பதே அனைவரது திடமான நம்பிக்கை. அப்படிப்பட்ட மகாபுருஷரின் ஜென்ம குண்ட லியை- அதாவது ஜாதகத்தை விளக்கிக்கூறும் வாய்ப்பு பெற்றவர்களும் பாக்கியவான்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மகாபுருஷரின் உன்னதமான ஜாதக அமைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: Astrological Magazine January 1996 Issue).

sa

Advertisment

ஜென்ம லக்னம்

விருச்சிகம்; ஜென்ம லக்னாதிபதி செவ்வாய். லக்னாதிபதி யான செவ்வாய் ராசி சக்கரத்தில் திக்பலம் தரும் பத்தாம் வீட்டிலும், அம்ச சக்கரத்தில் ஆட்சி வீட்டிலும் அமைந்துள்ளது.

இந்த அமைப்பின்மூலம் மனம், சொல், செயல் ஆகிய வற்றில் உறுதி; எதிலும் தைரியமான முடிவு; தீர்க்கமான செயல்பாடு; எவரிடமும் எதையும் எதிர்பார்க்காத தன்மை ஆகியவை புலனாகின்றன. லக்னாதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை லக்னத்துக்கு இருப்பதால் லக்னம் பலம்பெற்று உறுதியான- நோயற்ற உடலமைப்பும், நீண்ட ஆயுளும் கிட்டியது.

Advertisment

குரு பகவான் அமைப்பு

ஜாதக அடுத்த விசேஷ அம்சம் குரு கிரகம் தொடர்பானது.

லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு (பூர்வபுண்ணியம்) அதிபதி யான குரு கிரகம் ராசியில் (கடகத்தில்) உச்ச நிலைப் பாடு பெற்றுள்ளது. அம்சத்தில் ஆட்சிநிலை பெற்றுள்ளது.

சிறிதும் தன்னலமின்றி பொதுநலத்தில் ஈடுபட்டு பக்தர் களுக்கு உபதேசம் செய்யும் தகுதியையும், தலைமையாக நின்று வழிநடத்தும் பண்பையும் இந்த அமைப்பு விளங்கு கிறது. ஞானஒளியைத் தரும் குருவாக விளங்குவதும் புரிகிறது.

சுபகிரகங்களிலே முதன்மையாகக் கருதப்படும் குரு கிரகம் பலமாக அமைத்துள்ளதைக் காணமுடிகிறது.

பஞ்ச மகாபுருஷ யோகங்கள்

மகாபுருஷ யோகங்களாகக் கருதப்படும் ஐந்து யோகங் களின் மூன்று யோக அமைப் புகளை இவர் ஜாதகத்தில் காண முடிகிறது. கேந்திரத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் மாளவ்ய புருஷயோகமும், ராசியிலிருந்து கேந்திரத்தில் உச்சம் பெற்ற குருவால் ஹம்ச புருஷ யோகமும் ராசியிலிருந்து கேந் திரத்தில் உச்சம்பெற்ற சனி யால் சச புருஷயோகமும், அமைந்துள்ளன. நீடித்த, நிலையான புகழுக்குக் காரண மாகவும் இவை அமைகின்றன.

மேலும் பலம்பொருந்திய கஜகேசரி யோகமும் (சந்திரன், குரு கேந்திர தொடர்பு), புதாதித்ய யோகமும் (புதன், சூரியன் தொடர்பு) அமையப்பெற்று நீண்ட புகழுக்கு அடித் தளம் அமைக் கின்றன.

ஸ்ரீஷீரடி சாய் பாபா சத்திய வாக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். முக்காலமும் உணர்ந்து உரைக்கும் மகாசக்தி அவரிடம் இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணம் ஜாதகத்தில் அமைந்த மகாசரஸ்வதி யோக அமைப்பு எனலாம்.

ஜோதிட மாமேதை மந்த்ரேஸ்வரர் தனது நூலான "பலதீபிகை'யில், "எவர் ஜாதகத்தில் சுபகிரகங்களான சுக்கிரன், குரு, புதன் கேந்திர, திரிகோண வீடுகளில் அமைந்து, குரு உச்சம் (அ) ஆட்சி பெற்றிருக்கிறதோ அவருக்கு மகாசரஸ்வதி யோகம் அமையப்பெற்று, முக்காலம் உணரும் சக்தியும், வாக்குப் பலிதம் என்னும் சத்தியவாக்கும் அமையும்' என்று கூறியுள்ளார். இந்த யோக அமைப்பு ஸ்ரீசாய்பாபா ஜாதகத்தில் பலமாக அமைந்துள்ளது.

மேலும் ஜென்ம லக்னத்திலிருந்து பன்னிரண்டாம் வீட்டில் சனி உச்சம் பெற்றிருக்கும் அமைப்பு, பக்தர்கள் தொடர்பு நிலையையும், எதிலும் பற்றற்ற சந்நியாச வாழ்வையும் சுட்டிக் காட்டுகிறது. மோட்ச காரகராகிய கேது உடனிருப் பதும் மோட்ச மார்க்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக விளங் கினார் என்பதைப் புலப்படுத்துகிறது.

பயன்பாடு

இப்படிப்பட்ட அற்புத ஜாதகத்தினை பக்தர்கள் நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், தூய செப்புத்தகட்டில் பாபாவின் ஜாதக கட்டங்களை எந்திரமாக வரைந்து, பூஜையறையில் வைத்து தினமும் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரித்து, அந்த மகான் புகழ்பாடும் ஸ்தோத்திரங்களை உச்சரிக்கலாம். முடிந்தால் வியாழக்கிழமைகளின் பக்தர்களுக்கு தங்களால் இயன்ற அன்னதானமும் செய்துவரலாம். தூய பக்தியுடன் இவ்வாறு வழிபட்டுவந்தால் சகல யோகங்களையும் அந்த மகான் அருள்வார் என்பது உறுதி.

செல்: 74485 89113