னுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராட்சச கணம் வரும். மிருகமாக பெண் நாய் அமைவதால் ராட்சச குணம் அருகே வராது. குரு வீட்டில் ஜனன மானதால், சிறுவயதிலிலிருந்தே கல்விஞானம் கொண்ட வர்களாகவும், நல்ல சகவாசங்களை உடையவர்களாக வும், நேர்மை, நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு சமமாகவும், உயர் அந்தஸ்து, பதவி, செல்வாக்கு பெற்றவர்களிடமும் நட்புகொள் வார்கள். கீழோரிடம் வெறுப்பு கொள்வார்கள். அதிகம் வெளியே சுற்றும் பழக்கமுண்டு.

ஆண்- பெண் இருவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கக் கூடாது. எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்திற்கு மூன்றாம் வீடு மாமனார் வீடாகும். பத்தாம் வீடு மாமியார் வீடாகும். இந்த இரண்டு இடங்களிலும் புதன் வராவிட்டால், துணிந்து திருமணம் செய்யலாம். மாமனார், மாமியார் ஆயுளோடு வாழ்வார்கள். இவர்களது திருமணம் முடிந்தபிறகு முதலில் பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்கும். மூன்றாவ தாக பெண்ணோ, ஆணோ பிறந் தால் காதல் திருமணம் செய்வார். இதனைத் தவிர்க்கமுடியாது.

ss

Advertisment

பூராட நட்சத்திரத்தில் பிறப்பவர்களின் மிருகம் ஆண் குரங்கு. இவர்கள் பெண்ணாக இருந்தால், கணவருக்கும் மிருகம் பெண்ணாக வரவேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் தங்களது கல்வி, அறிவு, திறமைகளால் அரசாங்கத்தில் உயர்பதவியைப் பெறு வார்கள். பிறருடைய குணங்களை வெகு எளிதில் கண்டுகொள்வார்கள். துர்குணம், கொலை செய்பவர்கள், திருடுபவர்களை வெகு சுலபமாகக் கண்டுகொள்வார்கள்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் போராடி வாழ்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தாலிக்கயிறு அணியக்கூடாதென்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படி யல்ல; புதனைக்கொண்டு ஏழாம் இடத்தைப் பார்த்துக் கட்ட வேண்டும். அதோடு ஏழுக்குடையவர் மூன்றில் வந்தால் களத்திர தோஷம் ஏற்படும். இவர்கள் ஆணாக இருந் தாலும், பெண்ணாக இருந்தாலும் 30 வயதிற்குமேல்தான் திருமணம் செய்யவேண்டும். இந்த நட்சத் திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரும் பாலும் பெண் குழந்தைகளாகவே பிறப்பார்கள். கடைசியாக- ஆறாவ தாகப் பிறந்தால் ஆண் குழந்தையாக இருக்கும். இவர்கள் ஆரம்பத்தில் பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்து கொண்டால், ஐந்து பெண் குழந் தைகள் என்ற நிலைமாறி ஒரு பெண்ணுடன் அடுத்து பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறப் பவர்கள் அனைவருக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் இருக்கும். அவர்களுக்குரிய மிருகம் மலட்டுப் பசு. மனுஷ கணம். ஆனால் பலர் ராட்சச குணம் கொண்டவர்களாக இருப் பார்கள். நடுத்தர வயதுவரை சில சிரமங்களை அனுபவிக்கநேரிடும். பிந்தைய வயதில் அபார கீர்த்திகளுடன், செல்வாக்குடன், பூமி, வீடு, வாகனங்களுடன் ஆனந்தமாக வாழ்வார்கள். இவையனைத்தும் பிள்ளைகளால் வரும்.

Advertisment

மனைவி, மக்கள் சிறிதுகாலம் பிரிந்து வாழ்ந் தாலும், 52 வயதிற்குமேல் சேர்ந்துவாழ் வார்கள். மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் தர்மபுரம் சென்று துர்க்கா தேவியையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கிவர வேண்டும். முடியாதவர்கள் வியாழக்கிழமை களில் அருகேயுள்ள தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்காதேவியையும் வணங்கிவர நல்வாழ்க்கை அமையும்.

பரிகாரங்கள்

மூல நட்சத்திரம் உள்ளவர்கள் மதுரை கோவில்களிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கிவர நன்மையுண்டு. மேலும் ஒவ்வொரு வாரமும் அருகிலுள்ள தட்சிணா மூர்த்தியை வணங்கிவரவேண்டும்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதுரை அருகே திருநாவலூர் சென்று, தட்சிணாமூர்த்தியை வணங்கிவரவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். திருவிடைமருதூர் மகாலிலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் தோஷநிவர்த்தி செய்வார்கள். காலை 7.00 மணிமுதல் 9.00 மணிக்குள் தோஷநிவர்த்தி செய்ய வேண்டும்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அருகிலுள்ள ராகு ஸ்தலங்களுக்கு ராகு காலத்தில் சென்று வணங்கவேண்டும். இவர்களுக்கு கண்டிப்பாக பிரம்மஹத்தி தோஷம் இருக்கும் என்பதால், திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்யவேண்டும்.

செல்: 94871 68174