Advertisment

சந்தோஷம் பெருக்கும் துணையைத் தரும் சப்த கன்னியர் வழிபாடு! -பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/sabta-kannyar-worship-gives-partner-increases-happiness-b-balajiganesh

வீட்டிலிருக்கும் திருமண வயதுவந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் பலர் இருக்கி றார்கள். திருமணம் ஆகாமலிருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கையில் பணமில்லாமல் தங்கள் பிள்ளைகளைக் கரையேற்றமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு. அதேநேரத்தில் காசு பணம் எல்லாம் இருந்தும் அவர்களின் ஜாதக பிரச்சினைகள், இன்னும் பல காரணங்களால் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போவதும் உண்டு.

Advertisment

இப்படி எந்த காரணத்தினால் திருமணம் தள்ளிப்போனாலும், சப்த கன்னியருக்கு இந்த விளக்கு ஏற்றினால் போதும். உங்கள்

வீட்டிலிருக்கும் திருமண வயதுவந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் பலர் இருக்கி றார்கள். திருமணம் ஆகாமலிருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கையில் பணமில்லாமல் தங்கள் பிள்ளைகளைக் கரையேற்றமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு. அதேநேரத்தில் காசு பணம் எல்லாம் இருந்தும் அவர்களின் ஜாதக பிரச்சினைகள், இன்னும் பல காரணங்களால் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போவதும் உண்டு.

Advertisment

இப்படி எந்த காரணத்தினால் திருமணம் தள்ளிப்போனாலும், சப்த கன்னியருக்கு இந்த விளக்கு ஏற்றினால் போதும். உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அது என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

திருமணத் தடைநீங்க சப்த கன்னியரை வேண்டிக்கொண்டு தீபமேற்றி, சப்த கன்னிகளை வணங்கும்போது உங்களின் இந்த திருமண வேண்டுதலையும் உடனடியாக நிறைவேற்றித் தருவார்கள். அவர்களின்முன் மண்டியிட்டு நம் மனக்குறைகளை வைத்தால் போதும், அவர்களை போல் மனம் குளிர்ந்து உடனே நம் குறைகளைத் தீர்த்துவைக்கும் தெய்வம் வேறில்லை. சப்த கன்னியர்கள் ஆக்ரோஷமான தெய்வங்கள்தான். ஆனால் இவர்களை நாம் பணிந்துவிட்டால் போதும். நம் குறைகளை உடனடியாகத் தீர்த்து விடுவார்கள்.

சப்த கன்னியர்களை வணங்கவேண்டும் என்றவுடன் பலர் மனதில் இந்த சந்தேகம் எழும்.

Advertisment

ss

எங்களுக்கு சப்த கன்னியரை வணங்கும் பழக்க மில்லை. எங்கள் குலதெய்வம் வேறு இந்த தெய்வங்களை வணங்கலாமா என்ற எண்ணம் பலர் மனதில் எழவே செய்யும். சப்த கன்னியர் அனைவரும் வணங்க வேண்டிய காவல் தெய்வங்கள்தான். இவர்களில் ஒருவர்தான் வாராஹிம்மன். அவரை எப்படி எல்லாரும் வணங்க லாமோ, அதேபோலத்தான் இந்த சப்த கன்னியரும். இவர்களும் அனைவருமே வணங்கவேண்டிய தெய்வங்கள்தான்.

இப்போது இந்த சப்த கன்னியர் களை எப்படி வணங்கினால் திருமணத் தடை அகலும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் சப்த கன்னியர் இருக்கும் கோவிலுக்குச் சென்று, அங்கு ஏழு தேங்காய் வாங்கிக்கொள்ள வேண்டும். (இதை கோவிலுக்குப் போகும் போது வாங்கிக்கொள்ளுங்கள்) அந்த ஏழு தேங்காயும் உடைத்து அதன் அடிப் பக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலே குடுமி இருக்கும் பக்கத்தில் தீபமேற்றக் கூடாது. தேங்காயின் அடி பக்கத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிவப்பு நூல் திரிபோட்டு ஏழு தீபம் ஏற்றவேண்டும். ஏழு தீபமென்பது- ஒவ்வொரு கன்னி யருக்கும் ஒவ்வொரு தீபம். சப்த கன்னியர்களுக்கு தீபமேற்றி அவர்களின்முன் மண்டியிட்டு, எந்த காரணத்திற்காகத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதைச் சொல்லி அந்த தடை அகல வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த தெய்வத்தின் பெயரே சப்த கன்னிகைதான். அதனால்தான் திருமணமாகாதவர்களின் வேண்டு தலை இந்த தெய்வங்கள் உடனே நிறைவேற்றிக்கொடுக்கும்.

இந்த வேண்டுதலை ஆண்- பெண் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தீபமேற்றிய சில நாட்களுக்குள்ளே கண்டிப்பாக உங்களின் பிரார்த்தனை நிறைவேறி உங்களுக்கு நல்லவொரு வாழ்க் கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

செல்: 98425 50844

bala020623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe