டந்த சில மாதங்களாக உலக மக்கள் பலரும், நாம் இனிவரும் ஆண்டுகளில் நல்லபடியாக வாழமுடியுமா என வீடுகளில் முடங்கியபடி கேள்விகேட்கத் தொடங்கிவிட்டனர். இந்த உலகம் படிப்படியாக அழிந்துவிடுமென்று சொல்லிவைத்தார்களே... அது நடந்துவிடுமோ எனவும் அச்சம்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் ஏராளமான சக்திகள் உறங்கிக்கொண்டுள்ளன. அவற்றையறிந்து பயன்படுத்தாததாலேயே பல துன்பங்களை மனிதன் அனுபவிக்கிறான் என்கிறது வேதம். பிரபஞ்ச சக்திகள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றன. அவற்றை இயக்கவும், பயனாக்கவும் தூண்டுகோல் வடிவங்கள் வேண்டும். அவையே வழிபாட்டுக்குரிய இறைபிம்பங்களாக உள்ளன.

கலியுகம் பிறந்த சில வருடங்களிலேயே கேடுகள் விளையத் தொடங்கும் என புராணங்கள் சொல்கின்றன. பாகவதப் புராணங்களின் ஒரு பகுதியான தேவிபாகவதத்தை, உபபுராணமாகத் தன் மாணவர்களுக்கு உபதேசம் செய்தார் வியாச முனிவர்.

12 ஸ்கந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்கள் அடங்கிய மிகப்பெரிய பொக்கிஷமான தேவிபாகவதத்தில், பராசக்தியின் பெருமைகள், ஸ்வரூப லாவண்யம், மந்திரங்களின் பெருமை, தேவியின் யக்ஞ மகிமை, வழிபடுபவர்கள் அடையும் நன்மை, பாவ புண்ணியங்களின் விளை வுகள் என அனைத்தும் கூறப்பட்டுள்ளன. மன பயத்தை அகற்றி, எதிர்கால வளத்தைத் தரும் அதன் துதிகளும் விளக்கங்களும் எளிமையாகவே உள்ளன. இயன்றவரை தேவி பாகவதப் பாராயணம் செய்வது அச்சத்தை அகற்றும்.

Advertisment

முன்யுகங்களில் பசுக்கள் நாயாகப் பிறப்பெடுக்கும். கலியுகத்தில் சகோதரர்கள் அந்நியர்களாகவும், தன் மனைவி வேற்றான் தாரம் போலவும், நல்லவற்றைப் பேசியோர் வம்பு வளர்ப்பவர்களாகவும், புண்ணியத் தலம் செல்வோர் சூதாட்டக் களத்தில் அமர்பவராகவும், யாகங்கள் நடத்துவோர் நாச வேலைகளில் ஈடுபடுவோராகவும் மாறுவர் என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனுக்கு மறதி அதிகமாகும். புதுப்புதுப் பெயர்களில் நோய்கள் மிகும். அவற்றைப் போக்கிட புதிய மருந்துகள் தேவைப்படும். கலியுக மக்கள் அனைவரும் பிறரிடம் சந்தேகம் கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய நோய்கள் புறப்பட்டு மக்களை வாட்டும் என்று பல்லா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாகவதம் எச்சரித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜோதிடம் எனும் வானியல் விஞ்ஞானமும், தெய்வ வழிபாட்டுப் பரிகாரங்களும் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகத்தான் இன்றைய கலியுகத்தில் நடுக்கடலில் நிற்பது போல தவித்துக்கொண்டிருக் கிறோம்.வேதத்தின் உட்கருத்து களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி காலத்திற்கேற்றவாறு மந்திர தந்திரங்களை உபதேசித்தனர் நமது முன்னோர்கள். அவற்றைப் பயன் படுத்தத் தவறியதால் இயற்கை சீற்றங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகிறோம். எனவே, யுகதர்மத்தை அறிந்து காத்து வந்தால் பேரிடர்களிலிருந்து தப்பித்து எதிர்காலத்தை நன்கு அமைத்துக் கொள்ளலாம்.

vv

Advertisment

கலியுகக் கேடுகளிலிருந்து தப்பிக்க...

புயலும் இடியும் மின்னலும் பெருமழையும் ஆண்டிற்கொருமுறை வந்தபோது தப்பித்துவந்தோம். ஆனால், காற்றில் மாசு கலந்து அதுவே கலியுகக் கேடாய் வந்துவிட்டது. அதற்குத் தீர்வு தர உபதேசிக்கப்பட்டது இந்த மகா மந்திரப் பரிகாரத் துதி...

யே: தர்ம ரசிகா ஜுவாஸ்

தேனவ சத்ய யுகே பவந்

தர்மார்த்த காமரஸிகா

த்வாபரேசசபவந் யுகே

அர்த்தகாம பராஸ் சர்வே

கலா வஸ்மின் பவந்திஹி

யுகதர்மஸ்து ராஜேந்த்ர ந

யாதி வ்யத்யயம் புந:

ஸர்வ தோஷ நிராஸார்தம்

த்யாயேத் …

தர்மசாலைகள், மடாலயங்களில் தானதர்மங்கள் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்தும்; நாட்டில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்ப குறித்தும்; பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரம் பற்றியும், பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார் வருகின்றனவா என்பது குறித்தும்;

அரசு வைத்தியசாலைகள் நன்றாக இயங்குகின்றனவா? மக்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா என்றும்; ஆடற் கலைஞர்கள், வாத்தியக் குழுவினர் உள்ளிட்ட 64 ஆயகலைகளில் ஈடுபட்டிருப்போரை ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் உற்சவாதிகளில் பங்குபெறச் செய்து, அவர்களுக்கு ஆதரவு தரப்படுகிறதா என்பது பற்றியும்; வேதங்கள், புராணங்கள், ஆகமங்கள் பரவியிருக்கும் நம்நாட்டில், அவற்றை வளர்ப்பதற்கு வேத பண்டிதர்களுக்கு ஊக்கமும், ஆலயங்கள், வீடுகளில் இறைத் திருவுருமுன் ஓதுவதற்குரிய- முக்கியமாக, தர்மங்கள் தவறாமல் நடைபெற வழிவகை செய்யப்பட்டு, அவை தொடர்ந்து நடைபெற்றன. அவ்வாறு அறங்கள் நடை பெறவில்லை என்றால் மனித இனத்திற்கு மூவகைப் பெருங்கேடுகள் வந்துவிடு மென்று, ஜோதிடர்கள் வழிகாட்டி களாக விளங்கி எடுத்துரைத்தனர்.

அவையே-

ஆதியாத்மிகம் எனப்படும் இயற்கை இன்னல்களான இடி, மின்னல், புயல், பூகம்பம் ஆகியவை. இரண்டாவது, ஆதிதைவதம் எனப்படும் தீராப்பிணி, விபத்து, அகால மரணம் போன்றவை.

மூன்றாவது, பூர்வபுண்ணிய சேர்க்கை யின்மையால் ஏற்படும் துன்பங்கள், நஷ்டங்கள், மனக் கோளாறு, பயம் போன்றவையாக வரும் ஆதிபௌதிகம்.

தற்போது தர்மங்கள் காக்கப் படாததாலும், அவை தீயவர்களால் தடுக்கப்படுவதாலும் ஆதிதைவதம் வழித்துன்பங்கள் உண்டாகி, அத்துடன் ஆதிபௌதிகம் எனும் மனத்துயரும் சேர்ந்து, இனி இக்கலியுகத்தில் வாழமுடியுமா என்னும் அச்சமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

பூமி நிலைத்து வாழும் காலம் எவ்வளவு?

இந்தக் கேள்விக்கு பிப்பிலாத மகரிஷி பதில் கூறியுள்ளார். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம். இது மிகப்பெரிய கணக்கு. இவை கற்பங்கள் என்று விரிகின்றன.

ஜோதிட சித்தாந்தப்படி, கற்பங்களைப் பெருக் கிக்கண்டதில், சுமார் 12 ஆயிரத்து 256 கோடி ஆண்டுகள் இந்த பூமி வானமண்டலத்தில் இயல்பாகச் சுழலும். மக்களும் வாழ்வர்.

எனவே, அச்சம் கொள்ளாது, இந்த கடின காலத்தை நம் மன வலிமை யாலும், ஆழ்ந்த இறை நம்பிக்கையாலும் வெல்வோம். யுகதர்மம் கடைப்பிடிப் போம். அது நம்மை நலமுற வாழ்விக்கும்.

செல்: 91765 39026