நவகிரகங்களில் எந்த கிரகத்தின் தசை நடைபெறுகிறதோ அது அந்த கிரகத்தின் ஆட்சிக்காலமாகும். நடப்பில் எந்த கிரகத்தின் தசை நடைபெறுகிறதோ அந்த கிரகமே தசாநாதனாகும். தசாநாதனின் தன்மைக்கேற்ப தசையின் பலன்களும் நடைபெறும். 120 வருட காலம் கொண்ட விம்சோத்திரி தசையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தசா காலங்கள் மேலும் புக்திக் காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கிரகங்களின் சேர்க்கைகள், ராசிகள் அமையும் வீடுகளின் விதம், வீடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் ஆகியவை ஒரு மனிதனின் வாழ்வில் தங்களது பங்கை அளிக்கின்றன. நல்ல யோகம் தரும் கிரகத்தின் தசை, புக்தி நடைபெறும்போது மனிதனின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் உண்டாகின்றன.
இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதனின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் எளிதில் கைகூடும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதுவே பாவ கிரகங்களான சனி, சூரியன், செவ்வாய், ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவர் சேர்க்கைப் பெற்ற புதனின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் திருமண சுப காரியங்கள்
நவகிரகங்களில் எந்த கிரகத்தின் தசை நடைபெறுகிறதோ அது அந்த கிரகத்தின் ஆட்சிக்காலமாகும். நடப்பில் எந்த கிரகத்தின் தசை நடைபெறுகிறதோ அந்த கிரகமே தசாநாதனாகும். தசாநாதனின் தன்மைக்கேற்ப தசையின் பலன்களும் நடைபெறும். 120 வருட காலம் கொண்ட விம்சோத்திரி தசையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தசா காலங்கள் மேலும் புக்திக் காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கிரகங்களின் சேர்க்கைகள், ராசிகள் அமையும் வீடுகளின் விதம், வீடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் ஆகியவை ஒரு மனிதனின் வாழ்வில் தங்களது பங்கை அளிக்கின்றன. நல்ல யோகம் தரும் கிரகத்தின் தசை, புக்தி நடைபெறும்போது மனிதனின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் உண்டாகின்றன.
இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதனின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் எளிதில் கைகூடும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதுவே பாவ கிரகங்களான சனி, சூரியன், செவ்வாய், ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவர் சேர்க்கைப் பெற்ற புதனின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர பாக்கியம் அமைவதிலும் சிக்கல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்பு குறையும். குறிப்பாக சனி, ராகு- கேது தசாபுக்திக் காலங்களில் முன்கோபம், வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, கணவன்- மனைவி பிரியக்கூடிய சூழ்நிலை உண்டாகும். என்றாலும் பாவ கிரகங்கள் லக்னாதிபதியானாலும், லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருந்தாலும் மேற்கூறிய கெடுபலன்கள் குறையும்.
இயற்கை சுபர்கள் பலவீனமடையாமல் (நீசம், அஸ்தங்கம், வக்ரம், சஷ்டாஷ்டகம்) அமைந்திருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணாதிபதிகளின் தசாபுக்திக் காலங்களிலும், லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசாபுக்திக் காலங்களிலும் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறும்போதும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இயற்கை பாவ கிரகங்களாகிய சூரியன், செவ்வாய் நட்பு கிரகங்களின் சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்து அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றாலும் இல்வாழ்க்கை இனிப்பாகவே அமையும். தசாநாதனுக்கு நட்பு கிரகங்களின் புக்திக்காலத்திலும், தசாநாதனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்திக் காலத்திலும் மணவாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். பாவ கிரகங்களாக இருந்தாலும் அவை சுபர் சாரம், சுபர் சேர்க்கை, சுபர் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாமல் இருக்கும்.
ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 2, 7-ஆம் இடங்களில் அமைகின்ற பாவ கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் குடும்பவாழ்வில் ஒற்றுமைக்குறைவு உண்டாகிறது. 7-ஆம் இடமும், 7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் 6-ஆம் அதிபதியின் சேர்க்கையோ, தொடர்போ பெற்று 6-ஆம் அதிபதியின் தசாபுக்தி நடைபெற்றால், குடும்ப வாழ்வில் வீண்வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு, சிலருக்கு வழக்காடு மன்றங்களுக்குச் செல்லக்கூடிய நிலை, பிரிவு உண்டாகிறது.
7-ஆம் இடமும், 7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் 8-ஆம் அதிபதியின் சேர்க்கையோ தொடர்போ பெற்றிருந்தாலும், 7-க்கு 8-ஆம் இடமான 2-ஆம் அதிபதியின் சேர்க்கை, தொடர்பு, பார்வை பெற்று பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், கணவனுக்கோ மனைவிக்கோ ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டு, அதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு உண்டாகும். 7-க்கு 2-ஆம் இடமான 8-ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமைந்து, சுபர் பார்வையின்றி, அதன் தசையோ புக்தியோ நடைபெற்றால் களத்திரவழி உறவுகளிடையே ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டு, அதனால் கணவன்- மனைவியிடையே மனக்கசப்பு உண்டாகும்.
களத்திர ஸ்தானமான 7-ஆம் இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும், களத்திர ஸ்தானாதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றாலும், களத்திர காரகன் சுக்கிரன் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்களுடன் அமைந்திருந்தாலும் களத்திர தோஷம் உண்டாகிறது. களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரகங்களின் புக்திக் காலங்களில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வெளி நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். நவகிரகங்களில் ராகு- கேது தன்னிலை மறந்து செயல்பட வைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதிக்கோ களத்திரகாரகன் சுக்கிரனுக்கோ, 7-ஆம் இடத்திற்கோ ராகுவின் ஆதிக்கம் அதிகமிருந்தால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு அதிகம் இருக்கும். ராகுவின் புக்திக் காலங்களில் தன்னிலை மறந்து, என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் மிருகத்தனமாக செயல்படுவார்கள்.
இதனால் பலவித அசம்பாவிதங்களும் நிகழ்கின்றன.
ஆண்- பெண்ணின் உடல் தேவைகளைப் பூர்த்திசெய்து, வம்ச விருத்தி செய்வதென்பது திருமணத்தின் முக்கியமான அம்சம்.
குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சகித்துக்கொண்டு வாழமுடியும். குறிப்பாக தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருந்தால் எல்லா பிரச்சினைகளும் தவிடுபொடியாகிவிடும். தாம்பத்ய வாழ்வில் ஒருவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து, மற்றொருவருக்குக் குறைவாக இருந்தால் மனமொத்து வாழ்வது கடினம்.
களத்திரகாரகனும், காமத்துக்குக் காரகனுமாகிய சுக்கிரன் சுப கிரகங்களின் சம்பந்தத்துடன் இருந்தால், உடல் உணர்ச்சிகள், தேவைகள் போன்றவை அளவாக அமைந்து தாம்பத்ய வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும். சுக்கிரன் பாவ கிரகங்களின் சம்பந்தத்துடன் இருந்தால் உடல் தேவைகள் அதிகரிக்கும். அந்த கிரகங்களின் தன்மைக்கேற்ப இத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக மிகவும் கடினமாக நடந்துகொள்வார்கள். சுக்கிரன் அலி கோள்களின் சம்பந்தத்துடன் இருந்தால் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு, மற்றவரை திருப்திசெய்ய இயலாத நிலை உண்டாகும்.
இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சியின்மைக்கும் இதுபோன்ற பல நிலைகளை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. அதைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ளவேண்டும்.
செல்: 72001 63001