Advertisment

மனித வாழ்வில் அரவங்களின் பங்கு! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/role-arava-human-life-melmaruvathur-s-kalaivani

ரவங்கள் என்றால் பாம்புகள் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த பாம்புகள் நம் ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேதுவாகக் கூறப்படுகிறது.

Advertisment

ராகு- கேதுவின் உருவாக்கம்பற்றி தெரிவிக்கும் புராணம், தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும் பொழுது, அதை அபகரித்து உண்ட அசுரன் இறப்பில்லாத வன் ஆனதால், அவனை வெட்டிய இரு பாகமே ராகு மற்றும் கேது என்கிறது. அறிவியல்ரீதியாக சூரியன், சந்திரன், பூமி ஆகியவை நீள்வட்டப் பாதையில் வலம்வரும் பொழுது, அங்கே சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் வெட்டுப்புள்ளியே இந்த ராகு- கேது எனப்படுகிறது.

சூரியன் வெட்டும் புள்ளி இருள்நிறைந்த ராகுவாக வும், சந்திரன் வெட்டும் புள்ளி செந்நிற கேதுவாகவும் அறியப்படுகிறது. ராகு தலைப்பகுதி- உடலற்றதென்றும், கேது வால் பகுதி- தலையற்றதென்றும் சொல்லப்படு கிறது. இவர்கள் இருவரும் அருகருகே இடம்பெறு வதில்லை.

தான் நின்ற இடத்திலிருந்து 180 டிகிரி என்ற நிலையில் எதிர் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருப்பார்கள்.

Advertisment

பாவ கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகு- கேதுவுக்கு மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் சொந்த வீடுகள் கிடையாது. ஆ

ரவங்கள் என்றால் பாம்புகள் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த பாம்புகள் நம் ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேதுவாகக் கூறப்படுகிறது.

Advertisment

ராகு- கேதுவின் உருவாக்கம்பற்றி தெரிவிக்கும் புராணம், தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும் பொழுது, அதை அபகரித்து உண்ட அசுரன் இறப்பில்லாத வன் ஆனதால், அவனை வெட்டிய இரு பாகமே ராகு மற்றும் கேது என்கிறது. அறிவியல்ரீதியாக சூரியன், சந்திரன், பூமி ஆகியவை நீள்வட்டப் பாதையில் வலம்வரும் பொழுது, அங்கே சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் வெட்டுப்புள்ளியே இந்த ராகு- கேது எனப்படுகிறது.

சூரியன் வெட்டும் புள்ளி இருள்நிறைந்த ராகுவாக வும், சந்திரன் வெட்டும் புள்ளி செந்நிற கேதுவாகவும் அறியப்படுகிறது. ராகு தலைப்பகுதி- உடலற்றதென்றும், கேது வால் பகுதி- தலையற்றதென்றும் சொல்லப்படு கிறது. இவர்கள் இருவரும் அருகருகே இடம்பெறு வதில்லை.

தான் நின்ற இடத்திலிருந்து 180 டிகிரி என்ற நிலையில் எதிர் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருப்பார்கள்.

Advertisment

பாவ கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகு- கேதுவுக்கு மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் சொந்த வீடுகள் கிடையாது. ஆனால் சொந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற் கும் மூன்றுவீதம் ஆறு நட்சத்திரங்கள் உள்ளன.

ராகுவுக்கு திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும்; கேதுவுக்கு அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் அவர்களுக்குரிய நட்சத்திரங்களாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஒன்பது கிரகங்களில் வலிமைமிக்க கிரகமென்று கூறப்படுவது கேது கிரகம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு- கேது எங்கிருந்தால் தோஷம் உண்டாகிறது என்பதைப் பார்க்கலாம்.

லக்னம், லக்னத்திற்கு இரண்டாமிடம், ஏழு மற்றும் எட்டாமிடம் ஆகிய இடங்களில் ராகு- கேது அமையப் பெறுவது நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷமென்று கூறப்படுகிறது. மேலும், ஏழில் பாவகிரகம் சம்பந்தப்படும்பொழுது அது களத்திர தோஷமாகிறது. அதனால் ஏழில் ராகு மற்றும் கேது அமர்வதும் களத்திர தோஷமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அடுத்து, ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய, புத்திர, குலதெய்வ ஸ்தானத்தில் ராகு அமரும்பொழுது அது புத்திர தோஷமாகக் கருதப்படுகிறது. 12-ஆமிடமான அயன சயன போகஸ்தானத்தில் ராகு மற்றும் கேது அமர்வதும் தோஷமாகவே கருதப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ராகு- கேதுவுக்கிடையில் அனைத்து கிரகங்களும் சஞ்சரிக்கும் நிலையை காலசர்ப்ப தோஷமென நமது சாஸ்திரங்களில் கூறப் பட்டிருக்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் அமரும் ராகுவோ கேதுவோ, தனக்கு நேரெதிராக 180 டிகிரியில் ராகுவையோ கேதுவையோ அமரச் செய்யும்பொழுது ஜாதகரின் இரண்டு மற்றும் ஏழு மற்றும் எட்டாமிடம் பலம்குறைந்து போகிறது.

இரண்டில் அமரும் ராகுவோ கேதுவோ இரண்டாமிடம் என்று சொல்லக்கூடிய தனம், குடும்பம், வாக்கு ஆகிய நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், களத்திரம் எனப்படும் ஏழாமிடத்திலும், ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்திலும் தனது ஆதிக்கத்தை உண்டாக்கி இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் தாமத திருமணம், தன வரவில் தடை, பேச்சில் கவனமின்மை, விதண்டாவாதப் பேச்சு ஆகியவற்றை அளித்து ஜாதகரை சிரமத்திற்கு ஆளாக்குவார்கள்.

ஐந்தில் அமரும் ராகு பூர்வபுண்ணியத்தை செயலிழக்க வைப்பதுடன், அவருடைய பூர்வீகத்தில் யாரும் செய்யாத விஷயத்தை இவர்கள் செய்வார்கள். இதில், ராகு சுப ஆதிபத்திய தொடர்புபெற்றிருந்தால் அவருடைய மூதாதையர் யாரும் செய்யாத நல்ல பல செயல்களைச் செய்து பெயரும் புகழும் அடைவார்கள். பாவர் பிடியிலிருக்கும் ராகு- கேது பூர்வீகத்திற்கு எதிரான செயல்களைச் செய்யத்தூண்டும்.

rr

மேலும் ஐந்தாம் பாவகமென்பது புத்திர ஸ்தானம் எனப்படுவதால் தாமதமாக குழந்தைப்பேறு ஏற்படும். இதற்கு மற்ற கிரகங்களின் வலுவையும் குருவின் நிலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் மட்டும் குழந்தைப்பேறு தடைப்படுவதில்லலை.

பாம்பு கிரகங்களான ராகு- கேதுவுக்கிடையே மற்ற கிரகங்கள் சிக்கிக்கொள்ளப் பிறந்த வர்கள் காலசர்ப்ப தோஷத்திற்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய நிலை ஒருவரின் ஜாதகத்தில் அமையப்பெற்றால் அவர்கள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேலாகத்தான் தங்கள் வாழ்க்கையில் சில சுகங்களை அனுபவிக்கமுடியும்.

ராகு- கேது தோஷங்களுக்கு ஆளாகும் ஜாதகருடைய வீட்டில் சண்டை, சச்சரவு, தொந்தரவு என்ற நிலை எப்போதும் இருக்கும். அதற்குக் காரணம் இரண்டாமிட ராகு நாக்கிற்கு வலுவை வழங்குவதால் விதண்டாவாதப் பேச்சு, பிரச்சினைகளைப் பற்றியே பேசுவது என பேச்சின்மூலம் பிரச்சினையை அதிகரிப்பது என்ற நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

ஒருவரின் லக்னத்தில் அமர்ந்த ராகு தன்னை உயர்நிலைப்படுத்தி பிறரைத் தாழ்த்தும் குணத்தை உண்டாக்கிவிடும். இதனால் சண்டை, சச்சரவுக்கு அதிகமாகவே வாய்ப்புகள் அமையும்.

ஜோதிட மூல நூல்களில் ராகு- கேதுவுக்கு 3, 7, 11-ஆம் பார்வைகள் உண்டு என்றும், சில நூல்களில் பார்வை என்பதே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பாவ கிரகங்களான ராகுவும் கேதுவும் தான் நிற்கும் வீட்டின் அதிபதி போலவும், அவர்கள் நின்ற நட்சத்திராதிபதி போலவும் செயல்படுவார்கள். இவர்களுக்கென்று தனி வீடு கிடையாது என்பதால், ராகு நிற்கும் பாவகம் போன பிறவியில் நாம் நிறைவேற்றிக்கொள்ளாத ஆசைகளைக் குறிக்கும். கேது நிற்கும் பாவகம் நாம் விட்டுவைத்த கடமையினைக் குறிக்கும்.

சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுக்களால் ஏற்பட்ட தோஷத்திற்கு காள‌ஸ்தி சென்று பூஜைசெய்து வழிபடுவதன்மூலமும், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று வழிபடுவதன்மூலமும் தங்களின் இடர்ப்பாடுகளிலிருந்து விடுபடலாம். மேலும் ராகுவின் தானியமான கருப்பு உளுந்து, கேதுவின் தானியமான கொள்ளு ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதோடு மட்டுமல்லாமல், ராகு- கேது தங்களது ஜாதகத்தில் சுப பார்வையில் அமர்ந்திருந்தால் தாங்களும் உணவில் சேர்த்துவர, இந்த சூட்சும சக்திகள் இனிய வரமளித்து நல்வாழ்வளிக்கும்.

செல்: 80563 79988

bala281022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe