Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-9

எஸ். சுப்பிரமணியம், சேலம்.

என்னுடைய ஆயுள் பாவம் எப்படி உள்ளது? சில நோய்களால் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறேன். செய்ய வேண்டிய பணிகள் ஏதுமில்லை. இருப்பினும் சில கோவில்களுக்குப் போக முடியவில்லை. நான் நினைத்த கோவில்களுக்குச் சென்றுவர முடியுமா?

Advertisment

கடக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். குரு பார்வை லக்ன சனிமேல் விழுவதால் தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு சனி தசை. அனேகமாக மார்பு, நுரையீரல் சம்பந்தமான நோய்த் தாக்கம் தற்போது இருக்கக்கூடும். சனி அம்சத்தில் உச்சம். எதையும் சமாளித்துவிடுவீர்கள். சனி தசை கேது புக்தி 2022, நவம்பர்வரை. இதில் சித்தர்கள் தரிசனம், குலதெய்வக் கோவில் தரிசன பாக்கியம் கிடைக்கும். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் தொலைதூரக் கோவில்களின் தரிசனமும் கிடைக்கும். மேலும் சுக்கிர புக்தியில் உடல்நலனில் கவனமாக இருத்தல் அவசியம். இப்போதைக்கு வீட்டிலிருந்தே சித்தர் வழிபாடுகளை மேற் கொள்ளவும். வீட்டில் விளக்கேற்றும்போது நெய்விட்டு விளக்கேற்றவும்.

q&a

அஹிர்கிரி, கோவை.

என் திருமணம் எப்போது நடைபெறும்?

சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 13-4-1993-ல் பிறந்தவர். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு. மேலும் 8-ஆமிடத்தில் புதன் நீசமாகி சுக்கிரன் உச்சமானதால் புதன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். குருவும் புதனும் பரிவர்த்தனை. நடப்பு ராகு தசை யில் குரு புக்தி 2023, ஜுலை வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். மணப்

எஸ். சுப்பிரமணியம், சேலம்.

என்னுடைய ஆயுள் பாவம் எப்படி உள்ளது? சில நோய்களால் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறேன். செய்ய வேண்டிய பணிகள் ஏதுமில்லை. இருப்பினும் சில கோவில்களுக்குப் போக முடியவில்லை. நான் நினைத்த கோவில்களுக்குச் சென்றுவர முடியுமா?

Advertisment

கடக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். குரு பார்வை லக்ன சனிமேல் விழுவதால் தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு சனி தசை. அனேகமாக மார்பு, நுரையீரல் சம்பந்தமான நோய்த் தாக்கம் தற்போது இருக்கக்கூடும். சனி அம்சத்தில் உச்சம். எதையும் சமாளித்துவிடுவீர்கள். சனி தசை கேது புக்தி 2022, நவம்பர்வரை. இதில் சித்தர்கள் தரிசனம், குலதெய்வக் கோவில் தரிசன பாக்கியம் கிடைக்கும். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் தொலைதூரக் கோவில்களின் தரிசனமும் கிடைக்கும். மேலும் சுக்கிர புக்தியில் உடல்நலனில் கவனமாக இருத்தல் அவசியம். இப்போதைக்கு வீட்டிலிருந்தே சித்தர் வழிபாடுகளை மேற் கொள்ளவும். வீட்டில் விளக்கேற்றும்போது நெய்விட்டு விளக்கேற்றவும்.

q&a

அஹிர்கிரி, கோவை.

என் திருமணம் எப்போது நடைபெறும்?

சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 13-4-1993-ல் பிறந்தவர். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு. மேலும் 8-ஆமிடத்தில் புதன் நீசமாகி சுக்கிரன் உச்சமானதால் புதன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். குருவும் புதனும் பரிவர்த்தனை. நடப்பு ராகு தசை யில் குரு புக்தி 2023, ஜுலை வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். மணப்பெண் உங்கள் உறவில் அமைவாள். ராசிக்கு 7-ல் செவ்வாய். எனவே, பெண் லக்னத்துக்கு அல்லது ராசிக்கு செவ்வாய் தோஷம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வும். ஒருமுறை திருவிடந்தை கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்யவும். நடப்பு ராகு தசை என்பதால் கருடனுக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.

ரா. ஸ்டாலின், சிவகோட்டை.

சுயமாக என்ன தொழில் செய்யலாம்? சொந்த வீடு அமையுமா? பிறந்த ஊரிலா அல்லது வேலை பார்க்கும் ஊரிலா? தற்போது பார்க்கும் வேலையில் பெரிதாக பயனில்லை. சகோதரர்களுடன் ஒற்றுமை இருக்குமா?

தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். 6-3-1999-ல் பிறந்தவர். லக்னாதிபதி குரு 8-ஆமிடத்தில் உச்சமாகி வக்ரம் பெற்றுள்ளார். எனவே நீசமாகிவிட்டார். சந்திரன் நீசம்; ஆனால் குரு பார்வையால் நீசபங்கம். நீங்கள் அனுப்பிய ஜாதகத்தில் புதன் மீனத்தில் உள்ளதாக எழுதியுள்ளீர்கள். ஆனால், அப்போது புதன் கும்பத்தில் சூரியனுடன் உள்ளார். உங்கள் லக்ன 4-ஆம் அதிபதியும், ராசியின் 4-ஆம் அதிபதியும் ராகு- கேது சேர்க்கை. எனினும் 4-ஆமிடத்தில் உச்ச சுக்கிரன் அமர்ந்துள்ளதால், பிற்காலத்தில் வேலை செய்யுமிடத்தில், வெளியூரில், கடன் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர் கள். இப்போதைக்கு மாத சம்பளத்திற்கு வேலை செய்யவும். பிற்காலத்தில் வேலை சம்பந்த மான சொந்தத் தொழில் தொடங்கு வீர்கள். தற்போ தைய கொரோனா தாக்குதலுக்குப் பிறகு, நிறைய ஜாதகர்கருக்கு வேலையில் நன்மை குறைவாகத்தான் உள்ளது. அதனால் நீங்கள் அதிகம் கவலைப்படவேண்டாம். நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2024, மார்ச்வரை நடக்கும். சுமாரான பலன்களே கொடுக்கும். அதனால் ஒரு வேலை கிடைத்தால் கூடிய மட்டும் அதில் தொடர முயற்சி செய்யுங் கள். லக்னாதிபதிக்கும் 3, 11-ஆம் அதிபதிகளுக்கும் தொடர்பிருப்பதால், உங்கள் உடன்பிறந் தோருடன் நல்ல புரிந்துணர்தல் இருக்கும். எனினும் சிறுசிறு சீற்றங்கள் வரும்; போகும். உங்கள் லக்னாதிபதி குரு நீசம் பெற்றிருப்பதால், மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கவும். சனி, குரு பார்வை இருப்பதால், கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாபநாசம் ஆலயம் சென்று வழிபடவும். இங்கு ஒரே சந்நிதியில் சனீஸ்வரரும் பைரவரும் சூரிய பகவானும் அருள்கின்றனர். சனி தோஷத்திற்கும் பிரம்மஹத்தி தோஷத்திற் கும் நல்ல பரிகாரத் தலமாகும்.

நாரயணன், திருநெல்வேலி.

கல்லூரியில் நிரந்தரப் பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும். கால சர்ப்ப தோஷம் உள்ளதா? எங்கள் பிராமண இனத்திலேயே வரன் அமையுமா?

நீங்கள் 20-5-1979-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்தி ரம். இந்த ஜாதகத்தில் மேஷ லக்ன பாதகாதி பதி சனி ராகுவுடன் சேர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே, பூர்வபுண்ணிய குற்றமுள்ள ஜாதகம். மேலும் சனி, சந்திரன் பார்வை. காலசர்ப்ப தோஷமும் உள்ளது. ராசியில் கேது; 7-ல் ராகு. சனி, 7-ஆமிடம், 2-ஆமிடம் மற்றும் 5-ஆம் அதிபதியையும் பார்ப்பதால் திருமணம் தாமதமாகிறது. உங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தாலும் அது நிலைத்திருக்காது. நடப்பு புதன் தசையில் சுக்கிர புக்தி. இதில் 2022, ஏப்ரல் மாதத்திற்குள் கலப்புத் திருமணம் நடக்கும். 2024 ஜனவரிக்குப்பிறகு சூரிய புக்தியில் நிரந்தரப் பணி கிடைக்கும். 5-ல் சனி, ராகு உள்ளதால், கடந்த ஜென்மத்தில் கருக்கலைப்பு செய்த பாவம் தென்படுகிறது. ஒருமுறை திருவண்ணாமலை சென்று வழிபடவும். தூத்துக்குடி அருகிலுள்ள சேர்ந்தபூ மங்கலம் திருக்கோவில் சென்றுவரவும். பிறந்த குழந்தைகளுக்கு அவ்வப்போது உதவி செய்யுங்கள். வல்லநாடு அருகிலுள்ள "அகரம்' என்னும் ஊர் சென்று தோஷப் பரிகாரம் செய்யவும்.

Advertisment

aaa

இராமகிருஷ்ணன், திண்டுக்கல்.

எனது அக்காள் மகளைத் திருமணம் முடித்தேன். ஒரு மகள் உண்டு. மனைவி, மகள் ஜாதகம் இணைத்துள்ளேன். திருமணமானதிலிருந்து நிம்மதியில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு இடத்தில் இருக்கிறோம். சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து குடியிருக்கலாமா? தோஷம் இருந்தால் பரிகாரம் கூறவும்.

பிறந்ததேதி குறிப்பிடாததால் உங்கள் ஜாதகத்துக்கு விளமளிக்க இயலவில்லை. மனைவி அபிராமி 31-10-1980-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்தில், லக்னாதிபதி சந்திரனுடன் ராகு. எனவே, இவருக்கு எப்போதும் சற்று எதிர்மறைச் சிந்தனை இருக்கும். 3-ஆமிடத்தில் குரு. சுக்கிரன், சனி என மூன்று கிரகங்கள் கூட்டணி. 5-ஆமிட செவ்வாயை சனி பார்க்கிறார். மேலும் 3-ஆமிடத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நட்சத்திரம், ஒரே பாகையில் உள்ளன. இதன்மூலம் இவர் பூர்வஜென்மத்தில் கடும் வட்டி வாங்கி பிறரை சங்கடப்படுத்தியிருப்பார். இந்தப் பிறவியில் இவர் எப்போதும் தைரியக்குறைச்சலுடன் மன நிம்மதியுமின்றி இருப்பார். நடப்பு சூரிய தசை. சூரியன் நீசம். இதன்மூலம், இவர் தனது குடும்பத்தினரின் செயல்கள்மூலமே மன நோயாளியாக இருக்கிறார் என தெரிகிறது. 2023, ஜூலை வரை இவ்விதமே இருக்கும். இக்காலகட்டத்திற்குள் இவரது தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. திருச்சி- குணசீலம் கோவிலில் பிரார்த்தனை செய்யவும். குடும்பத்தினர் ஆதரவுடன் நடந்துகொள்ளுங்கள். மகள் ரட்ஷகா 8-12-2004-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். ராசியில் கேது; 7-ல் ராகு. நாகதோஷம் உள்ளது. சனி, 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், ஆயுள் பலமுள்ள ஜாதகம். 4-ஆமிடத்தையும் சனி பார்ப்பதால், இந்த பெண்ணின் தாயார் எப்போதும் சற்று மனக் கவலையுடன் இருப்பார். இந்த பெண்ணின் ஜாதகப்படி ஆசிரியர் வேலை பார்ப்பார். அம்சத்தில் குரு உச்சம். நடப்பு ராகு தசை, சந்திர புக்தி 2022, மே வரை. தாயார்நலனில் கவனம் தேவை. அடுத்து 2023, ஜூன் மாதத்திற்குப்பிறகு வரும் குரு தசை நல்லதும் கெட்டதும் கலந்து தரும். இந்த பெண் நன்கு கல்வியில் மேன்மைபெற ஹயக்ரீவரை வணங்கவும். தாய் நலம்பெற அருகிலுள்ள துர்க்கையை திங்கட்கிழமைதோறும் வணங்கவும்.

செல் : 94449 61845

bala311221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe