Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-5

* பா. மூர்த்தி, விழுப்புரம்.

குலம், கோத்திரம் என்பது யாது? ஒரு சாதிக்குரிய கோத்திரம் என்ன என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? என்னென்ன கோத்திரங்கள் உள்ளன?

Advertisment

இந்த அன்பர், இந்த காலகட்டத்தில் குலம், கோத்திரம் பற்றிக் கேட்டுள்ளார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். சில ஜாதி களில், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். கோத்திரம் என்பது சகோதர சம்பந்தம் எனக் கூறுவதால் சம்பந்தம் செய்யமாட்டார்கள். தற்போது ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த அவல நிலையில் நீங்கள் குலம், கோத்திரம் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

* ஜி. குமார், வல்லம்.

நான் 2004 முதல் "பாலஜோதிடம்' படிக்கிறேன். என் ஒரே மகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். தற் போது பி.ஜி. படிக்கிறாள். திருமணம் எப்போது செய்யலாம்? வரக்கூடிய மாப்பிள்ளை எப்படிபட்டவராக இருப்பார்? மகள் பேரில் வீடு வாங்கலாமா?

மகள் தேவி 8-3-2001-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 8-ல்

* பா. மூர்த்தி, விழுப்புரம்.

குலம், கோத்திரம் என்பது யாது? ஒரு சாதிக்குரிய கோத்திரம் என்ன என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? என்னென்ன கோத்திரங்கள் உள்ளன?

Advertisment

இந்த அன்பர், இந்த காலகட்டத்தில் குலம், கோத்திரம் பற்றிக் கேட்டுள்ளார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். சில ஜாதி களில், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். கோத்திரம் என்பது சகோதர சம்பந்தம் எனக் கூறுவதால் சம்பந்தம் செய்யமாட்டார்கள். தற்போது ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த அவல நிலையில் நீங்கள் குலம், கோத்திரம் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

* ஜி. குமார், வல்லம்.

நான் 2004 முதல் "பாலஜோதிடம்' படிக்கிறேன். என் ஒரே மகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். தற் போது பி.ஜி. படிக்கிறாள். திருமணம் எப்போது செய்யலாம்? வரக்கூடிய மாப்பிள்ளை எப்படிபட்டவராக இருப்பார்? மகள் பேரில் வீடு வாங்கலாமா?

மகள் தேவி 8-3-2001-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. அதே புதன் அம் சத்தில் உச்சம். சுக்கிரன் உச்சம், செவ்வாய் ஆட்சி, சனி நீசம். அம்சத்தில் சுக்கிரன், சூரியன், சந்திரன் உச்சம். இருப்பினும் ராசியில் நீச சனியும், 12-ல் மறைந்த குருவும், 8-ல் உள்ள லக்னாதிபதி புதனும் எந்த நல்ல விஷயத்தையும் மிகத் தாமதப்படுத்தி, பின் அருமையாக- அழகாகத் தருவர். நடப்பு சுக்கிர தசை 2025, ஜூலை வரை. இந்த தசை முடிவதற்குள் ஜாதகிக்கு படிப்பு முடிந்து, திருமணம் முடிந்து, வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுவார். சுக்கிர தசை, புதன் புக்திக்குள் திருமணம் நடந்து வேலையும் கிடைத்துவிடும். வீடு வாங்குவது அவ்வளவு ஏற்புடையதல்ல. இவர் பெயரில் மனை வேண்டுமானால் வாங்கலாம் சுக்கிரன், குரு பரிவர்த்தனையால், இவருக்கு வேறு பிரிவு சம்பந்த விருப்பத் திருமணம் அமையும். லக்ன தோஷம் இருப்பதால், திருப்பதி சென்று அவ்வப்போது வணங்கவேண்டும்.

Advertisment

qq

* தமிழன், செந்தலை.

எனக்குத் தொழில் இல்லை. என்ன தொழில் செய்யலாம்? திருமணம் எப்போது நடக்கும்? உடல்நிலை எப்போது சரியாகும்?

13-5-1973-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். ராசியில் செவ்வாய், சனி சம்பந்தம். 2, 11-ன் அதிபதி குரு நீசம்; மற்றும் இரு பாவர்களுக்கிடையே பாபகர்த்தாரி தோஷம் பெற்றுள்ளார். நீங்கள் திருமணம் எப்போது என்று கேட்டிருக்கிறீர்கள். எத்தனை யாவது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று கேள்வி இருந்திருந்தால் பதில் சொல்லியிருக்கலாம். அரசு ஒப்பந்த அடிப்படைத் தொழில்மூலம் நிறைய மறைமுக வருமானமும், மற்ற தொடர்புகளும் கிடைக்கும். வீடு கிடைக்கும். ஆனால் நிலைக்குமா என்று உறுதியாகச் சொல்ல இயலாது. 8-ல் மறைந்த சந்திரன் எப்போதும் மனக் குழப்பத்தையும், சளி உடல்நலத் தொந்தரவுகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பர். உண்மை பேச முயற்சிக்க வும். 2025, ஜூன் மாதத்திற்குப்பிறகு வரும் சனி தசை எதிர்பாராத நல்ல யோகங்களைத் தரும். நடப்பு குரு தசை, சந்திர புக்தி. அதன்பிறகு 2022, மார்ச்சில் வரும் செவ்வாய் புக்தியில் இடம் மாறுதலும், புது உறவும் தரும். மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாப்படி சுமங்கலி காளி கோவில் சென்று வணங்கவும்.

* கார்த்தி, வரகூர்.

அம்மா, வணக்கம். எனது மனைவி நடத்தை சரியில்லை. சொன்னால் கேட்பதில்லை. எப்போது திருந்துவாள்? எனக்கு கால் ஊனம். அதனால் உதாசீனப் படுத்துகிறாள். எதுவாக இருந்தாலும் உண்மையைக் கூறவும்.

நீங்கள் 25-10-1979-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். செவ்வாய், சந்திரன் பரிவர்த்தனை. இரு கிரகங்களும் நீசபங்கம். லக்னாதிபதி குரு, ராகு மற்றும் சனியுடன் உள்ளார். உங்களுக்கு அதீத யோசனை உண்டு. நடப்பு செவ்வாய் தசை, சனி புக்தி. இது 2022 ஆகஸ்ட் மாதம்வரை நடக்கும். அதில் நீங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலையுண்டு. மனைவி சூரியா 21-8-1986-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். நடப்பு புதன் தசை. புதன் 7, 10-க்குரியவர் 8-ல் இருந்து தசை நடத்துகிறார். எனவே, கணவர்மூலம் சற்று துன்பம் இருந்து கொண்டே இருக்கும். புதன் தசையில் சுக்கிர புக்தி. சுக்கிரன் நீசம். தசாநாதர் புதன் அம்சத்தில் நீசம். இரண்டு கிரகங்களின் நகர்வில் இந்த ஜாதகி அகப்பட்டுக்கொண்டுள்ளார். ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள், ஒன்று இவர் கணவரைவிட்டுப் பிரிந்துவிட வேண்டும். அல்லது கணவரை வேறிடம் அனுப்பிவிட வேண்டும். இதுதான் உங்கள் இருவருக்கும் நல்லதாகும். துர்க்கையை தினமும் வணங்கவும்.

* பவானி சேகர், நடுக்காவேரி.

எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை உண்டா? சொந்த வீடு அமையுமா?

18-6-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. 2-ஆமிடத்தில் சனி உச்ச வக்ரம். அதனால் நீசம். அவர் 8-ஆமிட மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால், திருமணம் தாமதமாகிறது. நடப்பு சனி தசை சந்திர புக்தி 2023 ஜூன் வரை. எப்போதும் சனி, சந்திர சந்திப்பின்போது அதிக கவனமாக இருக்கவேண்டும். இந்த காலத்தில் திருமணம் தடைப்பட்ட பெண்ணுடன் உங்கள் கல்யாணம் நடக்கும். அரசு சார்ந்த பாதுகாப்புத் துறையில் வேலை கிடைக்கும். வீடு அமைவது சற்று சிரமம்தான். நீங்கள் தினத்துக்கு ஒரு காதல் செய்திருப்பீர்கள். அத்தனையும் தோல்வியில் முடிந்திருக்கும். 10-ஆமிடத்தில் நான்கு கிரகச் சேர்க்கை. கிரக யுக்த ஜாதகம். எந்த விஷயமும் எளிதாகக் கைகூடாது. உங்களுக்கு சகடயோகம் (குரு, சந்திரன் 6/8-ல்) இருப்பதால், கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயம் சென்று வணங்கவும். வாழ்வுத் தடைகள் நீங்கும்.

bala031221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe