ஒரு தாய், சென்னை.

ன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எப்போது நடை பெறும்?

Advertisment

இளைய மகள் ஜான்சி 5-1-1988-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னத் துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாகதோஷ ஜாதகம். இவருடைய 7-ஆமிடம், 2-ஆமிடம் இவற்றை சனி பார்வையிடுவதால், தாமதத் திருமணம். இவருக்கு விருப்பமுடைய வரனுடன் திருமணம் நடக்கும். இவருக்கு முதல் திருமணமாகவும் அவருக்கு இரண்டாம் திருமணமாக வும் அமையும். அவர் விவாகரத்து பெற்றவராக இருப்பார். நடப்பு கேது தசை சனி புக்தி 2022, பிப்ரவரி வரை. அதற்குள் திருமணம் நடந்து விடும். ஒரு வயோதிக ஏழைத் தம்பதிகளுக்கு புது ஆடைகளை தானம் செய்யவும். மூத்த மகள் அரங்க. வரலட்சுமி 31-5-1984-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். சனி, செவ்வாய் 12-ல் மறைவு. இதில் சனி உச்சம். மேலும் ராசியில் சந்திரன் உச்சம். 7-ஆமிடத்தில் ராகு, லக்னத்தில் கேது. இந்த ஜாதகருக்கு ஏற்கெனவே ஒரு விருப்பத் திருமணம் ஏற்பட்டு, அது கடைசி நேரத்தில் கைகூடாமல் போயிருக்கும். நடப்பு குரு தசை. இதில் ராகு புக்தி 2023, செப்டம்பர் வரை. அதற்குள் இவர்கள் வகுப்பிலேயே வேறு பிரிவு வரன் அமைந்து திருமணம் நடக்கும். வரும் சனி தசையில் இவர் வெளிநாடு செல்லும் யோகமுண்டு. இவர் தனது சொந்த ஜாதியில் திருமணம் செய்யவேண்டுமென நினைத்தால், அது நடவாத விஷயம். பிறகு திருமணமே ஆகாமல் போகும் வாய்ப்புண்டு.

ப் விஜயா, மதுரை.

என் மகன் பிரபாகரனுக்கு 2017-ஆம் வருடம் திருமணமாகி அடுத்த வருடமே விவாகரத்தாகி விட்டது. தற்சமயம் சரியான வேலையும் இல்லை. மறுமணம் நடக்குமா? கடைசிவரை மனைவியுடன் சேர்ந்து வாழ்வாரா? பல கோவில்களில் பரிகாரம் செய்து விட்டோம்.

மகன் பிரபாகரன் 30-3-1985-ல் பிறந் தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். இவருடைய ஜாதகம் மிகவும் கோளாறுகளும், குழப்பமும் நிறைந்த ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய், ராகு, சுக்கிரனுடன் சேர்ந்துள்ளனர். அவர்களை சனி, கேது பார்க்கிறார் கள். சனி உச்ச மாகி வக்ரம்; எனவே நீசம். 5-ஆம் அதிபதி யும் நீசம். இவரு டைய ஜாதகப் படி, வாழ்வுநிலை எதிர் மறைத் தன்மை கொண்ட தாக அமையும். எனவே எந்தப் பெண்ணாலும் இவருடன் வாழவே முடியாது. நடப்பு புதன் தசை. இதில் 2023-க்குள் மறுமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதுவும் நிலைத்திருக்குமென்று தோன்றவில்லை. அடுத்துவரும் கேது தசை, இவரை வீட்டை விட்டு வெளியே அலைய வைத்துவிடும். முன்னோர்கள் செய்த பாவமும், பூர்வ புண்ணிய குற்றமும் நிறைந்த ஜாதகம். 2023-க்குள் ஜாதகரின் தாயார் உடல்நிலையி லும் கவனம் தேவை. எல்லாம் வல்ல இறைவனை வேண்டுங்கள். அவர்தான் நல்வழி காட்ட வேண்டும்.

Advertisment

aa

ப் எம். இந்துராணி, தூத்துக்குடி.

என் கணவர் தனது அம்மா வீட்டுடன் தோப்புகள் வாங்கிப் போட்டு, மாதத்திற்கு பத்து நாள் அங்கு போய் விடுகிறார். பிள்ளைகளையும் அழைத் துப்போய் காசு கொடுத்துக் கெடுக்கி றார். நான் தையல் தொழில் செய்கிறேன். என்னை வேலையும் பார்க்கவேண்டாம் என்கிறார். இரண்டு வீடு, மூன்று தோப்பு, மூன்று வீட்டு மனை அனைத் தும் அவர் பெயரிலேயே உள்ளது. இறுதிக் காலத்தில் எனக்கு யார் ஆதரவு? உச்சனும் உச்சனும் பார்த்தால் பிச்சை எடுப்பார்கள் என கூறுகிறார் களே- அது என் ஜாதகத்தில் உண்டா?

இந்துராணி 5-2-1979-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. லக்னத்துக்கு 2-ஆமிடத்தில் உச்ச குரு அமர்ந்து, 8-ஆமிட உச்ச செவ்வாயைப் பார்க்கிறார். உச்சனை உச்சன் பார்க்கும் போது, அது உருப்படாத யோகமாகி விடுகிறது. மேலும் சனி, ராகுவுடன் சேர்ந்து கேது பார்வையைப் பெறுகிறார். லக்னாதி பதி புதன் 8-ல் மறைவு. மேலும் சூரியனும் செவ்வாயும் ஒரே நட்சத்திரக்காலில். 2-ஆம் அதிபதி சந்திரன் விரய ஸ்தானத் தில் உச்சம். உங்கள் ஜாதகம் எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்காத ஜாதகம். எதிர்காலத்தில் உங்களைப் பிள்ளைகள் பார்த் துக்கொள்வார்கள். கணவரின் அனுசரணை கிடைக்குமென்று கனவிலும் நினைக்க வேண்டாம். தையல் தொழிலில் பழமை யானதை மறுபடியும் மீட்டுக்கொண்டு வரவும். உமது கைகளே உங்களுக்கு உதவி. நடப்பு குரு தசை. அதில் புதன் புக்தி 2022, டிசம்பர் வரை. அந்த காலகட்டத்தில், கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், தன்னிச்சையாய் உங்களைத் தேடி வருவார். வேறுவழி அவருக்குக் கிடையாது. அதை ஏற்றுக்கொண்டு அவரை கவனித்துக் கொள்ள வும். தினமும் லட்சுமி நரசிம்மரை வணங்க வும். அவர் மனதைரியத்தைக் கொடுத்து, வாழ்வை மேன்மையடையச் செய்வார். இந்துராணியின் கணவர் மாதவன் 14-2-1974-ல் பிறந்தவர். மிதுன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னத் தில் கேது, 7-ல் ராகு. ஆனால் இவர் மனைவிக்கு சர்ப்ப தோஷம் இல்லை. இருவரும் ஒரே லக்னமாக இருப்பதால் பிரியாமல் இருக்கிறார்கள். ஆனால் மனப் பிரிவுடன் வாழ்கிறார்கள். நடப்பு சுக்கிர தசை. மிதுன லக்ன 5-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் மறைவு. எனவே இந்த சுக்கிர தசையில் வேண்டாத பழக்கங்களுக்கு நிறைய செலவு செய்திருப்பார். அதனால் மனைவியுடன் இணக்கமாக இருக்கவில்லை. அடுத்து 2022, பிப்ரவரியில் சூரிய தசை ஆரம்பம். சூரியன் நோய் ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம். எனவே தன்னிச்சையாக மனைவியைத் தேடிச் செல்வார். அதுசரி; நோய்த்தாக்கம் ஏற்பட்டபிறகுதான் நிறைய ஆண்களுக்கு மனைவியின் ஞாபகமே வருகிறது. இவரு டைய வாரிசுகளின் ஆதரவும் இவருக்குக் கிடைப்பது சந்தேகம்தான்.

ப் ராஜ, கணபதி. சென்னை-5.

Advertisment

என். ஜாதகத்தில் அதிர்ஷ்ட யோகங்கள் உள்ளனவா? அரசியலில் நல்ல நிலைக்கு வருவேனா?

ராஜகணபதி 24-8-1963. சிம்ம லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதி பதி சூரியன் ஆட்சி. 11, 2-ஆம் அதிபதி புதன் உச்சம். பூர்வ புண்ணியாதிபதி குரு 8-ல் இருப்பினும் ஆட்சி. சனி 6-ல் ஆட்சி மற்றும் வக்ரம். உங்கள் 9-ஆம் அதிபதி செவ்வாய் மற்றும் 5-ஆம் அதிபதி குரு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். இதுவொரு நல்யோக அமைப்பு. அரசியலில் மேன்மை அடைவேனா என்று கேட்டிருக்கிறீர்கள். அய்யா! நீங்கள் அரசியலில் மிகப்பெரிய பதவிக்கு வரமுடியாவிடில், வேறு எவர் வருவார்? 11-ல் ராகு, 11-ஆம் அதிபதி உச்சம். அவரை குரு பார்க்கிறார். நீங்கள்தான் முதல்தர அரசியல் பதவி வகிக்கக் கூடியவர். மேலும் நடப்பு புதன் தசை. அவர் 2-ல் உச்சம். எனவே கண்டிப்பாக இந்த புதன் தசையில், அரசியலில் உயர் பதவி வகிப்பது உறுதி. ஒரு அரசியல்வாதிக்கு வேண்டிய கிரக அமைப்புகள் இந்த ஜாதகத்தில் தென்படு கிறது. அரசியல்வாதிகள் நன்றாகப் பேச வேண்டும். அதற்கு 2-ஆம் அதிபதி உச்சம். மனசாட்சி, ஒழுங்கு போன்றவை அதிகம் இருக்கக்கூடாது . 5-ல் கேது; ராகு பார்வை. 5-ஆம் அதிபதி 8-ல் மறைவு. சரி; இது மிகச் சரியாக வருகிறது. சேவை ஸ்தானாதிபதி சனி 6-ல் வக்ரம். எனவே சேவை என்பது அரசியல் முன்னேற்றத்துக்கு மட்டுமே செய்வார். 11-ல் அமர்ந்த ராகு, ஜாதகருக்கு எதிர்மறை எண்ணங்களை அதிகமாக்கி, ஒரு அரசு மந்திரி ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். அரசியலில் ஈடுபட்டோர் நல்ல பதவிகள் பெற, காஞ்சிபுரம் அருகே, உத்திரமேரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத் திற்குச் சென்று வணங்கவும். அங்கு தட்சிணா மூர்த்தி சிம்ம குருவாகக் காட்சியளிக்கிறார். அவரை வணங்க அரசியல் மேன்மை கிடைக்கும்.

செல்: 94449 61845