Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-35

* அன்பு, மேலூர்.

எனது வேலை, பணவரவு பற்றிக் கூறவும்.

23-12-1984-ல் பிறந்தவர். கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் 6-ஆமதிபதி சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை. மேலும் 8-ஆமதிபதி செவ்வாய் 6-ல் மறைவு. இதுவொரு யோகத்தைக் குறிக்கும். வேலையில் ஏற்படும் தடங்கல்கள் அதுவாகவே நீங்கிவிடும். எனவே சிறு சங்கடம் வந்தாலும், அதனை சமாளித்துத் தொடருங்கள். உங்களுக்குப் பண வரவு, "வரும்; ஆனா வராது' என்ற நிலையில் மெதுவாக வரும். நடப்பு செவ்வாய் தசை ராகு புக்தி. வேலை மாறுதல் உண்டு. 2024 வரை ராகு புக்தி; கவனம்தேவை. நிரந்தர வேலை வேண்டுபவர்கள் முசிறி- திருத்தலையூர் சென்று வணங்கவும்.

* கணேசன், ராமாவரம், சென்னை.

Advertisment

வாழ்கை முழுவதும் சிரமங்களையே சந்தித்து வருகிறேன். இதற்கொரு விடிவு காலம் இல்லையா?

1-7-1970-ல் பிறந்தவர். மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி குரு 8-ல் மறைவு. அவரே 10-ஆம் அதிபதியும். மேலும் சனி நீசம்; குரு பார்வையால் நீசபங்கம். ஒரு அடி முன்னேறினால், பல படிகள் பின்னோக்கி வருவ

* அன்பு, மேலூர்.

எனது வேலை, பணவரவு பற்றிக் கூறவும்.

23-12-1984-ல் பிறந்தவர். கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் 6-ஆமதிபதி சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை. மேலும் 8-ஆமதிபதி செவ்வாய் 6-ல் மறைவு. இதுவொரு யோகத்தைக் குறிக்கும். வேலையில் ஏற்படும் தடங்கல்கள் அதுவாகவே நீங்கிவிடும். எனவே சிறு சங்கடம் வந்தாலும், அதனை சமாளித்துத் தொடருங்கள். உங்களுக்குப் பண வரவு, "வரும்; ஆனா வராது' என்ற நிலையில் மெதுவாக வரும். நடப்பு செவ்வாய் தசை ராகு புக்தி. வேலை மாறுதல் உண்டு. 2024 வரை ராகு புக்தி; கவனம்தேவை. நிரந்தர வேலை வேண்டுபவர்கள் முசிறி- திருத்தலையூர் சென்று வணங்கவும்.

* கணேசன், ராமாவரம், சென்னை.

Advertisment

வாழ்கை முழுவதும் சிரமங்களையே சந்தித்து வருகிறேன். இதற்கொரு விடிவு காலம் இல்லையா?

1-7-1970-ல் பிறந்தவர். மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி குரு 8-ல் மறைவு. அவரே 10-ஆம் அதிபதியும். மேலும் சனி நீசம்; குரு பார்வையால் நீசபங்கம். ஒரு அடி முன்னேறினால், பல படிகள் பின்னோக்கி வருவதுபோல் உங்கள் வாழ்வு நிலை இருக்கும். நடப்பு சனி தசை சனி புக்தி. 2023, ஜூலை மாதத்திற்குப்பிறகு வரும் புதன் புக்தி சுமாரான வாழ்வு தரும். சனி தசை நடப்பதால் திருநள்ளாறு சென்று வணங்கவும்.

Q&A

Advertisment

* கோவிந்தன், சேலம்.

நான் வெளிநாடு செல்லமுடியுமா?

11-11-1989-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னத்திலுள்ள நீச சூரியன், குருவின் பார்வையால் நீசபங்கமாகி றார். நடப்பு சுக்கிர தசை. இது 2023, ஏப்ரல் மாதம் முடியும். அடுத்துவரும் சூரிய தசை உங்களை வெளிநாடு அழைத்துச்செல்லும். முதல் முயற்சி தோல்வியடைந்து மறு முயற்சி யில் வெளிநாடு யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோர், சிங்கம்புனரி பிரான்மலை வடுக பைரவரை வணங்கவும்.

* வேங்கடகிருஷ்ணன், செஞ்சி.

நீதிமன்ற வழக்கு எப்போது தீரும்? அதிர்ஷ்டம் எப்போது கிடைக்கும்?

கன்னி லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். லக்னாதிபதி புதன், அதிர்ஷ்ட அதிபதி சுக்கிரன் ஆகியோர் 6-ஆமிடத்தில் மறைவு. குரு உச்சமாகி வக்ரம்; எனவே நீசம். உங்களுக்கு அதிர்ஷ் டம் உங்கள் குழந்தைகள்மூலம் கிடைக் கும். 11-ஆமதிபதி சந்திரன் 5-ஆம் வீட்டில் அமர்ந்து தன் வீட்டையே பார்க்கிறார். நடப்பு குரு தசையில் கேது புக்தி. இது 2023, மார்ச்வரை உள்ளது. அதற்குள் கோர்ட் தாவாக்கள் முடிவுக்கு வந்து விடும். இவ்விதம் நீதிமன்றம், வழக்கு என்று அலைபவர்கள், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள வராஹி அம்மன் சந்நிதியில் வழிபட நன்மைகள் பெருகும்.

* கோமதி, காரைக்குடி.

உடல்நலம் மிகவும் பாடாய்ப்படுத்து கிறது. சுத்தமாக நடக்கமுடியவில்லை. வீட்டில் ஒரு வேலையும் செய்ய இயலாமல், பிறர் துணையுடன் உள்ளேன். என் துன்பம் எப்போது தீரும்?

1-10-1966-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். உங்கள் ஜாதகத் தில் லக்னாதிபதி புதன் உச்சம். குரு உச்சம். செவ்வாய் நீசபங்கம். நடப்பு ராகு தசை. அவர் எட்டாம் இடத்திலிருந்து தசை நடத்துகிறார். எந்த மனிதருக்குமே 8-ஆமிட ராகு தசை மிகவும் பாடாய்ப்படுத்தும். அதுவும் இப்போது ராகு தசையில் குரு புக்தி. குரு வானவர் 6-ஆமதிபதி சனி சாரம். அதனால் நோயினால் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள். எனினும் குரு தற்போது மீன ராசியில் நகர்வ தால், ஓரளவு குணம் கிடைக்க வாய்ப்புண்டு. பின் நோயின் தாக்கமும் குறையும். குரு உங்கள் கன்னி லக்னத்துக்கு பாதகாதிபதி. அதனால் மெதுவான முன்னேற்றம் இருக்கும். இவ்விதம் நடக்கமுடியாமல் முடங்கி யுள்ளவர்களின் குடும்பத்தினர் மயிலாடுதுறை அருகிலுள்ள திரு இந்தளூர் சென்று வணங்க வும்.

* சந்திரசேகர்.

அடிக்கடி மனக்குழப்பம் உண்டாகி றது. இது எதனால்? குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறேன். எப்போது ஒன்றுசேர்வோம்?

31-8-1977-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன், சனியுடன் சேர்க்கை. உங்கள் ஜாதகத் தில் செவ்வாயும் சனியும் ராகுவுடன் சம்பந் தம். சந்திரன் கேதுவுடன் ராகு பார்வையில். எனவே உங்கள் சிந்தனைகள் ஒரு நிலையில் இருக்காது. 2023, நவம்பரில் சுக்கிர தசை ஆரம்பம். அப்போது உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். சுக்கிர தசையில் மனைவி, மகனுடன் சேரும் பாக்கியம் ஏற்படும். மண வாழ்க்கை சிறப்படைய, திருமருகல் எனும் தலத்திற்குச் சென்று வணங்கவும்.

* கிரிஜாதேவி.

கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். மீண் டும் இணைந்து வாழும் நிலை ஏற்படுமா?

விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. உங்கள் லக்னாதிபதி செவ்வாய் 8-ல் சூரியன், ராகு வுடன் உள்ளார். 5-ஆமதிபதி குரு லக்னத்தில். நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தையுடன் வாழவே விரும்புவீர்கள். நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி. 2024, மார்ச் மாதத்திற்குள் ஏதோவொரு உடல்நலக்குறைவு காரணத் தால் கணவருடன் கட்டாயம் சேரும் நிர்பந்தம் ஏற்படும்; இடமாற்றமும் உண்டு. இவ்விதம் கணவன்- மனைவி பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் ஒன்றுசேர திருநெல் வேலி மாவட்டம், புளியங்குடிக்கு அருகேயுள்ள வாசுதேவ நல்லூர் சென்று வணங்கவும்.

* ஒரு வாசகர்.

இந்த ஜாதகர் பெற்றோருடன் சேர்வாரா?

சாய் அபிஷேக் 24-1-2007-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இந்த சிறுவன் ஜாதகப்படி பெற்றோருடன் இணக்கம் இராது. எனினும் நடப்பு கேது தசையில் இடமாற்றம் உண்டு. 2026, ஜூன் மாதம் வரும் சுக்கிர தசை இவனை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லும். 2023, ஜூலை மாதம் பெற்றோருடன் சேர்வான். விநாயகரை வழிபடவும்

செல்: 94449 61845

bala010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe