ப் ஒரு வாசகி, அரியலூர்.

எனது மகள் கீதா 25-8-1973 அன்று பிறந்தவர். தற்போது வீட்டையும், பிள்ளை களையும் கவனிக்கமுடியாமல், மிகுந்த பயத்துடன் இருக்கிறார். கணவரும், குழந் தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள் ளனர். இதற்குத் தீர்வு எப்போது கிட்டும்?

கீதா மேஷ லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். ராசிக் கட்டத்தில் குரு, சுக்கிரன் நீசம். அம்சத்தில் செவ்வாய் சந்திரன் நீசம். நடப்பு சுக்கிர தசை. 6-ஆமிடத்தில் இருந்து நீச சுக்கிரன் தசை நடத்துவதால், இவருக்கு மனக்குழப்பம் உண்டாகி இருக்கி றது. யாரைப் பார்த்தாலும் பயமும் வெறுப்பும் வரும். கொஞ்சம் இடமாற்றம் செய்தால் நல்லது. சுக்கிரன் நீசம் பெற்று அதன் தசை நடப்பவர்கள் ஸ்ரீரங்கம் சென்று பெருமாளையும், தாயாரையும், ஸ்ரீமத் ராமனுஜரையும் வணங்கிவரவேண்டும். மேலும், சற்று படபடப்புடன் வாழ்க்கை நடத்துபவர்கள் கோவை அவினாசி திருமுருகன் பூண்டி தலத்திற்குச் சென்று வணங்குவது அவசியம். இவருக்கு சுக்கிர தசையில் குரு புக்தி நடப்பு. இடம்மாற குணம் கிடைக்கும்.

ப் கோபால், மதுரை.

Advertisment

வயது கூடிக்கொண்டே இருக்கிறது. எனக்குத் திருமணமாகுமா?

29-3-1979-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை. கடுமை யான செவ்வாய் தோஷம். உங்களுக்கு இளவயதில் திருமணமாகியிருந் தால் மனைவி இழப்பு ஏற்பட்டிருக்கும். 6-ஆம் வீட்டிலுள்ள புதன், கேது சேர்க்கை ஒரு காதல் தோல்வி யைக் கொடுத்தி ருக்கும். நடப்பு செவ்வாய் தசை. இதில் 2022, ஜூலை மாதம் குரு புக்தி ஆரம்பம். அப்போது உங்களைப்போலவே உள்ள ஒரு பெண் அமைவார். ஒரு செவ்வாய்க்கிழமை, திருப்பரங் குன்றம் சென்று வழிபடவும்.

ப் எஸ். ராமன், சேலம்.

Advertisment

எனக்குத் திருமணமாகி, தற்சமயம் நானும் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எதிர்காலம் எவ்வாறு அமையும்?

18-10-1994-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத் துக்கு 12-ஆமிடம் எனும் விரய ஸ்தானத் தில் குரு, புதன், சுக்கிரன், சூரியன், ராகு சேர்க்கை. பொதுவாக இதனை சந்நியாசி யோக ஜாதகம் என்பர். புதன், கேது பார்வை யால் ஏதோவொரு காதல் கலப்பு மணம் நடந்துள்ளது. லக்னாதிபதி செவ்வாய் நீசமாக உள்ளது. நடப்பு சுக்கிர தசை. இதில் காதல் கலப்பு மணம் நடந்து பிரித்தும் வைத்திருக்கிறது. கூடியமட்டும் தம்பதிகள் இணைந்து வாழ முயற்சிசெய்யவும். சுக்கிர தசை சூரிய புக்தியில், 2023, ஜனவரியில் மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ இயலும். அவ்வாறு முடியாவிட்டால் நீங்கள் ஏதாவ தொரு மடத்தில் சேர்ந்து துறவியாகி விடக்கூடும்; கவனம்தேவை. இவ்விதம் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர, கும்பகோணம் அருகிலுள்ள திருச்சத்தி முற்றம் சென்று வழிபடவும்.

ப் ப்ரியா, சென்னை.

இவளது கல்வியைப் பற்றிக் கூறவும்.

19-11-2006-ல் பிறந்தவர். கும்ப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. ஒருவரின் கல்வி மேன்மையை அறிய அவரின் 4 மற்றும் 9-ஆமிடம் கவனிக்கப்படவேண்டும். மேலும் அறிவின் தன்மையை அறிய 5-ஆமிடத்தை அணுகுதல் அவசியம். இந்த கும்ப லக்னப் பெண்ணுக்கு, 4, 9-ஆமதிபதி சுக்கிரன் சனி சாரம் பெற்று 10-ல் உள்ளார். 5-ஆமதிபதி புதன், 6-ஆமதிபதி சந்திரனுடன் 9-ல் உள்ளார். எனவே, இந்தப் பெண் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்துவிடுவாள். ஆனால் பரிட்சையில் பதில் எழுதும்போது மறந்துவிடுவாள். அது தான் இந்த ஜாதகத்திலுள்ள குறையா கும். நடப்பு குரு தசையில், 2022, ஜூலை மாதத்திலிருந்து சுக்கிர புக்தி ஆரம்பம். இதிலிருந்து கல்வி மேன்மையடையும். தொழில் சார்ந்த மேற்கல்வி உண்டு. இவ்விதம் படிப்பில் மறதியுள்ள குழந்தைகளுக்கு சென்னை கோயம்பேட்டிலுள்ள ஞானசரஸ்வதி ஆலயத்தில், வளர் பிறை புனர்பூசம் அன்று இவர்களின் பெயரில் அர்ச்சனை செய்ய, கல்வி மேன்மையடையும்.

q

ப் வேலாயுதம், பண்ருட்டி.

எனக்கு நல்ல வேலை எப்போது அமையும்?

25-11-1990-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். நடப்பு குரு தசை. இதில் வரும் ஜூலை மாதம் நல்ல வேலை கிடைக்கும். இவ்விதம் நல்ல வேலை கிடைக்க முயற்சி செய்பவர்கள், சிவன் கோவிலில் நடக்கும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு ஆறு நெய்தீபமேற்றி வழிபடுவது நல்லது.

ப் ரமேஷ், வேலூர்.

எங்களுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. வாரிசு எப்போது கிடைக்கும்? தோஷம் ஏதும் உள்ளதா?

ரமேஷ் 14-5-1980-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். உங்கள் புத்திர பாக்கியத்தைக் குறிக்கும் 5-ஆமிடத்தில் செவ்வாய், குரு, சனி, ராகு என நான்கு கிரகங்கள் இடம்பெற்று கிரக யுத்த தோஷமுள்ளது. எனினும் 5-ஆமதிபதி சூரியன் உச்சம். இவர் லக்னாதிபதி செவ்வாயு டன் பரிவர்த்தனை. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. மனைவி அனிதா 16-4-1988-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், இவருக்கும் 5-ஆமிடத்தில் சந்திரன், குரு, சூரியன் என கிரகக்கூட்டு உள்ளது. இவருக்கு 5-ஆமதிபதி செவ்வாய் உச்சம். 5-ஆமிடத்தில் சூரியன் உச்சம். நடப்பு சந்திர தசை சனி புக்தி. இருவர் ஜாதகப்படியும் மருத்துவ உதவியுடன் 2024-ஆம் வருடத்துக்குள் புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம்பெற விரும்புவோர். பெங்களுரூ- மைசூர் சாலையிலுள்ள தொட்ட மளூர் சென்று, அங்குள்ள கிருஷ்ணனை வணங்கவேண்டும்.

ப் லட்சுமி ப்ரியா, கோயம்புத்தூர்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெறுவேனா?

29-10-1996-ல் பிறந்தவர். மகர லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 5-ஆமிடத் தில் சந்திரன் உச்சம். புதன், சுக்கிரன் பரிவர்த் தனை தர்மகர்மாதிபதி யோகம் தருகிறது. நடப்பு ராகு தசை. இதில் 2024, செப்டம்பரில், உங்களுக்கு வெளிநாடு சம்பந்தமான மிக உயர்கல்வியும், வேலையும் கிடைக்கும். ஆனால் முதல் முயற்சியில் கிடைக்காது. பல முயற்சிகளுக்குப்பின்தான் கிடைக்கும். கல்வி மேன்மைபெற திருவஹிந்திபுரம் ஹயக்கிரீவர் வழிபாடு நன்று.

ப் நிர்மல் குமரன், புதுச்சேரி.

எனக்கு அரசுப் பணி கிடைக்குமா?

11-7-1981-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். உங்களின் 6-ஆமதிபதி செவ்வாய் சூரியனுடன் மற்றும் லக்னாதிபதி புதனுடன் உள்ளார். எனவே அரசுப் பணிக்கு வாய்ப்புள்ளது. கோட்சார குரு மீனத்தைவிட்டு விலகுவதற்குள் அரசுப் பணி அமையும் வாய்ப்புள்ளது.

செல்: 94449 61845