Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-33

ப் ஆர். லதா, அரியலூர்.

என் மகள் கௌரவ விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றுகிறாள். குறைந்த சம்பளம். இரண்டு குழந்தைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ். படிக்கும் யோகமுண்டா? வெளிநாட்டு வாய்ப்பு அமையுமா?

Advertisment

ஆர். ராஜலட்சுமி 19-11-1989-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய்க்கு குரு பார்வை கிடைக்கிறது. ராசியில் கேது; 7-ல் ராகு. சற்று குழம்பிக்கொள்வார். நடப்பு சுக்கிர தசை குரு புக்தி. அடுத்துவரும் சனி புக்தி 2025, ஆகஸ்ட்வரை இருக்கும். அதில் நிறைய மாறுதல் நடக்கும். இவர் உயர் கல்வி படிக்க வாய்ப்புண்டு. வெளிநாட்டு அனுகூலமும் அமையும். சுக்கிர தசை புதன் புக்தி எதிர்பாராத பெரிய நன்மையைத் தரும். சுக்கிர தசை நல்ல நன்மைகள் தர, திருத்தணி முருகரை வழிபடவும்.

ப் ஆர். கெஜபதி, வடபழனி.

என் உடல்நலம், ஆயுள் பற்றிக் கூறவும்.

19-9-1953-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். ராசியில் புதன், சனி உச்சம். சனி உச்ச வர்க்கோத்தமம். மேலும் சனிக்கு குரு பார்வை உள்ளது. உங்களுக்கு சனி 8-ஆம் அதிபதி. எனவே ஆயுள் தீர்க்க ஜாதகம். நடப்பு சனி தசையில் ராகு புக்தி. இப்போது காது மற்றும் அஜீ

ப் ஆர். லதா, அரியலூர்.

என் மகள் கௌரவ விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றுகிறாள். குறைந்த சம்பளம். இரண்டு குழந்தைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ். படிக்கும் யோகமுண்டா? வெளிநாட்டு வாய்ப்பு அமையுமா?

Advertisment

ஆர். ராஜலட்சுமி 19-11-1989-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய்க்கு குரு பார்வை கிடைக்கிறது. ராசியில் கேது; 7-ல் ராகு. சற்று குழம்பிக்கொள்வார். நடப்பு சுக்கிர தசை குரு புக்தி. அடுத்துவரும் சனி புக்தி 2025, ஆகஸ்ட்வரை இருக்கும். அதில் நிறைய மாறுதல் நடக்கும். இவர் உயர் கல்வி படிக்க வாய்ப்புண்டு. வெளிநாட்டு அனுகூலமும் அமையும். சுக்கிர தசை புதன் புக்தி எதிர்பாராத பெரிய நன்மையைத் தரும். சுக்கிர தசை நல்ல நன்மைகள் தர, திருத்தணி முருகரை வழிபடவும்.

ப் ஆர். கெஜபதி, வடபழனி.

என் உடல்நலம், ஆயுள் பற்றிக் கூறவும்.

19-9-1953-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். ராசியில் புதன், சனி உச்சம். சனி உச்ச வர்க்கோத்தமம். மேலும் சனிக்கு குரு பார்வை உள்ளது. உங்களுக்கு சனி 8-ஆம் அதிபதி. எனவே ஆயுள் தீர்க்க ஜாதகம். நடப்பு சனி தசையில் ராகு புக்தி. இப்போது காது மற்றும் அஜீரணப் பிரச்சினை இருக்கும். அடுத்து வரும் குரு புக்தியில் சற்று பேச்சுக் குளறுபடி ஏற்படும். 2027-க்குப் பிறகு வரும் புதன் தசையில் கவனம் தேவை. நீண்ட ஆயுள்பெற விரும்புவோர் திருச்சி, திருப்பைஞ்ஞீலி க்ஷேத்ரம் சென்று வணங்குவது நல்லது.

ப் உமா, பண்ருட்டி.

ஒரு வருடமாக மூட்டுவலி, தசை வலி உள்ளது. சிகிச்சை எதிர்விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மனை உள்ளது. வீடு கட்ட இயலவில்லை. இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிட்டும்?

Advertisment

23-11-1963-ல் பிறந்த வர். விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்தில் நான்கு கிரகக் கூட்டணி உள்ளது. நடப்பு சனி தசை மற்றும் ஏழரைச்சனி. இதில் ராகு புக்தி 2022, நவம்பர்வரை. எப்போதுமே ராகு தசையில் வரும் நோய் களுக்கு சரியான மருந்து கிடைப்பது அரிது. எனவே ராகு புக்தி முடியுமட்டும் துயரத்தைத் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்துவரும் குரு புக்தி உங்கள் நோய்தீர வழிகாட்டும். மேலும் மனையில் வீடும் கட்ட இயலும். அடுத்துவரும் புதன் தசையைக் கண்டு அஞ்சவேண்டாம். குரு பார்வை உள்ளதால் பாதுகாப்பாக இருக்கலாம். மூட்டுவலி உள்ளவர்கள் திருச்சி, இடையாற்று மங்கலம் சென்று வணங்கவும். பூமி, மனை சம்பந்தமான முன்னேற்றத்திற்கு, புதுக்கோட்டை அருகே செவலூர் சென்று வணங்கவும்.

qq

ப் என். கந்தசாமி, கரூர்.

கடந்த இரண்டு வருடங்களாக வயிற்றுவலி உள்ளது. பலவித மருத்துவப் பரிசோதனைகளையும் செய்துவிட்டேன். நார்மலாக உள்ளது. ஆனால் வலி தீரவில்லை. இந்த இனம்புரியாத வலி எப்போது குணமாகும்?

10-12-1950-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 2-ல் கேது, சனி. 8-ல் ராகு. 6-ஆமிடத்தில் செவ்வாய் உச்ச வர்க்கோத்தமம். காரணம் தெரியாத தீராத வயிற்று வலியென்று எழுதியிருக்கிறீர்கள். இதற்கு இரண்டு ஜோதிடக் காரணங்கள் உண்டு. நடப்பு குரு தசை. உங்கள் வயிற்றைக் குறிக்கும் 5-ஆமதிபதியாக உள்ளார். இந்த குரு உச்ச செவ்வாய் மற்றும் 8-ஆமிட ராகுவுக்கிடையே அகப்பட்டு பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். எனவே குருவால் ஒழுங்காக வேலை செய்யமுடியாமல், வயிற்றுவலி வந்துள்ளது. இன்னொரு ஜோதிடக் காரணம் சிம்ம லக்ன பாதகாதிபதி செவ்வாய் 6-ஆமிடத்தில் உச்சம். எனவே பிறந்த வீட்டுக் குடும்பத்தினரால் செய்வினைக்குற்றத் துக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறீர்கள். இதில் நீங்கள் கவனிக்கத்தக்கது- பாத காதிபதியும் லக்னாதிபதி சூரிய சாரம்; 6-ஆமதிபதியும் சூரிய சாரம். இதனால் நோயின் பிடியில் அகப் பட்டுக் கொண்டீர்கள். குரு தசை, சந்திர புக்தியில் வயிற்றுவலி குணமாக வாய்ப்புள்ளது. இவ்விதம் செய்வினைக் குற்றத்துக்கு ஆட்பட்டவர்கள், காரண காரியம் தெரியாமல் துன்பப்படுபவர்கள், கொல்லிமலையிலுள்ள கொல்லிப்பாவை ஆலயம் சென்று வழிபாடு செய்யவேண்டும். வயிற்றுவலி நீங்க வேண்டுவோர், சீர்காழி அருகில் திருமுல்லைவாயில் சென்று வழிபடவும்.

ப் ரமேஷ், அரியலூர்.

என்னுடைய மனைவி கீதா மனநலமின்றி உள்ளார். எப்போது சரியாகும்?

ரமேஷ் 7-5-1969-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். சனி நீசம். உடனுள்ள உச்ச சூரியன், சனியின் நீசத்தைப் போக்குகிறார். புதன், சுக்கிரன் பரிவர்த்தனை. உங்களுக்கு சில பல வேண்டாத பழக்கங்கள் இருந்திருக்கும். இதனால்தான் உங்கள் மனைவி மனநலம் குன்றியிருக்கிறார். நடப்பு குரு தசை முடிந்து இப்போது சனி தசை ஆரம்பம். மேலும் மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. இந்த சனி தசை ஜாதகர் ரமேஷை நேர் சீராக்கிவிடும். இதனால் மனைவியின் உடல்நலமும் நன்றாகிவிடும். உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. சனி தசை, ஏழரைச்சனி உள்ளவர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வழிபடவும். மேலும் சனீஸ்வரருக்கு எள் முடிச்சிட்ட நல்லெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.

ப் கோவிந்தராஜ், குருசாமிபாளையம்.

எனக்கு 68 வயதாகிறது. எப்போதும் துன்பம். எப்போது நல்ல காலம் வரும்? இறுதிக் காலத்தில் நான் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழமுடியுமா? தொழில் எப்போது அமையும்?

6-11-1954-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இந்த ஜாதகத் தில் லக்னத்தில் ராகு, 7-ல் கேது. 2-ல் செவ்வாய் உச்சம். அவரை 8-ல் உச்சமான குரு பார்வையிடுகிறார். 11-ல் சனி உச்சம். அவர் தனது 10-ஆம் பார்வையால் குருவைப் பார்க்கிறார். இப்போது உச்ச சனியுடன், நீச சூரியன். எனவே சூரியன் நீசபங்கம். அம்சத்தில் சூரியன் உச்சம். ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சமாகியிருந்தும், எப்பலனும் இல்லாமல் போய்விட்டது. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி. நீங்கள் ஏதாவது தர்ம ஸ்தாபனத்தில் அல்லது ஒரு அரசியல்வாதி உதவியில் மேற்பார்வை பதவியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. அப்படியே உங்கள் கடைசிக்காலம் சென்றுவிடும். உங்களுக்கு குரு, சந்திரன் 6/8-ல் இருந்து சகடை யோக உள்ளது. இவ்விதம் சகடை யோகம் உள்ளவர்கள் கும்பகோணம், வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் திங்கள் அல்லது வியாழன் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

செல்: 94449 61845

bala170622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe