உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-3

வி.ஆர். முத்துசாமி, உடுமலைப்பேட்டை.

எனக்கு 78 வயதாகிவிட்டது. வாழ்க்கை முழுவதும் சிரமம்தான். விவசாயத் தொழில் கைகொடுக்கவில்லை. என் காலத்தை ஓட்ட என்னவேலை செய்யலாம்?

கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். "ஆயுள் முழுக்கவே கஷ்டம், நஷ்டம். பிறந்தது முதல் அல்லலுடன் வாழ்க்கை கடந்துவிட்டது' என வருந்தி யிருக்கிறீர்கள். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. சூரியன் உச்சம். அம்சத்தில் புதன், சுக்கிரன் உச்சம். உங்களுடைய முழுவாழ்க்கையும் நீங்கள் கூறியதுபோல் மிகத்துயரமாக இருந்திராது. ஆனால் லக்ன ராகு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்க, யோகாதிபதி குரு 12-ல் மறைந்ததால் அனைத்தும் நிறைவேறாமல் போயிருக்கும். எதிர்பார்ப்புக்குக் குறைந்த அளவு வாழ்க்கைநிலை அமைந் திருக்கும். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 8-ல் மறைந்தும், ராகு சாரத்திலும், சனியின் 10-ஆம் பார்வையிலும் உள்ளார். சென்ற ஜென்மத்தில் கொலை செய்த பாவம் உள்ளது. அது இந்த ஜென்மத்தில், மனம் புழுங்கும் வாழ்வைக் கொடுத்துள்ளது. 8-ஆம் அதிபதி 11-லும், குருவின் பார்வை 8-ஆமிடத்திற்கும் கிடைத்துள்ளதால், தீர்க்காயுள் ஜாதகமாக உள்ளது. உங்களுக்கு வயது 78. நடப்பு புதன் தசை- விரயாதிபதி தசை. அதில் சந்திர புக்தி. இப்போதைய தசாவின்படி நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடி மனை, வயல், விதை வாங்கி விற்பது சம்பந்தமாக தகவல் தொழில் செய்யமுடியும். இதன்மூலம் பணவரவும் கௌரவமும் கிடைக்கும். "இந்த வயதில் என்ன வேலை செய்வேன்?' என்று கே

வி.ஆர். முத்துசாமி, உடுமலைப்பேட்டை.

எனக்கு 78 வயதாகிவிட்டது. வாழ்க்கை முழுவதும் சிரமம்தான். விவசாயத் தொழில் கைகொடுக்கவில்லை. என் காலத்தை ஓட்ட என்னவேலை செய்யலாம்?

கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். "ஆயுள் முழுக்கவே கஷ்டம், நஷ்டம். பிறந்தது முதல் அல்லலுடன் வாழ்க்கை கடந்துவிட்டது' என வருந்தி யிருக்கிறீர்கள். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. சூரியன் உச்சம். அம்சத்தில் புதன், சுக்கிரன் உச்சம். உங்களுடைய முழுவாழ்க்கையும் நீங்கள் கூறியதுபோல் மிகத்துயரமாக இருந்திராது. ஆனால் லக்ன ராகு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்க, யோகாதிபதி குரு 12-ல் மறைந்ததால் அனைத்தும் நிறைவேறாமல் போயிருக்கும். எதிர்பார்ப்புக்குக் குறைந்த அளவு வாழ்க்கைநிலை அமைந் திருக்கும். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 8-ல் மறைந்தும், ராகு சாரத்திலும், சனியின் 10-ஆம் பார்வையிலும் உள்ளார். சென்ற ஜென்மத்தில் கொலை செய்த பாவம் உள்ளது. அது இந்த ஜென்மத்தில், மனம் புழுங்கும் வாழ்வைக் கொடுத்துள்ளது. 8-ஆம் அதிபதி 11-லும், குருவின் பார்வை 8-ஆமிடத்திற்கும் கிடைத்துள்ளதால், தீர்க்காயுள் ஜாதகமாக உள்ளது. உங்களுக்கு வயது 78. நடப்பு புதன் தசை- விரயாதிபதி தசை. அதில் சந்திர புக்தி. இப்போதைய தசாவின்படி நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடி மனை, வயல், விதை வாங்கி விற்பது சம்பந்தமாக தகவல் தொழில் செய்யமுடியும். இதன்மூலம் பணவரவும் கௌரவமும் கிடைக்கும். "இந்த வயதில் என்ன வேலை செய்வேன்?' என்று கேட்டிருக் கிறீர்கள். மற்றவர்கள் "இந்த வயதில் மாரக புக்தி எப்போது?' எனக் கேட்க, நீங்கள் "என்ன வேலை செய்யலாம்?' என்று கேட்டிருக்கி றீர்கள். இந்த வயதில் இப்படி கேட்கிறீர்களே என ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், உழைத்து வாழவேண்டும் என்றும் உங்கள் எண்ணம் மகிழ்ச்சி தருகிறது. கமிஷன், தரகு சம்பந்த வேலை பலன்- பயன் தரும். அவினாசி- அவினாசியப்பரை வணங்கவும். ஏழு தலைமுறை பாவமும் விலகும். குலதெய்வத்தை தினமும் வணங்கவும். உங்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும். அதன்மூலமும் சற்று முயற்சி செய்தால் வாழ்வுத்தரம் சீராக வாய்ப்பு கிடைக்கும்.

qq

எஸ். துரைராஜன், திண்டுக்கல்.

என் அண்ணன் மகன் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். பெற்றோர் காலமாகிவிட்டனர். இவருக்குத் திருமணம் நடக்குமா? பத்து வருடங்களாக போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனக்கு 73 வயது. உடல்நிலை நன் றாகவே உள்ளது. அதிகாலை நான்கு மணியளவில்தான் தூக்கம் வருகிறது. இறுதிக்காலம் எப்படி?

அண்ணன் மகன் சிவராம கிருஷ்ணன் மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். 6-8-1983-ல் பிறந்தவர். லக்னாதி பதி புதனும், 5-ஆம் அதிபதி சுக்கிரனும் 3-ஆமிடத்தில். ஒருமாதிரி சுகபோக எண்ணத் திலேயே மூழ்கியிருக்கும் ஜாதக அமைப்பு. 7-ஆம் அதிபதி 6-ல் கேதுவுடன். 5-ல் சனி உச்சம்; 2-ல் உள்ள நீச செவ்வாயைப் பார்க்கிறார். குரு பார்வை நீச செவ்வாய்க்குக் கிடைப்பதால், செவ்வாய் நீசபங்கம். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதாலும், புதன்- கேது சாரத்திலும், கேது- புதன் சாரத்திலும் செல்வதாலும் இவருக்கு கண் டிப்பாக காதல் திருமணம்தான் நடக்கும் என ஜாதகம் உறுதிபட உரைக்கிறது. 38 வயது. இன்னுமா திருமணம் முடிக் காமல் இருக்கிறார் என்ற கேள்விக்கு, திருமணம் எப்போதோ முடிந்துவிட்டது என்பதே பதில். ஆனாலும் இவரால் வெளியில் கூறமுடியவில்லை. ஏனெனில் இவர் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை- அதுவும் விவாகரத்து பெற்ற பெண்ணைக் காதல் திருமணம் முடித்துள்ளார். அந்தப் பெண் ணுக்கு முதல் திருமணம்மூலம் ஒரு ஆண் குழந்தை இருக்கக்கூடும். ரகசிய திருமணம் செய்து, நல்லபடியாகவே சௌக்கியமாக இருக்கிறார். நடப்பு சனி தசை, சுக்கிர புக்தி. அனேகமாக இப்போது விஷயம் வெளியே தெரிந்துவிடும். உறவினர்கள் பரிகாரம் செய்வதை நிறுத்திக்கொள்ளலாம். துரைராஜ் மீன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். தூக்கம் வரவில்லை என்றும், அந்திமக் காலம் பற்றியும் கேட்டிருக்கிறீர் கள். ராகு தசை 2029, ஜனவரி வரை. இதில் நடப்பு சுக்கிர புக்தி. சுக்கிரன் 12-ஆம் அதிபதி சனியுடன் இருப்பதால் தூக்கம் சார்ந்த பிரச்சினை உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு முடிந்தபோது எள்ளும், வெல்லமும் சேர்த்து நைவேத்தியம் செய்து, கோவில் குருக்களிடம் கொடுக்கவும். அல்லது எள்மிட்டாய் வாங்கிக்கொடுங்கள். சுக்கிரன், ஆயுள் காரகன் சனியுடன் இருப்ப தால் அனேகமாக மாரகம் தரமாட்டார். அடுத்து வரும் புக்திகளில் கவனம் தேவை. ஓய்வு நேரத்தில், உங்கள் உழைப்பின் அனுபவ அறிவுகளை தேவையானவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். அன்னதானத்திற்கு அடுத்து அறிவு தானமே மிகச்சிறந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட, நல்ல தூக்கம் வரும். மேலும் திருக்கடையூர் சிவனையும், அமிர்த கடேஸ்வரர், அபிராமி அம்பாளையும் மனதால் தினமும் நினைத்து வணங்கவும்.

எம். ராணி, பூண்டி.

நான் எம்.பில்., படித்துள்ளேன். எப்போது பி.எச்.டி., முடிப்பேன்? அரசு வேலை எப்போது அமையும்? எனது கணவர் குடிப்பழக்கதிலிருந்து எப் பொழுது திருந்துவார்? நாங்கள் காதல் திருமணம் செய்தோம். எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? சொந்த வீடு எப்பொழுது அமையும்? மகள்கள் சாந்தி, சித்ராவின் படிப்பு, எதிர்காலம் எப்படி அமையும்? எனது கணவர் என்ன தொழில் செய்தால் நன்றாக வரும்?

ராணி தனுசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 21-8-1986-ல் பிறந்த வர். உங்களது பி.எச்.டி எனும் உயர்கல்வி 2024, செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் சரிப்பட்டு வரும். உங்கள் ஜாதகப்படி குடும்ப வாழ்வு, கணவரின் நடத்தை எல்லாம் சற்று முரண்பாடாகத்தான் இருக்கும். அரசு வேலை மிக தாமதமாகக் கிடைக்கும். ஆயுள் பலம் உள்ளது. சொந்த வீடு வாங்கினாலும் விற்கும் அல்லது வில்லங்க நிலை உண்டாகும். கணவர் மணிகண்டன் 25-10-1979-ல் பிறந்த வர். தனுசு லக்னம், கேட்டை நட்சத்திரம். நடப்பு நீச சந்திரன் தசை. எனவே குடிப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். உங்கள் இரு வருக்கும் ஒரே லக்னம். எனவே பிரிவு கிடையாது. இந்த நவம்பர் மாதம் குரு பகவான் கும்ப ராசிக்குச் சென்றபின் நல்ல மாற்றங்கள் தெரியவரும். கணவர் சமையல் தொழிலில் அல்லது கவரிங் நகைத் தொழிலில் சிறப் பாக வருவார். இவர் ஜாதகப்படி பழைய வீடு, "செகண்ட் ஹேண்ட்' வாகனம் சரியாக அமையும். திங்கட்கிழமைதோறும் அம்பாளையும் முருகரையும் வணங்கவும். உங்கள் கணவரின் தீய பழக்கங்கள் ஒழிய, நீங்கள் ஒருமுறை கங்கைகொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வணங்கவும். இது சந்திரகாந்தக் கல்லினால் கட்டப்பட் டுள்ளது. சந்திர தோஷத்தினால் ஏற்படும் வினையைத் தீர்க்கவல்லது. மகள் சித்ரா 30-6-2010-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத் திரம். நடப்பு ராகு தசை- 21 வயதுவரை உள்ளது. ராகு, குடும்ப ஸ்தானத்தில் உள்ளதால், குடும் பத்தில் குழப்பம் நிலவுகிறது. மாரியம்மனை வணங்கவும். கம்ப்யூட்டர் சார்ந்த மேற்படிப்பு படிப்பார். 21 வயதுக்குப்பிறகு வரும் குரு தசை நன்றாக இருக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கவும். மகள் சாந்தி 24-11-2015-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும். செவ்வாய், புதன் பரிவர்த்தனை. கல்வித் தடை உண்டு. மேலும் சுக்கிரன் நீசத்தில் செல்கிறார். 21 வயது வரையுள்ள இந்தக் காலகட்டம். இவருக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் சற்று சோதனை கொடுக்கும்; கவனம் தேவை. ஆயுள் தீர்க்கம் உண்டு. விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் கோவிலிலுள்ள பார்கவீஸ் வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

bala191121
இதையும் படியுங்கள்
Subscribe