Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-28

கி. இரவிச்சந்திரன், சென்னை-88.

என் நண்பர் மனைவியின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவர் என்ன தொழில் செய்வார்? கோடீஸ்வரி ஆவாரா?

Advertisment

ராஜம் 30-12-1971-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். 12-ல் சனி, சந்திரன் உள்ளனர். இவரின் ஜாதகத்தில் சனி, சுக்கிரன் பரி வர்த்தனை; குரு, செவ்வாய் பரிவர்த் தனை. சந்திரன் தனாதிபதியாகி 12-ல் உச்சம். அதா வது விரயத்தில் உச்சம். கோடீஸ்வரி யோகம் நூலிழையில் தவறிவிட்டது. இவருக்கு பணவரவு இருக்கும்தான். ஆனால் கையில் ஒரு பைசாவும் நிற்காது. இப்போது சனி தசை விரயத்தில் இருந்து நடக்கிறது. சனி தசையில் சந்திர புக்தி. தற்போது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ்ந்துகொண்டிருப்பார். வீணான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். இவ்விதம் சந்திரன், சனி தோஷமுள்ளவர்கள் நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருவேள்விக்குடி ஆலயம் சென்று பரிகாரம் செய்யவும். மேலும் இவருக்கு பேரிழப்புக்களைத் தவிர்க்க, திங்கட்கிழமைதோறும், சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும்.

Advertisment

Q&A

சுமதி, சேலம்-2.

எனது மகன் கௌதமின் வேலை, திருமணம், எதிர்காலம் பற்றிக் கூறவும். தாய்ப்பாசம் கடைசிவரை இருக்குமா?

கௌதம் 5-4-1998-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, பூச ந

கி. இரவிச்சந்திரன், சென்னை-88.

என் நண்பர் மனைவியின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவர் என்ன தொழில் செய்வார்? கோடீஸ்வரி ஆவாரா?

Advertisment

ராஜம் 30-12-1971-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். 12-ல் சனி, சந்திரன் உள்ளனர். இவரின் ஜாதகத்தில் சனி, சுக்கிரன் பரி வர்த்தனை; குரு, செவ்வாய் பரிவர்த் தனை. சந்திரன் தனாதிபதியாகி 12-ல் உச்சம். அதா வது விரயத்தில் உச்சம். கோடீஸ்வரி யோகம் நூலிழையில் தவறிவிட்டது. இவருக்கு பணவரவு இருக்கும்தான். ஆனால் கையில் ஒரு பைசாவும் நிற்காது. இப்போது சனி தசை விரயத்தில் இருந்து நடக்கிறது. சனி தசையில் சந்திர புக்தி. தற்போது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ்ந்துகொண்டிருப்பார். வீணான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். இவ்விதம் சந்திரன், சனி தோஷமுள்ளவர்கள் நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருவேள்விக்குடி ஆலயம் சென்று பரிகாரம் செய்யவும். மேலும் இவருக்கு பேரிழப்புக்களைத் தவிர்க்க, திங்கட்கிழமைதோறும், சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும்.

Advertisment

Q&A

சுமதி, சேலம்-2.

எனது மகன் கௌதமின் வேலை, திருமணம், எதிர்காலம் பற்றிக் கூறவும். தாய்ப்பாசம் கடைசிவரை இருக்குமா?

கௌதம் 5-4-1998-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னத் தில் ராகு, 7-ல் கேது. லக்னத்துக்கும், ராசிக்கும் நாகதோஷம் உள்ளது. லக்னாதி பதி சூரியன் மற்றும் 7-ஆமதிபதி சனி, தனாதிபதி புதன் அனைவரும் 8-ல் மறைவு. குரு, சனி பரிவர்த்தனை. இவருக்கு நடப்பு புதன் தசை. அதில் சனி புக்தி 2024 ஜனவரிவரை. தசாநாதரும், புக்திநாதரும் 8-ல் மறைந்து தனது வேலையை நடத்துகிறார்கள். ஜாதகரின் நிலை பரிதாபமாகவே இருக்கும். இவருக்கு புதன் தசை முடியும்மட்டும் சற்று சிரமம்தான். ஆனாலும் குறைந்த சம்பளத்தில் ஒரு வேலையில் நாட்களை ஓட்ட இயலும். இப்போது இவரிடமிருந்து குடும்பத்தார் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். எதிர்காலத்தில் குடும்பத்துக்கு ஒத்தாசையாக இருப்பார். 2024-க்குப்பிறகு வரும் கேது தசை, இவருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை, காதல் கலப்பு மணம் என தருவார். ஒருமுறை திருவெண்காடு சென்று வணங்கவும். 2024 வரை புதன் பகவானுக்கு சிறிது பச்சைப்பயிறு வைத்து விளக்கேற்றி வணங்கவும். இந்த ஜாதகர் யாராவது ஒரு சித்தரின் பாதங்களைப் பற்றிக்கொள்வது நல்லது.

ப.மு. சண்முகசுந்தரம், சென்னை-89.

எனக்கு 74 வயது நடக்கிறது. கால்முறிவு ஏற்பட்டு சரியாகியும் சரியாக நடக்கமுடியவில்லை. என் மனைவிக்கு 72 வயது. அவருக்கும் மூட்டுவலி, இதயக்கோளாறு உள்ளது. ஏதேனும் பாதிப்பு வருமா?

நீங்கள் 11-8-1947-ல் பிறந்தவர். கடக லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். கால்முறிவு ஏற்பட்டு நடக்க இயலவில்லை என வருந்தியுள்ளீர். லக்னாதிபதி சந்திரன் உச்சம். குருவின் பார்வை 8-ஆம் வீட்டிற்குக் கிடைக்கிறது. எனவே தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு புதன் தசை. லக்னத்தில் புதன், சனி, சூரியன், சுக்கிரனுடனும்- அம்சத்தில் உச்சமாகவும் உள்ளார். புதன் தசை விரயாதிபதி தசையாதலால், கால் சற்று முறிந்துள்ளது. புதன் தசையில் சுக்கிர புக்தி 2024, ஆகஸ்ட் வரை நடக்கும். விரயாதிபதி தசையில் பாதகாதிபதி புக்தி. எனவே கவனம் தேவை. அவசரத்துக்கு ஆங்கில மருந்தையும் பின் சித்தா, ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்துங்கள். மனைவி காந்திமதி 27-11-1949-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ஏழரைச்சனி நடக்கிறது. இவருக் கும் மூட்டு வலி உள்ளது. நடப்பு கேது தசை- அதில் ராகு புக்தி 2022 ஜூன்வரை. அதனால் உடல் கோளாறு ஏற்பட்டுள்ளது. அடுத்து 2023, ஜூன்வரை உள்ள கேது தசை, குரு புக்தியில் சற்று கவனமாக இருக்கவும். சனியின் மூன்றாவது சுற்று நடக்கிறது. இவ்விதம் தீராத கால்வலி, முழங் கால் மூட்டுவலி உள்ளவர்கள், திருநெல்வேலி அருகிலுள்ள சொரிமுத்தையனார் கோவில் சென்று வழிபடவும். அல்லது அந்தக் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச் சனை செய்து பயன்படுத்தவும்.

ஆர். பாஸ்கர், மதுரை-11.

வாழ்நாள் முழுவதும் துன்பமும் துயரமும்தான். மேலும் மீன ராசிக்கு ஏழரைச் சனி வரும்போது எவ்வித பாதிப் புக்களைத் தரும்?

நீங்கள் 22-6-1963-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இவரின் லக்னாதிபதி குரு 4-ல் ஆட்சி. உடன் 8-ஆமதிபதி சந்திரன். மேலும் லக்னாதிபதி குரு அம்சத்தில் நீசம். சனி, சந்திரன் பார்வை. லக்னத்தில் கேது. 7-ல் ராகுவும் சூரியனும் கிரகண மறைவு நிலை தருகிறார்கள். ஆக, ஒரு நிறைவான வாழ்வு தர இயலாத நிலையில் கிரகங் களின் அமைப்புகள் அமைந்துள்ளது. நடப்பு ராகு தசையில் குரு புக்தி. மேலும் ஏழரைச்சனியில் மூன்றா வது சுற்றாக அமையும். நீங்கள் இப்போது மதுரையில் நிறைய கோவில்களுக்குச் சென்று வணங்கிக் கொண்டிருப்பதாக எழுதி இருக்கிறீர்கள். உங்களது நிறைய கஷ்டங்கள் தீர எளிய வழி உள்ளது. தினமும் கோவில் அல்லது திருக்குளம் என ஏதோ ஒரு சிறிய பகுதியில் சுத்தமாகப் பராமரிப்பு, உழவாரப் பணி செய்துவிட்டு வாருங்கள். எந்தக் காசும் செலவழிக் காமல், எளிய- ஆனால் வலிய பரிகாரமிது. உங்களைப் போல் காசு பணம் குறைவாக உள்ளவர்கள் இதனைப் பின்பற்றலாம்.

ஆர். ரம்யா, திருச்சி.

எனக்கும் என் கணவருக்கும் அரசு வேலை கிட்டுமா?

நான் கோடீஸ்வரியாகும் யோகமுள்ளதா? 21-8-1986-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்கள் ராசிக் கட்டத்தில் லக்னாதிபதி குருவுடன் சந்திரன் சேர்க்கை. தனுசு லக்னத்துக்கு சந்திரன் 8-ஆமதிபதி. லக்னாதிபதியும் 8-ஆமதிபதியும் சேரும் போது அங்கு கோடீஸ்வரி யோகம் சற்று குறையும். நடப்பு புதன் 8-ல் இருந்து தசை நடத்துகிறார். அதில் சுக்கிர புக்தி. ஏழரைச்சனி நடக்கிறது. எந்த வேலை கிடைத்தாலும் அதில் கடுமையாக உழைத்தால் முன்னேற்றம் உண்டு. முடிந்தபோது திருப்பதி பெருமாளை வணங்க, 8-ஆமிட சந்திரன், குருவோடு சேர்ந்த தோஷம் நீங்கி, பணவரவு அதிகரிக்கும். உங்கள் கணவர் பி. கணேஷ் 25-10-1979-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம், லக்னாதிபதி குரு, சனி, ராகுவுடன். குருவும் ராகுவும் ஒரே நட்சத்திரம். ஒரே பாதத்தில் உள்ளனர். சண்டாள யோகம் தரும். நடப்பு சந்திர தசையில் சனி புக்தி. திங்கட்கிழமைகளில் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்யவும். சூரியன் நீசபங்கம். மேலும் சனியின் பார்வையிலும் இருப்பதால் அரசு உத்தியோகம் கிடைப்பது சற்று கடினம். சந்திர தசை சனி புக்தி 2023, அக்டோபர் வரை சற்று கவனமாக இருக்கவும்.

செல்: 94449 61845

bala130522
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe