ப் முருகன், உளுந்தூர்பேட்டை.
என் மகன் ஸ்வீடன் நாட்டில் பணியாற்றுகிறார். கடந்த ஒன்றரை வருடமாக என் மருமகள் தன் இரண்டரை வயதுக் குழந்தையுடன் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். விசா கிடைக்காததால் அங்கு செல்ல இயலவில்லை. எப்போது ஒன்றாகச் சேர்வார்கள்?
பிரபு 29-7-1987-ல் பிறந்தவர். விருச் சிக லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். மருமகள் பிரியா 23-6-1991-ல் பிறந்தவர். துலா லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். பிரபுவுக்கு ராகு தசையில் குரு புக்தி 2022, ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும். பிரியாவுக்கு புதன் தசையில் சுக்கிர புக்தி ஓடுகிறது. 2024-ஆம் வருடத் திற்குள் இருவரும் ஒன்றுசேரும் வாய்ப்புண்டு. இவ்வாறு கணவன்- மனைவி பிரிந்து வாழ்பவர்கள் ஒன்றாகக்கூடி வாழ, திருக்கூடலூர் (கும்பகோணம்) ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாளை தொடர்ந்து 16 நாட்கள் வழிபட, நல்வழி பிறக் கும். முடியாதவர்கள் 16 நாட்களுக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யவும்.
ப் இராமகிருஷ்ணர், திண்டுக்கல்.
இருபது வருடங்களாக வாடகை வீட்டில் வாழ்ந்துவருகிறோம். என் பெயரில் ஒரு காலி மனை இருக்கிறது. அரசு வங்கியில் கடன் பெற்று, கடந்த 6-3-2021 அன்று வாஸ்து செய்து, தரைத்தளம், முதல் தளம் என வீடுகட்டி, 9-12-2021 அன்று பால் காய்ச்சினோம். ஆனால் அந்த வீடு தொலைவாக இருப்பதால் தனித் தனியே வாடகைக்கு விட்டுவிட்டோம். புதிதாகத் திருமணமான தம்பதி மேல்தளத்தில் வாடகை இருந்தனர். இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த 28-3-2022 அன்று மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். மிக குழப்பமாகவும் பயமாகவும் உள்ளது. கஷ்டப்பட்டு புதுவீடு கட்டிய மூன்று மாதங்களுக்குள் இவ்வாறு அசம்பாவிதம் நடந்துவிட்டது. வாஸ்துக் குற்றமா அல்லது எங்கள் நேரம் சரியில்லையா? எல்லாரும் ஒரு மாதிரி பேசுகிறார்கள். நல்ல ஆலோசனை கூறவும்.
உங்கள் கடிதத்தைப் படித்து கஷ்டமாகி விட்டது. கடன் வாங்கி கட்டிய வீட்டில் ஒரு இளம்பெண் தூக்குப்போட்டு இறந்து விட, இப்போது என்ன செய்வதென தெரியாமல் பதறுகிறீர்கள்.
27-3-1967-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். உங்கள் லக்னத்தில் குரு உச்சமாகி வக்ரம் பெறு வதால், அவர் நீச நிலையில் உள்ளார். அதே நிலையில் அம்சத்திலும் நீச வக்ரமாக உள்ளார். அவர் கடக லக்னத் தின் 6, 9-ன் அதிபதி. 6-ஆமிடம் என்பது வாடகை விஷயங்களைக் குறிக்கும். உங்கள் 4-ஆமிடத்தில் செவ்வாய் கேதுவுடனும், 4-ஆமதிபதி சுக்கிரன் ராகு வுடனும் 10-ல் உள்ளனர். நடப்பு சனி தசை- 9-ல் இருந்து தசை நடத்துகிறார். இதில் ராகு புக்தியில் வீடு கட்ட வைத்துவிட்டார். அடுத்து 2022, பிப்ரவரியில் ஆரம்பித்த குரு புக்தியில் வீட்டை ரணகளப்படுத்திவிட்டார். சனி தசை, குருபுக்தி, குரு அந்தரத்தில் இவ்விதம் நடந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lakshmi_39.jpg)
சரி; இனி என்னாகும்? 2022, அக்டோபர் 15-க்குமேல் நான்கு மாதத்திற்குள், ஒரு இஸ்லாமியப் பெண்மணி, தனது தொழிற் சாலைக்கு இந்த வீட்டை வாங்கிக்கொள்வார். "அப்பாடா- கடவுள் காப்பாற்றினார்' என வீட்டை விற்றுவிடுங்கள். நீங்கள் பண விஷயமாக யோசித்தீர்கள் என்றால் 2024 கடைசியில்தான் விற்கமுடியும்; கவனம் தேவை. அடுத்துவரும் புதன் தசையில், வேறு வீடுவாங்க இயலும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால் ஜாதகர், ஒரு இளம் பெண்ணுக்கு, பாவாடை, சட்டை, தாவணி, நிறைய இனிப்புகள், உணவும் கொடுக்கவும். புதுக்கோட்டை செவலூர் சென்று வழிபடவும்.
இந்த ஜாதகத்தில் 4-ஆம் வீட்டில் செவ்வாய் வக்ரமாகி, கேதுவுடன் உள்ளார். மனைதோஷ ஜாதகம். நீங்கள் முருகனை வணங்குவதும், உங்கள் பெயரில் மனை வாங்காமல் இருப்பதும் உத்தமம்.
பின்குறிப்பு: தயவுசெய்து யாரும் தற்கொலைக்கு முயலாதீர்கள். இதுபோன்ற செயல்களுக்கு முனைபவர்கள் தங்கள் வீட்டாரையும், வீட்டு உரிமையாளரையும் ஒரு நிமிடம் யோசித்து, தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.
ப் வே. ரம்நாத், சென்னை.
எனக்கு உடலில் எல்லா நோய்களும் உள்ளன. இதய நோயும் சேர்ந்து படுத்து கிறது. எல்லாவற்றுக்கும் மாத்திரை மருந்து சாப்பிட்டும் எதுவும் குணமாகவில்லை. வேலையோ- தொழிலோ செய்யமுடிய வில்லை. பரிகாரம் கூறவும்.
3-9-1964-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். நடப்பு செவ்வாய் தசை. உங்களுக்கு செவ்வாய் ஆரோக்கிய ஸ்தானாதிபதி. அவர் 12-ல் மறைவு. அவரின் தசை ஆரம்பித்தவுடன் உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தசையில் ராகு புக்தி ஆரம்பம். அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவீர்கள். தர்மஸ்தாபனங்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். செவ்வாய் தசை, ராகு புக்தியில் சற்று கவனமாக இருக்கவேண்டும். துர்க்கையை சரணடையுங்கள். இவருக்கு இருப்பதுபோல் இதய நோய் உள்ளவர்கள், சென்னை, திருநின்றவூர், இருதயாலீஸ்வரரை வழிபடுவது அவசியம்.
ப் வி. முரளி, வத்தலகுண்டு.
எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா?
4-11-1993-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சூரியன் நீசம். 5-ஆமதிபதி சுக்கிரன், புதன் பரிவர்த்த னையால் நீசபங்கம். மேலும் சுக்கிரன் நீச வர்க்கோத்தமம். பித்ரு தோஷ ஜாதகம்.
அம்சத்தில் செவ்வாய் நீசம். நடப்பு சனி தசை- அஷ்டமாதிபதி தசை. இதில் சுக்கிர புக்தி 2023, மே வரை. இதில் வேறிடத்திற்கு வேலை விஷயமாக மாறுவீர்கள். திருமண மும் நடக்கும். அரசு சார்ந்த வேலைக்கு வாய்ப் பில்லை. சனி தசை சுமாரான பலன்களையே கொடுக்கும். 8-ஆமிட சனி, நல்ல ஆயுள் பலம் தருவார்.
இவ்விதமாக அஷ்டமத்தில் சனி இருந்து அதன் தசை நடப்பவர்கள் அறந்தாங்கியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள எட்டியத்தளி அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது மிக நன்று.
ப் கோபாலகிருஷ்ணன், பெங்களூர்.
என் மகனுக்கு திருமணம் மிகவும் தாமத மாகிவருகிறது. எப்போது நடக்கும்? வயதான பெற்றோர் நாங்கள் மிகவும் கவ லையில் உள்ளோம். வம்சம் தழைக்குமா?
உங்கள் மகன் ராம் 28-5-1981-ல் பிறந்த வர் சிம்ம லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 10-ல். உடன் சுக்கிரனும் செவ்வாயும். சூரியனும் செவ்வாயும் அம்சத்தில் உச்சம். சுக்கிரன் அம்சத்தில் நீசம். 5-ஆமதிபதி குருவும், 7-ஆமதி பதி சனியும் ஒரே நட்சத்திர சாரத்தில், ஒரே ராசியில் அமர்ந்துள்ளனர். எனவே, இவருக்கு விருப்பத் திருமணம்தான் அமையும். நடப்பு கேது தசையில் ராகு புக்தி 2023, பிப்ரவரி வரை. இதில் எதிர்பாராத நேரத்தில், விருப்பமான பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். பெண் உங்கள் இனத்திலேயே அமைவார். இவருடன் வேலை பார்க்கும் பெண்ணாக அமையக்கூடும். தாமதமாக புத்திரபாக்கியம் கிடைக்கும் அமைப்பு ஜாதகத்தில் இருப்ப தால், திருமணமும் தாமதமாக நடக்கிறது. அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு திங்கட்கிழமைதோறும் அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கிக்கொடுக்கவும்.
ப் டி. ரவி, கோவை- 29.
என் ஒரு மகளின் திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா?
மகள் அனுசூயா தேவி 27-1-1993-ல் பிறந்த வர். சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன், சனி, புதனுடன் 6-ஆமிடத்தில் உள்ளார். ராசியில் 10-ஆமதிபதி சுக்கிரன் லக்னத்துக்கு 8-ல் உச்சம். அம்சத்தில் குரு உச்சம். நடப்பு புதன் தசையில் சனி புக்தி 2023, ஜூன் வரை. இதற்குள் இந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாக்கிவிடும். அவருடன் வேலை பார்க்கும் தெரிந்த நபரே அல்லது தாய்மாமன்வகையில் மணமகனாக அமைவார். நிறைய செலவுகளுக்குப்பின் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு வரும். அரசு வேலை யின் பொருட்டு சற்று பண ஏமாற்றங்களையும் சந்திக்க நேரும்; கவனம் தேவை. ராசிக்கு 4-ல் செவ்வாய். இந்த ஜாதகிக்கு 6-ஆமிடத்தில் லக்னாதிபதி சூரியன், களஸ்திர ஸ்தானாதிபதி சனி, தன ஸ்தானாதிபதி புதன் உள்ளனர். இவ்வாறு 6-ஆமிடத்திலுள்ள கிரகங்களின் தோஷநிவர்த் திக்கு, 16 திருக்கரங்களுடன்கூடிய நரசிம்மரை வணங்கவேண்டும். புதுச்சேரி அருகே சிங்கர் குடி தலத்திலுள்ள நரசிம்மரை வணங்கவும்.
ப் ஆர். சுப்பிரமணியன், புதுக்கோட்டை.
என் இரு மகள்களின் திருமணம், வேலை பற்றிக் கூறவும். நான் ஜோதிடத்தை முழுநேரத் தொழிலாக மேற்கொள்ள முடியுமா?
மகள் கனிமொழி 3-6-1995-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. நாகதோஷம் உண்டு. ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பது தோஷமாகும். மேலும் 5-ஆமதிபதி சாரத்தில் 7-ஆமதிபதி நிற்கிறார். காதல், கலப்பு மணமாக அமையும். வரும் வரனுக்கு அரசு வேலை பார்க்கும் யோகமுண்டு. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி. இதில் சுக்கிர அந்தரம் வரும்போது பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். கிழக்கு அல்லது தென்கிழக்கில் வரன் அமைவார்.
7-ல் ராகு நிற்கும் ஜாதகர்கள், திருக்கடை யூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவிடைக்கழி எனும் தல முருகனை வழிபட, ராகு தோஷம் நிவர்த்தியாகும்.
இன்னொரு மகள் சு. பாரதி 3-12-1999-ல் பிறந்தவர். மிதுன லன்கம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். இவருக்கு அரசு வேலை கிடைக்குமா என்பது கேள்வி. 6-ல் சூரியன் அமர்வு. மற்றும் 6-ஆமதிபதி உச்சம். நடப்பு ராகு தசையில் செவ்வாய் புக்தி.
அவர் 8-ல் மறைந்ததால் இப்போது அரசு வேலைக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் 2023-ல் ஆரம்பிக்கும் குரு தசை இவருக்கு அரசு வேலை வாங்கித் தரும்.
அரசு சார்ந்த பதவி, வேலை வேண்டுவோர், காஞ்சிபுரம்- உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் சென்று வணங்கவும்.
நீங்கள் 31-10-1960-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ஜோதிடராக முழுநேரத் தொழில் செய்ய இயலுமா எனக் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் வாக்குஸ்தானாதிபதி சுக்கிரன் 8-ல் மறைவு. பூர்வபுண்ணியாதிபதி சூரியன் நீசம். வரும் 2023, மார்ச் வரை நீச சூரிய தசை ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து வரும் சந்திர தசையில் வசிக்குமிடம் மாறுவீர்கள்.
அப்போது, ஜோதிடத்தை முழுநேரத் தொழிலாக மேற்கொள்வீர்கள்.
இவ்வாறு ஜோதிடத்தில் மிகத்திறமை பெற விரும்பும் அன்பர்கள், திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள தொடுகாடு பீமேஸ்வரர் சிவாலயம் சென்று வணங்குவது மிகச் சிறப்பு.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/lakshmi-t.jpg)