Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-25

ப் ஆர். ஷர்மிளா ராஜகுமாரன், சென்னை.

என் கணவர், அவரது தந்தை செய்துவந்த தொழிலைச் செய்துவந்தார். ஊரடங்கு காலத்தில் வியாபாரம் சரியில்லாமல் கடன் அதிகமாகிவிட்டது. கௌரவமாக வாழ்ந்த குடும்பம். தற்போது மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதை விற்றுக் கடனை அடைத்து விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட நினைக்கிறோம். நீங்கள்தான் வழிசொல்லவேண்டும்.

Advertisment

சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். குரு நீசமாகி, சனி பார்வையால் நீச பங்கம். தற்போது புதன் தசை நடப்பு. இது 2018, மே மாதம் ஆரம்பித்துள்ளது. அதிலிருந்தே உங்கள் கணவருக்கு சற்று சிரமம் ஆரம்பித்திருக்கும். காரணம், செவ்வாய், சனி எனும் இரு கிரகங் களுக்கிடையே புதன் அகப் பட்டு பாப கர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். புதன் இவரின் தன, லாபாதிபதி. எனவே ஜாத கருக்கு பணவரவு சுத்தமாக நின்று கடன் வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டது. புதன் 6-ஆமதிபதி சனி சாரம் பெற்று நிற்கிறார். மிதுன ராசிக்கு அஷ்டமச்சனியும் நடந்துகொண்டிருக்கிறது. நடப்பு புதன் தசையில் சுக்கிர புக்தி. இதில் 2022, மே மாதத்திற் குப்பிறகு பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைத்துவிடு வீர்கள். வீடு மாற்றுவீர்கள். உங்கள் தந்தையின் இரும்பு சம்பந்த கட்டுமானத் தொழிலை, படிபடியாக ஆரம்பித்து விடுவீர்கள். சத்தியநாராயண பூஜை செய்யவும். நீங்கள் (ஆர். ஷர்மிளா) 29-1

ப் ஆர். ஷர்மிளா ராஜகுமாரன், சென்னை.

என் கணவர், அவரது தந்தை செய்துவந்த தொழிலைச் செய்துவந்தார். ஊரடங்கு காலத்தில் வியாபாரம் சரியில்லாமல் கடன் அதிகமாகிவிட்டது. கௌரவமாக வாழ்ந்த குடும்பம். தற்போது மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதை விற்றுக் கடனை அடைத்து விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட நினைக்கிறோம். நீங்கள்தான் வழிசொல்லவேண்டும்.

Advertisment

சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். குரு நீசமாகி, சனி பார்வையால் நீச பங்கம். தற்போது புதன் தசை நடப்பு. இது 2018, மே மாதம் ஆரம்பித்துள்ளது. அதிலிருந்தே உங்கள் கணவருக்கு சற்று சிரமம் ஆரம்பித்திருக்கும். காரணம், செவ்வாய், சனி எனும் இரு கிரகங் களுக்கிடையே புதன் அகப் பட்டு பாப கர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். புதன் இவரின் தன, லாபாதிபதி. எனவே ஜாத கருக்கு பணவரவு சுத்தமாக நின்று கடன் வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டது. புதன் 6-ஆமதிபதி சனி சாரம் பெற்று நிற்கிறார். மிதுன ராசிக்கு அஷ்டமச்சனியும் நடந்துகொண்டிருக்கிறது. நடப்பு புதன் தசையில் சுக்கிர புக்தி. இதில் 2022, மே மாதத்திற் குப்பிறகு பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைத்துவிடு வீர்கள். வீடு மாற்றுவீர்கள். உங்கள் தந்தையின் இரும்பு சம்பந்த கட்டுமானத் தொழிலை, படிபடியாக ஆரம்பித்து விடுவீர்கள். சத்தியநாராயண பூஜை செய்யவும். நீங்கள் (ஆர். ஷர்மிளா) 29-10-1991-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். சூரியன் நீசமாகி, சுக்கிரனின் பரிவர்த்தனையால் நீசபங்கமாகியுள்ளார். உங்களுக்கும் அஷ்டமச்சனி; புதன் தசை நடப்பு. அந்த சனி, ராகு- செவ்வாய், சூரியனுக் கிடையே புதன் அகப்பட்டுக் கொண்டு திணறுகிறார். உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்னவெனில், புதன் 6-ஆமதிபதி யாகி 8-ல் மறைவது. அதனால் உங்கள் ஜாதகப்படி கடன் மறையும். புதன் தசையில் செவ்வாய் புக்தி. இதில் பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைக்கமுடியும். இந்த வருடக் கடைசியில் பிற மத மனிதரின் உதவிமூலம், பழைய தொழிலை உங்கள் கணவர் தொடங்கிவிடுவார். மேற்கண்ட கணவன்- மனைவி ஜாதகத்தில் 5-ஆமதிபதி நீசபங்கம், அஷ்டமச்சனி, தசாநாதரின் பாப கர்த்தாரி யோகம் போன்ற அனைத்தும் சேர்ந்து மிகுந்த அவமானத் திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இருவருக்கும் ஒரே ராசி. அதனால் அஷ்டமச்சனி ஒருசேர நடக்கிறது. எனினும், இந்த துன்பங்களை இருவரும் ஒன்றுசேர்ந்து கடந்துவிடுவர். மனப்பிணைப்பு இருக்கும். இவ்வாறு ஒரே குடும்பத்தில் இருவருக்கும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அர்த்தாஷ்டமச்சனி நடக்கும் போது, திருச்செந்தூர் சென்று வழிபடுவது நல்லது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் சூரியனார் கோவில் அருகிலுள்ள திருமாந் துறை என்னும் தலம் சென்று வழிபட நல்லது.

dd

ப் எஸ்.ஜி. ரவிச்சந்திரன், மதுரை.

எனக்கும் என் மனைவிக்கும் கடந்த பத்து ஆண்டுகளாக ஒற்றுமை இல்லை. மனைவி தாய் சொல்வதைத்தான் கேட்கிறாள். மூன்று பிள்ளைகள் உள்ளனர். எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா?

நீங்கள் 19-2-1968-ல் பிறந்தவர். மினது லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. செவ்வாய், சனி, ராகு இணைவு. 5-ஆமதிபதி சுக்கிரனும் 8-ல் மறைவு. பூர்வபுண்ணியக் குற்றம், பித்ரு தோஷ ஜாதகம். வாழ்வில் நிம்மதியில்லாமல் உள்ளது. பெண் சாபம் உள்ளது. 10-ஆமதிபதி குரு அம்சத்தில் உச்சம். நடப்பு புதன் தசை. இவர் 8-ஆமிடத்ததிலிருந்து தசை நடத்துகி றார். எனவே மிகுந்த மனக்கஷ்டம் உள்ளது. புதன் தசை ஆரம்பித்ததிலிருந்தே குடும்பம் அல்லாடியிருக்கும். இருவரும் குழந்தைகளின் பொருட்டு பிரியாமல் இருப்பீர்கள். மேலும் உங்கள் இருவருக்கும் ஒரே மிதுன லக்னம். பிரிய விடாது. நடப்பு புதன் தசையில் சந்திர புக்தி. இதில் வெளியூர், வெளிநாட்டில் தங்கவேலை செய்ய வாய்ப்பு வரும். உங்களுக்கு தங்கம் சம்பந்த வேலைதான் சரியாக இருக்கும். குரு 10-ஆமதிபதியாக அம்சத்தில் உச்சம். மீனாட்சியம்மனை வணங்கவும். ஒற்றுமையில்லை எனக்கூறும் உங்களுக்கு மூன்று குழந்தைகள். இதில் ஒற்றுமையாக இருந்திருந்தால் எத்தனை குழந்தைகள் இருந்திருக்கும்? நீங்கள் அமைதியாக இருந்தால் பிள்ளைகளும் அனுசரணையாக இருப்பர்.

புதன் தசை நடப்பவர்கள், மதுரை மீனாட்சியம்மனை வணங்குவது சிறப்பு.

உங்கள் மனைவி ஆர். தங்கலட்சுமி 14-5-1976-ல் பிறந்தவர். மிதுன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். சந்திரனின் நீசம் செவ்வாயின் பரிவர்த்த னையால் பங்கமாகிறது. இவரது ஜாதகத் திலும் சனி, செவ்வாய், ராகு, கேது தொடர்புள்ளது. 5-ல் ராகுவும், 5-ஆம் அதிபதி, சுக்கிரன், கேது சம்பந்தம் பெறுவ தும் இளம்பெண்ணின் சாபத்தைக் குறிக்கிறது. "டீன் ஏஜ்' இளம்பெண்களுக்கு அவ்வப்போது முடிந்த உதவிசெய்யவேண்டும். 2-ஆமிடத்தில் சனியும் நீசபங்க செவ்வாயும் உள்ளன. நடப்பு சுக்கிர தசை- அம்சத்தில் சுக்கிரன் நீசம். சுக்கிர புக்தி ஆரம்பித்தவுடன் இவருக்கும் கணவருக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளது. சுக்கிர புக்தி முடிந்து சூரிய புக்தி ஆரம்பித்தவுடன், தாய் வீட்டுக்குச் சென்றவர் கணவர் வீடு வந்து சேர்வார்.

இவ்வாறு சுக்கிரன் சரியில்லாமல் தசை நடக்கும் ஜாதகர்கள் திருவாரூர் சாலையிலிலுள்ள திருமீயச்சூர் ஆலயம் சென்று அங்குள்ள 12 நாதர்களுக்கும் அபிஷேகம் செய்து, குடும்பத்தில் அனைவர் பெயருக்கும் அர்ச்சனை செய்யவும். .

ப் அரிகிருஷ்ணன், பெருங்களத்தூர்.

தற்போது சரியான வேலையில்லை. கொஞ்சம் நிலம் உள்ளது. அதை விற்க பத்து வருடங்களாக முயற்சிக்கிறேன். முடியவில்லை. சுக்கிர தசையில் இருபது ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். அடுத்துவரும் சூரிய தசை யாவது நன்மை செய்யுமா?

Advertisment

பிள்ளை களுக்குத் திருமணமாகி தனியே சென்று விட்டனர். ரிஷப லக்னம், கடக ராசி, புனர் பூச நட்சத்திரம். 2022, ஜூலை வரை சுக்கிர தசை நடந்து பூர்த்தியாகும். சுக்கிர தசை உங்களுக்கு 6-ஆமிட தசை. மிகவும் கஷ்டப்படுத்திவிட்டார். அடுத்து ஆரம்பிக்கும் சூரிய தசை 4-ஆமதிபதியாகி, 12-ஆமிடம் எனும் விரயத்தில் இருந்து தசை ஆரம்பித்து நடத்துவார். அப்போது உங்கள் மனை விற்கும். சூரியன் கிரகண நிலை பெறுவதால், மிகுந்த பலன் தர இயலாது. உடல்நிலையில் கவனம் தேவை. வேலை, தொழில் சரிப்படாது. எங்காவது விழுந்து காயப்படாமல் இருங்கள்; அதுபோதும். விரய தசை ஆரம்பிப்பதால் எதிலும் முதலீடு செய்துவிடாதீர்கள்; கவனம் தேவை. சூரிய தசை இவ்விதம் நல்லநிலையில் நடக்காதவர்கள், தஞ்சை, பட்டுக்கோட்டை பரிதியப்பர் கோவில் சென்று வணங்கவும். தினமும் சூரியனை வழிபடவும்.

உங்கள் மனைவி இந்திரா 26-7-1969-ல் பிறந்தவர் கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் நீசபங்கம். சனி நீசம். நடப்பு செவ்வாய் தசையில் புதன் புக்தி 2022 செப்டம்பர்வரை. இதில் உங்கள் மனை, வீடு விற்றுவிடும். செவ்வாய் சாரம் வாங்கிய சனி நீசநிலையில் உள்ளார். எனவே நீங்களும் உங்கள் மனைவி யும் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். இருவரும் பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டும்.

செவ்வாய் தசை நடப்பவர்கள் பழனி சென்று தண்டாயுதபாணியை வணங்குவ தோடு, அங்குள்ள போகர் சித்தரையும் வழி படுவது நன்று.

செல்: 94449 61845

bala220422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe