Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-23

ப் கண்ணையன், சிதம்பரம்.

என் மகன் ரமேஷ் பாபு நீண்டநாட்களாக மனநிலை சரியில்லாமல் இருக்கிறார். நிறைய பரிகாரம், வைத்தியம் செய்தாகிவிட்டது. இவனுடைய எதிர்காலம், உடல்நிலை பற்றிக்கூறவும்.

Advertisment

ரமேஷ் பாபு 25-3-1983-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. லக்னாதிபதி புதன் நீசபங்கம். இவரின் ஜாதகத்தில் சனி உச்சம். அம்சத்தில் புதன் உச்சம். இந்த சனி, ஜாதகருக்கு 8, 9-ன் அதிபதி. 5-ஆமிடம் புத்தி ஸ்தானம். அதில் 8-ஆமிட சனி உச்சமானது. ஜாதகரின் மனநிலையை பாதித்துவிட்டது. மேலும் இந்த ஜாதகத் தில் செவ்வாய், ராகு, சனி, கேது என இவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்கின்றனர். குரு, இரு பாவிகளான கேது, சனிக்கிடையே சிக்கி பாபகார்த்தாரி யோகம் பெற்றுள்ளார். சனி, சந்திரனை பார்க்கிறார். அம்சத்தில் சூரியன் நீசம். 5-ஆமிட சனி, பூர்வ ஜென்ம குற்றத்தை சுட்டிக்காட்டுகிறார். சனி, ராகு சாரம் வாங்கியுள்ளார். இந்த ஜாதகரால் இவருடைய தந்தை மிகக் கஷ்டப்படுகிறார். தற்போது சூரிய தசை நடப்பு. குருபுக்தி 2022, ஆகஸ்ட் வரை. அடுத்துவரும் சனி புக்தியில் ஏதோவொரு மாற்றம் உண்டு. அருகிலுள்ள கோவிலில் சரபேஸ்வரரை வணங்கவும். சிவனுக்கு தினமும் விளக்கேற்றி வணங்கவும். மற்றவை இறைவனின் கரங்களில்.

ப் எஸ். பாலு, சென்னை-59.

என் இரண்டாவது மகனுக்கு பல வருடங்களாகப் பெண் தேடியும் அமையவில்லை. வேலையும் சரியாக அமையவ

ப் கண்ணையன், சிதம்பரம்.

என் மகன் ரமேஷ் பாபு நீண்டநாட்களாக மனநிலை சரியில்லாமல் இருக்கிறார். நிறைய பரிகாரம், வைத்தியம் செய்தாகிவிட்டது. இவனுடைய எதிர்காலம், உடல்நிலை பற்றிக்கூறவும்.

Advertisment

ரமேஷ் பாபு 25-3-1983-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. லக்னாதிபதி புதன் நீசபங்கம். இவரின் ஜாதகத்தில் சனி உச்சம். அம்சத்தில் புதன் உச்சம். இந்த சனி, ஜாதகருக்கு 8, 9-ன் அதிபதி. 5-ஆமிடம் புத்தி ஸ்தானம். அதில் 8-ஆமிட சனி உச்சமானது. ஜாதகரின் மனநிலையை பாதித்துவிட்டது. மேலும் இந்த ஜாதகத் தில் செவ்வாய், ராகு, சனி, கேது என இவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்கின்றனர். குரு, இரு பாவிகளான கேது, சனிக்கிடையே சிக்கி பாபகார்த்தாரி யோகம் பெற்றுள்ளார். சனி, சந்திரனை பார்க்கிறார். அம்சத்தில் சூரியன் நீசம். 5-ஆமிட சனி, பூர்வ ஜென்ம குற்றத்தை சுட்டிக்காட்டுகிறார். சனி, ராகு சாரம் வாங்கியுள்ளார். இந்த ஜாதகரால் இவருடைய தந்தை மிகக் கஷ்டப்படுகிறார். தற்போது சூரிய தசை நடப்பு. குருபுக்தி 2022, ஆகஸ்ட் வரை. அடுத்துவரும் சனி புக்தியில் ஏதோவொரு மாற்றம் உண்டு. அருகிலுள்ள கோவிலில் சரபேஸ்வரரை வணங்கவும். சிவனுக்கு தினமும் விளக்கேற்றி வணங்கவும். மற்றவை இறைவனின் கரங்களில்.

ப் எஸ். பாலு, சென்னை-59.

என் இரண்டாவது மகனுக்கு பல வருடங்களாகப் பெண் தேடியும் அமையவில்லை. வேலையும் சரியாக அமையவில்லை. குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறான். அதுவும் எவ்வளவு நாளென்று தெரியாது. எப்போது திருமணம் நடக்கும்? நல்ல வேலை அமையுமா?

பி. செல்வபாபு 16-7-1989-ல் பிறந்தவர். தனுசு லக்னம், தனசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத்திலுள்ள சனி, சந்திரனை 7-ல் உள்ள குரு பார்க்கிறார். இவரின் 8-ஆமிடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் என நான்கு கிரகச் சேர்க்கை. எனவே கிரகயுத்த ஜாதகம். செவ்வாய் 8-ல் நீசம். செவ்வாய் தோஷமுண்டு. செவ்வாய் 5-ஆம் அதிபதி. அவர் 8-ல் நீசமாகி மறைந்ததால் பூர்வ புண்ணிய குற்றமுள்ளது. சூரியன் 8-ல் மறைவு. பித்ரு தோஷ ஜாதகம். சுக்கிரன் 8-ல் உள்ளதால் களத்திரதோஷம் உள்ளது. சூரியன், செவ்வாய் ஒரே ராசியில். எனவே களத்திர தோஷ உண்டு. லக்னத்திலுள்ள சனி, சந்திரன் புனர்பூ யோகம் தருகின்றனர். இந்த ஜாதகருக்கு வேலை கிடைப்பதும், அதில் நிலைத்திருப்பதும் கொஞ்சம் சிரமம். கிடைத்த வேலையில் நீக்குபோக்காக இருந்து வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 8-ஆம் அதிபதி சந்திரனை, குரு பகவான் பார்ப்பதால் தீர்க்காயுள் உண்டு. அதுபோல் களத்திரமும் கிடைக்கும். எவ்விதமான பெண் அமைவார் என்றால், சற்று உடல் ஊனமுற்ற பெண்தான் அமைவார். ஒரு குறையுள்ள பெண் அமைந் தால் மட்டுமே இவருக்குத் திருமணம் நடக்கும். நடப்பு சந்திர தசை. மேலும் தனுசு ராசிக்கு ஏழரைச் சனி. இவருடைய ஜாதகத்தில் நிறைய குறைகள் உள்ளன. தென்காசி விஸ்வநாத சுவாமியை தினமும் விளக்கேற்றி வணங்குங்கள். பசுவுக்கு அறுகம்புல் கொடுக்கவும். கோளறு பதிகம் கூறவும். வரும் 2022, செப்டம்பருக்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சனிக் கிழமைதோறும் சனீஸ்வரரை வணங்கவும்.

Advertisment

gg

ப் பரிமளா, சிதம்பரம்.

எனக்கு 44 வயது. திருமணமாக வில்லை. இனி திருமணம் நடக்குமா அல்லது வாழ்க்கையே இவ்வளவுதானா?

அப்பா இறந்துவிட்டார். வயதான அம்மாவுடன் நான் தனியாக சிரமப் படுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்கும், அனுப்பிய ஜாதகத்திற்கும் சம்பந்தேமே இல்லை. ஜோதிடரை சந்தேகியுங்கள்; ஜோதிடத்தை சந்தேகிக்காதீர்கள். சரியான ஜாதகம், பிறந்த தேதி அனுப்பினால்தான் பதில் கூறமுடியும்.

ப் சுகுணா, திருவண்ணாமலை.

நான் குரூப்-2 தேர்வெழுத உள்ளேன். அதில் தேர்ச்சிபெற்று அரசு வேலை கிடைக்குமா? அல்லது டீச்சர் ட்ரெய் னிங் முடித்துள்ளதால், அது சம்பந்த மான வேலை கிடைக்குமா?

நீங்கள் 24-6-1992-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி. லக்னத்துக்கு 2, 7-ஆம் அதிபதி சுக்கிரன் 3-ஆமிடத்திலிருந்து தசை நடத்துகிறார். நடப்பு சுக்கிர தசையில் சந்திர புக்தி 2022, அக்டோபர் வரை. சந்திரன், சனியின் பார்வை யில் உள்ளார். இந்த காலகட்டத்தில், யாராவது அரசுவேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி, உங்களை ஏமாற்றும் வாய்ப்புள்ளது. வீணாக பணத்தை இழந்துவிடாதீர்கள். உங்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடினம். கல்வி சார்ந்த வேலையே கிடைக்கும். 2024-க்குப்பிறகு மேற்கல்வி கற்க முனைவீர்கள். இப்போது எழுதும் தேர்வு விரய நிலையைக் கொடுக்கும். நல்ல வேலை கிடைக்க, பிரதோஷ வேளை களில், நெய் விளக்கேற்றினால் நன்மை கிட்டும்.

ப் ஒரு ஜாதகர், திருவண்ணாமலை.

என் மகனின் கல்வி, உடல்நிலை எவ்வாறிருக்கும்? சிவகுமரன் 29-2-2012-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதி பதி செவ்வாய் உச்சம். கேதுவுடன் குருவின் பார்வையை லக்னம் பெறுகிறது. குரு பார்வை லக்னம், ராசிக்குக் கிடைக்கும் ஜாதகர்கள் எப்படியாவது முன்னேறிவிடுவர். நடப்பு புதன் தசை- 4-ஆமிடத்தில் ராகுவுடனும், செவ்வாய் பார்வையிலும் நடத்துகிறார். எனவே சற்று கல்வித் தடை, பள்ளி, வீடு இடமாற்றம், கல்வி சம்பந்தமான விரயச் செலவு, நிறைய குறும்புத்தனம் எல்லாம் சேர்ந்து நடக்கும். இவ்வாறு குறும்பு, சேட்டை செய்யும் குழந்தைகளை சமாளிக்க ஒரே வழி, கிருஷ்ணரை வணங்குவதுதான். வெண்ணெய், அவல் வைத்து வணங்குங்கள். நந்தகுமரனின் குணம், கல்வி, தந்தை பற்றிக் கூறவும்?

1-4-2021-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு. கூடவே உச்ச சுக்கிரனும் நீசபங்கம் பெற்ற புதனும் உள்ளனர். குரு 6-ஆமிடத்தில் சனியுடன் இருப்பதால், நீசபங்கமாகியுள்ளார். இந்த ஜாதகத்தில் சனி, சூரியன் பார்வையுள்ளது. எனவே இந்த குழந்தைக்கும் தந்தைக்குமிடையே உறவு சீராக இராது. சனி, 8-ஆமிடத்தைப் பார்ப்ப தால் நல்ல ஆயுள் உண்டு. 10 வயதுவரை நடக்கும் சனி தசை, சற்று உடல் நலக்குறைவு மற்றும் கல்வியில் கவனமின்மையைக் கொடுக்கும். அடுத்துவரும் தசைகள் நல்ல பலன் தரும். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைந்துள்ள தால், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபட வேண்டும். சூரியனும், 2-ஆம் அதிபதி புதனும் 8-ல் மறைந்துள்ளதால், அவ்வப் போது கண் பார்வையை சோதிப்பது நல்லது.

ப் விக்னேஷ், மும்பை.

தற்போது மும்பையில் பணிபுரிகிறேன். ஓரிரு ஆண்டுகளில் சென்னையில் வேலை செய்யவோ, அல்லது சொந்த தொழில் செய்யவோ வாய்ப்புள்ளதா? அரசு வேலை கிடைக்குமா?

நீங்கள் 13-10-1986-ல் பிறந்தவர். துலா லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் இருப்பதால் காலசர்ப்ப தோஷ ஜாதகம். நடப்பு குரு தசை சந்திர புக்தி 2023 வரை. இதில் பிறந்த இடத்தில் வீடு வாங்குவீர்கள். அடுத்து குரு தசை ராகு புக்தியில் வெளியூரிலிருந்து வந்துவிடுவீர்கள். 2023, டிசம்பர் மாதம் மாறுதலுண்டு. அடுத்துவரும் சனி தசையில் சொந்தத் தொழில் அமையும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம். சனியோடு பரிவர்த்தனையும் உள்ளது. 10-ஆமதிபதி சந்திரன், மகரத்திலிருந்து தன் வீட்டைப் பார்ப்பதால் சொந்தத் தொழில் யோகமுண்டு. குரு வக்ரமாக இருப்பதால், திருவக்கரை வக்ர காளியை வணங்குவது மிகவும் நன்று. நடப்பு ஏழரைச்சனி. சனிக் கிழமை சனீஸ்வரரை வணங்கவும்.

செல்: 94449 61845

bala080422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe