Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-22

ப் சி. நடராஜன், புதுச்சேரி.

தேவா என்னும் ஜாதக ரின் உடல்நலம் அடிக்கடி கெடுகிறது. படித்த படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புள்ளதா?

Advertisment

25-1-1995-ல் பிறந்தவர், மிதுன லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 5-ஆமிடத்தில் சந்திரன், ராகு. 5-ஆமதி பதி சுக்கிரன் 6-ல் உள்ளார். சுக்கிரனை சனி, செவ்வாய் இருவ ரும் பார்க்கிறார்கள். எனவே இவருக்கு எப் போதுமே உடல்நலக் குறைவு இருந்து கொண்டே இருக்கும். படிப்புகேற்ற வேலை கிடைக்கும். நடப்பு புதன் தசை, கேது புக்தி. அடுத்து 2023, ஆகஸ்ட் மாதம் வரும் சுக்கிர புக்தியில் இவருக்கு உடல்நிலை நன்கு குணமாகும். புதன் தசை புதன் புக்தியில் வேலை கிடைத்துவிடும். தனியார் கம்பெனியில் மருத்துவம் சம்பந்த வேலை கிடைக்கும். நோய் தீர விரும்பு பவர்கள், சிவன் சந்நிதி பின்புறமுள்ள லிங்கோத்பவமூர்த்தியை வழிபடவேண்டும்.

77

ப் ஆர். சித்தானந்தன், புதுச்சேரி.

மறுமணத்திற்குப் பரிகாரம் கூறவும்.

30-7-1988-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். ஜாதகத்தில் லக்னத்தில் கேது; 7-ல் ராகு. சனி, சந்திரன் பார்வை. புனர்பூ யோக ஜாதகம். நடப்பு குரு தசை. குரு 8-ஆமதிபதி. எனவே அவர் தசை ஆரம்பித்ததிலிருந்தே மனம் சஞ்சலமாகவே இருந்திருக்கும். லக்னாதிபதி சூரியன் 12-ல் அம்சத்தில் நீசம். தற்போதைய குரு தசையில் சுக்கிர புக்தி 2022 அக்டோபர் வரை. அதற்குள் மறுமணம் நடந்து விடும். தாலிதானம் அவசி யம். குரு, சனி பார்வை பிரம்

ப் சி. நடராஜன், புதுச்சேரி.

தேவா என்னும் ஜாதக ரின் உடல்நலம் அடிக்கடி கெடுகிறது. படித்த படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புள்ளதா?

Advertisment

25-1-1995-ல் பிறந்தவர், மிதுன லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 5-ஆமிடத்தில் சந்திரன், ராகு. 5-ஆமதி பதி சுக்கிரன் 6-ல் உள்ளார். சுக்கிரனை சனி, செவ்வாய் இருவ ரும் பார்க்கிறார்கள். எனவே இவருக்கு எப் போதுமே உடல்நலக் குறைவு இருந்து கொண்டே இருக்கும். படிப்புகேற்ற வேலை கிடைக்கும். நடப்பு புதன் தசை, கேது புக்தி. அடுத்து 2023, ஆகஸ்ட் மாதம் வரும் சுக்கிர புக்தியில் இவருக்கு உடல்நிலை நன்கு குணமாகும். புதன் தசை புதன் புக்தியில் வேலை கிடைத்துவிடும். தனியார் கம்பெனியில் மருத்துவம் சம்பந்த வேலை கிடைக்கும். நோய் தீர விரும்பு பவர்கள், சிவன் சந்நிதி பின்புறமுள்ள லிங்கோத்பவமூர்த்தியை வழிபடவேண்டும்.

77

ப் ஆர். சித்தானந்தன், புதுச்சேரி.

மறுமணத்திற்குப் பரிகாரம் கூறவும்.

30-7-1988-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். ஜாதகத்தில் லக்னத்தில் கேது; 7-ல் ராகு. சனி, சந்திரன் பார்வை. புனர்பூ யோக ஜாதகம். நடப்பு குரு தசை. குரு 8-ஆமதிபதி. எனவே அவர் தசை ஆரம்பித்ததிலிருந்தே மனம் சஞ்சலமாகவே இருந்திருக்கும். லக்னாதிபதி சூரியன் 12-ல் அம்சத்தில் நீசம். தற்போதைய குரு தசையில் சுக்கிர புக்தி 2022 அக்டோபர் வரை. அதற்குள் மறுமணம் நடந்து விடும். தாலிதானம் அவசி யம். குரு, சனி பார்வை பிரம்மஹத்தி தோஷம் கொடுத்துள்ளது. இராமேஸ்வரம் சென்று நவகிரக பூஜை செய்யவேண்டும். 8-ஆமிடத்தில் செவ்வாய் இருப்பது கடுமையான தோஷ மாகும். மறுமணம் சிறக்க, மயிலாடுதுறை ரயில்நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீடடர் தொலை விலுள்ள மாப்படியில், சுமங்கலி காளி கோவிலில் பிரார்த் தனை செய்து வழிபட வேண்டும்.

ப் சி. முருகன், சிங்கா நல்லூர், கோவை.

செவ்வாய் தசை யில் ராகு புக்தி நடக்கிறது. இது எப்படி யிருக்கும்?

செவ்வாய் 10-ல் இருந்து தசை நடத்து கிறார். (நீங்கள் அம்சம் கொடுக்காததால் சாரம் தெரியவில்லை). ராகு 8-ஆம் வீட்டில் உள்ளார். எப்போதுமே செவ்வாய் கிரக தசையில் ராகு புக்தி சிறக்காது. எனவே இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலும் ராகுவோடு சூரியன் சேர்க்கையும் உள்ளது. ஒருமுறை இராமேஸ்வரம் சென்று பித்ரு பரிகாரம் செய்யவும். வயதான முதியவர்களுக்கு அன்னமும் ஆடையும் கொடுக்கவும். பயணங்களின்போது கவனம்தேவை.

ப் ஏ.ஆர். சஞ்சய், கூட்டேரிப்பட்டு, புதுச்சேரி.

என் மகன் கோகுல் 18-5-2010-ல் பிறந் தான். அவன் பிறப்பதற்கு முன்புவரை பணப்பிரச்சினை இல்லாமல், கேட்பவ ருக்குக் கொடுக்குமளவு இருந்தேன். அவன் வளர வளர பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு தற்போது மூன்று லட்சம் கடன். நானும் மனைவியும் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும் போதவில்லை. இருக்கும் மூன்று சென்ட் இடத்தை விற்றுக் கடனை அடைக்கலாம் என்றாலும் நிலம் விற்பனை யில் தடை வருகிறது. என் மகன் எதிர் காலம் எப்படியிருக்கும்? நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்.

உங்கள் மகன் ரிஷப லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். பிறக்கும்போது 8-ஆமிட அதிபதி குரு தசை. அதனால் அவரின் பெற்றோர் மிகுந்த சிரமத்தை அடைந்துள்ள னர். 2021, மார்ச் மாதம் முதல் சனி தசை ஆரம்பம். இதில் சுயபுக்தி 2024 மார்ச் வரை. பிறகு வரும் புதன் புக்தியில் பூர்வீக இடமாற்றம் உண்டு. வரும் சித்திரை மாதம், அனேகமாக மனை விற்பனை உண்டு. சனி தசையில் சுயபுக்தி சென்றபிறகு உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். படிபடியாக பெற்றோர் முன்னேறுவர். கவலை வேண்டாம். உங்கள் மகனின் மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி. காலையில் காகத்துக்கு சிறிது உணவைக் கொடுத்துவர துன்பம் தீரும். பணவரவுக் குறையுள்ளவர்கள் வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகனுக்கு செவ்வாய்க்கிழமை நெய்தீபமேற்றிவர பணவரவு மேம்படும்.

ப் பட்டம்மாள், கடலூர்.

என் மகன் கோபால கிருஷ்ணன் திரும ணம் எப்போது நடக்கும்? தோஷம் உள் ளதா? கலப்புத்திருமணம் அமையுமா?

உங்கள் மகன் 28-1-1993-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. நாகதோஷம் உள்ளது. லக்னத்துக்கு 8-லும், ராசிக்கு 4-லும் செவ்வாய் இருப்பதால், செவ்வாய் தோஷமும் உள்ளது. சனி, 7-ஆமதிபதி சுக்கிரனைப் பார்ப்பதால் தாமதத் திருமணம். 5, 7-ஆமதிபதிகள் பார்த் தாலும், இதில் குரு சம்பந்தம் இருப்பதால், உங்கள் குடும்பத்தில் நன்கு அறிமுகமான பெண் அமைவார். நடப்பு கேது தசையில் செவ்வாய் புக்தி 2022, ஜூன் மாதம் வரை. இதற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அது இல்லாவிடில் 2023, ஜூன் மாதத்திற் குப்பிறகு ஒரு வருடத்திற்குள் 2024-க்குள், குரு புக்தியில் திருமணம் நடக்கும். விநாயகரை வணங்கவும். 7-ஆமிடத்தில் ராகு- கேது இருப்பவர்கள் காஞ்சிபுரம், ஸ்ரீமகா காளேஸ்வரரை வணங்கவும். மிகவும் நல்லது.

ப் ஆர். ஜெய சரஸ்வதி, திருச்சி.

என் மகன் ஜாதகத்தையும், அவனுக்குப் பார்த்துள்ள பெண் ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். பொருத்தம் பார்த் துக் கூறவும். குழந்தை பாக்கியம், அரசு வேலை அமைப்பு பற்றியும் கூறவும்.

மகன் ஆர். மோகன் ராஜ் 11-9-1988-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். நீங்கள் பார்த்துள்ள பெண் பி. மீனா 7-6-1999-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். இருவருக்கு நட்சத்திரப் பொருத்தம் உட்பட ஏழு பொருத்தங்கள் உள்ளன. இருவருக்கும் ஒரே லக்னம். சமசப்தம ராசி. பையனுக்கும் பெண்ணுக்கும் ராசிக்கு எட்டில் செவ்வாய். தோஷம் சரியாகி விட்டது. பையனுக்கு நாகதோஷம் உள்ளது. ராசியில் கேது; 7-ல் ராகு. பெண் ணுக்கு 7-ஆமதிபதியுடன் ராகு; 7-ல் கேது. இவ்வித நாகதோஷம் சமன்பாடு அடையுமா என்பதில் சற்று சந்தேகம் உண்டு. இருவருக்கும் மருத்துவ உதவியுடன் தான் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. பெண்ணுக்கு அரசுப் பணிக்கு வாய்ப்புண்டு. பையனுக்கு அரசுப்பணி கடினம்தான். திருச்சி ரெங்கநாத பெருமாளையும் கருடனையும் வணங்கவும். பையனுக்கு ராகு தசையில் புதன் புக்தி 2024, ஏப்ரல் வரை. இதற்குள் திருமணம் நடந்துவிடும்.

ப் எஸ், திருமலைச்சாமி, திருப்பூர்.

என் மகன் பாலாஜி ஆராய்ச்சிப் படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். எதிர் வீட்டில் வசிக்கும் ஹரிதா டாக்டர் படிப்பு முடித்து மேற்படிப்புக்கு தேர்வெழுதிக் கொண்டிருக்கிறார். எங்கள் இரு குடும்ப மும் 26 வருடங்களாகப் பழக்கமுள்ள வர்கள். மேற்படி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புகிறோம். தங்கள் ஆலோசனை தேவை.

பையனுக்கும் பெண்ணுக்கும் பரிபூரண சம்மதமென்றால் தாராளமாக மணம் செய்யுங் கள். இருமனம் சேர்ந்தபிறகு அங்கு ஜாதகத் திற்கு வேலையில்லை. எனினும் உங்கள் திருப்திக்குப் பார்த்தால், இருவருக்கும் புதனே லக்னாதிபதியாக வருகிறார். நட்சத்திரப் பொருத்தமுள்ளது. சனி, செவ்வாய் பார்வை; ஆயுள் தீர்க்கம்; குழந்தைப் பேறு சற்று தடையாகிக் கிடைத்தல் என எல்லாம் பொருந்திப் போகிறது. ஒருமுறை திருச்செங் கோடு கோவிலுக்கு அழைத்துச்சென்று, அங்குள்ள நாகருக்கு மஞ்சள், குங்குமம் பூசவும். (இது சர்ப்பதோஷம்; இருவருக்கும் சரியாக வரவில்லை) மேலும் வெள்ளியில் சிறு நாகர் வாங்கி, கோவில் உண்டியலில் செலுத்த வும். இது விருப்பத் திருமணம். ஆதலால் தாலி கட்டியவுடன், (கூடியமட்டும் கோவிலில் தாலி கட்டுவது நல்லது) இரண்டு அறுகம்புல் மாலை வாங்கி பசுவின் கழுத்தில் போட்டு, வலம்வந்து வணங்கவேண்டும். புது வஸ்திரம் பசுவுக்கு சுற்றிவிடவும். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். குலதெய்வப் பிரார்த் தனை அவசியம்.

செல்: 94449 61845

bala010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe