Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-21

ப் தனலட்சுமி மோகன்ராஜுலு, சென்னை.

என் மகனுக்கு 2018-ல் திருமணம் நடந்து, 2019-ல் ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணம் நடந்ததிலிருந்தே கணவன்- மனைவிக் கிடையே சலசலப்பு இருந்தது. நாளாக நாளாக சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால் 2020 முதல் அவள் குழந்தையுடன் தாய்வீட்டில் சென்று தங்கிவிட்டாள். மருமகள் மீண்டும் எங்களுடன் வாழவருவாளா? அல்லது மறுமணம் செய்யும் நிலை வருமா?

Advertisment

மகன் தினேஷ் 18-12-1985-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். தற்போது ஏழரைச்சனி. மருமகள் ரேகா 16-12-1990-ல் பிறந்தவர். மேஷ லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 6-ல்; கூடவே சனி. 7-ஆமதிபதி குரு நீசபங்கம். பெண் ஜாதகத்தில், லக்னாதிபதி செவ்வாயு டன் சனி. கூடவே 7-ஆமதிபதி சுக்கிர னும் உள்ளார். இந்தப் பெண் கணவருடன் பாசமாகவும், கோப மாகவும், பிடிவாதமாக வும் இருப்பார். கணவன் தனக்கு மட் டுமே வேண்டுமென நினைப்பார். பைய னுக்கு தாயார் முக்கிய மாகத் தோன்றுவார். இந்த ஒரு விஷயத்தால் தான் இருவருக்கும் சண்டை வந்து பிரிந் திருக்கிறார்கள். இருவரையும் சில வருடங்கள் தனிக்குடித்தனம் வைக்கவும். இப்போதைய தசாபுக்திப்படி இருவரும் பிரிந்திருக்கும் காலம்தான். தற்காலிகப் பிரிவாக இருக்கட்டும். அவர்களை இப்போது தனியாக வாழவிடுங்கள். விவாகரத்து எனும் பேச்சே வேண்டாம். இந்த ஜாதகர்களுக்கு ஒரே பரிகாரம்- அவரவர் பெற்றோர

ப் தனலட்சுமி மோகன்ராஜுலு, சென்னை.

என் மகனுக்கு 2018-ல் திருமணம் நடந்து, 2019-ல் ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணம் நடந்ததிலிருந்தே கணவன்- மனைவிக் கிடையே சலசலப்பு இருந்தது. நாளாக நாளாக சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால் 2020 முதல் அவள் குழந்தையுடன் தாய்வீட்டில் சென்று தங்கிவிட்டாள். மருமகள் மீண்டும் எங்களுடன் வாழவருவாளா? அல்லது மறுமணம் செய்யும் நிலை வருமா?

Advertisment

மகன் தினேஷ் 18-12-1985-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். தற்போது ஏழரைச்சனி. மருமகள் ரேகா 16-12-1990-ல் பிறந்தவர். மேஷ லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 6-ல்; கூடவே சனி. 7-ஆமதிபதி குரு நீசபங்கம். பெண் ஜாதகத்தில், லக்னாதிபதி செவ்வாயு டன் சனி. கூடவே 7-ஆமதிபதி சுக்கிர னும் உள்ளார். இந்தப் பெண் கணவருடன் பாசமாகவும், கோப மாகவும், பிடிவாதமாக வும் இருப்பார். கணவன் தனக்கு மட் டுமே வேண்டுமென நினைப்பார். பைய னுக்கு தாயார் முக்கிய மாகத் தோன்றுவார். இந்த ஒரு விஷயத்தால் தான் இருவருக்கும் சண்டை வந்து பிரிந் திருக்கிறார்கள். இருவரையும் சில வருடங்கள் தனிக்குடித்தனம் வைக்கவும். இப்போதைய தசாபுக்திப்படி இருவரும் பிரிந்திருக்கும் காலம்தான். தற்காலிகப் பிரிவாக இருக்கட்டும். அவர்களை இப்போது தனியாக வாழவிடுங்கள். விவாகரத்து எனும் பேச்சே வேண்டாம். இந்த ஜாதகர்களுக்கு ஒரே பரிகாரம்- அவரவர் பெற்றோர்களும் அவர்களிடமிருந்து விலகியிருக்கவும்.

ப் பி.அய்யாருத் தேவர், உசிலம்பட்டி.

பர்னிச்சர் தொழில் மந்தமாக இருக்கிறது. நல்ல வேலையாட்கள் அமையவும், தொழிலில் முன்னேற்றம் காணவும் வழிகூறவும். ஆரோக்கியம் எப்படியிருக்கும்?

விருச்சிக லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். ராசியில் கேது; ராசிக்கு 7-ல் ராகு. ராசியில் கேது இருப்பதால், உங்களுக்கு சற்று சந்தேக புத்தி இருக்கும். அதனால் நல்ல வேலையாட்கள் அமைந்தாலும், அவர் களால் நிலைத்திருக்க முடியாது. உங்கள் ஜாதகத்தில் 8-ஆமதி பதி புதன் 6-ல் மறைவு. 12-ஆமதிபதி சுக்கிரன் 8-ல் மறைவு. எனவே இரு விபரீத ராஜயோக ஜாதகம்தான். நடப்பு ராகு தசை. ராகு எட்டாமிடத்தில் இருந்து தசை நடத்துவதால், வாழ்வு சற்று பின்னடைவாக உள்ளது. மதுரை குபேர பத்ரகாளியை வணங்கவும். நடப்பு ராகு தசை, குருபுக்தி. இதில் வேலை, தொழில் பாதிப்பும், உடல்நிலை கவலையும் ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிபுக்தியில் 2023, ஜூலையில் நல்ல மாற்றங்கள் வரும். சனி அம்சத்தில் உச்சம். அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் லக்னாதிபதி சற்று சுமாராகவும், பணியாட்களைக் குறிக்கும் 3-ஆம் அதிபதி சனி பலமாகவும் உள்ளதால், வேலையாட்கள் சரியாக அமைவது சற்று கஷ்டம்தான். ஆஞ்சனேயரை வணங்கவும். வேலையாட்கள் நன்கு அமைய தலைச்செங்காடு என்னும் தலம் சென்று வணங்கவும்.

ப் அபினேஷ், உசிலம்பட்டி.

Advertisment

தனியார் துறை வங்கியில் வேலை செய்கிறேன். அரசு வேலை கிட்டுமா? திருமணம் எப்போது நடக்கும்?

11-6-1993-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கும்ப ராசி, சத்ய நட்சத்திரம். சூரியன் ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் அரசு வேலை கிடைப்பது கடினம். பணம் புழங்கும் வங்கிப் பணியே ஏற்றது. சனி, செவ்வாய் பார்வை. சனி 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால், திருமணம் சற்று தாமதமாகும். உங்களுக்கு ஒரு விருப்பத் திருமணம் நடக்கவிருந்து அது முறிந்துபோயிருக்கும். நடப்பு சனி தசை சனி புக்தி. பிறகு குரு புக்தி 2024, நவம்பர் மாதம் ஆரம்பிக்கும். தாய்வழி உறவில் திருமணம் நடக்கும். ஏழரைச்சனி மற்றும் சனி தசை நடப்பு. சனிக்கிழமைதோறும், பைரவருக்கு 19 மிளகைப் பொட்டலம் கட்டி, எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வணங்கவும்.

Q&A

ப் பேச்சி என்ற ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.

பூர்வீக சொத்து கிடைக்குமா? வீடு கட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாயாருக்கு உடல்நலமில்லை.

21-2-1977-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதி பதி குரு 6-ல் மறைவு. ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் உச்சம். நடப்பு சந்திர தசை. 8-ஆமிட தசை 4-ல். எனவே, நீங்கள் வீடு கட்டுவதில் மிகுந்த இடர்ப்பாடுகளை சந்திக்கிறீர்கள். உங்கள் பூர்வீக சொத்து கிடைக்கும். நடப்பு சந்திர தசை புதன் புக்தி 2023, ஏப்ரல் வரை. அதற்குள் கிடைத்துவிடும். உங்களின் சந்திர தசையே தாயாரின் உடல்நலக் குறைவுக்குக் காரணமாகும். உங்கள் ஊரிலுள்ள விஷ்ணு, துர்க்கையை திங்கட்கிழமைதோறும் வழிபட்டு வரவும். மேலும் சிவன் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக்கொடுக்கவும். உங்களுக்கு செவ்வாய் உச்சம். எனவே மனை சம்பந்தமான உபதொழில் செய்யலாம்.

ப் ஒரு வாசகர், நாட்டுத்துறை, பேராவூரணி.

திருமண விஷயத்தில் தடை, தாமதம் ஏற்படுகிறது. எப்போது திருமணம் நடக்கும்? என்ன தொழில்?

8-10-1989-ல் பிறந்தவர். கன்னி லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். லக்னாதிபதி புதன் உச்சம். லக்னத்தில் சூரியன், செவ்வாய் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். சனி, செவ்வாய் பார்வை. 7-ஆமதிபதி குருவை 5-ஆமதிபதி சனி பார்க்கிறார். சனி, சந்திரன் இணைவு. இவ்வளவு கிரக இணைப்புகளும், உங்கள் விருப்பத் திருமணத்தை குறி காட்டுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்வீர்கள். ஒருமுறை திருப்பைஞ்ஞீ- சென்று, பரிகாரம் செய்துவிட்டு வரவும். உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு தாலி காணிக்கை செலுத்தவும். நடப்பு ராகு தசை ராகு புக்தி. 2023, செப்டம்பர் வரை. அதற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். அந்தப் பெண்ணுக்கும் உங்களைப்போலவே திருமணம் தட்டிப் போய்க்கொண்டே இருந்திருக்கும். உங்களுக்கு அரசுப் போக்குவரத்து சார்பான ஒப்பந்தப் பணி சரியாக இருக்கும். லட்சுமி நரசிம்மரை புதன்கிழமைதோறும் வணங்க வாழ்வு நலம்பெறும்.

ப் சூர்யநாராயண சர்மா, சென்னை-24.

மகள், மருமகன் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். மாப்பிள்ளைக்கு சனி தசை. எதிர்காலம் எப்படியிருக்கும்? மகளுக்கு சனி தசை வரபோகிறது. தோல் வியாதி குணமாகுமா?

மருமகன் ஹரிஹரன் 15-7-1965-ல் பிறந்த வர். ரிஷப லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். நடப்பு சனி தசை- ரிஷப லக்னத் துக்கு தர்மகர்மாதிபதி தசை- 10-ல் ஆட்சி. சனி தசையில் சுக்கிர புக்தி 2024, டிசம்பர் வரை. இந்த காலகட்டத்தில் வீடு, மனையில் முதலீடு செய்வார். இவருக்கு சனி தசை நல்ல பலன்களையே கொடுக்கும். அடுத்துவரும் குரு தசையில் சற்று கவனம் தேவை. நடப்பு ஏழரைச்சனி. இதில் சந்திர புக்தி வரும்போது கொஞ்சம் கவனம் தேவை. ஏதாவது பொருள் இழப்பு ஏற்படும். அப்போது சிவனுக்கு திங்கட்கிழமைதோறும் பாலாபிஷேகமும், சனிக்கிழமை பைரவருக்கு 19 மிளகைக் கட்டி நெய்தீபமும் ஏற்றவும். மகள் பார்வதி 1-1-1968-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். சூரியன், குரு பரிவர்த்தனை. செவ்வாய் உச்சம். நடப்பு குரு தசையில் ராகு புக்தி 2022, மே மாதம் வரை. விரயாதி பதியாகி குரு ஆரோக்கிய ஸ்தானத்தில் அமர்ந் துள்ளதாலும், 5, 6-ஆம் அதிபதிகள் சேர்க்கை யாலும் இவருக்கு எப்போதுமே சற்று உடல்நல பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். குரு தசையில் ராகு புக்தியாதலால் தோல்வியாதி ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் சனி தசை நன்றா கவே அமையும். சனி அம்சத்தில் உச்சம். தோல் வியாதி உடையவர்கள், ஸ்ரீபெரும் புதூர் சென்று, அங்கு மாதந்தோறும் திருவா திரை நட்சத்திரத்தன்று நடைபெறும் திரு மஞ்சனத் தீர்த்தத்தை பயன்படுத்தினால் தோல் வியாதி குணமாகும்.

bala250322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe