Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-20

ஜெ. விஜயலட்சுமி, சேலம்.

என் மூத்தமகனுக்கு 30 வயதில் திருமணம் நடந்து 31 வயதில் விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் நடக்குமா?

Advertisment

கோவர்த்தன் 3-2-1984-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவரின் 7-ஆமதிபதி சனி, ராசியில் உச்சம்; அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். இவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் இணைவு. மேலும் 5, 7-ஆமதிபதிகள் சம்பந்தம். 7-ஆம் வீட்டில் விரயாதிபதி சந்திரன் அமர்வு. இக்காரணத்தால் ஒரு திருமணம் விரயமாகிவிட்டது. நடப்பு சனி தசையில் கேது புக்தி. 2023, ஏப்ரலில் சுக்கிரபுக்தி ஆரம்பம். அதில் இவருக்கு, மறுமணப் பெண் அமைவாள். இது பித்ரு தோஷ ஜாதகம். மற்றும் பிரம்மஹத்தி தோஷமும் உள்ளது. பித்ரு தோஷத்திற்கு கும்பகோணம் அருகிலுள்ள ஆவூர் பஞ்ச பைரவர்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளவும். மறுமணம் இஷ்ட திருமணமாக நடக்கும்.

செந்தில், திருக்கோவிலூர்.

நான் பிறந்ததுமுதல் மிகவும் கஷ்டப் படுகிறேன். என்ன தொழில் செய்ய லாம்? அரசுவேலை கிடைக்குமா?

விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். சனி, சந்திரன் பரிவர்த்தனை. புனர்பூ யோகம். எதைச் செய்தாலும் மறுபடியும் செய்யும் படியாகும்

ஜெ. விஜயலட்சுமி, சேலம்.

என் மூத்தமகனுக்கு 30 வயதில் திருமணம் நடந்து 31 வயதில் விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் நடக்குமா?

Advertisment

கோவர்த்தன் 3-2-1984-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவரின் 7-ஆமதிபதி சனி, ராசியில் உச்சம்; அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். இவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் இணைவு. மேலும் 5, 7-ஆமதிபதிகள் சம்பந்தம். 7-ஆம் வீட்டில் விரயாதிபதி சந்திரன் அமர்வு. இக்காரணத்தால் ஒரு திருமணம் விரயமாகிவிட்டது. நடப்பு சனி தசையில் கேது புக்தி. 2023, ஏப்ரலில் சுக்கிரபுக்தி ஆரம்பம். அதில் இவருக்கு, மறுமணப் பெண் அமைவாள். இது பித்ரு தோஷ ஜாதகம். மற்றும் பிரம்மஹத்தி தோஷமும் உள்ளது. பித்ரு தோஷத்திற்கு கும்பகோணம் அருகிலுள்ள ஆவூர் பஞ்ச பைரவர்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளவும். மறுமணம் இஷ்ட திருமணமாக நடக்கும்.

செந்தில், திருக்கோவிலூர்.

நான் பிறந்ததுமுதல் மிகவும் கஷ்டப் படுகிறேன். என்ன தொழில் செய்ய லாம்? அரசுவேலை கிடைக்குமா?

விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். சனி, சந்திரன் பரிவர்த்தனை. புனர்பூ யோகம். எதைச் செய்தாலும் மறுபடியும் செய்யும் படியாகும். தனாதிபதி குரு அம்சத்தில் நீசம். சனி அம்சத்தில் உச்சம். உங்கள் ஜாதகத்தில் சூரியன் 8-ல் மறைவு. எனவே, அரசு வேலை, பற்றி கனவுகாண வேண் டாம். நடப்பு குரு தசை, சுக்கிர புக்தி. இதில் வேலை மாற்றமுண்டு. நீங்கள் மருத்துவம் சார்ந்த தொழிலை மேற்கொள்வது நல்லது. வியாழக்கிழமைதோறும் சிவனுக்கு விளக்கேற்றுங்கள். சதுர்த்திதோறும் விநாயகருக்கு அறுகம் புல் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட, தீராத கஷ்டங்கள் தீரும்.

மா. ராஜேஷ், வேலூர்.

Advertisment

எனக்குத் திருமணம் தாமத மாகிறது. எப்போது நடக்கும்? 17-11-1979-ல் பிறந்தவர்.

ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ஆமதிபதி செவ்வாயும், 4-ஆமதிபதி சூரியனும் பரிவர்த்தனை. சனி, 7-ஆம் வீட்டையும், அதிலுள்ள புதன், சுக்கிரன், சூரியனையும் பார்க்கிறார். எந்த வொரு ஜாதகருக்கும் லக்னாதி பதி, 7-ஆமதிபதி எவ்வகை யிலாவது இணைந்திருப் பின் திருமணம் நிச்சயம் நடக்கும். இந்த ஜாதகத் தில் சனி பார்வை தாமதப் படுத்தி விட்டது. நடப்பு சனி தசையில் சுக்கிர புக்தி. இதில் திருமணம் என்று ஒன்று மிக சிம்பிளாக நடக் கும். அந்தப் பெண்ணின் கணவர் விபத்தில் தவறிய வராக இருப்பார். அல்லது அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்வீர்கள். செவ்வாய், ராகு, கேது, சூரியனுடன் சேர்க்கை வேலூர் ஜலகண்டேஸ் வரர் ஆலயத்தில் தீபமேற்றி வழிபடவும்.

கண்ணையன், சிதம்பரம்.

என் மகன் மனநோயால் பல வருடம் பாதிக்கப்பட்டுள்ளான். அவனை குணப் படுத்த மிகவும் அலைந்துகொண்டிருக்கி றோம். எப்போது குணமடைவார்? என்ன பரிகாரம் செய்யலாம்?

நீங்கள் 17-12-1947-ல் பிறந்தவர். துலா லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். குரு, சனி சம்பந்தம் பிரம்மஹத்தி தோஷம் கொடுக்கிறது. நீங்கள் ஏற்கெனவே நிறைய பரிகாரம் செய்திருப்பதால், திருச்சி, கரூர் சாலையிலுள்ள பேட்டைவாய்த்தலை மத்தியார்ஜுனர் ஆலயம் சென்று, அங்கு தூணிலுள்ள பிரம்மஹத்தி உருவத்தை வணங்கி, கோவிலின் சுவாமி, அம்பாளை யும் வணங்கவும். சனி, சந்திரன் பரிவர்த்தனை. சனி, ராகுவைப் பார்க்கிறார். சனி, ராகு சேர்க்கை, சம்பந்தம் மிக மோசமான ஒன்றா கும். இதனால் எப்போதும் நிம்மதியிழந்து தவிக்கிறீர்கள். சனிக்கிழமையும், சுவாதி நட்சத்திரமும் கூடிவரும் நாட்களில், திருவாலங்குடி சென்று வணங்கவேண்டும். நடப்பு புதன் தசை; இதில் ராகு புக்தி 2023, ஜூலை வரை. ஏதோவொரு மாற்றம் உண்டு.

aa

கே. தியாகராஜன்.

என் எதிர்காலம், உடல்நிலை எப்படியிருக்கும்? பாகப் பிரிவினை சுமுகமாக நடக் குமா?

30-11-1967-ல் பிறந்தவர். கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ராசியில் கேது; ராசிக்கு 7-ல் ராகு. நீங்கள் எப்போதும் சந்தேகப்பட்டு, மிகவும் குழம்பிக் கொள்வீர்கள். உங்கள் 4-ஆமதிபதி சுக்கிரன் 8-ல் நீசபங்கம். எனவே வீடு, வாகனம் வாங்கினால், பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நடப்பு சுக்கிர தசை, சுக்கிர புக்தி. சுக்கிரன் 8-ஆமிடத்தில் இருந்து தசை நடத்துவதால் கவனம் தேவை. சுக்கிரன் நீச பங்கமாகி இருப்பதால், எல்லா செயல்களும் முதலில் அடிவாங்கி பின் சரியாகும். இப்போது பாகப்பிரிவினை நடந்தால், நிறைய சேதாரத் துக்குப்பின் கொஞ்சம் கைக்குக் கிடைக்கும். வெள்ளிக்கிழமைதோறும் வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும். குலதெய்வ வழிபாட்டில் குறை உள்ளது; அதையும் யோசித்து செய்யவும்.

டி. சூரஜ், அருப்புக்கோட்டை.

நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டுள்ளேன். சரியாகப் படிக்க முடியவில்லை. படிப்பது நினைவில் நிற்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறுவே னா? அரசு வேலை கிடைக்குமா?

20-5-2002-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். லக்னத்தில் சூரியன், சனி, ராகு. புத்திக் கூர்மைக்குரிய 5-ஆம் அதிபதி புதன் 12-ல் மறைவு. உயர்கல்விக்குரிய 9-ஆமதிபதி சனி- சூரியன், ராகுவுடன் உள்ளார். மயக்கவியல் சார்ந்த படிப்பு ஏற்புடையதே. நடப்பு சுக்கிர தசை, புதன் புக்தி. எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து முடித்துவிடலாம். தனியார் துறையில் வேலை கிடைக்கும். ஞாபக மறதி உள்ளதாகக் கூறுகிறீர்கள். நினைவாற்றலுக்கு கீழ்க்கண்ட சுலோகம் கூறவும்.

"புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படு த்வம்ச

ஹனுமத் ஸ்மரணாத் பவேத்'.

"சனைச்வர: ராகு கேதூர் மருத்தோதா

தாதா ஹர்தா ஸமீராஜா.'

இதனை மறதியுடைய மாணவர்கள் காலையில் தினமும் ஒன்பதுமுறை கூறவும்.

பி, யோகேஷ் பாலா, உசிலம்பட்டி.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம் பற்றி கூறவும்.

3-7-2001-ல் பிறந்தவர். கும்ப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். சந்திரன் நீசபங்கம். நடப்பு சுக்கிர தசை. இதில் 2022, ஜனவரியிலிருந்து ராகு புக்தி ஆரம்பம். இதில் மேற்கல்வி கற்பீர்கள். அடுத்து 2025-ல் வரும் குரு புக்தியில் வெளிநாடு செல்வீர்கள். அது வேலை சம்பந்தமானதாக அமையும். அனுமன் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் அவசியம். லக்னாதிபதி சனி அம்சத்தில் நீசம். எனவே திங்கட்கிழமைதோறும், ஏதாவது வயதான ஏழைப் பெண்மணிக்கு முடிந்த உதவிசெய்யுங்கள்.

செல்: 94449 61845

bala180322
இதையும் படியுங்கள்
Subscribe