Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-2

சி. ராகுநாத், திருவையாறு.

எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடைபெறும்? நானும் என் சகோதரியும் சேர்ந்து வீடு கட்டிவருகி றோம். பிரச்சினையின்றி முடியுமா? என் அம்மாவுக்கு கண்டம் இருப்பதாக ஒரு ஜோதிடர் கூறினார். அது உண்மையா? நான் கோடீஸ்வரனாகும் யோகமுண்டா?

Advertisment

18-6-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு சனிதசை. சனி 2-ல் உச்சமாகி வக்ரம்; அதனால் நீசம். 2-ஆம் அதிபதி 8-ல் மறைவு. எனவே கோடீஸ்வரராகும் வாய்ப்பு மிகக்குறைவு. வீடு கட்டுமானம் சிலபல இடையூறுகளுக்குப்பின் முடியும். நடப்பு சனி தசையில் சூரிய புக்தி 2022-ல் ஆரம்பித்து ஒரு வருடம் நடக்கும். அப்போது திருமண விஷயத்தில் நெருக்கடி ஏற்பட்ட பெண்ணுடன் கல்யாணம் நடக்கும். அவ்வப் போது சண்டை போட்டுக்கொண்டு, சகோதரி யுடன் ஒற்றுமையாக (?) இருப்பீர்கள். அடுத்து வரும் சனி தசை சந்திர புக்தியில் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவும். குலதெய்வ வழிபாடு அவசியம். உங்கள் குடும்பத்துக்கு வயதான ஒரு பெரியவரின் சாபம் உள்ளது. திருவாரூர் அல்லது திருப்புகளூர் சென்று வணங்கவும்.

ஷாயிலா பானு, அய்யம்பேட்டை.

நான் முஸ்-மாக இருந்தாலும் ஜாதகத்தில் மிக நம்பிக்கையுண்டு. எனக்கு அரசு வேலை கிட்டுமா? திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வேறு திருமணத்துக்கு வாய்ப்புள்ளதா? கோபத்தில் ஒரு குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டேன். அது என்னை பாதிக்குமா?

21-8-1986-ல் பிறந்தவர். தனசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். அரசு வேலைக்கு வாய்ப்பில்லை. நடப்பு புதன் தசை பாதகாதிபதி தசை. புதன் அம்சத்தில் நீசம். உங்கள் ஜாதகப்படி திருமண வாழ்வு திருப்தியாக இராது. அதனால் இன்னொரு திருமணத்திற்கு முயற்சிசெய்ய வேண்டாம். 2021, நவம்பர் மாதத்தி-ருந்து புதன் தசையில் சுக்கிர புக்தி ஆரம்பம்.

சி. ராகுநாத், திருவையாறு.

எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடைபெறும்? நானும் என் சகோதரியும் சேர்ந்து வீடு கட்டிவருகி றோம். பிரச்சினையின்றி முடியுமா? என் அம்மாவுக்கு கண்டம் இருப்பதாக ஒரு ஜோதிடர் கூறினார். அது உண்மையா? நான் கோடீஸ்வரனாகும் யோகமுண்டா?

Advertisment

18-6-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு சனிதசை. சனி 2-ல் உச்சமாகி வக்ரம்; அதனால் நீசம். 2-ஆம் அதிபதி 8-ல் மறைவு. எனவே கோடீஸ்வரராகும் வாய்ப்பு மிகக்குறைவு. வீடு கட்டுமானம் சிலபல இடையூறுகளுக்குப்பின் முடியும். நடப்பு சனி தசையில் சூரிய புக்தி 2022-ல் ஆரம்பித்து ஒரு வருடம் நடக்கும். அப்போது திருமண விஷயத்தில் நெருக்கடி ஏற்பட்ட பெண்ணுடன் கல்யாணம் நடக்கும். அவ்வப் போது சண்டை போட்டுக்கொண்டு, சகோதரி யுடன் ஒற்றுமையாக (?) இருப்பீர்கள். அடுத்து வரும் சனி தசை சந்திர புக்தியில் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவும். குலதெய்வ வழிபாடு அவசியம். உங்கள் குடும்பத்துக்கு வயதான ஒரு பெரியவரின் சாபம் உள்ளது. திருவாரூர் அல்லது திருப்புகளூர் சென்று வணங்கவும்.

ஷாயிலா பானு, அய்யம்பேட்டை.

நான் முஸ்-மாக இருந்தாலும் ஜாதகத்தில் மிக நம்பிக்கையுண்டு. எனக்கு அரசு வேலை கிட்டுமா? திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வேறு திருமணத்துக்கு வாய்ப்புள்ளதா? கோபத்தில் ஒரு குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டேன். அது என்னை பாதிக்குமா?

21-8-1986-ல் பிறந்தவர். தனசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். அரசு வேலைக்கு வாய்ப்பில்லை. நடப்பு புதன் தசை பாதகாதிபதி தசை. புதன் அம்சத்தில் நீசம். உங்கள் ஜாதகப்படி திருமண வாழ்வு திருப்தியாக இராது. அதனால் இன்னொரு திருமணத்திற்கு முயற்சிசெய்ய வேண்டாம். 2021, நவம்பர் மாதத்தி-ருந்து புதன் தசையில் சுக்கிர புக்தி ஆரம்பம். சுக்கிரன் நீசம்; 6-ஆம் அதிபதியும். எனவே மார்புவ- அல்லது கா-ல் நரம்பு சுருட்டிக்கொள்வது அல்லது சிறுநீரகக் கோளாறு என ஏதோவொன்று உங்களை பாதிக்கலாம். இதற்குக் காரணம் முன்செய்த வினையின் பிரதி பலனேயாகும். எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் மனமுருகி மன்னிப்பு கேளுங்கள். விபத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு முடிந்த உதவிசெய்யுங்கள். இறந்த ஏழைகளின் இறுதிச் சடங்குகளுக்கு வேண்டிய பணத்தை மசூதியில் செலுத்தலாம். யாருக்கும் செய்வினை போன்ற கொடிய செயல்களைச் செய்யக்கூடாது. அது மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Advertisment

ww

டி. பாலசுகந்தி, விருதுநகர்.

எனது மகன் தன் முயற்சியாலும், கடவுள் போல் உள்ள ஒருவரின் உதவியாலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் தேர்ச்சிபெற்று, தற்போது கரக்பூர் ஐ.ஐ.டி-யில் ஆராய்ச்சி மாணவ ராகப் பயின்றுவருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவேண்டுமென்பது அவரது ஆசை. ஒருமுறை தேர்வெழுதி தோல்வி யடைந்துவிட்டார். மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதா?

மகன் டி. பிரவின் பாலாஜி 7-3-1997-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னத்தில் செவ்வாய், ராகு; 7-ல் புதன், சனி, கேது. காலசர்ப்ப தோஷ ஜாதகம். 5-ல் குரு நீசம்- சனியுடன் பரிவர்த்தனை. எனவே நீசபங்கம். லக்னாதிபதி புதன் குரு சாரத்தில் நிற்பதால், புதனை நீசபங்கமாக எடுத்துக்கொள்ளலாம். குருவின் பார்வை 9, 11, லக்னத்துக்குக் கிடைப்பதால், ஜாதகர் உயர்கல்வியில் மிக மேன்மை பெற்றுள்ளார். எனினும் சனியின் பார்வையும் 9-ஆமிடத்தில் விழுவதால், உயர்கல்வி இழுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பு குரு தசை, புதன் புக்தி. 2023, செப்டம்பருக்குள் படிப்பை பூர்த்திசெய்து, ஒரு வேலையிலும் அமர்ந்துவிடுவார். இவருக்கு எல்லா செயல்களிலும் பல தடைகள் ஏற்பட்டு பின்தான் நன்கு நிறைவேறும். இவருக்கு 2024, ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு, ஐ.ஏ.எஸ் எனும் உயர்பதவிக்கு வர வாய்ப்புள்ளது. அதேசமயம் முதல் முயற்சியிலேயே எதுவும் கிடைக்காது. ஆலங்குடி அல்லது தென்குடித்திட்டை சென்று இவர் பெயரில் அர்ச்சனை செய்யவும். ஒரு ந-ந்த அந்தண தம்பதிகளுக்கு ஆடை மற்றும் தாம்பூல தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் யானைக்கு பழம், கரும்பு வாங்கிக் கொடுங்கள். குல தெய்வக் கோவிலுக்கு மஞ்சள் பொடியும், நெய்யும் வாங்கித் தரவும்.

மா. இராமநாதன், திருச்சி-7.

என் மகனுக்கு 34 வயதாகிறது. எவ்வளவு முயற்சிசெய்தும் திருமணம் கூடிவர வில்லை. எங்கள் காலத்துக்குள் திருமணம் செய்துவைத்துப் பார்க்கும் பாக்கியம் உண்டா? பிறந்ததி-ருந்து அவன் எவ்வித மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. எதிர்காலத்திலாவது நிம்மதியாக இருப்பானா?

மகன் சுந்தர மாணிக்கம் 3-11-1987-ல் பிறந்த வர். கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். தங்கள் மகன் நடப்பு கேது தசையில் பிற மத, இனப் பெண்மீது காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார். ஆனால் அது படுதோல்விய டைந்துவிட்டதால் மணவாழ்வில் விரக்திநிலையில் உள்ளார். 2022, மார்ச் மாதத்திற்குப்பிறகு சுக்கிர தசை ஆரம்பம். அதில் குரு மீன ராசிக்கு வரும் போது திருமணம் நடக்கும். திருமணம் நடந்த வுடன் ஸ்ரீரங்கம் மகாலட்சுமித் தாயாருக்கு மஞ்சள் வண்ணப் பட்டுப்புடவை காணிக்கை செலுத்தவும். நீங்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகளை சற்று கவனிக்கவும்.

ஆர். அன்பரசன், திருப்பூர்.

சொந்தவீடு கட்டியதில் பெருத்த கடனாளியாகி விட்டேன். போதாக் குறைக்கு என் அம்மாவின் நெருக்கடியால் திருப்பூரில் இப்பொழுது சொந்தத் தொழில் தொடங்கியுள்ளேன். 25 லட்சம் கடனாளியாகி உள்ள நிலையில், மிகவும் தீவிரமாக என் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார்கள். 13 வயதுமுதல் நானாகப் பழகிய தவறொன்று பெரும் கவலையாக வந்து நிற்கிறது. அம்மாவிடம் இதுபற்றிக் கூறியும், "தானாகவே சரியாகிவிடும்' என்கி றார். என்னால் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் சந்தோஷமாக வாழமுடியு மென்று தோன்றவில்லை. குழந்தை வரம் கிடைக்கு மென்றும் நம்பிக்கை யில்லை. மனம் சோர்ந்துள்ளேன். சொந்தத் தொழில் எனது கடனை அடைக்கு மளவுக்கு கைகொடுக்குமா?

10-12-1993-ல் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 5-ஆம் வீடான விருச்சிகத்தில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் எனும் நான்கு கிரகச் சேர்க்கை. ஒரே ஒரு தவறு செய்து விட் டேன்; அதனால் திருமணம் செய்யவும், பிள்ளை பெற்றுக்கொள்ள இயலுமா என பயமாக இருப்பதாகவும் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தவறல்ல; பல தவறுகள் செய்திருப்ப தாக உங்கள் ஜாதகம் கூறுகிறது. இப்போது திருமணம் என்றவுடன் மனம் நடுங்குகிறது! 5-ஆம் அதிபதி 6-ல் மறைவு. வெளியே யாருக்கும் தெரியாமல் நடித்திருக்கிறீர்கள். நடப்பு சனி தசை. தசைநாதர் சனிசாரம் வாங்கிய செவ்வாய் 6-ல் மறைவு. எனவே கடன் தொல்லை பெரிதும் வதைக்கிறது. நடப்பு சனி தசையில் சுக்கிர புக்தி வரை 20-8-2022. அதற்குள் திருமணம் நடந்துவிடும். திருமணமானபிறகு, உங்கள் கடன்களும் மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும். கடக லக்னத்துக்கு சனி அரை சுபர். எனவே முழு நன்மையும் தர இயலாது. "டெஸ்ட் ட்யூப்' போன்ற மருத்துவ உதவியுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. கடன்தொல்லை தீர பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயத் தில், சுவாதி நட்சத்திரத்தன்று வழிபடவும். மேலும் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி வழிபடுங்கள். தொழில் விருத்தி ஏற்படும். 5-ல் உள்ள ராகு பூர்வபுண்ணிய குற்றத்தைக் குறிப்பிடுகிறார். குலதெய்வ வழிபாடு அவசியம்.

எம். ரவிச்சந்திரன், சென்னை.

அரசுப் பள்ளியில் வேலை செய்கிறேன். அடுத்த ஆண்டு ஓய்வு பெற்றுவிடுவேன். அடுத்து வருமானத்துக்கு என்ன தொழில் செய்யலாம்? ஜோதிடம் பார்க்கலாமா? கடந்த ஆண்டு என் மனைவி இறந்துவிட் டார். எனக்குப் பிள்ளைகளும் இல்லை. எதிர்காலம் எப்படியிருக்கும்? ஜோதிடர் ஒருவர், "என் ஜாதகத்தில் கிரகங்கள் எல்லாம் பாதகமாக உள்ளன. அவை எனக்கு துரோகிகள். கோவிலுக்குச் சென்றால் நவகிரகத்தைப் பார்க்கக்கூடாது' என்று கூறினார். தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

6-10-1964-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். "வாழ்க்கை முழுவதும் துன்பப்பட்டுவிட்டேன். வாழ்வே வீண்' என எழுதியிருக்கிறீர்கள். பிறந்தி-ருந்து வந்த தசைகள் எல்லாமே உங்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் அமையவில்லை. எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து ச-த்துப் போய்விட்டீர்கள். தற்போது புதன் தசை, புதன் புக்தி 2022, செப்டம்பர் வரை. உங்களுக்கு புதன் 5-ல் உச்சம். எனினும் அவர் சாரம் வாங்கிய சந்திரன் 6-ல். எனவே, நரம்புத் தளர்ச்சி, நடுக்கம் போன்றவை உங்களைத் தொந்தரவு செய்கிறது. புதன் தசை, புதன் புக்தி முடிந்தவுடன் நீங்கள் குழந்தை களுக்கு இலவச ட்யூஷன் சொல்-க்கொடுப் பீர்கள். ஜோதிடத்துறையிலும் மிக "பிசி'யாகி விடுவீர்கள். எவ்வளவு சேவை செய்கிறீர் களோ- அத்தனை தூரம் உடல் ஆரோக்கிய மாக இருக்கும். நரம்புத் தளர்ச்சி நோய்க்கு சென்னை, திருமுல்லைவாயில் சிவன் கோவில் சென்று வணங்கவும். மேலும் விஷ்ணு துர்க்கையை வழிபடவும். கிரகங்களை துரோகிகள் என எழுதியுள்ளீர்கள். தயவு செய்து கிரகங்களை அவ்வாறு கூறாதீர்கள். ப் பி. கார்த்திகேயன், ஆழ்வார்திருநகர், சென்னை. எனது ஜாதகப்படி நல்ல தசாபுக்தி அறிய ஆவல். நூதன வியாபார முறையில் பணம் வந்துசேர வாய்ப்புள்ளதா? நூதன முறையில் பணம் வருமா என்று கேட்டிருக்கிறீர்கள். கம்ப்யூட்டரில் கள்ளப்பணம் அச்சடித்து அதனை வியாபாரத்தில் ஈடுபடுத்தலாமா? அல்லது சட்டப்புறம்பான செயல் செய்யலாமா? சினிமா தொழி-ல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாமா என்றெல்லாம் யோசனை தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது அரசு தண்டனைக்குரிய காலமென்பதால் இதுபோன்ற எண்ணங்களைத் தவிர்க்கவும். அதுதான் உங்களுக்கு நல்லது. பிள்ளையாரை வணங்கவும்.

செல்: 94449 61845

bala121121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe