Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-19

ப் ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.

என் மகன், மருமகள் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. சூரியனும் செவ்வாயும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தால் பெண் விதவையாகும் நிலை ஏற்படும் என்று படித்துள்ளேன். என் மகன் ஜாதகத் தில் சூரியனும் செவ்வாயும் ஒரே நட்சத் திரத்தில், விசாகம் காலில் உள்ளனர். அவனது ஆயுள் பாவம் எப்படியிருக்கும்?

Advertisment

பி. கோபால் 18-11-1991-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். செவ்வாய், சனி சம்பந்தம். 8-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் மறைவு. செவ்வாய், சூரியன் ஒரே கட்டத்திலோ, ஒரே நட்சத்திரத்தின் ஒரே பாதத்திலோ இல்லை. அவர் மனைவி எலிஸா 17-11-1998-ல் பிறந்தவர். கன்னி லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை. சனி, குரு பரிவர்த்தனை. இந்தப் பெண்ணுக்கும் 8-ஆம் அதிபதி செவ்வாய் 12-ல் மறைவு. அதற்கு குரு பார்வை உள்ளது. இந்த இரண்டு ஜாதகங்களில் பல தோஷங்கள், குற்றங்கள் உள்ளன. ஆயினும் இருவரும் காதலித்து, காவல் நிலையம்வரை சென்று போராடி திருமணம் செய்து, பிள்ளையும் பெற்றாகிவிட்டது. ஜோதிட ஆர்வலர்கள் இந்த இரண்டு ஜாதகங்களையும் நன்கு கவனியுங்கள். பெண்ணுக்கு கன்னி லக்னம், கணவனுக்கு கன்னி ராசி. பெண்ணும் துலா ராசி. கணவனுக்கு துலா லக்

ப் ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.

என் மகன், மருமகள் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. சூரியனும் செவ்வாயும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தால் பெண் விதவையாகும் நிலை ஏற்படும் என்று படித்துள்ளேன். என் மகன் ஜாதகத் தில் சூரியனும் செவ்வாயும் ஒரே நட்சத் திரத்தில், விசாகம் காலில் உள்ளனர். அவனது ஆயுள் பாவம் எப்படியிருக்கும்?

Advertisment

பி. கோபால் 18-11-1991-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். செவ்வாய், சனி சம்பந்தம். 8-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் மறைவு. செவ்வாய், சூரியன் ஒரே கட்டத்திலோ, ஒரே நட்சத்திரத்தின் ஒரே பாதத்திலோ இல்லை. அவர் மனைவி எலிஸா 17-11-1998-ல் பிறந்தவர். கன்னி லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை. சனி, குரு பரிவர்த்தனை. இந்தப் பெண்ணுக்கும் 8-ஆம் அதிபதி செவ்வாய் 12-ல் மறைவு. அதற்கு குரு பார்வை உள்ளது. இந்த இரண்டு ஜாதகங்களில் பல தோஷங்கள், குற்றங்கள் உள்ளன. ஆயினும் இருவரும் காதலித்து, காவல் நிலையம்வரை சென்று போராடி திருமணம் செய்து, பிள்ளையும் பெற்றாகிவிட்டது. ஜோதிட ஆர்வலர்கள் இந்த இரண்டு ஜாதகங்களையும் நன்கு கவனியுங்கள். பெண்ணுக்கு கன்னி லக்னம், கணவனுக்கு கன்னி ராசி. பெண்ணும் துலா ராசி. கணவனுக்கு துலா லக்னம். இந்த அழகான லக்ன, ராசி சேர்க்கை இந்த தம்பதிகளை நன்கு பிணைத்து வாழச்செய்யும். யாராலும் பிரிக்க இயலாது. ஆணுக்கு அடுத்துவரும் சுக்கிர தசை, விபரீத ராஜயோகம் தரும். சுக்கிரன் இவருக்கு லக்னாதிபதி. வேறு விபரீதம் எதையும் தரமாட்டார். பெண்ணுக்கு குரு தசையில் சனி புக்தி 2022, ஏப்ரல்வரை. ஆணுக்கு கேது தசையில் புதன் புக்தி. இருவரும் வேலை செய்யுமிடத்தில், ஒரு பழைய வீட்டிற்கு முதலீடு செய்வர். அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல நாள் பார்த்து, மறுதாலி கட்டிக்கொள்ளச் சொல்லவும். குல தெய்வ வழிபாடு நன்று. இவ்விதம் இஷ்டம்போல திருமணம் செய்துகொண்டவர்கள், தர்மபுரி- சேலம் சாலையிலுள்ள அதியமான் கோட்டை சென்றாயப் பெருமாளை தரிசித்து, அவர் முன் மாலை மாற்றிக்கொள்வது உத்தமம்.

Advertisment

ப் ஆர். லட்சுமி, சங்கரன் கோவில்.

எனது மகள் பூங்குழலி பி.ஈ. மூன்றா மாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். மேற்கொண்டு படிக்கலாமா? அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது திருமணம் நடக்கும்?

விருச்சிக லக்னம், பூராட நட்சத்திரம், தனுசு ராசி. தொடர்ந்து படிக்கலாம். ராசியில் ராகுவும் ராசிக்கு இரண்டில் சனியும் இருப்பதால் நாகதோஷம், சனி தோஷம் உள்ளது. 25 வயதிற்குப் பிறகுதான் திருமண யோகம். தனுசு ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதால், சந்திர சுய ஜாதகப்படி சந்திர தசை நடந்தால், தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் சிவன் கோவிலின் ருத்ராபிஷேக பூஜை செய்யவும். அரசு வேலைக்கு முயற்சிக்கலாம். சுவாமிமலைக்கும் திருவையாறுக்கும் இடையில் திங்களூர் உள்ளது. அது சந்திரன் ஸ்தலம். அங்கு சென்று பூஜை செய்யவும். உடல் ஆரோக்கியமும் சீராகும்.

ப் கே. பெருமாள், மதுரை.

என் மகன் நான்காவது படிக்கிறான். படிப்பில் மந்தமாக இருக்கிறான். உடல்நலமும் சரியில்லை. பரிகாரம் செய்ய வேண்டுமா?

மதுரையில் கூடலழகர் பெருமாள் கோவில் அருகில் ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதி உள்ளது. வியாழக்கிழமைதோறும் தொடர்ந்து சென்று பிரார்த்தனை செய்யுங்கள். பையனை யும் அழைத்துச் செல்லுங்கள். அடுத்து விடுமுறை தினத்தில் கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவருக்கு பூஜை செய்யவும்.

q&a

ப் எம். கிருஷ்ணகுமார், சேலம்.

என் மனைவிக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? மீண்டும் படிக்கலாமா? தற்பொழுது இடம்வாங்கும் யோகம் உண்டா?

மனைவிக்கு திருவோண நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னம். ராசிக்கு 10-ல் சனி, செவ்வாய் சேர்க்கை என்பதால் அரசு வேலைக்கு இடமில்லை. ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பம். தனது புக்திக்குப் பிறகு மேற்படிப்பு தொடரும். ஏழரைச்சனி முடிந்த பிறகு சொந்த வீடு யோகம் அமையும்.

ப் கே. மூர்த்தி, அரியலூர்.

எனது ஜாதகப்படியும் எனது சகோதரி ஜாதகப் படியும் எதிர்காலம், படிப்பு, வேலை, திருமணம், சொந்த வீடு யோகமெல்லாம் எப்படி இருக்கும்?

உங்களுக்கு துலா ராசி. ராகு தசை முடியப்போகிறது. அதன்பிறகு வேலை, சம்பாத்தியம் அமையும். 27 வயதுக்குமேல் திருமண யோகம். சகோதரிக்கு பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னம். லக்னத்திற்கு 7-ல் சூரியன் இருப்பதால் அவருக்கும் 27 வயதிற்குப் பிறகுதான் திருமண யோகம். சூரிய தசை நடப்பு. சூரிய தசை ஆறுக்குடைய தசை சுமாராகத்தான் இருக்கும்.

ப் ஜி. முருகன், தஞ்சாவூர்.

என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

கன்னியா லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். ராசியில் சனியும் ராசிக்கு 2-ல் ராகுவும் இருப்பது தோஷம். டிசம்பரில் 22 வயதுதான் முடியும். 30 வயதுக்குமேல்தான் திருமண யோகம்.

ப் ஆர். பழனிவேல், ஈரோடு.

எனக்கு வயது 72. பூர நட்சத்திரம், கும்ப ராசி. சனி தசை நடக்கிறது. கண் பார்வைக் குறைவு. ஆயுள் எப்படி? எனக்குத் துணை பண்ணாரி அம்மனைத் தவிர யாரு மில்லை. மீதமுள்ள காலம் எப்படிச் செல்லும்?

உங்களுக்கு எமபயம் இல்லை. எமபயம் இல்லையென்றால் சாவே இல்லையென்று அர்த்தம் இல்லை. பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் சாகவேண்டியவர்கள்தான். அந்த சாவு நோயால் படுக்கையில் கிடந்து அவதிப் படாமலும்- துர்மரணமாக அமையாமலும்- விபத்து, விஷம், நெருப்பு இவற்றால் அகால மரணம் வராமலும் அமைய வேண்டும். இரவு படுத்தோம்; படுக்கையிலேயே சிரமம் இல்லாமல் ஆவி பிரிந்தது என்று அமைந்தால் நல்ல சாவு. உங்கள் ஜாதகப்படியும் அந்த மாதிரி அமைவதற்கு எமசம்ஹாரேஸ்வரர் அருள்புரிவார். உங்கள் தேவைகளை பண்ணாரி அம்மன் பூர்த்திசெய்வாள்.

ப் வி. காமாட்சி, வேலூர்.

என் கணவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஒரு பையன்; ஒரு பெண். அவர்களின் படிப்பு, எதிர்காலம், எனக்கு உள்ள கடன் பிரச்சினை போன்றவற்றுக்கு உங்கள் சொல்வாக்கே ஆறுதலாக அமையும்; வழிகாட்டுங்கள்.

மகளுக்கு அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னம். 19 வயது நடக்கிறது. ராகு தசையும் நடக்கிறது. மகனுக்கு 11 வயது நடக்கிறது. உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னம். ஐந்து வயதுக்குமேல் சந்திர தசை ஆரம்பித்து 18 வயதுவரை நடக்கும். "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற பழமொழிப்படி இறைவனையே நம்புங்கள். அவன் காப்பாற்றுவான். மகளுக்கு ராகு தசை நடப்பதால், திருச்சியிலிருந்து மண்ணச்ச நல்லூர் வழி துறையூர் பாதையில் திரு வெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது. அருகில் வட ஜம்பு கேஸ்வரர் கோவில் இருக்கிறது. ஒரு சிறிய குன்றைக் குடைந்து கோவில் அமைக்கப் பட்டுள்ளது. அவர் சமாதியாகி 500 ஆண்டு களுக்குமேல் இருக்கும். திருவெள்ளறை யிலேயே சுவேதாத்ரி நாதர் பெருமாள் கோவிலும் இருக்கிறது. அற்புத மான கோவில். மூலஸ்தானத்திற்கு போவதற்கு இரண்டு வாசல் உண்டு. தட்சிணாயன காலம் ஆறு மாதம் தட்சிணாயன வாசலும்; உத்திராயன காலம் ஆறு மாதம். உத்திராயன வாசலும் திறந்திருக்கும். அதன் வழியாகத் தன் மூல ஸ்தானத்திற்குச் செல்ல முடியும். அவரை தரிசனம் செய்யுங்கள்.

செல்: 94449 61845

bala110322
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe