Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-17

ப் ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.

எனது நண்பர் மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். 31 வயதாகியும் இன்னும் திருமண மாகவில்லை. எப்போது நடக்கும்? வேலை வாய்ப்பு எப்படி? அடுத்துவரும் சந்திர தசை எப்படியிருக்கும்?

Advertisment

கே. பாலசந்தர் 16-9-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மூல நட்சத்தரம், தனுசு ராசி. லக்னத்தில் ராகு; 7-ல் கேது- சர்ப்ப தோஷம். சனி, சந்திரன் சேர்க்கை புனர்பூ யோகம் தருகிறது. சனி, செவ்வாய் பார்வை. லக்னாதிபதி குரு லக்னம், ராசி இரண்டையும் பார்க்கிறார். தனுசு ராசிக்கு ஏழரைச் சனி நடப்பு. கிரகண யுத்த ஜாதகம் முடிவெடுக்க முடியாமல் குழம்புவார். இவருக்கு தாமத, கலப்பு, விருப்பத் திருமணம்தான் நடக்கும். குரு பார்வை சனி, சந்திரன் ராகுவுக்குக் கிடைப்பதால், இவர் வகுப்பிலேயே, திருமண ஏற்பாடாகி பின் நின்றுபோன பெண் கிடைப்பாள். சிலசமயம் வேறு பிரிவிலும் அமையக் கூடும். நடப்பு சூரிய தசை, புக்தி செப்டம்பர் 2022 வரை. அதன்பின் வரும் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்க

ப் ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.

எனது நண்பர் மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். 31 வயதாகியும் இன்னும் திருமண மாகவில்லை. எப்போது நடக்கும்? வேலை வாய்ப்பு எப்படி? அடுத்துவரும் சந்திர தசை எப்படியிருக்கும்?

Advertisment

கே. பாலசந்தர் 16-9-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மூல நட்சத்தரம், தனுசு ராசி. லக்னத்தில் ராகு; 7-ல் கேது- சர்ப்ப தோஷம். சனி, சந்திரன் சேர்க்கை புனர்பூ யோகம் தருகிறது. சனி, செவ்வாய் பார்வை. லக்னாதிபதி குரு லக்னம், ராசி இரண்டையும் பார்க்கிறார். தனுசு ராசிக்கு ஏழரைச் சனி நடப்பு. கிரகண யுத்த ஜாதகம் முடிவெடுக்க முடியாமல் குழம்புவார். இவருக்கு தாமத, கலப்பு, விருப்பத் திருமணம்தான் நடக்கும். குரு பார்வை சனி, சந்திரன் ராகுவுக்குக் கிடைப்பதால், இவர் வகுப்பிலேயே, திருமண ஏற்பாடாகி பின் நின்றுபோன பெண் கிடைப்பாள். சிலசமயம் வேறு பிரிவிலும் அமையக் கூடும். நடப்பு சூரிய தசை, புக்தி செப்டம்பர் 2022 வரை. அதன்பின் வரும் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். இவருக்கு வரும் மாமனார் குடும்பத்தினர் பெண்ணையும் கொடுத்து வேலையும் வாங்கிக்கொடுப்பர். நாகை மாவட்டம் திருவேள்விக்குடி ஆலயம் சென்று வழிபடவும். இவருக்கு அடுத்துவரும் சந்திர தசை ஏழரைச்சனியில் அமைகி றது. அதில் இழப்புக்கள் ஏதும் நேராமலிருக்க, பைரவருக்கு, 19 மிளகைத் துணியில் கட்டி, நெய்தீமேற்றவும். சனிக் கிழமைதோறும் செய்யவேண்டும். அஷ்டாமாதிபதி சந்திரனுக்கு குருபார்வை இருப்பதால் உயிரிழப்புகள் இராது.

ப் பெயர், ஊர் குறிப்பிடாத ஒரு வாசகர். என் மகனின் எதிர்காலம் பற்றிக் கூறவும்.

என். வேல்முருகன் 24-8-1995-ல் பிறந்த வர். மேஷ லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. சர்ப்ப தோஷ ஜாதகம். ராசியில் சந்திரன், சூரியன் ஆட்சி; புதன் உச்சம். இவர் அனேகமாக பத்திரிகை அல்லது ஊடகத் துறையில் பணியாற்றும் வாய்ப்புண்டு. 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. எனவே விருப்பத் திருமணம் நடக்கும். சனி, சூரியன் பார்வை. தந்தையுடன் இணக்கம் இராது. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 2024, செப்டம்பர் வரை. அதற்குள் இவரே தனது காதல்- கலப்பு மணத்தை வெற்றிகரமாக நடத்திக்கொள்வார். 6-ஆமிடத்தில் செவ்வாய், புதன் சேர்க்கை. எனவே, வேலை செய்யுமிடத்தில் கவன மாக இருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வணங்கவும்.

Advertisment

qq

ப் பி. தணிகாசலம்.

எனக்கு 56 வயது முடியப் போகிறது. இதுவரை திருமணமாகவில்லை. பார்க் கும் பெண்ணெல்லாம் கைநழுவிப் போகிறது. வாரிசு வேண்டும் என்பதற்காக பெண் பார்க்கவில்லை. கடைசி காலத்தில் ஒரு துணை வேண்டுமல்லவா?

27-6-1966-ல் பிறந்தவர். பிறந்த நேரம், இடம் எதுவும் எழுதாத ஜாதகம். ஜாதகக் கட்டத்திலும் கும்ப லக்னத்தில் சனி உள்ளதாக இருக்கிறது. செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை. லக்ன சனி, 3, 7-ஆம் வீடுகளைப் பார்க்கிறார். ராசியில் கேது; 7-ல் ராகு. பொதுவாக சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருந்தால் தாமதத் திருமணம் தரும் என்பர். மேலும் சனி பகவான் களத்திரகாரகர் சுக்கிரனையும் 7-ஆம் வீட்டையும் பார்க்கிறார். சுக்கிரன் ராகுவுடனும், சந்திரன் கேதுவுடனும் உள்ளதால், மிகத் தாமதமாகிவிட்டது. இந்த ஜாதக அமைப்புப்படி இவர், வெளியே தெரியாமல் விருப்ப மனைவியுடன் வாழும் நிலையுள்ளது. தனக்கு சொந்தமில்லாத பொருளை அனுபவித்திருப்பார் போலும். இப்போது தனக்கே தனக்கென்று தேடும் போது முறையான திருமணம் கூடிவரவில்லை. இணையுடன் சேர்ந்து வாழ்வார். அல்லது இவரது குடும்பத்தினர் இவரை கவனித்துக் கொள்வர். பூர்வஜென்ம குற்றமுள்ளது. தத்தாத் ரேயரை வணங்கவும். (திருக்கணிதப் பஞ்சாங்கப் படி ஆனி 13- அதாவது இவரது பிறந்தநாள் அன்றுதான் ராகு மேஷத்திற்கும், கேது, துலா ராசிக்கும் சென்றுள்ளனர். ஒருவேளை இவரின் நிலையற்ற வாழ்க்கைக்கு இதுவும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது.

ப் மதனகோபால், திருவாரூர்.

பூர்வீக சொத்து கிடைக்குமா?

23-12-1961-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். பூர்வீக சொத்து கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறீர் கள். உங்கள் 4-ஆம் அதிபதி குரு, 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீசபங்கம். 4-ஆமிடத்தின் கிரகச் சேர்க்கை சரியில்லை. 5-ஆமிட சனி, குரு, கேது சேர்க்கையானது உங்களுக்கு சொத்து கிடைப்பதைத் தடை செய்யும். நடப்பு சுக்கிர தசை, குரு புக்தி. சொத்து, வீடு சம்பந்தமான விரயம்தான் தெரிகிறது. வீணாக கோர்ட், கேஸ் என அலைய வேண்டாம். இதுமாதிரி இழந்த செல்வங்களைப் பெற கும்பகோணம் அருகில் திருத்தண்டிகைபுரம் சென்று வணங்கலாம்.

ப் ராஜா, வாலாஜா.

என் மகன் மற்றும் ஒரு பெண்ணின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் திருமணப் பொருத்தம் உண்டா?

ஜாதகர் மனோ மக நட்சத்திரம், சிம்ம ராசி. பெண் அபிநயா கார்த்திகை நட்சத்திரம், மேஷ ராசி. பெண் ஜாதகத்துக்கு நட்சத்திரப் பொருத்தம் உள்ளது. பையன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ, சர்ப்ப தோஷமோ இல்லை. ஆனால் பெண் ஜாதகத்தில் லக்னத் துக்கு 2-ல் செவ்வாய் மற்றும் ராசியில் கேது, 7-ல் ராகு என செவ்வாய், சர்ப்ப தோஷம் உள்ளது. தோஷமில்லாத ஜாதகத்துக்கு தோஷமுள்ள ஜாதகத்தை சேர்க்கக்கூடாது. இதற்குப் பரிகாரம் கிடையாது.

செல்: 94449 61845

bala250222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe