Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-15

வி. திருமூர்த்தி, சேலம்.

எனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அது கிட்டுமா? இன் னொரு இடத்தில் பணம் கொடுத்து வைத்துள்ளேன். அதில் வட்டி வருகிறது. பாகப்பிரிவினை எப்போது செய்யலாம்?

Advertisment

8-6-1949-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதி பதி புதன், சுக்கிரன் பரிவர்த்தனை. லக்ன- விரயாதிபதி பரிவர்த்தனை. நடப்பு சுக்கிர தசை. இது விரய தசை. எதுவும் கிடைக்குமென்று எதிர்பார்க்க வேண்டாம். கையில் உள்ளது பத்திரமாக இருந்தாலே பெரிய விஷயம். நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 2024 வரை. அதற்குள் சொத்துகளை பாகம் பிரித்துக் கொடுத்துவிடுவீர்கள். அது தான் நல்லதும்கூட. இந்த வருடம் 2022, அக்டோபர் மாதத்திற்குள், வெளியே வட்டிக்குக் கொடுத்த பணத்தை வசூல் செய்து வாரிசுகளுக்குக் கொடுத்துவிடுவீர்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. அடுத்துவரும் குரு புக்தியில் நீங்களும் உங்கள் மனைவியும் கவனமாக இருப்பது நல்லது. அகத்திக் கீரையை எருமைகளுக்கு அவ்வப் போது கொடுக்கவும். கோவை சத்திய மங்கலம் சாலையில், கோவில் பாளையம் திருத்தலத்திலுள்ள ஸ்ரீ கால காலேஸ்வரரை வணங்கவும். முதிய வயதுடையவர்கள் இந்த கோவிலை வணங்குவது நல்லது.

செல்வி, சென்னை-94.

என் அக்காள் மகன் ரோஸ்வின் 9-ஆம் வகுப்பு படிக்கிறார். பேச்சு சரியாக வருவதில்லை. அம்மாவையும் அக்காவையும் அடிக்கிறார். பள்ளிக்கும் சரியாக செல்வதில்லை. பெற்றோர் மிகவும் வேதனைப் படுகின்றனர்.

ரோஸ்வின் 10-1-2005-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். இவரின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் சேர்க்கை. மேலும் 2-ஆமிடத்தில் குரு அமர்வு. குரு இவருக்கு 5, 8-ஆம் அதிபதி. அவரை சனி பார்வையிடுகிறார். இதனால் பேச்சுத் தடை ஏற்படுகிறது. 9-ல் ராகு- அவரை சனி பார்ப்பது பித்ரு தோஷம். இவருக்கு குரு, புதன் பரிவர்த்தனை இருப்பதால் பேச இயலும். சரி; எப்போது பேசுவார்? தற்போது செவ்வாய் தசை நடப்பு. இதனால் ஜாதகர் மிகவும் கோபப்படுவார். இதில் சனி புக்தி 2023, மேவரை. அதில் பேச்சுப் பயிற்சி, அது சம்பந்தமான மருத்துவச் செலவு உண்டு. 2023, மே மாதத்திற்குப் பிறகு புதன் புக்தியில் சிறு அறுவை சிகிச்சை நடக்கும். அதில் பேச்சு வந்துவிடும். 21 வயதிற்குப்பிறகு வரும் ராகு தசை இவரை கல்விப் பயிற்சி, வேலை சம்பந்தமாக வேறிடம் அழைத்துச்செல்லும். இந்த ஜாதகத்தைப் பொருத்த அளவில் சில வேண்டாத செயல் செயல்பட்டுள்ளது. அதற்கு கருடாழ்வாரை சனிக்கிழமைகளில் வணங்கவும். ஒருமுறை இராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்வது நல்லது. மிகவும் கோபவசப்படுபவர்கள் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி வட்டம், இடும்பவனம் எனும் கோவிலுக்குச் சென்று வணங்கவும். முற்பிறவி சாபங்களையும் நீக்கும் தலம். ஒருமுறை இங்குசென்று வழிபட்டுவரவும்.

Advertisment

Q&A

பக்கிரிசாமி, ஆடுதுறை, தஞ்சை.

வீடு கட்டியவகையில் கடனாளியாகி சிரமப்படுகிறேன். எப்போது கடன் தீரும்? என் இளைய மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

நீங்கள் 24-4-1950-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை. இதில் நிறைய சுபச்செலவுகளே வரும். நடப்பு ராகு புக்தி. உங்களின் ராகு செவ்வாயின் பார்வையில் இருப்பதால், கடனில் கஷ்டப்படுகிறீர்கள். மேலும் மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி நடக்கிறது. கோட்சார ராகு மேஷ ராசிக்கு நகரும்போது, உங்களின் கடன்கள் தீரும். மகன் பற்றி அறிய அவருடைய ஜாதகம் அனுப்பவும். கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படுகிறவர்கள், திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தவசிமேடை ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வணங்கவும். இங்கு பிரதோஷம் அல்லது தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் கலந்துகொண்டால் கடன் தொல்லை நீங்கி, நிம்மதி பிறக்கும். சனிக்கிழமை சனீஸ்வரரை வணங்கவும்.

சண்முகம், கரூர்.

எனக்கு அடுத்துவரும் கேது தசை எப்படியிருக்கும்? வெளிநாட்டிலிருந்து தற்போது தமிழகம் வந்துள்ளேன். என் தாய்- தந்தையரை என்னுடன் வெளிநாடு அழைத்துச் செல்லலாமா? அவர்களை என் அருகில் வைத்துக் காப்பாற்றமுடியுமா?

27-2-1979-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 18-1-2022 முதல் கேது தசை ஆரம்பம். கேது உங்களின் 6-ஆமிடத்தில் இருந்து தசையை ஆரம்பித்துள்ளார். எனவே கேது தசையின் ஏழு வருடங்கள் அதிகம் கெடுக் காமல் நல்ல பலனையே தரும். வீடு மேன்மைக்கு கடன் வாங்குவீர்கள். உங்களுக்கு மிகவும் குழப்பமான எண்ணங்கள் வந்து போகும். விநாயகரை வணங்குவதும், தியானம் கற்றுக்கொள்வதும் நன்று. உங்கள் தாய்- தந்தையை சுற்றிக்காட்ட மட்டுமே வெளிநாடு அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உடல்நிலையில் சற்று கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த சுக்கிர தசை ஆரம்பிக்கும்போது நீங்கள் சொந்த நாடு திரும்பிவிடுவீர்கள். உங்கள் பெற்றோரை உங்களால் நன்கு கவனித்துக்கொள்ளமுடியும். தினமும் சிவனை வணங்கவும். ஒருமுறை பிளையார்பட்டி விநாயகர் கோவில் சென்று வணங்கி வரவும்.

வி. வெங்கடேசன், அசோக் நகர், சென்னை.

என் ஐந்து வயது மகள் மிகவும் பயந்து அழுதுகொண்டேயிருக்கிறாள். ஏதாவது பரிகாரம் கூறவும்.

தற்காலத்தில் குழந்தைகள் கைபேசியை எப்போதும் பார்த்துக்கொண்டே, இருப்பதால், அதில்வரும் சில காட்சிகளை நினைத்து அழுகிறார்கள். இதற்கு ஆஞ்சனேயரை வணங்குவதும், விஷ்ணுதுர்க்கையை வழிபடு வதும் சிறப்பு. சென்னை சேத்துப்பட்டில் கருக்காத்தம்மன் என்னும் கோவில் உள்ளது. இந்தக் கோவில் குழந்தை வரம் மற்றும் குழந்தைகளுக்கான முக்கியமான தலம். ஒருமுறை அங்கு உங்கள் குழந்தையை அழைத்துச்செல்லவும். கைபேசி பார்ப்பதை குறைக்கச் சொல்லவும்.

வி. கவிதா, காஞ்சிபுரம்.

எந்த தெய்வத்தை வணங்கினால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்?

குடும்ப ஒற்றுமைக்கு சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதியை வணங்குதல் நல்லது. இதுபோல் உங்கள் ஊரிலுள்ள சிவன்- பார்வதி சேர்ந்துள்ள சந்நிதி அல்லது தாயார்- பெருமாள் சேர்ந்து சேவை சாதிக்கும் கோவில்களை வணங்க, குடும்ப ஒற்றுமை பலப்படும். மேலும் வீட்டில் துளசியை வளர்க்க, திருஷ்டி, பீடைகள் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

செல்: 94449 61845

bala110222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe