Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-14

ப் எம். தேவி, சிவகாசி.

என் பேத்தியின் கல்வி, ஆரோக்கியம், திருமணம் பற்றிக் கூறவும். வரன் எந்த திசையில் அமைவார்?

Advertisment

பேத்தி 25-8-2004-ல் பிறந்தவர். கும்ப லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத் துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம். இவரது ஆரோக்கிய ஸ்தானாதிபதி 6-ல். எனவே தோல்வியாதி அல்லது அலர்ஜி நோயால் எப்போதும் துன்பம் இருக்கும். வைத்தீஸ்வரன் கோவில்சென்று வழிபட நோய்தீரும். மேற்கல்வியில் தடை யும், சற்று மந்தமும் உண்டு. இவரது கல்வி சம்பந்தமாக வேலை கிடைக்கும். இவரது 7-ஆமிடத்தை சனி பார்ப்பதால

ப் எம். தேவி, சிவகாசி.

என் பேத்தியின் கல்வி, ஆரோக்கியம், திருமணம் பற்றிக் கூறவும். வரன் எந்த திசையில் அமைவார்?

Advertisment

பேத்தி 25-8-2004-ல் பிறந்தவர். கும்ப லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத் துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம். இவரது ஆரோக்கிய ஸ்தானாதிபதி 6-ல். எனவே தோல்வியாதி அல்லது அலர்ஜி நோயால் எப்போதும் துன்பம் இருக்கும். வைத்தீஸ்வரன் கோவில்சென்று வழிபட நோய்தீரும். மேற்கல்வியில் தடை யும், சற்று மந்தமும் உண்டு. இவரது கல்வி சம்பந்தமாக வேலை கிடைக்கும். இவரது 7-ஆமிடத்தை சனி பார்ப்பதால் தாமதத் திருமணம். நடப்பு சுக்கிர தசை. இதில் கல்வி, வேலை அமை யும். அடுத்துவரும் சூரிய தசையில் திருமணம் நிச்சயமாகும். வரன் கிழக்கு திசையிலிருந்து வருவார். 5-ஆம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளதால், பூர்வபுண்ணிய குற்றமுள்ளது. குலதெய்வ வழிபாடு அவசியம். இந்தப் பெண் ஜாதகத் தில், ஒரே ராசியில் சூரியன், செவ்வாய் சேர்க்கை உள்ளது. உங்கள் ஊர் சிவன் கோவிலிலுள்ள வீரபத்திரருக்கு செவ்வாய்க்கிழமை வெற்றிலைமாலை சாற்றி, நெய்தீபமிட்டு வணங்கவும். குலதெய்வம், இஷ்டதெய்வத்துக்கு தாலி தானம் அவசியம்.

q&A

ப் ஆர். ராமமூர்த்தி, திருப்பதி.

நான் பல ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே வசித்துவருகிறேன். சொந்த வீடு அமையுமா? எனக்கு எந்த வயதில் மாரகம் ஏற்படும்?

11-7-1938-ல் பிறந்தவர். மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். மேஷ லக்னத்துக்குரிய 4-ஆம் வீட்டு அதிபதி சந்திரனை சனி பார்க்கிறார். 4-ஆம் வீட்டில் 6-ஆம் வீட்டு அதி பதி புதன் அழுத்தமாக உட்கார்ந்துள்ளார். புதன் 6-ஆம் அதிபதியாதலால் உங்களுக்கு வாடகை வீட்டு யோகமே இருந் துள்ளது. அடுக்குமாடியைக் குறிக்கும் சுக்கிர னும் கேது காலில் நின்றதால், அதனை சொந்த மாக்க இயலவில்லை. இப்போதைய சனி புக்தி யில், 2022, நவம்பரில் புதன் புக்தி ஆரம்பம். அப்போது உங்களுக்கு குத்தகை, ஒத்தியில் ஒரு வீடு, சொந்த வீடு அமையும். சிலசமயம் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளரே குத்தகைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்வார். அவ்வகையில் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும். மாரக காலம் கேட்டுள்ளீர்கள். 84 வயது ஆயுள் கொடுத்த இறைவனுக்கு உங்கள் மாரகம் பற்றித் தெரியாதா? ஒரு முறை சிறுவாபுரி முருகன் கோவில்சென்று வணங்க, சொந்தவீட்டுக் கனவு நிறைவேறும்.

ப் விஜயலட்சுமி, திண்டுக்கல்.

என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தத் தொழில் அமையுமா? வாரிசு யோகம் உண்டா?

மதன்குமார் 18-5-1986-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். லக்னாதிபதி புதன், சுக்கிரன் பரிவர்த்தனை. நடப்பு ராகு தசை. இது லாப ராகுவாக நடக்கிறது. ராகு புக்தி 2023, மார்ச்வரை உள்ளது. இந்த ராகு தசை, ராகு புக்திக்குள், இவருக்குத் திருமணம் நடந்துவிடும். அடுத்துவரும் குரு புக்தியில் இவர் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் தொடங்குவார். அது நல்லபடியாக நடக்கும். அந்தத் தொழிலில் இவரது மனைவியின் ஒத்துழைப்பும் அதிகம் கிடைக்கும். குரு பார்வை 5-ஆமிடத்திற்குக் கிடைப்பதால் வாரிசு யோகமுண்டு.

bala040222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe