Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-13

ப் மணி, பண்ருட்டி.

நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். மிகவும் கடுமையான குடும்பச் சூழ்நிலையில் பி.பி.ஏ., முடித்திருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா?

Advertisment

3-11-2001-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் செவ்வாய் நீசம். சூரியன் நீசபங்கம். நடப்பு ராகு தசை. ராகு சாரம் வாங்கிய செவ்வாய் நீசம். எனவே, ராகு தசை முடியும் வரை அதிக நன்மைகளை எதிர்பார்க்க வேண்டாம். அடுத்தவரும் குரு தசை தொழில், திருமணம் கொடுக்கும். நாகதோஷம், செவ்வாய் தோஷ ஜாதகம். மயிலாடுதுறை நாக சுப்பிரமணியரை வணங்கவும்.

ப் எம். தர்மராஜ், சென்னை-58.

எங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காத தால், ஒரு பெண் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து கொடுத்தோம். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். திருமணமானதிலிருந்தே மருமகன் கடன் தொல்லையால் சிரமப்படுகிறார். எதிர்காலம் பற்றிக் கூறவும்.

மருமகன் சுரேஷ்குமார் 14-1-1985-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். ராசியில் உச்ச சனியும் கேதுவும் சேர்க்கை சனி, சுக்கிரன் பரிவர்த்தனை. 8, 11-ஆம் அதிபதி குரு நீசம்; நீச வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். அம்சத்தில் சந்திரன் நீசம். இவர் தசாபுக்தி எழுதவில்லை. அனேகமாக செவ்வாய் தசை இருப்பு ஒன்றரை வருடமாக இருக்கக்கூடும். இதுவரையில் நடந்த நீச குரு தசை ஜாதகருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்

ப் மணி, பண்ருட்டி.

நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். மிகவும் கடுமையான குடும்பச் சூழ்நிலையில் பி.பி.ஏ., முடித்திருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா?

Advertisment

3-11-2001-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் செவ்வாய் நீசம். சூரியன் நீசபங்கம். நடப்பு ராகு தசை. ராகு சாரம் வாங்கிய செவ்வாய் நீசம். எனவே, ராகு தசை முடியும் வரை அதிக நன்மைகளை எதிர்பார்க்க வேண்டாம். அடுத்தவரும் குரு தசை தொழில், திருமணம் கொடுக்கும். நாகதோஷம், செவ்வாய் தோஷ ஜாதகம். மயிலாடுதுறை நாக சுப்பிரமணியரை வணங்கவும்.

ப் எம். தர்மராஜ், சென்னை-58.

எங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காத தால், ஒரு பெண் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து கொடுத்தோம். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். திருமணமானதிலிருந்தே மருமகன் கடன் தொல்லையால் சிரமப்படுகிறார். எதிர்காலம் பற்றிக் கூறவும்.

மருமகன் சுரேஷ்குமார் 14-1-1985-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். ராசியில் உச்ச சனியும் கேதுவும் சேர்க்கை சனி, சுக்கிரன் பரிவர்த்தனை. 8, 11-ஆம் அதிபதி குரு நீசம்; நீச வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். அம்சத்தில் சந்திரன் நீசம். இவர் தசாபுக்தி எழுதவில்லை. அனேகமாக செவ்வாய் தசை இருப்பு ஒன்றரை வருடமாக இருக்கக்கூடும். இதுவரையில் நடந்த நீச குரு தசை ஜாதகருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்திருக்கும். நினைத்தது நடக்காமல், நிம்மதியின்றி, சண்டை சச்சரவுகளுடன் இருந்திருப்பார். தற்போது சனி தசை ஆரம்பமாக இருக்கும். இந்த தசையில் நல்ல பலன் நடக்கும். வீடு வாங்க இயலும். ஏற்கெனவே இந்த ஜாதகருக்கு 6-ஆமிடத்தில் உச்ச சனி இருப்பதால், கடன் வாங்க சளைக்கவே மாட்டார். இப்போது அதே சனி தசை ஆரம்பித்து நடக்கிறது. இதில் சொந்தத் தொழில் செய்கிறேன் என்று வகை தொகை யில்லாமல் கடன் வாங்குவார். இப்போதைய காலகட்டத்தில் முன்புபோல மோசமாக இல்லாமல், ஓரளவு ஒப்பேற்றிவிடுவார். நடப்பு சனி தசையில், சனி பகவான் குரு சாரம் பெற்றுள்ளார். அதனால் ஒருமுறை திருவிடைமருதூர் சென்றுவரவும். மேலும் சனி, சந்திரன், கேதுவுடன் ராகு பார்வையில் இருப்பதால், திருவாலங்காடு சென்று இவர் பெயரில் அர்ச்சனை செய்யவும். மேலும் திங்கட்கிழமைதோறும் சிவ தரிசனம், வில்வ ஸ்பரிசனம் நன்று. பேரன் விஷ்ணு கிஷோர் 3-9-2010-ல் பிறந்தவர். துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். ராசியில் கேது; 7-ல் ராகு. சனி, செவ்வாய் 12-ல். நடப்பு ராகு தசையில் கேது புக்தி. இது தாய்- தந்தையை மிகவும் பாடாய்ப்படுத்துகிறது. 2022, ஜூன் மாதத்திற்குப்பிறகு வரும் சுக்கிர புக்தி, ஜாதகரின் குடும்பத்தை இடமாற்றம் செய்யவைக்கும். ஆஞ்சனேயரை வணங்கவும். ராகு தசை நடப்பதால், கல்வியில் சற்று தடுமாறுவார். எனினும் அடுத்துவரும் குரு தசையில் கல்வி ஓரளவு மேம்பாடு அடையும். ராகு பரிகாரத்துக்கு, ராகு பகவானுக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்யவும். பேத்தி சுஷ்ருதா 16-8-2013-ல் பிறந்தவர். மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. நடப்பு சுக்கிர தசை. அவர் 6-ஆமிடத்தில் நீசமாகி தசை நடத்துகிறார். இதனால் வீட்டில் சற்று நிம்மதியற்ற நிலை உண்டாகியுள்ளது. தனுசு ராசிக்கு ஏழரைச்சனியும் நடக்கிறது. இந்தப் பெண் ஜாதகப்படியும், 2022 ஜூன் மாதத்திற்குப்பிறகு வீடு மாற்றம் உண்டு. நடப்பு குட்டி சுக்கிர தசை. அதனால் அருகிலுள்ள முருகர் கோவிலில் அல்லது உங்கள் இஷ்டதெய்வக் கோவிலில் குழந்தையைத் தத்துக் கொடுத்து வாங்கிக்கொள்ளவும். சுக்கிர தசையில் கல்வி சற்று சுமாராக இருக்கும். ஹயக்கிரீவரை வணங்க கல்வி சிறக்கும். அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சூரிய வழிபாடு நல்லது. "குட்டிச் சுக்கிர தசை கொட்டிக் கவிழ்க்கும்' என்பர். அதனால் குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை.

Advertisment

qq

ப் சவடமுத்து, ஒட்டன்சத்திரம்.

எங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை. செயற்கைக் கருத்தரிப்பு முறையை மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டுமா?

சவடமுத்து 4-11-1974-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னத் தில் வக்ரசனி. லக்னத்துக்கு 5-ல் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் என நான்கு கிரகச் சேர்க்கை. அம்சத்தில் சூரியன், செவ்வாய் உச்சம். சந்திரன் நீசம். நடப்பு சூரிய தசை, செவ்வாய் புக்தி. மனைவி சுசிலா 2-2-1982-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், ரிஷப ராசி, உத்திர நட்சத்திரம். 5-ஆமிடத்தில் கேது. 5-ஆம் அதிபதி குரு 3-ஆமிட துலாத்தில். நடப்பு குரு தசை, குரு புக்தி. இந்த தம்பதிகள் வெகுகாலம் குழந்தை பாக்கியம் இல்லாததால், தற்போது புது முறையில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கின்றனர். கணவரின் 5-ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆட்சி. 3-ஆம் அதிபதி நீச பங்கம். உடன் லக்னாதி பதி மற்றும் 6-ஆம் அதிபதி. மனைவிக்கு 5-ஆம் அதிபதி குரு 3-ஆமிட துலாத்தில். 5-ல் கேது; 11-ல் ராகு. குரு சாரம் வாங்கிய ராகு 11-ல் உள்ளார். இருவருக்கும் செயற்கைக் கருத்தரிப்பு (Test Tube Bady) எனும் முறையில் குழந்தை பிறப்பதற்கு ஏற்பாடு செய்யலாமா எனக் கேட்டுள்ளனர். கணவருக்கு சூரிய தசையில் செவ்வாய் புக்தி. 11-ஆமிட சம்பந்தமும், மனைவியின் 5-ஆமிட குரு, சாரநாதர் 11-ஆமிட சம்பந்தமும் பெறுவதால், குழந்தை சம்பந்தப்பட்ட லாபம் கிடைக்கும் எனத் தெரிகிறது. மருத்துவ உதவியுடன், மாறுபட்ட சிகிச்சையில் வாரிசு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்விதம் சிகிச்சைமூலம் புத்திரபாக்கியம் பெற்றவர் மகாபாரதத்தில் காந்தாரி தேவி என்பதை அறிவீர்கள். புத்திர பாக்கியம் விரும்புவோர், தொட்டமளூர், திருக்கருகாவூர், இராமநாதபுரம் திருப்புல்லாணி, கும்பகோணம் கருவளர்சேரி போன்ற திருத்தலங்களில் வேண்டிக்கொள்வது பலனளிக்கும். கோட்சார குரு கணவரின் குரு இருக்கும் வீட்டிலேயே இருந்து, 5-ஆமிடத்தைப் பார்க்கி றார். மனைவிக்கும் குருவைப் பார்க்கிறார். எனவே, குரு மீனத்திற்குச் செல்வதற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்புவோம். மற்றவை இறைவனின் கரங்களில்.

ப் சு. பழனிசாமி, மேட்டுப்பாளையம்.

எனக்கு 49 வயது நடக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் நடக்குமா அல்லது சந்நியாசி வாழ்க்கையா? காளஹஸ்தி, திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று பல பரிகாரங்களையும் செய்துவிட்டேன்.

12-4-1973-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத் துக்கு 7-ல் உச்ச செவ்வாய். உடன் நீசபங்க குரு. 9-ஆமிடத்தில் உச்ச சுக்கிரன், சூரியன், நீசபங்க புதன். உங்கள் லக்னத்தை செவ்வாய், சனி, குரு மூவரும் பார்க்கிறார்கள். சனி, சந்திரனின் புனர்பூ யோகமும், 7-ல் உள்ள கிரகங்களின் அமைப்பும், ஒரு திருமணம் நடக்கவிருந்து தடைப்பட்டதைக் கூறுகிறது. நடப்பு செவ்வாய் தசை. 2023, ஜனவரியில் குரு புக்தி. இதில் ஒரு உடல் குறைபாடுள்ள பெண்ணுடன் திருமணம் நடக்கும். இந்த செவ்வாய் தசை 5-ஆமிட தசை ஆதலால், ஒரு பெண் குழந்தை பிறக்கும் பாக்கியமும் உண்டு. இந்த ஜாதகத்தில் சனி, ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். ரோகிணி நட்சத்திரத்தில் பாவ கிரகம் நிற்கும்போது அவ்வளவு நல்ல பலனைத் தர இயலாது. இந்த ஜாதகத்தில் சனி 7-ஆம் அதிபதியாகி, சந்திரன் லக்னாதிபதியாகவும் இருப்பதால், திருமண வாழ்க்கை வெகு தாமதமாகக் கிடைக்கிறது. இத்தனைக்கும் இந்த ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாகியும் இந்த நிலை. மூன்று செவ்வாய்க்கிழமைகளில் மூன்று மாலைகள் வாங்கி முருகர், வள்ளி, தெய்வானைக்கு செலுத்தி வணங்கவும்.

செல்: 94449 61845

bala280122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe