Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-12

ப் ஜெ. சுகுமார், கடலூர்.

எனக்கு 44 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடைபெறும்? பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சினை உள்ளது. அது எனக்குக் கிடைக்குமா?

Advertisment

14-4-1978-ல் பிறந்தவர். புனர்பூச நட்சத்திரம், மகர லக்னம், மிதுன ராசி. புதன் நீசம். குருவுடன் பரிவர்த்தனையால் நீசபங்கம். 7-ஆமிடத்தில் செவ்வாய், சனி சேர்க்கை. அம்சத்தில் சுக்கிரன் நீசம். 5-ஆம் அதிபதி சுக்கிரன், 8-ஆம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை. பூர்வஜென்மத்தில் பெண் சம்பந்தமான குறைபாடு உள்ளது. 9-ல் ராகு. 9-ஆம் அதிபதி நீசம். எனவே பித்ரு தோஷம் உள்ளது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு இராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்துகொள்ளவும். திருவாரூர், வலங்கைமான், கீழவடையல் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவி-ல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பிரம்ம சண்டியாகக் காட்சியளிக்கிறார். அவரை வணங்கவும். நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2023, செப்டம்பர் வரை. இதற்குள் பூர்வீக சொத்து வழக்கு முடிந்து, சிறுபகுதி சொத்து உங்களுக்குக் கிடைக்கும். கோட்சார குரு மேஷ ராசிக்குச் செல்வதற்குள் உங்களுக்கு கணவனை இழந்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். இந்த புதன் தசை குரு புக்தியில் திருமணம் நடந்தால்தான் உண்டு. இல்லையெனில் திருமணத்திற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

ப் ரா. குமரன், பெரம்பலூர்.

என் மகன் கடந்த ஐந்து வருடங்களாக தனது மனைவியையும் குழந்தை யையும் பிரிந்து வாழ்கிறான். இந்த நிலை மருமகளால் ஏற்பட்டது. கணவனுடன் வாழ விருப்பமின்றி, குழந்தையுடன் தன் தந்தை வீட்டில் இருக்கிறாள

ப் ஜெ. சுகுமார், கடலூர்.

எனக்கு 44 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடைபெறும்? பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சினை உள்ளது. அது எனக்குக் கிடைக்குமா?

Advertisment

14-4-1978-ல் பிறந்தவர். புனர்பூச நட்சத்திரம், மகர லக்னம், மிதுன ராசி. புதன் நீசம். குருவுடன் பரிவர்த்தனையால் நீசபங்கம். 7-ஆமிடத்தில் செவ்வாய், சனி சேர்க்கை. அம்சத்தில் சுக்கிரன் நீசம். 5-ஆம் அதிபதி சுக்கிரன், 8-ஆம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை. பூர்வஜென்மத்தில் பெண் சம்பந்தமான குறைபாடு உள்ளது. 9-ல் ராகு. 9-ஆம் அதிபதி நீசம். எனவே பித்ரு தோஷம் உள்ளது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு இராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்துகொள்ளவும். திருவாரூர், வலங்கைமான், கீழவடையல் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவி-ல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பிரம்ம சண்டியாகக் காட்சியளிக்கிறார். அவரை வணங்கவும். நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2023, செப்டம்பர் வரை. இதற்குள் பூர்வீக சொத்து வழக்கு முடிந்து, சிறுபகுதி சொத்து உங்களுக்குக் கிடைக்கும். கோட்சார குரு மேஷ ராசிக்குச் செல்வதற்குள் உங்களுக்கு கணவனை இழந்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். இந்த புதன் தசை குரு புக்தியில் திருமணம் நடந்தால்தான் உண்டு. இல்லையெனில் திருமணத்திற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

ப் ரா. குமரன், பெரம்பலூர்.

என் மகன் கடந்த ஐந்து வருடங்களாக தனது மனைவியையும் குழந்தை யையும் பிரிந்து வாழ்கிறான். இந்த நிலை மருமகளால் ஏற்பட்டது. கணவனுடன் வாழ விருப்பமின்றி, குழந்தையுடன் தன் தந்தை வீட்டில் இருக்கிறாள். அழைத் தால் வர மறுக்கிறாள். கணவனும் மனைவியும் ஒன்றுசேர்வார்களா?

மகன் கோகுலகிருஷ்ணன் 7-10-1990-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். லக்னத்தில் சந்திரன் உச்சம்; ராசியில் புதன் உச்சம். சுக்கிரன் நீசபங்கம். நடப்பு ராகு தசை. இந்த ராகு தசை சில கெட்ட பழக்கவழக்கங்களைக் கொடுத்துள்ளது. குருபகவான் மேஷ ராசிக் குச் சென்றபிறகு, இவரின் குடும்பச் சண்டை ஓய்ந்து, மனைவி திரும்ப வருவார். ராகு தசை சுக்கிர புக்தி 2024, நவம்பர் வரை. இது போன்று கணவன்- மனைவி அடிக்கடி பிரிந்து வாழ்பவர்கள், ஒருமுறை திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரை வணங்கவும். இதனால் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

Advertisment

qq

ப் ஜி. ரவி, திருச்சி.

என் மகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவள் கல்வி எப்படி அமையும்? அரசு வேலையா அல்லது தனியார் வேலையா? அடுத்து 9-ல் வரும் சூரிய தசை எனக்கு ஏதேனும் பாதிப்பு தருமா?

ஸ்ரீதேவி 8-3-2001-ல் பிறந்தவர். சிம்ம ராசி, மக நட்சத்திரம், மிதுன லக்னம். லக்னாதிபதி 8-ல் மறைவு. லக்னத்தில் ராகு; 7-ல் கேது. நாகதோஷம். ராசிக்கு 4-ல் செவ்வாய் ஆட்சி. பரிகாரச் செவ்வாய். இந்தப் பெண் தகவல் தொடர்பு அல்லது நிதி நிர்வாகம் சம்பந்தமாகப் படிப்பார். சுக்கிரன் உச்சம்; குருவுடன் பரிவர்த் தனை. இந்தப் பெண்ணுக்கு கல்வி சம்பந்தமான தனியார் கல்லூரி அல்லது பள்ளியில் வேலை கிடைக்கும். 4-ஆம் அதிபதி புதன், செவ்வாய் சாரத்திலும் 8-ஆமிடத்திலும் இருப்பதால், அவ்வப்போது கல்வித் தடைகள் ஏற்பட்டிருக் கும். அடுத்துவரும் சூரிய தசை இவரை வெளியூர், வெளிநாடு செல்லச் செய்யும். குரு, பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். அடுத்து வரும் சூரிய தசையில், ஞாயிறுதோறும் சிவனுக் குப் பாலாபிஷேகம் செய்ய, தந்தைக்குண்டான தோஷம் தீரும்.

ப் சந்திரா அம்மாள், புதுச்சேரி.

நாங்கள் மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். எங்கள் இரண்டு மகள்களை மிக சிரமப் பட்டு படிக்க வைக்கிறோம். இளையமகள் +2 முடித்துவிட்டாள். அவள் எதிர்காலம் எப்படியிருக்கும்?

ரேகா 18-9-2004-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு குரு தசையில் ராகு புக்தி. விளையாட்டு, பாதுகாப்பு, மருத்துவம் ஆகியவற்றில் ஒன்றில் மேற்படிப்பு அமையும். இவளுடைய வேலை, கல்வி என அனைத்தும் அரசு சார்ந்து அமையும். செவ்வாய் அம்சத்தில் உச்சம். அனேகமாக மருத்துவப் படிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது; முயற்சிக்கவும். எதிர்கால தசைகள் நன்றாக உள்ளன. திருமணத்தின்போது கவனமாக ஜாதகம் பார்க்கவேண்டும். கல்வி மேன்மைபெற திருவஹிந்திரபுரம் யோக ஹயக்கிரீவரை வணங்கவும்.

ப் பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்.

என் மருமகன் தீய பழக்க- வழக்கங்களுக்கு அடிமையாகி குடும்பத்தை சரிவர கவனிப்ப தில்லை. என் மகள் மிகவும் சிரமப்படுகிறாள். விவாகரத்து பெறலாமா? ஒரு பெண் குழந்தை உள்ளது.

மருமகன் 20-1-1990-ல் பிறந்தவர். மேஷ லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ஜாத கத்தில் லக்னாதிபதி செவ்வாய் 2-ல். குரு உச்சம். சுக்கிரன் நீச வர்க்கோத்தமம். புதன் பரிவர்த்தனையால் நீசபங்கம். சூரியன் நீச வர்க்கோத்தமம்.

இந்த ஜாதகருக்கு எப்போதுமே உழைக்காமல் பெரும் பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். ஆனால், 2-ஆம் அதிபதி நீசமானதால்- அவர் 6-ஆமிடத்தில் நீசபங்கம் ஆனாலும்கூட பணத்தைக் கண்ணால் பார்ப்பது இயலாத காரியம். இவருக்கு சூதாட்டம் மட்டுமல்ல; இன்னும் நிறைய ஒழுக்கக் கேடான பழக்கங்கள் இருப்பதை 5-ஆம் அதிபதி நீச சூரியன் எடுத்துக்காட்டுகிறார். இவர் பிறரை பயங்காட்டுவதற்காக தற்கொலை நாடகம் ஆடுவார். இவர்தான் பிறரை சாகடிப்பார். இந்த ஜாதகர் 8-ஆம் அதிபதி செவ்வாய் தன் வீட்டைப் பார்ப்பதாலும், குரு, 8-ஆம் வீட்டைப் பார்வையிடுவதாலும் திடமான ஆயுள் கொண்டவர். இவருக்கு எப்போதுமே மனைவியை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் வாழவேண்டுமென்று ஆசை ஆசையாக வரும். எதுவும் கதைக்காது. நடப்பு புதன் தசை 3, 6-க்குடைய தசை- கடன் பெருகியுள்ளது.தற்போது புதன் புக்தி.

அடுத்து 2022 நவம்பர் 17 முதல் கேது புக்தி.

அதில் வீட்டை விற்றுக் கடனை அடைப் பார். அல்லது இவரது பெற்றோர் உதவியால் கடனை அடைப்பார். அடுத்துவரும் சுக்கிர புக்தி சிலபல நல்ல மாற்றங்களை ஜாதகருக் குக் கொடுக்கும்.

மகள் 4-11-1994-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். இந்தப் பெண்ணின் லக்னாதிபதி செவ்வாய் நீசம். 12-ஆமிடத்தில் நீச சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், ராகு என இத்துணை கிரகங்கள் சேர்க்கை. பார்க்கும்போதே தலை சுற்றுகிறது. இது ஒரு சந்நியாசி யோக ஜாதகம். ஒரு சந்நியாசிக்கு கல்யாணம் செய்தால் என்னவாகும்? இந்தப் பெண் சேவை செய்யப் பிறந்தவர். லக்னாதிபதி செவ்வாய் 7-ஆமிட சுக்கிரன் தொடர்பு திருமணத்தை நடத்திவிட்டது. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. எனினும் வாழ்க்கை வண்டி தாறுமாறாக ஓடுகிறது. நடப்பு சனி தசை. இந்த சனி அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார். நடப்பு சனி தசையில் ராகு- புக்தி வேறு! 2022 ஜூன் மாதம்வரை ராகு புக்தி.

அதுவரை கணவரைப் பிரிந்து சொல்லொணா துன்பம் அனுபவிப்பார். அதன்பிறகு வரும் குரு புக்தி சற்று தேறுதலைத் தரும்.

இவருடைய தந்தை தன் மகளுக்கு விவாகரத்து கிடைக்குமா என கேட்டுள்ளார். இவர்களின் இருவரின் ஜாதகத்தில் செவ்வாயே இருவரின் லக்னாதிபதி. சுக்கிரனே ஏழாம் அதிபதி. எனவே, இவர்களை யாராலும் பிரிக்க முடியாது. சேர்ந்து வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். அடுத்துவரும் புதன் தசை இந்தப் பெண்ணுக்கு சேவை சம்பந்தமான வேலை கொடுக்கும்.

முடிந்தபோதெல்லாம் சர்ச்சிற்கு சென்று சேவை செய்யவும். மாதாவுக்கு நிறைய மெழுகு வர்த்திகள் ஏற்றவும்.

பேத்தி 31-12-2018-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு ராகு தசை 2-ஆமிடத்தில் இருந்து நடத்து வதால் குடும்பம் அல்லாடுகிறது. இந்தப் பெண் ஜாதகப்படியும் 4-ஆம் அதிபதி புதன், 9-ஆம் அதிபதி சனி சேர்க்கை- தாய்- தந்தையர் பிரிவிருக்காது. ஆனால் சனி, சூரியன் சேர்க்கை இந்தக் குழந்தைக்கு தந்தையின் அனுசரணை இருக்காது. எனினும் குரு தசையில் இந்தக் குழந்தைக்கு நல்லவிதமாக அமையும். சர்ச்சிற்குத் தேவையான எவர்சில்வர் பாத்திரங்களை அவ்வப்போது தானமளிக்கவும். குடும்பத்தினர் தினமும் பைபிள் படிக்கவும்.

செல்: 94449 61845

bala210122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe