உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/rmahalakshmi-answers-your-question-11

ப் கே. ராஜசேகர், வேலூர்-6.

என்னுடைய தங்கை மகனை சிறிய வயதுமுதல் நானும் என்னுடைய இளைய சகோதரிகளும் வளர்த்து எம்.டெக் படிக்க வைத்தோம். தற்போது வங்கியில் பணிபுரிந்து வருகிறான். அவனுக்கு கடந்த நான்கு வருடமாகப் பெண் தேடியும் பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. 2017-ஆம் வருடம் திரும்பாம்புரம் சென்று பரிகாரம் செய்தோம். ஆலங்குடியிலும் பரிகாரம் செய்தோம்.

கார்த்திக் பிரபு 5-2-1990-ல் பிறந்த வர். கடக லக்னம், ரிஷப ராசி, மிருக சீரிட நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் உச்சம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு- உடன் சூரியன், சுக்கிரன், புதன். ஏழாமிடத்தில் நான்கு கிரகங்கள் சேர்க்கை. இது கிரக யுத்தம். சூரியனும், ராகுவும் ஒரே நட்சத்திரக் கா-ல். எனவே திருமணம் சம்பந்தமான மறைவு நிலை தெரிகிறது. ராசிக்கு 8-ல் செவ்வாய். சனி- செவ்வாய் தோஷம் உள்ளது. இந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்க்கை; புதன்- கேது பார்வை; 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை என ஒரு காதல் திருமணத்திற்குரிய கிரக அமைப்பு காணப்படுகிறது. ஒன்று இவரது காதல், இவரது அதிக "ஈகோ'வால் தடைப்பட்டி ருக்கும் அல்லது 7-ஆம் அதிபதி 6-ல் இருப்பதால், வெளியே தெரியாத ரகசிய திருமணமும் செய்து கொண்டிருக்கலாம். அது முறிந்திருக்கலாம். எனினும் குரு பார்வை 7-ஆம் அதிபதிக்கு உள்ளது. நடப்பு குரு தசையில் சுக்கிரபுக்தி 2023, ஏப்ரல் வரை. இரண்டு விபரீத ராஜயோக ஜாதகம். அதனால் நல்ல செல்வச் செழிப்பான பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் எதிரிலுள்ள நவசத்ய ஜோதியில் எண்ணெய்விட்டு பிரார

ப் கே. ராஜசேகர், வேலூர்-6.

என்னுடைய தங்கை மகனை சிறிய வயதுமுதல் நானும் என்னுடைய இளைய சகோதரிகளும் வளர்த்து எம்.டெக் படிக்க வைத்தோம். தற்போது வங்கியில் பணிபுரிந்து வருகிறான். அவனுக்கு கடந்த நான்கு வருடமாகப் பெண் தேடியும் பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. 2017-ஆம் வருடம் திரும்பாம்புரம் சென்று பரிகாரம் செய்தோம். ஆலங்குடியிலும் பரிகாரம் செய்தோம்.

கார்த்திக் பிரபு 5-2-1990-ல் பிறந்த வர். கடக லக்னம், ரிஷப ராசி, மிருக சீரிட நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் உச்சம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு- உடன் சூரியன், சுக்கிரன், புதன். ஏழாமிடத்தில் நான்கு கிரகங்கள் சேர்க்கை. இது கிரக யுத்தம். சூரியனும், ராகுவும் ஒரே நட்சத்திரக் கா-ல். எனவே திருமணம் சம்பந்தமான மறைவு நிலை தெரிகிறது. ராசிக்கு 8-ல் செவ்வாய். சனி- செவ்வாய் தோஷம் உள்ளது. இந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்க்கை; புதன்- கேது பார்வை; 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை என ஒரு காதல் திருமணத்திற்குரிய கிரக அமைப்பு காணப்படுகிறது. ஒன்று இவரது காதல், இவரது அதிக "ஈகோ'வால் தடைப்பட்டி ருக்கும் அல்லது 7-ஆம் அதிபதி 6-ல் இருப்பதால், வெளியே தெரியாத ரகசிய திருமணமும் செய்து கொண்டிருக்கலாம். அது முறிந்திருக்கலாம். எனினும் குரு பார்வை 7-ஆம் அதிபதிக்கு உள்ளது. நடப்பு குரு தசையில் சுக்கிரபுக்தி 2023, ஏப்ரல் வரை. இரண்டு விபரீத ராஜயோக ஜாதகம். அதனால் நல்ல செல்வச் செழிப்பான பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் எதிரிலுள்ள நவசத்ய ஜோதியில் எண்ணெய்விட்டு பிரார்த்தனை செய்யவும். திருமணத்தடை நீங்கும்.

aa

ப் தே. சம்மிதாஸ், நாமக்கல்.

எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தைப் பேறில்லை. எப்போது கிட்டும்? எனக்கும் என் மனைவிக்கும் அரசு வேலை கிட்டுமா?

சசிகலா 5-8-1995-ல் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். இவரின் 5-ஆம் வீட்டில் 6-ஆம் அதிபதி. மற்றும் 5-ஆம் அதிபதி செவ்வாயை சனி பார்க்கிறார். சம்மிதாஸ் 28-11-1987-ல் பிறந்தவர். மகர லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவரின் 5-ஆம் வீட்டை சனி, சூரியன் பார்க்கின்றனர். இருவரின் 5-ஆம் வீடும் 5-ஆம் அதிபதி சனி பார்வையைப் பெறுகிறது. அதனால் குழந்தைப் பிறப்பு தாமதமாகிறது. இருவரும் இப்போதிருந்தே மருத்துவ உதவி, ஆலோசனையைப் பெறுதல் அவசியம். 2024-க்குள் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. குலதெய்வ வழிபாடு அவசியம். கும்பகோணம் அருகே திருக்கருகாவூர் சென்று வணங்கவும். இருவருக்கும் அரசு சார்புத் துறைகளில் வேலை கிடைக்கும். நேரிடை யான அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை.

ப் எம். அன்னபூரணி, திருச்சி-17.

என் மகனுக்கு 35 வயதாகிறது. இது வரை திருமணமாகவில்லை. ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்கள் அனைத் தையும் செய்துவிட்டோம். திருமணஞ்சேரி சென்றும் பரிகார பூஜை செய்தோம். அவனுக்கு எப்போது திருமணமாகும்?

மகன் செந்தில் கிருஷ்ணன் 8-11-1986-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். இந்த ஜாதகத்தில் லக்னாதி பதி சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள், சனி, கேது எனும் இரு பாவியரிடையே சிக்கிக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெறுகின்றன. மேலும் குரு எனும் சுபர்- ராகு, செவ்வாயிடையே உள்ளது. இதுவும் ஒரு பாப கர்த்தாரி யோகமாகும். எனவேதான் இந்த ஜாதகருக்கு எந்தச் செயலும் கூடிவர மறுக்கிறது. செயல்கள் ப-தமாகும்போது பாவர்கள் கத்தரித்துவிடுகின்றனர். சனி, செவ்வாய் பரிவர்த்தனை. இதில் செவ்வாய் உச்சம். இந்த ஜாதகத்தில் 8-ல் உள்ள ராகு, புதன் சாரம்; எனவே சாரப் பரிவர்த்தனை. இதனால் இவருக்கு மண வாழ்வு, குடும்பம் என ஒன்று அமையும்போது, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகித் தடை ஏற்பட்டி ருக்கும். அதுபோன்ற பெண்தான் இவருக்கு அமையும். நீங்கள் ஏற்கெனவே நிறைய பரிகாரம் செய்துவிட்டதாக எழுதியுள்ளீர் கள். ஒருமுறை இவர் ஜாதகத்தை திருப்பட் டூர் ஆலயத்தில் வைத்து வணங்கவும். நடப்பு ராகு தசை சந்திரபுக்தி 2022, நவம்பர் வரை. அதற்குள் திருமணம் முடிய வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிறைய திருமணத்தடை உள்ளவர்கள், ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் கட்டி, திருச்செந்தூர் அல்லது அருகிலுள்ள முருகரின் பாதத்தில் வைத்து வணங்கி, "திருமணமானவுடன் இதுபோல் "பத்து மடங்கு காணிக்கை செலுத்துகிறேன்' என மனதார வேண்டிக்கொண்டு, அதனை வீட்டில் பூஜையறையில் வைத்து தினமும் வணங்கவும். திருமணம் முடிந்தவுடன் ஞாபகமாக காணிக்கை செலுத்திவிடவும்.

ப் ரா. பெருமாள், திருக்கோவிலூர்.

எனக்கு தற்போது 63 வயது. நூறு ஆண்டுகள் பழமை யான வீட்டில், நான்கில் ஒரு பங்குப் பகுதியில் வசித்துவருகிறேன். எ- வளையானாலும் தனிவளை வேண்டுமென்று, எவ்வளவோ முயன்றும் என்னால் ஒரு வீடு கட்ட முடியவில்லை. என் மனைவியின் ருது ஜாதகமும் அனுப்பியுள் ளேன். இருவர் ஜாதகப்படியும் எங்கள் கனவு ஈடேறுமா? ஆறாவது தசையாக குருதசை நடந்தால் மாரகம் செய்யும் என படித்திருக்கிறேன். என் அந்திமக் காலம் எப்போது?

நீங்கள் 12-12-1959-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத் தில் ஆட்சிபெற்ற செவ்வாயுடன் மேலும் மூன்று கிரகங்கள் சேர்க்கை. ஆக, லக்னத் தில் நான்கு கிரகங்கள் உள்ளன. வாழ்வில் ஒருபடி முன்னேறினால் பலபடிகள் பின் னோக்கிச் செல்லும் நிலையே இருந்துவரு கிறது. வீடு பற்றிக் கேட்டுள்ளீர்கள். அதுபற்றி அறிய 4-ஆம் பாவத்தை கவனிக்கவேண்டும். உங்களின் 4-ஆம் அதிபதி கேது சாரம் பெற்றுள்ளார். சனி ஒரு இருட்டான கிரகம். கேது குறுகலான கிரகம். எனவே நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்களுக்கு சற்று குறுகலான சிறு போர்ஷன்தான் வீடாக அமையும். மனையைக் குறிக்கும் செவ்வாய், சனி சாரம் வாங்கியுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பைக் குறிப்பது சுக்கிரன். அதுதான் கொஞ்சம் சுமாராக உள்ளது. எனவே, இருக்கும் மனையில் ஒரு அடுக்கு மாடி மாதிரி கட்டிவிடுங்கள். வீடு நன்கு கட்டுவதற்கு விருத்தாச்சலம் அருகே ஸ்ரீ முஷ்ணம் சென்று வணங்கவும். குரு தசை உங்களுக்கு 6-ஆவது தசை. அது விபத்தார தசையாகும். சனி 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் நல்ல ஆயுள் உண்டு. நடப்பு குரு தசையில் சூரிய புக்தி. அடுத்துவரும் சந்திர புக்தியில் வீடுகட்ட முடியும். மனைவியின் ருது ஜாதகத்திற்கு பதில் சொல்ல இயலாது.

ப் ஆர். கோமதி, திருச்சி-19.

தற்போது 63 வயது நடக்கிறது. இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லை. சித்த மருந்து சாப்பிடுகிறேன். 70 வயது வரைக்குமாவது உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை. என் பெயரில் இரண்டு வீடுகள் உள்ளன. முதல் வீட்டை விற்று, சென்னையில் இருக்கும் என் மகனுக்கு வீடுகட்ட இடம்வாங்க பணம் கொடுக்கவேண்டும். இவ்வாண்டு விற்க நினைக்கிறேன். இரண்டாவது வீட்டை 2026-ஆம் வருடத்திற்குள் விற்றுவிட்டு சொந்த ஊரில் போய் இருக்கவும் முடிவுசெய்துள்ளேன். என் எண்ணம் நிறைவேறுமா?

13-12-1957-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். தங்களின் ஆயுள் பாவாதிபதி புதன் 11-ல் உள்ளார். எனவே, ஆயுள் லாபம் உண்டு. நடப்பு குரு தசையில் 2022, ஏப்ரல் முதல் புதன் புக்தி ஆரம்பம். அந்தகால கட்டத்தில் மனை, வீட்டை விற்று பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுவீர்கள். புதன் புக்தி முடிவதற்குள் பூர்விக இடம் சென்றுவிடுவீர்கள். தற்போதைய குரு தசை மாரகாதிபதி தசையாகி, பாதகஸ்தானத்தில் உள்ளார். இவ்வாறு பாதகாதிபதி சம்பந்த தசை நடப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக் கொடுக்கவும். நெய் தீபம் ஏற்றவும். உங்கள் 4-ஆம் அதிபதி 12-ல் மறைய, 4-ஆம் வீட்டை 12-ஆமிட சனி பார்க்கிறார். உங்களுக்கு மனை, வீடு கையில் தங்கியிருப்பதே பெரிய விஷயம். நீங்கள் வீடு விற்ற பணம் முழுவதையும் மகனுக்குக் கொடுக்க வேண்டாம். பாதிப்பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இனிவரும் காலங்கள் உடல் நிலை சற்று சீரற்று இருக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள் வீர்கள். உங்கள் மகன் உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஜாதக அமைப்பில்லை; கவனம் தேவை.

bala140122
இதையும் படியுங்கள்
Subscribe