Advertisment

பணக்கார யோகம்! -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/rich-yoga-r-subramanian

ப்புவியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் செல்வநிலையை அடைவதையே பெரிதும் விரும்பு கின்றனர். பாடுபடவும் செய்கின்றனர். இத்தகைய செல்வநிலையை அடைபவர்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவான ஆரூட, பிரசன்னம் தக்க பதிலைத் தருகிறது. இந்த பிரசன்ன ஜோதிடத்தில், ஒருவரது பிறந்தநாள், நேரம், ஜாதகம் தேவைப்படுவதில்லை என்பதும் விசேஷம்.

Advertisment

tt

ஒரு நபர் பிரசன்ன ஜோதிடரை

ப்புவியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் செல்வநிலையை அடைவதையே பெரிதும் விரும்பு கின்றனர். பாடுபடவும் செய்கின்றனர். இத்தகைய செல்வநிலையை அடைபவர்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவான ஆரூட, பிரசன்னம் தக்க பதிலைத் தருகிறது. இந்த பிரசன்ன ஜோதிடத்தில், ஒருவரது பிறந்தநாள், நேரம், ஜாதகம் தேவைப்படுவதில்லை என்பதும் விசேஷம்.

Advertisment

tt

ஒரு நபர் பிரசன்ன ஜோதிடரை சந்தித்து, "நான் பணக்காரன் ஆவேனா?' என்று கேள்வி கேட்கலாம். அவர் கேள்வி கேட்கும் நாள் மற்றும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அவற்றிற்குரிய ராசி, அம்ச சக்கரங்கள் கொண்ட ஆரூட பிரசன்ன ஜாதகம் கணிக்கப்படும். அதிலுள்ள கிரகங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றைப் பொருத்து கேள்வி கேட்ட நபர் பணக்காரர் ஆக முடியுமா என்பதைக் கணித்துவிட இயலும்.

விதிமுறை-1

Advertisment

கேள்வி நாள், நேரத்தை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்பட்ட ஆரூட ஜாதகத்தில், லக்னத்திலிலிருந்து அமையும் இரண்டாவது வீடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம், அந்த வீடே தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றைக் குறிக்கிறது.

விதிமுறை-2

அடுத்ததாக ஆரூட ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி, பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டு அதிபதிக்குத் தொடர்புள்ளதா என்று பார்க்கப் படும். அப்படி அமைந்தால் அந்த நபர் செல்வநிலையை அடையும் வாய்ப்புள்ளது என்று யூகிக்கலாம்.

விதிமுறை-3

மேற்கூறிய அமைப்புடன், இரண்டாம் வீட்டு அதிபதி, அசுப வீடுகள் எனப்படும் 6, 8, 12-ஆம் வீட்டு அதிபதிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. அப்படி இருந்தால் செல்வநிலை தடைப்படும். அமையாது என்றே கருதலாம்.

எனவே ஆரூட ஜோதிடப்படி இரண்டாம் வீட்டு அதிபதி அசுப வீட்டுத் தொடர்பு ஏதுமின்றி, ஒன்பதாம் வீட்டு அதிபதியுடன் மட்டுமே தொடர்பு பெற்றால், அந்த நபர் பணக்காரர் ஆவது உறுதிப்படும்.

விதிமுறை-4

மேலும் அந்த நபர் செல்வ நிலையைப் பெறும் காலகட்டத்தையும் ஆரூட ஜோதிடம்மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆரூட ஜாதக நவாம்ச லக்னம் சரம், ஸ்திரம், உபயம் என்ற மூன்றுவகை வீடுகளில், எந்த வீட்டில் அமைகிறது என கவனிக்கவேண்டும். நவாம்ச லக்னம் சர ராசி வீடுகளில் அமைந்தால் அந்த நபர் விரைவில் (மாதங்களில்) பணக்காரர் ஆவார். ஸ்திர ராசி வீடுகளில் அமைந்தால் பணக்காரர் ஆக பல வருடங்கள் ஆகும். உபய ராசி வீடுகளில் அமைந்தால் இடைப்பட்ட சில வருடகாலம் போதுமானது.

bala250920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe