Advertisment

கல்வியில் சாதனை புரிய ஜாதக வெகுமதிகள்!

/idhalgal/balajothidam/rewards-excellence-education

சோழவள நாட்டில் திருவழுந்தூரில், குலோத்துங்க சோழன் அரசாட்சி செய்து கொண்டிருக்கையில், ஆதித்தன் என்பவருக்கு புதல்வராய்த் தோன்றியவர் கம்பர். பின்னாளில் தந்தை யைப் பிரிந்து திருவெண் ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் ஆதரவுடன் கல்வியில் சாதனை படைத்துத் திகழ்ந்தார். அவரை கம்ப நாடர், கம்ப நாட்டாழ்வார் என்றும் அழைப்பதுண்டு. அந்த மாணாக்கர்தான் இரண்டாம் குலோத்துங்க சோழன் அரசவையில் "கவிச்சக் கரவர்த்தி' என்ற பட்டத்தைப் பெற்றார். இது நடந்த காலம் கி.பி. 1178-ஆம் ஆண்டு. இதை எதற்காகக் குறிப்பிடுகிறோம் என்றால், நாம் பிறந்த நேரம் சிறப்பாக அமையப்பெற் றால் சாதனை படைக்கலாம்.

Advertisment

"முட்டிமுட்டிப் படித் தாலும் மூளையில் பதிய மறுக்கிறதே' எனக் கூறும் மாணவர்கள்கூட பின்னாளில் சாதனைகள் படைக்கும் பட்டியலில் இடம் பெறுவார்கள். காரணம் ஜாதக அமைப்பு அவ்வாறு அமைந்திருக்கும்.

உங்கள் ஜாதக நகலை எடுங்கள். லக்னம் என்ற இடத்திலிலிருந்து 12 கட்டங்களையும் உற்று நோக்குங்கள்.

ஒன்பது கிரகங்களும் எந்த ராசிக் கட்டத்தில் இருக் கின்றன என குறித்துக் கொôள் ளுங்கள். அதற்கான பலனை ஆய்வு செய்வோம். நம்பிக்கையோடு அறிந்து, அதற்கேற்ப வாழ்ந்து காட்டலாம்.

லக்னத்தில் சூரியன்: அரசால் நன்மை, மேன்மை, கௌரவம் கிடைக்கப்பெறும்.

Advertisment

சந்திரன்: சுலபத்தில் யாவற்றையும் கிரகிக்கும் ஆவல், ஆற்றல், ஞாபகத்திறன் உண்டு.

education

செவ்வாய்: எந்த தொழில் செய்தாலும் லாபம் கிடைக்கும் விதமான கல்வி.

புதன்: கணிதம

புதன்: கணிதமேதை ராமானுஜம்போல் படிப்பில் ஆர்வம் இருக்கும். ஆடிட்டர் ஆகலாம்.

குரு: உயரிய சிந்தனை, மதிநுட்பமான செயல் பாடுகள் காணப்படும். பள்ளி, கல்லூரியில் வேலை.

சுக்கிரன்: கலைத்துறையில் நாட்டம்; சினிமா, டி.வி போன்றவற்றில் மோகம்; நடிப்பு, இசை, நாட்டியம் ஆர்வம்.

சனி: முயன்றால் அரசு வேலை சுலபமாகக் கிடைக்கும். சிவில் எஞ்சினியர், மெரைன் எஞ்சினியர்.

ராகு: மனோதத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம். மருத்துவத் துறைகள். கேது: சித்தாந்தம், வேதாந்தம் ஆகியவற்றில் புகழ் பெறலாம்.

மூன்றாம் வீட்டில் சூரியன்: விஞ்ஞானம், மதிநுட்பத்துறை, காவல்துறை, கம்ப்யூட்டர் சார்ந்தவற்றில் சாதனை படைக்கலாம்.

சந்திரன்: நுட்பமான துறைகளில் சாதனை; டிரான்ஸ்போர்ட் ரயில்வே, பத்திரிகை, இரசாயனத் துறை போன்றவை ஏற்றவை.

செவ்வாய்: நடனக்கலை, இசை, ஜிம்னாஸ்டிக் ஆகியவை புகழ் தரும்.

புதன்: மாயமான வித்தை களில் புலமை ஏற்படும். சட்டம், கணிதம், ஆடிட்டிங் ஆகியவை புகழ் தரும்.

குரு: சுகாதாரம், பத்திரிகை, டுட்டோரியல், பதிப்பகம் சிறப்பு தரும்.

சுக்கிரன்: கவிதை, நவீன உபகரணம், பெண்களுக் கான அழகுக்கலைகள் போன்றவற்றில் நாட்டம்- லாபம் பெறலாம்.

சனி: விஞ்ஞானம், ஆராய்ச்சிக்குரிய உபகரணம் தயாரிப்பு, மின்சாதனத்துறைகள், குளிர்சாதனப் பெட்டி தயாரித்தல் நற்பலன் தரும்.

ராகு: உலகிலுள்ள எல்லா கலைகளிலும் கவனம் செலுத்தலாம். வெற்றி பெறலாம்.

கேது: ஆன்மிகம், தத்துவம், செய்திப்பத்திரிகை, ரேடியோ, டெலிவிஷன், டிரான்ஸ்போர்ட் ஆகியவை லாபம் தரும்.

5-ஆம் வீட்டில்

சூரியன்: சரித்திரம் சார்ந்த கல்வி அதிக நன்மை தரும்.

சந்திரன்: மதி நுட்பம், பங்குச்சந்தை, திடீர் பண வரவுக்கான துறைகளில் நாட்டம்.

செவ்வாய்: சிக்கலான இயந்திர நுட்பம், விளையாட்டில் செஸ் போன்றவை.

புதன்: விந்தையான மேடைப்பேச்சு, பேச்சுப் போட்டியில் கவர்தல், பட்டிமன்றம், குவிஸ் நிகழ்ச்சி புகழ் தரும்.

குரு: அரசுத்துறையில் உயர்பதவிகள் கிட்டும். ரேடியோ, தொலைக்காட்சியும் ஆதரவும் தரும்.

சுக்கிரன்: கல்வி, கலை, ஆடம்பரம், சுகவாழ்வுத் துறைகள் உயர்வைத் தரும்.

சனி: கல்வியோடு அயராத உழைப்பு சார்ந்த துறைகள் நல்லது.

ராகு: வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்படும். மருத்துவத்துறையில் புகழ், கல்வியும் ஆத்மபலம் பெறும்.

கேது: எப்படிக் கற்று மேதையானாலும் ஏதாவது ஒரு குறை நிரந்தரமாகிவிடும்.

6-ஆம் வீட்டில்

சூரியன்: சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால் அரசு வேலையில் நாட்டம் செலுத்தலாம்.

புதன்: கல்வியில் தடை காணப்படும். உள்ளங்கையில் புத்திரேகை துண்டாகி- அதாவது அறுபட்டுக் காணப்பட்டால் தொழில்திறன் கூடும்.

குரு: சுக்கிரன், ராகு, கேது சேர்ந்திருந்தால் பள்ளிப்பருவம் சீராக அமைந்துவிடும்.

செவ்வாய்: எப்படியும், எவ்வாறாயினும் அரசு வேலை அல்லது தனியார் வேலை பெறலாம்.

7-ஆம் வீட்டில்

சூரியன்: வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் முன்பே நல்ல செய்திகள் நாடிவரும்.

சந்திரன்: புத்திசாலிலித்தனம், விவேகமான மூளைத்திறன், பெண்களால் பேராதரவு, குடும்ப முன்னேற்றம் உங்களால் ஏற்படும்.

செவ்வாய்: உற்றார்- உறவினர் தரும் தடைகளால் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு கல்வித்தடை வரும்.

புதன்: கல்வியோடு இளமைப்பருவம் பாதைமாறி காதலில் உட்படுத்திவிடும். நல்ல நல்ல சந்தர்ப்பம் தானாகவே நாடிவரும்.

குரு: தொழிற்கல்வியில் சாதனை படைக்கலாம். தடை ஏற்பட்டால் குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.

சுக்கிரன்: கல்வி கற்கும்போது ஆட் கொண்ட கலையே நிரந்தர வருமானத்திற்கு உரியதாகும்.

சனி: எப்படியும் பிழைப்புக்கு வழிகாட்டும் கல்வி கிடைக்கப்பெறும்.

பாலிலிடெக்னிக்கில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி, பன்னாட்டு நிறுவனங்களிலும் பதவி வகிக்கலாம்.

ராகு: சுமாரான கல்வியில் கால்பதித் தாலும் பின்னாளில் மருத்துவம், ஆன்மிகம் போன்ற பிரிவுகளில் சாதனை படைக்கலாம்.

10-ஆம் வீட்டில்

சூரியன்: அறிவுக் கூர்மையால் கல்வியில் சாதனை படைக்கலாம். ராசிக்கு 10-ல் சூரியன் இருந்தாலும், அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.

சந்திரன்: படிப்பில் பெயரை நிலை நாட்டலாம். அண்ணன்- தம்பிகள் உபயோ கித்த பாடப்புத்தகம், உபகரணங்களை கல்விகற்கும் காலத்தில் தவிர்ப்பது நன்று.

சுக்கிரன், சந்திரனுடன் காணப்பட்டால் கற்கின்ற காலத்தில் காதல் வேண்டாம்.

செவ்வாய்: போலீஸ், ராணுவம், கப்பற் படை ஆகிய பாதுகாப்புத்துறை வரவேற்கும்.

கணவனை இழந்த மாதுவின் உதவி, தந்தை யின் தங்கை உதவி, பெற்ற தாயுடைய தங்கை யின் உதவி கல்விக்கு மட்டும் ஒத்துவராது.

தேர்வெழுதப் போகும்போது மேற்கூறிய சொந்தங்களை எதிரில் நல்ல சகுனமாக ஏற்பது கூடாது.

புதன், குரு, சுக்கிரன்: இவர்கள் புகழை நிலைநாட்ட பெருமையுடன் செயல் படுவார்கள். தேர்வெழுதப்போகும் அன்று மட்டும் புலால் உணவைத் தவிர்ப்பது நன்று.

சனி, ராகு- கேது: எண்ணிய எண்ணம் எதுவென்றாலும் அப்படியே நிறைவேறும்.

தந்தையின் துறையைச் சார்ந்த கல்வி மிகத்துரிதமான முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும். சனி 10-ல் இருந்து கல்வியில் தடை ஏற்பட்டால் பார்வையற்றோர் பத்துபேருக்கு உதவினால் கல்வித்தடை அகலும்.

கேது 10-ல் இருந்தால் சொந்த சம்பாத் தியத்தில் 48 வயதுவரை நிலத்தை விலை கொடுத்து வாங்கி வீடு கட்டுவது கூடாது.

ஜாதகமும் யோகமும் இணைந்துவிட்டால் கல்வி கற்கின்ற காலங்களில் சாஸ்திரரீ தியாக பல நன்மைகளை நாம் அறிந்து செயல் படலாம். சூரியனை வணங்குவதால் கல்வியின் வேகம் அதிகரிக்கும்.

சூரிய துதி

த்யாயேத் சூர்யமனந்தகோடி- கிரணம்

தேஜோமயம் பாஸ்கரம்

பக்தானா மபயப்ரதம் தினகரம்

ஜ்யோதீர்மயம் சங்கரம்/

ஆதித்யம் ஜகதீச மச்யுத மஜம்

த்ரைலோக்ய சூடாமணிம்

பக்தாபீஷ்ட வரப்ரதம் தினமணீம்

மார்த்தாண்ட மத்யம் சுபம்//

த்விபுஜம் பத்மஹஸ்தஞ் ச

வரதம் முகுடான்விதம்

த்யாயேத் திவாகரம் தேவம்

ஸர்வாபீஷ்ட பலப்ரதம்/

பத்மரஸன: பத்மகர:

பத்மரீப்ப ஸமத்யுதி:

ஸப்தாச்வ ரத ஸம்ஸ்த்தச்ச

திவிபுஜ: ஸ்யாத்ஸதா ரவி//

மேற்கண்ட மந்திரத்தைக் கூற இயலா தோர் ஒரு சுத்தமான தட்டில் விபூதியை நிரப்பி, மந்திரத்தை சுட்டுவிரலால் எழுதி, பின் அந்த திருநீறை சேகரித்து நெற்றியில் பூசிவர எல்லா நன்மையும் பெறலாம்.

bala110119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe