மனித வாழ்வில் அனைத்தையும், தீர்மானிக்கக்கூடிய கிரகங்களுக்கு, பாதை அமைத்துக்கொடுக்கும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், இறுதியான, 27-ஆவது நட்சத்திரம், ரேவதியாகும்.
இது வித்யா காரகன் என்றும், 64 கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும், வேகம் மிகுந்த, இரட்டைத் தன்மையுடைய புதனின் நட்சத்திரமாகும்.
புதனின் மற்ற இரண்டு நட்சத்திரங் களான ஆயில்யம் மற்றும் கேட்டை ராட்சச கன நட்சத்திரங்களாக விளங்கு கின்றன, ஆனால் ரேவதி மட்டும் தேவ கண நட்சத்திரமாகும். மற்ற இரண்டு நட்சத்திரத்திற்கும் இல்லாத பொறுமை யும், காத்திருந்து சாதிக்கும் தன்மையும், அதீதமாகப் பெற்றது ரேவதி நட்சத்திரம்.
ஞானத்தை அருளும் குருவின் வீடான மீனத்தில் தனது நான்கு பாதங்களையும் பதித்து அமர்ந்துள்ளது.
இது சிவந்த நிறமுடைய நட்சத்திரம், என்றும், மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பென்றும், மீன்கள் போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது செவ்வாயின் கர்மப் பதிவைக் கொண்ட நட்சத்திரமாகும்.
தன் சொந்த நட்சத்திரத்திலேயே நீசத்தை அனுமதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற கிரகம் புதனாகும். இதன் ராசி நாதன் குருவாகவும், நட்சத்திரநாதன் புதனாகவும், நவாம்ச நாதர்களாக ரேவதி ஒன்றாம் பாதமென்றால் குருவாக
மனித வாழ்வில் அனைத்தையும், தீர்மானிக்கக்கூடிய கிரகங்களுக்கு, பாதை அமைத்துக்கொடுக்கும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், இறுதியான, 27-ஆவது நட்சத்திரம், ரேவதியாகும்.
இது வித்யா காரகன் என்றும், 64 கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும், வேகம் மிகுந்த, இரட்டைத் தன்மையுடைய புதனின் நட்சத்திரமாகும்.
புதனின் மற்ற இரண்டு நட்சத்திரங் களான ஆயில்யம் மற்றும் கேட்டை ராட்சச கன நட்சத்திரங்களாக விளங்கு கின்றன, ஆனால் ரேவதி மட்டும் தேவ கண நட்சத்திரமாகும். மற்ற இரண்டு நட்சத்திரத்திற்கும் இல்லாத பொறுமை யும், காத்திருந்து சாதிக்கும் தன்மையும், அதீதமாகப் பெற்றது ரேவதி நட்சத்திரம்.
ஞானத்தை அருளும் குருவின் வீடான மீனத்தில் தனது நான்கு பாதங்களையும் பதித்து அமர்ந்துள்ளது.
இது சிவந்த நிறமுடைய நட்சத்திரம், என்றும், மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பென்றும், மீன்கள் போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது செவ்வாயின் கர்மப் பதிவைக் கொண்ட நட்சத்திரமாகும்.
தன் சொந்த நட்சத்திரத்திலேயே நீசத்தை அனுமதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற கிரகம் புதனாகும். இதன் ராசி நாதன் குருவாகவும், நட்சத்திரநாதன் புதனாகவும், நவாம்ச நாதர்களாக ரேவதி ஒன்றாம் பாதமென்றால் குருவாகவும், ரேவதி இரண்டென்றால் சனிபகவானாகவும், ரேவதி மூன்றென்றால் சனிபகவானாகவும், நான்காம் பாதமென்றால் குருவாகவும், அமையப்பெறும்.
இந்திய பஞ்சாங்க முறையில் ரேவதி நட்சத்திர கோணப் பிரிவில் சந்திரன் பயணிக்கும் காலம் ரேவதி நட்சத்திரத்திற்குரிய காலமாகும். இவர்கள் தங்களை மீன ராசி, ரேவதி நட்சத்திரம் என்று அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.
27 நட்சத்திரங்களில் அதீத தெய்வபலம் பெற்றது ரேவதி நட்சத்திரமாகும்.
இவர்களின் ஆயுள் காலத்தில் மத்திய பகுதியிலிருந்து இவர்களுக்கு வளர்ச்சியுண்டு. ஏனென்றால் இவர்களில் முதல் தசையாக புதன், இரண்டாம் தசையாக கேது வருவதனால், இந்த இரண்டு தசைகளும் பெரும் சுபிட்சமானதொரு சூழ்நிலையை உருவாக்குவதில்லை.
இவர்கள் நல்லவர்களாக இருந்தா லும் நிறைய ஏமாற்றங்களையும், நெருடல் களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆட்படுவார்கள்.
இவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும் உழைப்புக்கேற்ற வருவாயும் ஊதியமும் கிடைப்பது சற்று அரிது என்றே கூறலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தவர்கள் அதிக பிடிவாதம் உடையவர்கள். பழமையில் நாட்டமும் சம்பிரதாயத்தில் பற்றும் உடையவர்கள். அனைவரையும் தன் அரவணைப்பினால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் பிறருக்கே பயன் அதிகம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் அனுபவத்தைப் பகிரும் தன்மையுடையவர்கள். கருத்தியல் போட்டியில் விட்டுக்கொடுக்கும் தன்மை இவர்களிடம் அறவே இருக்காது.
தன் நட்சத்திரத்தில் தானே நீசமடையும் தன்மை கொண்டதனாலோ என்னவோ, தன் கஷ்டங்களை தனக்குள்ளே வைத்து சாந்தமாகவும், இனிமையாகவும், சாணக்கியத்தனமாகவும் பழகக்கூடிய வல்லமை பெற்றவர்களாக இவர்கள் திகழ்கின்றனர்.
இந்த நட்சத்திரத்திற்கு இருக்கும் பெரிய பலவீனம் ரகசியம் காக்கத் தெரியாதென்பதே.
27 நட்சத்திரக்காரர்கள் யாராக இருந்தாலும் ரேவதி நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். தீபாவளியன்று மட்டும் இந்தக் கட்டுப்பாடு இல்லை.
ரேவதி நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம் உடையவர்களை மட்டும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.
இவர்களுக்கு பெரும்பாலும் முரண்பாடான திருமண வாழ்க்கையே அமையும். அதையும் ஏற்றுக்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் இவர்களிடையே பொதிந்திருக்கும்.
ரேவதி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களின் சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் வீடான தனுசு ராசியில் அமையப்பெறும். இந்த நிலையானது, கல்வியில் உயர்நிலை, கற்ற கல்வியைக் கற்பிக்கும் திறன், கலைத்துறையில் தேர்ச்சி, தன் திறமையால் பொருளீட்டும் தன்மை, மருத்துவம் போன்று துறைகளில் தங்களை மிளிர வைத்துக் கொண்டிருப்பதை நிதர்சனத்தில் காணமுடிகிறது.
ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களுக்கு சந்திரன் நவாம்ச வீட்டில் சனிபகவானின் வீடான மகர ராசியில் அமையப்பெறும். இந்த நிலையானது வேலையுக்தி, நகைச்சுவை சார்ந்து வருமானம் ஈட்டுதல், கீழ்நிலை தொழில்கள், மெக்கானிசம், மோட்டார் சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் தொழில், இயந்திரங்கள் பழுதுபார்ப்பது- இயக்குவது, பாலிடெக்னிக் கல்வி, கப்பல் கட்டுமானம், மீன்பிடி தொழில்கள், போன்றவற்றின்மூலம் தங்களை சிறப்புற செய்துகொள்வார்கள்.
ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சனிபகவானின் வீடான கும்பத்தில் அமையப்பெறும். இந்த நிலையானது தொழில் முறை கல்வி பயிலுதல், கல்வி கற்றுக்கொண்டு பணம் ஈட்டும் முறை, கொரியர், இன்சூரன்ஸ், கமிஷன், ஏஜென்ட், சர்க்கஸ், புக்கிங் ஏஜென்சி என்று சொல்லக்கூடிய வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் யுக்தி போன்ற பல வல்லமைகள் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் வீடான மீனத்தில் அமையப்பெறும். இதனால் சந்திரன் வர்க்கோத்தமம் என்ற வலுவினை அடையும், இந்நிலையானது கல்வியில் உயர்நிலை, 64 கலைகளில் ஏதேனும் ஒரு கலையில் தேர்ச்சி, நிதித்துறை, நீதித்துறை, ஆன்மிகம், மத போதனை, ஜோதிடம், வேத பாடசாலைகள் அமைப்பது, வேதம் கற்பது, குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், யூகித்து அறியக்கூடிய சில தொழில்களும் இவர்களுக்கு கைவரக்கூடும்.
ரேவதி நட்சத்திரம் செவ்வாயின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரம் என்பதனால், இவர்கள் சகோதரவழியில் விட்டுக் கொடுத்துச் செல்வது பெரும் இன்னல்களைத் தவிர்க்க வழிவகுக்கும். மேலும் பூமி சம்பந்தமான விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வது இவர்களுக்கு மிகவும் நல்லது.
இந்த நட்சத்திரத்தில் சின்னமாக மீன் மற்றும் மத்தளம் அமைந்துள்ளது. தொழில் செய்யும் கூடங்கள் மற்றும் பணிசெய்யும் இடங்களில் இந்த சின்னங்களை லோகோவாக அமைத்துக்கொள்வதன்மூலம் தொழிலில் பெரும் சிறப்பினை அடையமுடியும்.
வணங்கவேண்டிய தெய்வம்: ஈஸ்வரன்.
வணங்கவேண்டிய விருட்சம்: இலுப்பை.
அணியவேண்டிய ரத்தினம்: மரகதம்.
(முற்றும்)
செல்: 80563 79988