9 -ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான மனிதராக இருப்பார். அரக்க குணம் உள்ளவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். கடவுளை நம்பமாட்டார். பெரியவர்களை மதிக்கமாட்டார். ஆணவ குணம் கொண்டவராக இருப்பார்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். குடும்பத்தைக் காப்பாற்றுபவராக இருப்பார். மிருகங்கள், பிராணிகளால் அவருக்கு பிரச்சினை இருக்கும். பயணத்தின்மூலம் பணம் வரும்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் தன் சகோதரர்களுடன் சேர்ந்துவாழ்வார். அனைவருடனும் அவருக்கு நல்ல உறவு இருக்கும்.

பணம் சம்பாதிப்பார். நன்கு படித்தவராக இருப்பார். பயணம் செய்வார்.

Advertisment

vv

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தந்தையின் பேச்சைக் கேட்பார். தாயைக் காப்பாற்று வார். நல்ல மனம் கொண்டவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.

அவரைப் பலரும் பாராட்டுவார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அவர் பலருக்கும் சந்தோஷத்தைத் தருவார்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். குருநாதர்களை மதிப்பார். பூஜைகளில் ஆர்வம் இருக்கும்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் வேலைகளை அரைகுறையாக செய்வார். பகைவர் களிடம் சாந்தமாக பேசுவார். வேத சாஸ்திரங்களை எதிர்த்து பேசுபவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை குறைவாக இருக்கும்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி நல்லவளாக இருப்பாள். உண்மை பேசுபவளாக இருப்பாள். அந்த அழகான மனைவி வந்தபிறகு, ஜாதகருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். பல இடங்களில் வியாபாரம் செய்து, பெயரையும் புகழையும் பெறுவார்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கெட்ட குணம் உள்ளவராக இருப்பார். கோப குணம் இருக்கும். பல உயிர்களையும் கொடுமைப்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருப்பார். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்காது. உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு சகோதரர்கள் இருக்கமாட்டார்கள்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் உடன்பிறந்தோரிடம் மிகுந்த பாசத்துடன் இருப்பார். அறிவாளியாக இருப்பார். தானம் செய்வார். கடவுள் நம்பிக்கை இருக்கும். குருநாதர்களிடம் மதிப்பு இருக்கும். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசாங்க பணியில் இருப்பார். பெற்றோரை மதிப்பார். துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். தர்ம சிந்தனை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பணம் சம்பாதித்து, சந்தோஷமாக வாழ்வார்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்லவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். தர்ம சிந்தனை இருக்கும். அனைவரிடமும் பாசத்துடன் பழகுவார். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

9-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல தோற்றத் துடன் இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வெளியூர்களில்கூட அவருக்கு நல்ல பெயர் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு போதைப் பழக்கம் இருக்கும்.

செல்: 98401 11534